நான் பரிசுத்த ஆத்மா!
நான் சொல்வதை (மேற்கொண்டதை / நினைப்பதை) தான் செய்வேன். செய்வதைத்தான் சொல்வேன்.
இதுதான் தூய ஆத்மாவின் தன்மை. அதை ஆத்மா என்றும் சொல்லலாம். சக்தி (energy) என்றும் சொல்லலாம். சிவம் என்றும் சொல்லலாம்.
ஏவப்பட்ட அல்லது ஒருங்கு படுத்தப்பட்ட (coherent) energy என்பது அதைத்தான் செய்யும். தன்னை தான் அப்படியே வெளிப்படுத்தும்.
அதற்கு அங்க அவயங்கள் எல்லாம் ஒரு வழி /தெரிவு (option) அவ்வளவு தான். அது எப்படி செய்தது, அந்த கருவி மூலம் செய்தது என்று அல்ல. இது தான் ஆத்மாவின் சக்தியின் தன்மையின் ஒட்டு மொத்த சுருக்கம்.
நான் நேர்மையாகவே இருப்பேன். எல்லோருடைய நலனைப் பற்றியும் அக்கறை கொள்வேன். என்னுடைய வழியில் வராதீர்கள் என்று சொல்லியும் நீங்கள் திரும்பத் திரும்ப குறுக்கிட்டால் நீங்கள் கயவர்கள், நயவஞ்சகர்கள். அது எனக்கு சிக்கல் இல்லை. என்னை எதற்கு எதிர்க்கிறீர்கள்? நான் அறியாதவர்களுக்கு திரும்ப திரும்ப சொல்வேன். பலமுறை எச்சரிக்கை விடுப்பேன். அதையும் தாண்டி நீங்கள் இறங்கினால் பிறகு யுத்தம் தான். #தர்ம யுத்தம்.
அது கடைசி வரை தொடரும். ஏதாவது ஒன்று வெல்லும் வரை நிகழும். ஏதாவது ஒரு சக்தி நிலை பெறும் வரை நிகழும்.
Blue core or Red core என்று கருதினால் ஒன்று blue energy மிஞ்ச வேண்டும். அல்லது red energy மிஞ்ச வேண்டும். அது வரை யுத்தம் யுத்தம் (fight) தான்.
அது ஆயுதம் தாங்கிய யுத்தமாகதான் இருக்க வேண்டும் என்பது அல்ல. அது எப்படி தாக்கும். எதனை கருவியாக எடுக்கும் என்பது எல்லாம் தேவை இல்லாதது. ஆனால் நீங்கள் அந்த சக்திக்கு உடன்படாத வரை தாக்குதல் நடந்து கொண்டே இருக்கும். எங்கிருந்து எவன் ரூபத்தில் தாக்குதல் வருகிறது என்பது எல்லாம் உலக மாயை. இதுதான் ஆன்மீகம்.
இவைதான் நோக்கு வர்மம் போன்ற அரிய கலைகளின் அடிப்படை. ஆனால் நோக்கு வர்மம் செய்ய, வர்மப் புள்ளிகள் மற்றும் அது தொடர்பான ஞானம் வேண்டும். அதன் மூலம் அந்த அந்தப் புள்ளிகளுக்கு சக்தியைக் குவித்து முன்பு உள்ள ஆத்தமாவை அடக்கி அல்லது தன் வசப்படுத்தி அந்த ஆத்மாவைக் கொண்டே தாக்குதல் செய்யப்படும்.
ஆனால் ஆன்மாவின் இயல்பான செய்கை, குவிப்பினால் செய்ப்படுவது அல்ல. தாறு மாறாக அது தன் விருப்பத்தை நிறைவேற்றும். அதற்கு தன் முழுமையான சக்தி தீரும்வரை அது செயல்படும்.
ஆன்மீகத்தில் தவம் வரம் இவையும் ஆன்மாவின் இந்த தன்மையின் பெறுதிகளே!

