Friday, September 4, 2020

எங்கும் நிறை பரப்பிரம்மம்

## எங்கும் நிறை பரப்பிரம்மத்துடன் இணைய நாம் எங்கும் நிறைய வேண்டும்!
# கண்களை மூடி மனதை விரிவாக வைத்து உயிரை உடல் தாண்டி எங்கும் பரப்பி உடலைத் தியானிக்க வேண்டும். இயல்பாகவே நமது உடலிலுள்ள சக்கரங்கள் இதைச் செய்து கொண்டுதான் உள்ளன. ஆனால் அதன் அளவு மிகக் குறைவு. இராவணன் கையில் முள்ளந்தண்டுடன் தலை கொண்ட வீணையின் அர்த்தம் அவன் குறித்த சக்கரங்கள் கொண்டு வேண்டிய பரவசநிலை அடைவதாக இருக்கலாம். இல்லையெனில் உடலியல் காரணங்கள் ஏதாவது இருக்கவும் முடியும். சூட்சுமமாகச் சொன்னால் இறைவன் நம் நெஞ்சில் உறைகின்றான். நாம் அதை நிமிர்த்தி உதவ வேண்டும்.

பிரமிப்பு, பரவசம், ஆச்சரியம், மெய்சிலிப்பு ஆகியன துவண்ட மனதிற்கும் உடலிற்கும் சக்தியூட்டுபவை ஆகும். இவை நமது உயிரை மெய் மறந்து எங்கும் நிறையச் செய்கின்றன. அதனாலேயே பேரானந்தத்தை உணர்பவர் எண்ணங்கள் இலகுவில் வெற்றியாகின்றன. #மகிழ்ச்சி

சூரிய தரிசனம்
இருட்டிலே தொடங்கி இருட்டிலே முடியும் நாட்கள். அது போல வாழ்க்கையும் இருட்டிலே தொடங்கி இருட்டிலே முடிகிறது. இடையிலே கொஞ்சம் வெளிச்சம்.
## சூரிய தரிசனத்தின்போது குண்டலினி மேலே நிலைக்கிறது. அதாவது நமது உயிரானது உச்சம் கொள்கிறது. அது நமது உடல் தாண்டி வெளியே எல்லாத் திசைகளிலும் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுகிறது. அப்போது நாம் நினைக்கும் காரியங்களை நிறைவேற்ற நமது உடலும் உயிரும் பூரணமாக ஒத்துளைக்கும். இதை ஒட்டியே தினமும் காலை சூரிய தரிசனம் செய்வது வழக்கமாக ஆகியிருக்கும்.

நித்திரை அளிப்பது
நாம் நித்திரை கொள்ளும்போது நமது உயிரானது ஆசை, பிடிவாதம், ஆணவம் யாவும் அகன்று பரப்பிரம்மத்துடன் சங்கமிக்கிறது. அதாவது நடுநிலை கொள்கிறது. அப்போது சிறிது ஞானம் கிடைக்கிறது. அந்த ஞானமானது பட்டை தீட்டப்படாத வைரம் போன்றது. அதனை சரியாகப் பயன்படுத்தினால் வாழ்வில் முன்னேறம் அடையலாம். பயன்படுத்தாதவர் அதிக நித்திரை கொள்ளத் தேவை இல்லை.

# சாந்தியையும்
மகிழ்ச்சியையும்
ஞான ஒளியினையும் பரவ விடுங்கள்.

உணர்ச்சிகள் யாவும் அதிர்வலைகள் போன்றவை. மனிதர்க்கு மட்டுமன்றி சடப்பொருட்களும் உணரக் கூடியவை.  இசையும் இது போல அதிர்வுகளே ஆகும். சடப்பொருட்கள் இசையின் பொருளை உணர முடியாது. ஆனால், அதிலுள்ள மன உணர்ச்சியை அவையும் பிரதிபலிக்கும்; உணர்ந்து பேணும்; அவ் உணர்ச்சியைப் பரவச் செய்யும். அக்கால இசை வல்லுனர்கள் இசையால் மழை வரச் செய்தல் போன்ற பல விந்தையான செயல்களை சாதித்துள்ளனர். “நளின நாட்யமிட அசைந்தது பரமிது ஈசா!”.

## எதையும் வெறுக்கக் கூடாது.
ஒரு விடயத்தை வெறுத்தால் நீங்கள் மனதில் அதன்பால் முனைவாக்கம் அடைவீர்கள். நீங்கள் நினைப்பதையே வெளியில் காண்கிறீர்கள் என விவேகானந்தர் கூறியுள்ளார். அதன்படி அந்த வெறுக்கும் விடயத்தையே அடிக்கடி வெளியில் காண்பீர்கள். அது உங்கள் மனதை மேலும் காயப்படுத்துவதோடு உங்கள் வாழ்க்கையை நரகமாக்கிவிடும்.

## பிரார்த்தனைகள் பலிக்கின்றன
அல்லாது போனால், பிரார்த்தனைக்கான நோக்கம் தெளிவாக இல்லை அல்லது மனத்தூய்மை போதாது எனப் பொருளாகும்.

