Tuesday, May 12, 2026

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்
• மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது
• அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை
• உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்
• கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
• காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்
• இராமனை சரணடைந்த அவ்வை
• தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை
• மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்
• பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை
• அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்
• ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்
• ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்
• கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்
• Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)
• சிவனை மதிக்காத தமிழர்
• தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்
• அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல
• சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து
• ஏழை குசேலனுக்குத் தோழமை
• யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம்.

தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால் அடி முடி காண முடியாத காலத்தின் தொடக்கம் முடிவு அற்ற ஆலகால விசமே! ஆயினும் அதில் உள்ள அனைவரும் மூத்தவர்கள் அல்ல. மூத்தவர்களை கனம் பண்ணாத தமிழர்கள் ஏனைய இனங்களை இழிவாக பார்த்ததுடன், அவர்கள் தம்மிடமே கற்றுக் கொண்டதாக ஏளனமாக, தன்னுடைய விசமேறிய தொண்டையால் கத்திக் கொண்டே வந்துள்ளனர்.

மேலோரை மதிக்காத தமிழர்

வெள்ளையர், இராமன் உட்பட அனேகர் படையெடுத்து வந்தபோது அவர்களை மதிக்காமல் அவமானப் படுத்தினர். அதிகம் காயப்படுத்தி அன்னுப்பிய இனம் தமிழினம் ஆகும். இராமன் வந்தபோதே இராமனை மதிக்காத இராவணன் கூட்டம் தமிழர் கூட்டம் ஆகும். அப்போது #வழக்கம் போல இவர்களுக்கான நாட்டை கடைசியாகவே கொடுப்பது என்று அவர்கள் மனதில் பதிவாகியிருக்கும்.

ஞானமே அனைத்திலும் மேலானது

ஞானத்தை தாண்டி எதுவும் இல்லை. அப்படி அதிகப்படியான ஞானத்தை உடையவன், அனேக நாகரீகம் கண்ட அம்மான் (Man) ஆவான். அவனின் ஒழுக்கம் எப்படியானது என்பது வேறு. அது அவசியம் இல்லாதது. ஆனால், வலியனவற்றை ஒட்டியே ஏனையவை படரும்.

அனுபவமே சிறந்த ஆசான்;
பட்டும் தெளியாத தமிழரின் புகழ் போதை!

ஒருவேளை தமிழர் தம் வலிமை மீது கொண்ட அளப்பரிய நம்பிக்கை காரணமாக உலகை எதிர்த்து வெல்ல நினைத்திருந்தாலும், தோற்ற பின் அமைதியாகி இருக்க வேண்டும். தோற்றபின்பும் தொடர்ந்து தாமே மூத்த குடி, தம்மை பிரதி செய்தே உலகம் உருவானது என்று சொல்லிக் கொள்வது, உண்மை ஆயினும் அவமானமானத்திற்குரிய செயல் ஆகும்.

உலகத்திற்கு ஒரு சூரியனே!
ராமனின் செங்கோலில் பிழை காணாதே!

சிவனின் அம்சமாக அவன் 6 to 6 நேரம் தவறாமல் வானில் உலா வலம் வர, சிவனை கோயில் சென்று கல்லில் தேடும் தமிழர். கள்வர்கள் சூரியன் இல்லாத தேசத்தில் சென்று ஒழிந்து கொள்வார்கள். அப்படியாக நியாயம் செய்யும் சூரியனின் குலத்தவன் இராமன்; பலருக்கு ஒளி தீபம் ஏற்றியவன்! அவன் பெயரை நான் கழங்கப்படுத்த மாட்டேன்.

ராமனைப் போல வேடம் அணிந்த திருடர் நம்மை அவன் அருள் நமக்கு கிடைக்க விடாமல் சூழ்ச்சி செய்யலாம்.

உயிர் கொடுத்தவன் இறைவன்

கல்லாய் இருந்தேன் சிலையாய் ஏன் வடித்தாய்! - கலைஞர்
பன்றிக்குப் பால் கொடுத்த பரமசிவன்
பாவைக்கும் உயிர் கொடுத்த பரமசிவன்
... பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்

எழுத்தறிவித்தவன் இறைவன்

ஒன்றும் இல்லாமல் இருந்த எம்மை உருப்படி ஆக்கியவனுக்கே நாம் என்றும் உரித்தானவர்கள். எந்த சந்தர்ப்பத்திலும் எமது உயிராக இருப்பவனுக்கு என்றுமே நாம் நன்றி உள்ளவனாக இருக்க வேண்டும்.

அகலிகை இராமனின் கால் பட்டதும் சாபம் நீங்கி உயிர்பெற்றாள். அதுபோல மிருகங்களாக திரிந்த நாம் அம்மானின் (Man) இன் கருணையால் மனிதர்களாக மேன்மை பெற்றோம் என்பதை ஒருபோதும் மறத்தல் ஆகாது.

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!

அத்து மீறினாலும், மண்டியிட்டு விடை தர வேண்டுமே ஒழிய, அவரை எதிர்த்து ஆயுதம் தூக்கல் ஆகாது. அல்லது அவர்களின் தெய்வத்தை வழிபடலாம். உங்களுடன் தவறாக நடந்து கொள்வது அவர்களுள் இருக்கும் கொடியவர்களாக இருக்கலாம். அவைதான் அடிக்கடி எல்லையை மீறி, அடுத்தவர் காட்டுக்குள் மேய்கின்றன. அடுத்தவரை ஆக்கிரமிக்க, சுரண்ட நினைக்கின்றன.

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

பிரம்மா ஒருபோதும் சிவனை அவமதிக்க கூடாது. சிவன் ஒருபோதும் விஷ்ணுவை அவமதிக்கக் கூடாது. வேதத்தை நாம் காலத்தை Freeze செய்தே ஜோசிக்க வேண்டும். அவ்வாறே அர்ஜுனனுக்கு கீதையை, விஷ்ணு வழங்குகிறார்.

இராமனை சரணடைந்த அவ்வை

பழந்தமிழின் சொந்தக்காரி மூத்த ஔவை ஞானம் பெற்று, தேறினாள். இராமன் வந்ததும் நீயே என் தெய்வம் என்று சரணடைந்தாள். இன்று அவள் உலகத்தில் மேலான தேசத்தில் வசிக்கிறாள். ஆனால், இராவணன் இராமனை எதிர்த்தான்; ஔவையின் தமிழை வாங்கி வளர்த்த இராவணனே (இன்றைய கந்தனாக), தமிழராக மிஞ்சி உள்ளான். அவர்களின் விசம் மட்டும் இன்னும் தணிந்த பாடில்லை. ஞானத்தை மிஞ்சிய தெய்வம் உலகில் இல்லை.

தமிழும் #ஒரு #குகனின் மொழியே!

தமிழும் ஒரு குகனின் (who's son) இன் மொழிகளில் ஒன்றே! பின்னாளில் அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்று மருவி, பல நீச குலங்கள் சேர்ந்து பழனி என்று உருவாகியது. அது தமிழை ஔவையிடம் தத்தெடுத்து வளர்க்கிறது. மயிலின் தோகையில் இன்று முதன்மையான கண்ணான பழனியும் ஒரு கண் தான் என்பதை மறந்துவிடல் ஆகாது.

ஞானத்தை மிஞ்சிய எதுவும் உலகில் இல்லை
ஞானமே அனைத்தின் எல்லை ஆகும்
ஞானத்தை கற்பிப்பது ஞாலமே!

தர்ம அதர்மத்தை விட்டு விடுவோம். ஆனால், ஞானமே ஒருவனை மேலானவன் ஆக்குகிறது; வல்லவன் ஆக்குகிறது; ஆண்டவன் ஆக்குகிறது. ஞானத்தை மிஞ்சி இந்த உலகில் எதுவும் இல்லை; எதுவும் இல்லை. அதுவே அனைத்தின் எல்லை ஆகும் - கௌதம புத்தர் / சித்தார்த்தன்.

அந்த ஞானத்தை கற்பிப்பது இந்த ஞாலமே ஆகும். ஆகவே ஞானம் நிலத்துடன் அதன் தன்மையுடன் (Nature) உடன் தொடர்புபட்டது. அதனால் நிலத்தை விட்டு, ஔவை போன்ற குடிகள் போகலாம். ஆனால் தமிழ் மொழி என்னும் ஞானம் போவதில்லை. பிள்ளையாருக்கு பழம் கிடைத்தது என்றும் உண்மை என்பதுபோல, முருகன் பழத்துக்காக பழனியில் நின்று சண்டை செய்ததும் என்றும் உண்மையே ஆகும்.