## பரிவும் பரிவும் மீழும்.
சிலந்தி வலை போல இந்த அண்டபேரண்டம் எங்கும் விரிந்து கிடக்கின்ற வெற்றுக் கண்ணுக்கு மட்டுமன்றி ஞானக் கண்ணுக்கும் கிட்டாத தொடர்பு பரிவு ஆகும். இது ஜப்பானியர்கள் விளையாடும் ”domino effect” போல பிரமிப்பானது. இதனால் தான் பக்திப் பரவச நிலையில் ஏதோ ஒரு பரிவு இந்தப் பிரபஞ்சத்துடன் நிகழ்கிறது. 

இப்பிரபஞ்சம் அமைதியானது. அதிலுள்ள எதுவும் அதன் இயல்புத் தன்மையை மாற்ற விரும்பாது. அதன் மீது சலனத்தை ஏற்படுத்தாமல் இருப்பதையே அவை விரும்பும். சாந்தமே ஜடங்கள் கூட உணரும் மொழி ஆகும். அதுவே அன்பின் முதற் படியுமாகும். ஆகவே நாம் இயன்ற அளவுக்கு எதிரான அதிர்வுகளை அசைவுகளைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அமைதியாக இருக்கும் மனிதனிடம் இப்பிரபஞ்சமே சரணடைந்துவிடுகிறது.

“புறவிசை தாக்காதவிடத்து இயங்கிக் கொண்டிருக்கும் பொருட்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும்; ஓய்விலுள்ள பொருள் தொடர்ந்து ஓய்விலேயே இருக்கும்.”

”ஆலயம் தொழுவது சாலவும் நன்று”
#கோயில் செல்வதன் நோக்கங்களில் ஒன்று  சும்மா இருத்தல் ஆகும். ஏனைய சிந்தனைக் குழப்பங்களில் மனம் (உயிர்) அலைவதைத் தவிர்த்து நமது #ஆன்மாவைச் சிறிது நேரம் நாமே ஆராதிப்பது அதன் நோக்கம் ஆகும்.

ஊழ் வினை
எல்லாமே வரையறுத்தது போல தானாக நடந்து கொண்டு இருக்கும். நாம் வெறுமனே பார்வையாளர்களாகவே இருக்கின்றோம். நாம் நமது #ஞான ஒளியை ஏற்றாது போனால் இதுதான்  எப்போதும் நிலைமை ஆகும். நமது சுயாதீன எண்ண எழுகைகளில் புற மின்காந்த அலைகளே (சக்திகள்) அதிக செல்வாக்குச் செலுத்துகின்றன. அதிலும் மிக முக்கியமாக சூரியனிலிருந்தான கதிர்கள் புவியில் ஆதிக்கம் மிகுந்தவை. இதனாலேயே திருமூலர் சூரியனை சிவன் என்று ஒரு திருமந்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். தலையில் சந்திரனையும் தரித்துள்ளான் அவன்.

இப்போது நம்மைக் குழப்பமடையச் செய்யும் பல மின்காந்த அலை ஊற்றுக்கள் நம்மை சூழ்ந்துவிட்டன. அவை நமது மனதின் இயற்கையான சிந்தனை ஓட்டங்களைக் குழப்பும் தன்மை கொண்டவை. உம். தொலைபேசி, தொலைக்காட்சி அலைக்கற்றைகள். ஆனால், நமது சக்தி கொண்டு ஞானதீபம் ஏற்றினால் புறக்காரணிகள் நமது மனதின் எண்ணங்களை சிதைக்காது.

கனி இருக்கக் காய் கவர்ந்தற்கு
இயற்கை நமக்கு சிறந்ததை அளிக்கும் ஆனால் மனம் இன்னொன்றை நாடும். இயற்கை கொடுப்பதை அப்படியே ஏற்க வேண்டும்; கொடுக்க மறுப்பதை, நமக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று கடக்கப் பழக வேண்டும். அதோடு, இயற்கையும் சரி, மனிதர்களும் சரி, ஏனைய உயிரினங்களும் சரி அவை எதை எதிர்பார்க்கின்றனவோ அதைத்தான் கொடுக்க வேண்டும். அது தான் அவற்றுக்கும் நமக்கும் மகிழ்ச்சியைத் தரும்.

நன்றி!

Thursday, September 3, 2020

நெஞ்சு படபடப்பு, இதய நோய், மது மேகம், வயிற்றுக் கோளாறு, சிறு நீரக நோய், வாந்தி ஆகியவை நீங்கி உடல் ஆரோக்கியம் பெற சித்த மருத்துவம்

தேவையான பொருட்கள்:

  1. நீர் 100ml
  2. சீரகம் - அரைத் தேக்கரண்டி
  3. கருஞ்சீரகம் - அரைத் தேக்கரண்டி
  4. உள்ளி - 10g

ஆகியவற்றினை இட்டுக் கொதிக்க வைத்து ஆறவிட்டு வடித்துத் தீனீர் தயார் செய்ய வேண்டும்.