ஆகையால், வந்திருப்பது நல்லவரோ தீயவரோ என்று ஆராய்வதைக் காட்டிலும், வல்லவரா, எந்த அளவுக்கு ஞானம் படைத்தவர் என்று ஆராய்ந்து அவர் தாள் பணிதல் அவசியமானது. ஔவையார் அதையே செய்தார்!

எப்போது மேலானவர் வந்தாலும், வல்லவர் யார் அதிகாரம் செய்தாலும், அது கொடியவரே ஆயினும்...

"இராமா நீயே கதி;
நீயே என் கடவுள்!
என்னை ரட்சிப்பாய்
என்று தாழ் பணிவாள்"

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

உலகம் என்ன நினைக்கிறது என்பது குறித்து அக்கறை கொள்ளாமை தமிழர் செய்த மற்றுமொரு தவறு ஆகும். #அவன் அதிகாரம் என்று உலக மக்களின் மனநிலை, மற்றும் அபிப்பிராயம் பற்றியதே ஆகும்.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

அதிலே தர்ம அதர்மம் ஒருநாளும் இடம்பெறாது. உலகம் கெட்டுப் போனால் அங்கே நாமும் அவர் தம்மை சார்ந்திருப்பது மிக அவசியமாகும். அவர்கள் செய்வதை செய்யாது போனாலும், அவர்களை பழித்தல் அல்லது விமர்சித்தல் ஒருபோதும் கூடாது.

உலகை சரணடைந்தே பிள்ளையார் பழத்தை பெறுகிறார். உலக அரங்கில் அவன் ஆட்சி நடக்கையில், அவர்களின் அபிப்பிராயங்கள் விலை மதிப்பற்ற ஒன்றாகும்.

3. பற்று காரணமாக ஞானம் முழுமை பெறாத தமிழர்

ஒருவர் ஞானோதயம் அடைய அவர் பந்த பாசங்கள் எல்லாவற்றையும் துறக்க வேண்டும்; முழுமையாக பற்றற்றவர் ஆதல் வேண்டும். அதற்காகவே ஞானம் பெற வேண்டுபவர் பிரம்மச்சரியம் பூண்டு பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்கிறார்.

இனப்பற்று இருந்தமையால் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு வட்டத்தின் எல்லைக்குள் தமிழர் முடங்கினர். உண்மைகளை அறிந்த பின்பும் அதனை ஒப்புக் கொள்ள முடியாமல் போனது. முழுமையான சத்திய ஞானத்தை அடைய முடியாமலே போனது

இனத்தில் அதீத பற்று நம்பிக்கை கொண்டித்தல், அவர்கள் முழுமையான சத்தியத்தை உணர விடாமல் தடுக்கும்.

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை
Nothing to Something

தமிழர்கள் எதுவும் அற்ற சூத்திரர்கள் ஆவார்கள். காதல் திருமணம் செய்தமையால் பெற்றோர்களின் ஆசீர்வாதத்தை இழந்து, சொத்து எதுவும் வழங்கப்படாமல், தனித்து விடப்பட்டவர்கள். இவ்வாறானா பல நீச குலங்கள் சேர்ந்து பழனியில் காதல் மன்னர்கள் (கந்தன்) உருவாக்கிய மொழியே தமிழ் மொழி ஆகும். உண்மையில் அவர்களின் சொத்து என்று எதுவும் இல்லை.

பூச்சியத்தில் இருந்து துவங்கிய அவர்களை ஆதரித்தது அண்ணாமலையான் (இந்தியாவின் தென் துருவம்) ஆவான் - பரசுராமர். அவனது ஞானத்தின் அருளால்தான் எதுவும் இல்லாமல் இருந்து ஒரு இனத்தின் அடையாளத்தையே முழுமையாக உருவாக்க முடிந்தது. அது அவனின் அந்த நிலத்தின் இறையாண்மையின் சிறப்பு ஆகும். அந்த நிலத்தை அவமதித்து அவமதித்தல் ஆகாது.