அத் தீனீரை 12 நாட்கள் (கால் மண்டலம்) காலை உணவிற்குப் முன் வெறு வயிற்றில் குடித்து 1 மணிநேரம் எதுவும் உண்ணக் கூடாது. இவ்வாறு செய்து வந்தால் மேற்கண்ட நோய்கள் குணமாகும்.

குறிப்பு:
தீனீர் ஆறிய பின் அரைத் தேக்கரண்டி கருஞ்சீரக தைலம் இனைக் கலந்து குடிக்க வேண்டும்.
கற்பிணிகள் கருஞ்சீரகம், கருஞ்சீரகத் தைலம் பயன்படுத்தக் கூடாது.

ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.wஎஞ்சு

உடல் சதைப் பிடிப்புடையதாக மாற - குஷ்டியான உடம்பைப் பெற சித்த மருத்துவம்

தேவையான பொருட்கள்:

  1. 200ml நீர் 100ml ஆகும்வரை
  2. நெருஞ்சி மரம் முழுதும் (முள், இலை, தண்டு, வேர்)- 1 சிறு மரம்
  3. லவங்கம் - அரைத் தேக்கரண்டி
  4. கராம்பு - அரைத் தேக்கரண்டி
  5. மூங்கில் அரிசி - அரைத் தேக்கரண்டி
  6. சிறுநெருஞ்சில் முள்ளு - 5
  7. ஏலக்காய் - 5
  8. பிளம்ஸ் (உலர் திராட்சை) - 5
  9. கற்கண்டு துண்டு - 2

ஆகியவற்றி இட்டுக் கொதிக்க வைத்து ஆறவிட்டு வடித்துத் தீனீர் தயார் செய்ய வேண்டும்.

அந்தத் தீனீரை 48 நாட்கள் (ஒரு மண்டலம்) காலை மாலை உணவிற்குப் பின் குடித்து வந்தால் உடல் சதைப் பிடிப்பாக மாறும்.

ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

நெஞ்சு படபடப்பு நீங்க சித்த மருத்துவம்

தேவையான பொருட்கள்:

  1. 300ml நீர் 200ml ஆகும்வரை
  2. தாமரைப்பூ இதழ்கள் - 20
  3. மிளகு - 10g

ஆகியவற்றைப் போட்டுக் கொதிக்கச் செய்து வடிகட்டி ஆடவிட்டுத் தீனீர் தயார் செய்யப்படும்.

இதனைக் குடித்துவர நெஞ்சுப் படபடப்புக் குணமாகும்.


ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

ஆண்மைக் குறைபாடு / விந்தணுக் குறைபாடு / மலட்டுத் தன்மை நீங்க சித்த மருத்துவம்

  • மாதம் 6 முறை
  • பத்தியம் - போதைப் பொருட்கள் முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
  • ஆண்களுக்கு மட்டுமே பொருந்தும் முறை


தேவையான பொருட்கள்:

  1. 200ml நீர்
  2. உலர்ந்த ஆலம் விதை - 1 தேக்கரண்டி
  3. உலர் திராட்சை / பிளம்ஸ் - 6

செய்முறை

  • நீரினைக் கொதிக்கச் செய்து
  • உலர்ந்த ஆலம் விதைகளையும்
  • இரண்டாகப் பிளந்த உலர் திராட்சைகளையும் இட்டு
  • கொதிக்கச் செய்து
  • ஆறவிட்டு அருந்துதல்.


ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

எளிய வல்லாரை கரிசாலை காயகற்பம் - சித்த மருத்துவம்

தேவையான பொருட்கள்

  1. வல்லாரை
  2. வெள்ளைக் கரிசாலை / கரிசலாங்கண்ணி
  3. செருப்படை / செருப்படை / சிறு செருப்படை

ஆகியவற்றைத் தனித்தையே

  • காய வைத்து
  • மாவாக்கி
  • சம அளவு கலந்து
  • அதன் நிறையின் கால் பங்கு மேலும் கற்கண்டுப் பொடி சேர்த்து

காயகற்பம் தயாரிக்கப்படும்

  • முதல் 12 நாட்கள் அதில் மூன்று வெருகடியினைத் தேனில் குழைத்து மாலை உணவுடன் உண்ண வேண்டும்.
  • பின் 12 நாட்கள் அதேபோல ஆனால் நெய்யில் குழைத்து உண்ண வேண்டும்.

குறிப்பு: வெருகடி - பூனையின் கால்தட அளவீடு. நமது 5 விரல்களை ஒன்றாகக் கூம்பி அள்ளும் சிறிய அளவீடு.

  • நோய் நொடி அணுகாது.
  • பித்த மயக்கம் நீங்கும்.
  • மனத் தெளிவின்மை நீங்கிச் சிறந்த தெளிவு, ஞாபகசக்தி, ஞானம் ஆகியன கிட்டும்.
  • உடல் காய கற்பமாகும்
  • ஆயுள் கூடும்.
  • நோய்நொடியின்றிநீண்ட காலம் வாழலாம்.


ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

காய கற்பம் - சித்த மருத்துவம்

தேவையான பொருட்கள்

  1. பெருநெல்லி
  2. பசும்பால்


தினமும் பெருநெல்லியுடன் பால் உண்டு வர உடலிலுள்ள கழிவுகள் எல்லாம் நீங்கி உடல் பொன்னாக மின்னும்.

  • ஆயுள் கூடும்.
  • நோய்நொடியின்ரி நீண்ட காலம் வாழலாம்.
  • உடல் காய கற்பமாகும்


ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

மன நோய், மன உளைச்சல், உளறுதல் நீங்க சித்த மருத்துவம்

தேவையான பொருட்கள்

  1. நீர் 200ml
  2. மருதோண்டி விதைகள் (கறுப்பு விதைகள்) - 20g


மருதோண்டி விதைகளை நீரில் இட்டுக் 100ml ஆகும்வரை காய்ச்சி தினமும் காலை 50ml குடித்து வர மனநோய் குணமாகும்.

  • தேவையெனின் 5g  மருதோண்டி இலைகளையும் போட்டுக் காய்ச்சலாம்.
  • மருதோண்டி = மருதாணி
  • மருதோண்டிப் பூக்களைத் தலையில் வைத்துப் படுத்தால் தூக்கமின்மை நீங்கி நல்ல உறக்கம் வரும்.


ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

தலைமயிர் நீண்டு கரு கரு என்று வளர சித்த மருத்துவம்

தேவையான பொருட்கள்

  1. மருதோண்டி இலை - 20g
  2. தேங்காய் எண்ணெய் - 100ml


தேங்காய் எண்ணெயினை வாசம் வரும்வரை சூடாக்கிய பின் பச்சையான மருதோண்டி இலைகளை இட்டு நன்கு காய்ச்சிப் பிரட்டினால் மயிர் நீண்டு வளரும்.
இரவில் படுக்கைக்குப் போகும்போது பிரட்டுவது சிறந்தது.

மருதோண்டி = மருதாணி

  • மருதோண்டிப் பூக்களைத் தலையில் வைத்துப் படுத்தால் தூக்கமின்மை நீங்கி நல்ல உறக்கம் வரும்.


ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

வயிற்று வலி, மூட்டு வலி, பழு வலி, இடுப்பு வலி என மாறி மாறி ஓடும் வலிகள் குணமாக சித்த மருத்துவம்

தேவையான பொருட்கள்

  1. முடக்கொத்தான் கீரை
  2. கொத்தமல்லி கீரை
  3. மிளகு - 10
  4. உள்ளி - 1 பல்லு
  5. புளியின் கரைச்சல் - 1 புளி
  6. வெல்லம் - 15g
  7. நெய் / எண்ணெய்


  • நெய் / எண்ணெயில் நறுக்கிய முடக்கொத்தான், கொத்தமல்லி கீரை, உள்ளி, இஞ்சி ஆகியவற்றை அரைப்பதம் வரை வதக்கி (அரை வேக்காடு)
  • இறக்கி அரைத்து
  • புளிக்கரைசல், வெல்லம் சேர்த்துக் கீரையாக
  • புட்டுடனோ சோறுடனோ அல்லது தனியாகவோ சாப்பிட்டு வந்தால் ஓடும் வலிகள் குணமாகும்.
 நோய் இல்லாவிடினும் உண்ணலாம். ஆரோக்கியமானது; சுவையானது.


ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

கண் பார்வையினைக் கூட்ட சித்த மருத்துவம் (பகலில் நட்சத்திரம் தெரியும்)

தேவையான பொருட்கள்

  1. கரிசலாங்கண்ணி இலைகள்(வெள்ளை / மஞ்சள்) - 20 இலைகள்
  2. திராட்சை - 150g
  3. அத்திப்பழம் - 20g
  4. கொய்யாப்பழம் - 1
  5. மாதுளம்பழம் - 1

ஆகிய அனைத்தையும் ஒன்றாக அரைத்து வாரத்திற்கு ஒருமுறையேனும் உண்டு வந்தால் கண் பார்வை கூடும்.

முக்கிய குறிப்பு: 10 வயது முதல் 5 துளி கரிசலாங்கண்ணி சாறு உண்டு வர அல்லது வெத்திலை போல சப்பி வர பகலில் நட்சத்திரம் தெரியும் அளவிற்குக் கண் பார்வை கூடும்.