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்
உடையான் சடையப்ப னூர்

பின்னாளில், கந்தனை நம்பி பல காதல் இனங்கள் உருவாகி வெளியேறி திராவிடர் என்னும் பெயரில் உண்டு.

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா
ஒருவரை சேர வேண்டிய உண்மையான சொத்து எவ்வளவு?

• ஒருவர் எவ்வளவு வலிகளைப் பொறுத்துக் கொள்கிறார். (Tolerance)
• ஒருவர் எவ்வளவு தியாகம் செய்கிறார். (Sacrifice)
• ஒருவர் எவ்வளவு இரத்தம் சிந்துகிறார். (Offerrings)
• ஒருவர் எவ்வளவு தன்னார்வ மனித பலிகளைக் கொடுக்கிறார்.

என்பதே ஒருவரது / ஒரு இனத்தின் நற்கர்மா ஆகும். வரவு.

• எத்தனை பேருக்கு வலிகளை கொடுத்தோம்.
• எத்தனை பேரை வாழ்வை துறக்க செய்தோம்.
• எத்தனை பேரை இரத்தம் சிந்த வைத்தோம்.
• எத்தனை பேரின் உயிரை எடுத்தோம்.

என்பது துஷ்கர்மா ஆகும். செலவு.

முதலில் செல்வம் ஞானமாக ஆசீர்வாதமாகவே வந்து சேர்கிறது. அது பின்னாளில் பூச்சியத்தில் இருந்து செல்வமாக மாற பல துன்பத்தை கடக்க வேண்டி நேரிடுகிறது.

தமிழர் Intelligence கொண்டே (கந்தனின் நுண்ணறிவு) கொண்டே பூச்சியத்திலிருந்து ஒரு இனமாக, அடையாளமாக உருவாகவே இந்த யுத்தங்கள் எல்லாம் செய்யப்பட்டது.

என்னும்போது தமிழ மக்கள் கேட்கிறார்கள்; என்றால் நாம் யுத்தம் செய்தது, எம் உயிர்களைப் பலியாக்கியது, பல துன்பங்களை சந்தித்தது எல்லாம் விளையாட்டா; வேடிக்கையா!

அதனால் அடைந்த செல்வம் எல்லாவற்றையும் தமிழர்களே கொண்டுள்ளனர் ஆனால் அவர்கள் வெளிநாடுகளில் அநேகம் வசிக்கின்றனர். அதோடு, தமிழர்கள் இங்கே சம்பாதித்த நற்கர்மாவை அவர்களுக்குப் பங்கிடும்போதும், அவர்களின் உறவினர்கள் எத்தனை பேர் மரணித்தார்கள், போர் புரிந்தார்கள் என்று கேட்டே பகிரப்பட்டது.

இது தமிழர்களுக்கு மட்டுமல்ல; சிங்கள இராணுவத்தினருக்கும் பொருந்தும். ஆனால் போரில் பங்குபற்றிவர் அங்கு செல்ல முடியவில்லை. அதுவே மெய்யான பாரியின் நிலைமை ஆகும்.

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஏன் நான் மூத்தோர், சான்றோர், முதியவர் என்று சொல்லாமல் பெரியவர் என்று சொல்கிறேன் என்றால் ஒருவர் பல வகையில் பெரியவர் ஆகலாம்.

• வயதில் ஒருவர் பெரியவர் ஆகலாம்.
• கல்வியால் பெரியவர் ஆகலாம்; வயது அதை தீர்மானிக்காது.

• திறமையால் பெரியவர் ஆகலாம்; உயர்ந்த குலமாக இருக்க வேண்டியதில்லை.

• பாரங்களை சுமப்பதால் பெரியவன் ஆகலாம்; அவன் கற்றவனாக இருக்கக் வேண்டியது இல்லை.

ஆகாயக் கப்பலின் அர்த்தம்

ஆணவத்தில் ஆடித் திரிந்தேன்.
அங்கே அன்னவன் அண்ணல் வந்தான்,
ஆவி சிறுத்தேன்!

ஞானத்தில் சிறந்தது பணிவு ஆகும்.

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை

ஞானமே இந்த உலகில் அனைத்தின் உச்சம் ஆகும். அதற்குமேலே எதுவும் இல்லை. #ஞானசூனியம். கடவுளைக் கூட நாம் நமது ஞானத்தினாலேயே உணர்ந்து கொள்கிறோம்.

நாம் காணும் உருவ கடவுளர் எல்லாம் உலக இயக்கத்தில் பங்கேற்கும் இயற்கை வரைந்த வேதத்தின் வரவிலக்கணங்கள் ஆகும். அவை எல்லாம் ஒரு பரம்பரையையே குறித்து நிற்கும்.

ஞானத்தின் அளவு / வேகம்

ஒருவர் ஞானத்தின் வேகத்திற்கேற்பவே அவர் தன் குறிக்கோளை அடைய இயலும். அதனால் தான் காலம் நேரம் தாழ்த்தியாவது வேண்டிய நியாயத்தை பெற்றுத் தருகிறது. காலம் அனைத்திற்கும் மருந்தாகிறது.

கடவுளை ஒரு வரம் கேட்டால், அவர் தன் மாயத்தால் நொடிப் பொழுதில் மாற்ற முடியாது. உதாரணமாக ஒருவர் ஐஸ்வர்யா போன்ற மணப்பெண்ணை கேட்டால், முதலில் இவரை அதற்கு ஏற்றால் போல தயார் செய்ய வேண்டும். அதற்கு கால தாமதம் ஆகும். எவ்வளவு தாமதமாகும் என்பது அந்தக் கடவுள் கொண்ட ஞானத்தின் அளவு அல்லது வேகத்தைப் பொறுத்தே அமையும்.

கடவுள் என்று தனிப்பொருள் இல்லை
நினைவே, சுயமே, சிந்தனையே கடவுள்

புத்தர் சொன்னார் கடவுள் இல்லை. அது குறையான போதனை குறிப்பு ஆகும். அவர் முழுமையாக சொன்னது மக்கள் மத்தியில் சென்று சேரவில்லை.

சுயநினைவே / Conciousness கடவுள் ஆகும். அதையே நாம் சிவம் என்று இந்துமதத்தில் சொல்கிறோம். இந்த மொத்த பிரபஞ்சமே ஒரு தன்நினைவினால் உருவானது. கடவுளும் பௌதீக விதிகளுக்கு கட்டுப்பட்டவரே! ஆனால் அதீத சக்திநிலையில் அல்ல.

அடைப்படையில் Conciousness என்பது ஞானம் உயிர் பெற்ற நிலை ஆகும்.

• Conciousness - Active
• Wisdom - Passive
கடவுளை தேடிக் கொல்வதே நவீன உலகின் முதல் வேலை ஆகும்.

பிரபஞ்சம் இந்த உலகைப் படைத்தது. அதே கடவுளில் Conciousness எமக்குள் வந்த பின்பு நாமே மாற்றங்களைச் செய்யும் தன்மை உடையவராயினோம். படைத்தல்கள் செய்யக் கூடியவர் ஆயினோம். ஆகையால், நாமும் கடவுளின் அம்சம்; பிள்ளைகள் ஆவோம். எந்த அளவுக்கு எமது Conciousness ஐ நாம் வளர்க்கிறோமோ, அந்த அளவுக்கு நாம் கடவுளைக் காண்கிறோம். அதுவே மெய்யான கடவுள் வழிபாடு ஆகும். நாம் எம் ஐம்புலன்கள் மூலம் அந்த Conciousness ஐ சந்தோசப்படுத்தவே ஏனைய எல்லாமும் செய்கிறோம்.

இயக்கம் என்பது கடவுள் ஆகும்

எந்த ஒன்றையும் இயக்குவது கடவுள் ஆகும். எனில், நிலையான சக்தி கடவுள் இல்லையா! அங்கும் இயக்கம் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் எம்மால் ஆய்ந்து அறிய முடிவதில்லை.

இயங்குவது கடவுள்; இயங்காதது கடவுள்;
இவை எல்லாம் இருப்பவை (Existing).

இல்லாததும் கடவுளே! Not Existing.
Wonder of God!

அதாவது இந்த பிரபஞ்சம் தோன்ற முன்பு அங்கே எதுவும் இல்லை. ஆனால், அங்கும் அந்த Conciousness அமைதியாக அந்த நேரத்திற்காகக் காத்துக்கொண்டு இருக்கிறது. நினைவுக்கும் அது செயற்படவும் ஐம்பொறிகள் அவசியம் அல்ல.