  • கரிசலாங்கண்ணி - மருந்து
  • திராட்சை - சத்து
  • அத்திப்பழம் - உடல் உறுப்புக்களைச் சீர் செய்ய
  • கொய்யாப்பழம் - மலச்சிக்கல் நீங்க
  • மாதுளம்பழம் - குளிர்மைக்கு


ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

உயரமாக வளர சித்த மருத்துவம்

தேவையான பொருட்கள்

  1. பனங்கிழங்கு - 1
  2. மிளகு 3-4
  3. மாதுளம்பழம் - 1
  4. அத்திப்பழம் - 20g
  5. நாட்டு மாட்டுப்பால் / ஆட்டுப்பால் - 1 கப்

மாதுளம்பழ முத்துக்கள், பனங்கிழங்கு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து வைக்கவும்.
நறுக்கிய அத்திப் பழங்களையும் சேர்த்து பொடியாக்கிய மிளகினையும் பாலில் இட்டுக் கரைத்து அரைத்து வைத்த களிம்பையும் சேர்த்துக் கூழ் போல செய்ய வேண்டும்.

குழந்தைகள் தினமும் 100ml மட்டும்
பெரியவர்கள் தினமும் 100-250ml குடிக்க வேண்டும்.

1 அடி வரை உயரம் கூடும். பரம்பரை உயரமும் கூடும்.

தாழ்வு மனப்பாங்கு நீங்கும்.

  • பனங்கிழங்கு - உயரம்
  • அத்திப்பழம் - உடல் கழிவு நீங்க / தொந்தி குறைய
  • பால் - சத்தூட்டி
  • மிளகு - சளிப் பிடிப்பதைத் தவிர்க்க
  • மாதுளம்பழம் - தாழ்வு மனப்பாங்கு நீங்கும்


ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

உடல் உஷ்ணம்/ சூடு குறைய சித்த மருத்துவம்

தேவையான பொருட்கள்

  1. 300ml நீர் 200ml ஆகும்வரை
  2. நன்னாரி வேர்
  3. சர்க்கரை

காய்ச்சி வடித்து குடித்து வந்தால் உடல் உஷ்ணம்/ சூடு குறையும்.



ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

வழிப்போக்கு மற்றும் மாதவிடாய்க்கு மருந்து

தேவையான பொருட்கள்

  1. 300ml நீர் 200ml ஆகும்வரை
  2. கொய்யா இலை - 10-20 இலைகள்
  3. ஏலக்காய் - 3-5
  4. பனை வெல்லம் - தேவையான அளவு

காய்ச்சி வடித்து குடித்தால் வழிப்போக்கு மற்றும் மாதவிடாய் தளர்ச்சியுறும்.

உள் உறுப்புகளுக்குப் பலம் தரும்.
வழிப்போக்கு மீண்டும் வராது.

ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

மனவழுத்தம், சொறியாசிஸ் தோல் நோய்கள் நீங்க சித்த மருத்துவம்

தேவையான பொருட்கள்
  1. அறுகம்புல்
  2. வெள்ளைச் சாரணை மூக்கிரட்டை
  3. வெள்ளை நாய்க் கடுகு நலவேளை
  4. வில்வம்
ஆகியவற்றை தேங்காய் / எள்ளெண்ணெயில் எண்ணெயில் காய்ச்சி,
  • தோல் நோய் உள்ள இடங்களில் தடவி வர நீங்கும்.
  • தலையில் தடவி வந்தால் மனவழுத்தம் நீங்கும்.

இதே போல தலையிலுள்ள நீர்க்கோர்வை நீங்க நொச்சி இலைகளைக் கொண்டு ஆவி பிடிக்க வேண்டும். நீர்க்கோர்வயும் மன அழுத்ததிற்கு ஒரு காரணம் ஆகும்.


ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

நீரிழிவு, மனநோய், நுரையீரல் போன்ற நோய்கள் நீங்கி ஆரோக்கியமாக வாழ மருத்துவம்

தேவையான பொருட்கள்

  1. துளசி இலை    - 4/5 இலைகள்
  2. திப்பிலி இலை -  4/5 இலைகள்
  3. ஏலரிசி (ஏலக்காய்) - 2/3
  4. கற்கண்டு

ஆகியவற்றை 300ml நீர் 200ml ஆகுமாறு காய்ச்சிக் குடித்தால் நீரிழிவு, மனநோய், நுரையீரல் கோளாறுகள், கோபம் ஆகியன கட்டுப்படும்.

துளசி இலை, விதை அரைத்து 3 விரலால் (வெருகடி) கிள்ளி அந்தி, சந்தி (காலை மாலை) சாப்பிடின் மன அழுத்தம் நீங்கும்.

துளசி இலை, விதை, வேர் ஆகியற்றை தலையில் வைத்துப் படுத்தால் மனவழுத்தம்  போன்ற நோய்கள் நீங்கும்.

துளசி இலை அரைத்து  தலையில் வைத்து சிறிது நேரத்தின் பின் முழுகினால் பேன், பொடுகு நீங்கும்.

ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

முகத்திலுள்ள வீக்கம் குறைய சித்த மருத்துவம்

தேவையான பொருட்கள்

  1. வசம்புத்தூள் - 10g
  2. மஞ்சள் தூள் - 20g
  3. வேப்பமிலை - 20g

ஆகியவற்றை நீர் விட்டு நன்கு அரைத்து முகத்தில் தடிவி வந்தால் வீக்கம் குறையும்.
முக்கிய குறிப்பு: நாக்கில் தடவக் கூடாது

வேப்பமிலையினை மட்டும் அவித்துத் தினமும் முகம் கழுவி வந்தாலும் வீக்கம் குறையும்.

வசம்பினை முகர்ந்தாலே வீக்கம் குறையும்.


ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

முகத்திலுள்ள பள்ளங்கள் நீங்க, கரும்புள்ளி மறைய, பொலிவு பெற சித்த மருத்துவம்

  1. தேவையான பொருட்கள்
  2. பப்பாப்பழம் 66%
  3. முருங்கப்பட்டை 10%
  4. கோரைக் கிழங்கு 10%
  5. பாதாம் பருப்பு 7%
  6. கசகசா 7%

ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து முகத்தில் 60-90 நாட்கள் பூசி வர முகத்திலுள்ள பள்ளங்கள், கரும்புள்ளிகள் நீங்கி முகம் பொலிவு பெறும்.
2 மணிநேரம் பூசி அப்படியே விட்டுவிட்டு பின்பு குளிர் நீர், சிகைக்காய் கொண்டு கழுவ வேண்டும். சவர்க்காரம் போட்டுக் களுவக் கூடாது.


முக்கிய குறிப்பு: முகம் தவிர்ந்த பாகங்களிற்குக் கடும் வெப்ப காலங்களிலேயே பூச வேண்டும். உம்: அக்கினி நச்சத்திரம் (காண்டாவனம்). இல்லையெனில் குளிரக்கிவிடும்.
முகம் தவிர்ந்த பாகங்கள் விரைவில் பொலிவுறும்.


ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

காலிலுள்ள கரும்புள்ளி நீங்க மருத்துவம்

  1. மருதாணி இலை 50g
  2. சந்தனம் 50g

ஆகியவற்றை நீருடன் அரைத்துப் பூசி வர காலிலுள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.

குறிப்பு: அத்திப்பழம் உண்டாலும் அது குணமடையும்.

ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

நெஞ்சு சளி சித்த மருத்துவம்

இவை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளால் ஏற்படலாம்.

முறை 1:

  1. 250ml கரும்புச்சாறு
  2. 10g துளசி இலைச்சாறு
  3. மிளகு குறைந்தது 5 கூடியது 10
  4. கால் இஞ்சி அளவு சுக்கு (காய்ந்த இஞ்சி)

ஆகியவற்றைச் சேர்த்துக் காய்ச்சி குடித்து வர நெஞ்சுச் சளி நீங்கும்.

மு.கு: இதனைச் சூட்டுடன் குடிக்க வேண்டும்.

அதோடு வளமான குரல் கிடைக்கும்.
இதனால் சுவாசம் சுத்தமாகும். தொண்டை வலி சுகமாகும்.

முறை 2:

மிளகையும் துளசியையும் மென்று தின்று வந்தாலே இருமல் நீங்கும்.

ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

மூக்கு வடிதலை நிறுத்த சித்த மருத்துவம்

  • பசு நெய்யில் ஏலக்காயினை இனை உடைத்துக் காய்ச்சி மூக்கில் ஒரு துளியை விட மூக்குவடிதல் நீங்கும்.


  • விரலி மஞ்சள் இனைச் சுட்டு வரும் புகையை மூக்கினால் உறிஞ்சினால் மூக்குவடிதல் நிற்கும்.


ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

ஞாபக சக்தியைக் கூட்ட சித்த மருத்துவம்

  • அறுகம்புல் பாலுடன்/உணவுடன் வாரத்திற்கு 3 முறை உண்டு வர ஞாபகசக்தி கூடும். 


  • வசம்பு - 25g, மஞ்சள் பொடி - 100g, வல்லாரைப் பொடி - 100g ஆகியவற்றை ஒன்றாகப் பொடி செய்து ஒரு வெருகடியினைத் தேனில் குழைத்துல் காலை மாலை உண்டு வந்தால் ஞாபகசக்தி கூடும்.


  • மஞ்சல் கரிசலாங்கண்ணி மற்றும் தூதுவளை ஆகியவற்றை பாலுடன்/உணவுடன் வாரத்திற்கு 3 முறை உண்டு வர ஞாபகசக்தி கூடும்.


  • மாதுளம்பழச் சாறு 200ml இற்குச் சர்க்கரை கலந்து தினம் குடித்து வர  ஞாபகசக்தி கூடும்.


  • அரிசித் திப்பிலியை தேனில் ஒரு வாரத்திற்கு ஊறவிட்டு காலையில் உண்டு வர ஞாபகசக்தி கூடும்.


  • 20 வல்லாரை இலைகளைத் தினம் மென்று உண்டு வர ஞாபகசக்தி கூடும்.


  • தினமும் தேனுடன் விளாம்பளம் உண்டு வர ஞாபகசக்தி கூடும்.


  • வெண்டைக்காய்ப் பிஞ்சு தினமும் உண்டு வர ஞாபகசக்தி கூடும்.


ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

இனிய குரல் வர சித்த மருத்துவம்

  1. சுக்கு (காய்ந்த்த இஞ்சி)
  2. திப்பிலி
  3. ஏலரிசி (ஏலக்காய்)
  4. வால் மிளகு

ஆகியவற்றை வறுத்துத் தேனுடன் உண்டு வர இனிய குரல் கிட்டும்.


ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

வயிற்றுக் கோளாறு நீங்க மருத்துவம்

  1. 300ml நீர் 200ml ஆகும்வரை
  2. தேசி இலை
  3. முருங்கை இலை
  4. மிளகு
  5. உப்பு

சேர்த்துத் தீனீர் செய்து குடித்து வர வயிற்றுக் கோளாறு நீங்கும்.

கொய்யாப்பழம் ஒரு மலம் இழக்கி ஆகும்.

ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.


முகத்திலுள்ள கறுப்புகள் நீங்க மருத்துவம்

1. பெண்கள் முகத்திலுள்ள கறுப்புகள் கருப்பப்பை சுத்தம் இன்மையினாலேயே ஏற்படுகிறது.

  • ஒரு பட்டாணி அளவு வெள்ளறுகு எடுத்து அரைத்து,
  • ஒரு வாரத்திற்குத் தினமும் உண்டு வர கருப்பப்பை சுத்தமாகும்.
  • முகத்தில் உள்ள அழுக்கு நீங்கும்.

 

முகப்பரு, கரும்புள்ளி, முகச்சுருக்கம் போக்க மருத்துவம்

2. தேசித் தோலைப் பிழிந்து முகத்தில் பிரட்டி முகத்தில் பூசுதல்.

 

3. தேசித் தோலைத் தலையில் பூசி சிறிது நேரம் பின் கழுவுதல். இதனால் பேன் நீங்கும். தலைக்கும் குளிர்ச்சி கிட்டும்.

ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

சர்க்கரை வியாதிக்கான மருத்துவம்

  • தினமும் காலையும் மாலையும் நித்தியகல்யாணிப் பூவினை அவித்துக் குடித்தல்.
  • பறங்கிப் பட்டை நிவேரணம்
  • பெரு நெல்லிக்காய் லேகியம்


குறிப்பு: கொய்யாப் பழமும் சலரோகத்திற்கு மருந்தாகும்.

ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

குழந்தை பிறக்காமை மற்றும் கருப்பையில் நீர்க்கட்டி ஆகியவற்றுக்கு மருத்துவம்

வெள்ளறுகு அரைத்து ஒரு பட்டாணி அளவு உண்டு வருதல்.

முள்முருங்கைப்பூ மற்றும் வெள்ளறுகு ஆகியவற்றை அரைத்துத் தேன் சேர்த்து உண்ணலாம்.

பிரதானமாக மாதவிடாயின் போதான 7 நாட்கள் உண்டுவர கட்டி கரைந்து குழந்தை பிறக்க வாய்ப்பு அதிகரிக்கும்.

 குறிப்பு: கருப்பையில் இவ்வாறு கட்டி இருப்பின் மன அழுத்தம், கவலைகள் போன்றனவும் அதிகரித்துக் காணப்படும்.

ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

எலும்பு தெரியும் குழந்தைகள் புஷ்டியாக தேற லேகியம் - பெரியவரும் உபயோகிக்கலாம்

வயது 1 முதல் 13 வரையான குழந்தைகளிற்கு,

  • 1 மேசைக்கரண்டி நெய்யினில் 50g உலர் திராட்சையைப் பொரித்து எடுத்து வைத்தல்.
  • 5-10 முருங்கை விதைகளை அவித்தல்.
  • அது அவிகையில் பனை வெல்லம் மற்றும் ஒரு மேசைக்கரண்டி நெய் சேர்த்தல்.
  • பிறகு அதனில் பொரித்து எடுத்து வைத்த அந்த உலர்திராட்சையைச் சேர்த்துப் பாகுபோலக் காய்ச்சி இறக்கினால் அது இறுகிவிடும்.

குறிப்பு: இறுதியில் 100ml வருமாறு காய்ச்ச வேண்டும்.

இதேபோல காய்ச்சியோ அல்லது குளிர்சாதனப் பெட்டியில் பதப்படுத்தியோ
தினமும் 1 மேசைக்கரண்டி அளவு சாப்பிட்டு வர கொழு கொழு எனச் சிறுவர்கள் வளருவர். (இது பசியினினை ஏற்படுத்தும்).
பிஞ்சு முருங்கை விதை பயன்படுத்துவது நல்லது.

  • நெய் சேர்ப்பதால் காச நோய் உள்ள குழந்தைகள் காச நோய் நீங்கிக் குணமடைவர்.
  • பனை வெல்லம் சேர்ப்பதால் இருதய அடைப்பு நீங்கும்.

பெரியவர்கள் முத்திய 2 முருங்கை விதையை பாலுடன் குடித்துவர இயலாமை மூட்டுவலி, நரம்பு நோவு போன்றன நீங்கித் தென்படைவர்.

ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

26 வகை காய்ச்சலும் மாற மருத்துவம்

காய்ச்சல் என்பது அறிகுறியாகும். அது 26 வகையான காரணங்களால் ஏற்படலாம் என சித்த மருத்துவத்தில் வரையறுக்கப்படுகிறது.


முறை 1:

  1. சீந்தில் இலை (அற்புத வல்லி இலை)
  2. சின்ன வெங்காயம்
  3. சேர்த்துத் 300ml நீர் 200ml ஆகும்வரை தீனீர் ஆக்கிக் குடித்துவர மாறும்.


அல்லது

முறை 2:

4 சீந்தில் இலையுடன் 2 சின்ன வெங்காயம் சாப்பிட்டு வர சகல வகையான காய்ச்சலும் நீங்கும்.

குறிப்பு: சீந்தில் இலை அகத்தி இலை வடிவம் உடையது.

ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

பித்த மயக்கம் தீர மருத்துவம்

இதேபோல உயிருக்கு ஆணவம், கன்மம், மாயை போன்ற நோய்களை அதிகம் பிடித்தவையாக இருத்தல் போல வாதம், பித்தம், சிலேத்துவம் ஆகியன உடலுக்கு மிகவும் பிடித்த நோய்களாகும்.

பித்தத்திற்கான  அறிகுறிகள்:

  • உடல் காய்ந்துவிடும்
  • தலை சுற்றுதல்
  • குமட்டல்

தேவையான் பொருட்கள்:

  1. 250g பன்னீர் திராட்சை (விதைகள் உள்ள திராட்சை)
  2. 20g மல்லி

திராட்சையை நன்கு உப்புநீர், மஞ்சள் நீரில் கழுவி மல்லியுடன் நன்கு அரைத்து மூன்று நாள் தொடர்ந்து

  • 5 - 10 வயது: 120ml - 200ml
  • 10 வயதிற்கு மேலே 200ml - 400ml வரையும் சாப்பிட்டு வர 10 வருடங்கள் வரையில் மயக்கம் வராது.

குறிப்பு: தேனீர் அருந்துவதால் பித்தம் கூடும். மேற்கண்டவாறு செய்ய பித்தப்பை அளவான பித்தத்தை மட்டும் சுரக்கும். உப்புநீர், மஞ்சள் நீரில் கழுவுவது நச்சு மருந்துகளை நீக்க ஆகும்.

ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.



சிறு நீரகக் கல் கரைய/ சிறுநீரக எரிவு நீங்க மருத்துவம்

சிறுநீரகத்தில் படிந்த கல் நீங்க,

மருத்துவம் - 1

  1. தேங்காய்ப்பூக் கீரை 10g,
  2. உப்பிலும் மஞ்சள் தண்ணியிலும் கழுவிய பன்னீர் திராட்சை (விதைகள் உள்ள திராட்சை) சாறு 100g
  3. மிளகு 10

ஆகியவற்றை நன்கு ஒன்றாக அடித்து தினமும் ஒருமுறை மாறும்வரை குடித்து வரலாம்.

மருத்துவம் - 2
தேவையான் பொருட்கள்

  1. 100ml - நீரில்
  2. மல்லி- அரைத் தேக்கரண்டி
  3. சிறுநெருஞ்சி இலை - 10g
  4. சிறுநெருஞ்சி முள்ளு - 10g

ஆகியவற்றை இட்டு நன்கு கொதிக்க வைத்து ஆற வைத்து வடித்துத் தீனீர் செய்ய வேண்டும். அதனைக் குடித்து வர மேற்கண்ட பிரச்சினைகள் குணமாகும்.

ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

தோல் நோய் மருத்துவம்

  1. பப்பாளியை அரைத்தது
  2. வாகை இலை 50g, சீந்தில் இலை(அற்புத வல்லி இலை) 50g, அகத்தி இலை 50g ஆகியவற்றை தேங்காய் எண்ணெயில் காய்ச்சியது
  3. மருதாணி இலை அரைத்தது

மூன்றையும் அடுத்தடுத்த நாள் மாறி மாறி உள்ளங்கை அளவு எடுத்து தோய் நோய் உள்ள இடத்தில் பூசிவர குணமாகும்.


ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

சிறிய விசப் பூச்சிக்கடி மருத்துவம்

விசம் குறைந்த பாம்புகளுக்கும்  இதனைப் பயன்படுத்தலாம்.

  1. 300ml நீர் 200ml  ஆகும்வரை
  2. 50g வாழைப்பூ
  3. 20g மிளகு
  4. 10g சீரகம்
  5. 10 சின்ன வெங்காயம்

இட்டுக் காய்ச்சி தினமும் 2 தேக்கரண்டி அளவு ஒரு வாரத்திற்குக் குடிக்க வேண்டும்.


குறிப்பு: விசக்கடிக்கு வைத்தியசாலையில் ஊசி போட்டாலும் கூட 10 வருடத்தின் பின் மயக்கம் வரலாம். ஊசி போடினும் இதனைச் செய்து குடித்தல் நல்லது.

ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...