சக்தி கடவுள் ஆகும். சக்தியால் இயக்கம் ஒன்றை செய்ய முடிவதால், சக்தியும் கடவுள் ஆகும்.

Concousness காலம் தாண்டியது; Co-existing

Concousness காலம் தாண்டியது. அனைத்தும் Co-existing. அது துணைக்கொண்டே நாம் இணைப்பு இன்றிப் பேசிக் கொண்டு உள்ளோம். நாம் இன்று மனிதராக, தனித்தனி பரம்பரையாக இருந்தாலும் ஒருபோது ஒரே உயிரத்தின் பிள்ளைகளாக இருந்திருப்போம்.

அந்த போதுகளை ஒன்றிக்க செய்தால், அது Co-existence என்று வர்கிறது. நீயும் நானும் ஒன்று; Supreme Soul என்று வரும். யார் அறிவார்; நான் ஆடு, மாடுகளுடன் பேசிக்கொண்டு இருக்கலாம். அப்போது நான் ஒரு குரங்காகவும் இருக்கலாம்.

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவன் ஞானப்பழத்தை தமிழருக்கே கொடுத்தான். ஆனால் தமிழர் சங்கரனின் பிள்ளைகள் அல்லவா; அதில் அனைத்து இனத்தின் இரத்தமும் அதில் கலந்திருக்கும். அதுவே சிறப்பு; அதுவே சாபமும் ஆகும். அதிலே ஒரு புத்திசாலிகளின் வீச்சு வழக்கம் போல Normal Curve போல Bell Curve ஆகவே இருக்கும்.

ஆகவே அதில் எல்லோருக்கும் அந்த ஞானப்பழம் புரியாது. அதிகூடிய நுண்ணறிவு உள்ளவர்களுக்கு மட்டுமே அதனை புரிந்து கொள்ள முடியும். அந்த அதிபுத்திசாலிகள் மத்தியில் திருடர்களும் இருப்பார்கள்.

கொம்பை விட்டு வாலை பிடித்த பாரி. இந்த உலகின் பிடி திராவிடர்களின் கையிலேயே உள்ளது. உலகை சிவன் ஆண்ட காலத்தில் மக்கள் என்ன புரட்சி செய்தாலும் அந்தக் கூர்வாள் கொண்டு அடக்கி விடுவான். வாழ் ஏந்திய சிங்கம்; #சங்கிலியன். #Sangi.Lion. தமிழரை வளர்த்தெடுத்த அண்ணாமலையான் வளர்த்தவன் செத்துவிட்டான்.

...மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்றஎஞ் சிவனை...

அது சங்கரனின் ஒரு முடிவில்லாத பயணம் ஆகும். காதல் அழிவதில்லை.

அதிபுத்திசாலி திருடர்கள் அதனை தவறாகக் கையாண்டிருக்கவும் வாய்ப்புண்டு. அனுமதிக்கப்படாத நூல்களைக் கற்று இந்த உலகை கட்டிப்போட்டு, துன்புறுத்தி இருக்கலாம். இது குறித்து அப்பாவித் தமிழர்கள் அறிய மாட்டார்கள். கர்மா 100%.

உதாரணம்: இந்திரனை சிறையெடுத்த இந்திரஜித்; இன்னும் பல...

அதிகார படிமுறைகளை என்றும் மதிக்க வேண்டும். அதை தாண்டி நீ எங்கேயும் நியாயம் கேட்க முடியாது. ஒரு இடத்தில் கேட்கலாம்! நீ கள்ளனாக இருந்ததால் இன்னொரு கள்ளனிடத்தில் நியாயம் கேட்கலாம்.

சிவனை மதிக்காத தமிழர்

தமது கடவுளை, கண்ணை இழந்த தமிழர் ஆணவத்தால் சிவனை மதிக்கத் தவறினர். அதன் விளைவுகளையும் சந்தித்தனர். கர்மா தானாக (த) நடப்பது; அதனை வெல்ல தேவர்கள் முயற்சி செய்தவாறே உள்ளனர். கர்மா காதலின் பிரதி விம்பம் ஆகும். அந்தக் காதலை கழுத்தில் சிறை வைத்தும் உள்ளனர், தேவர்.

காதல் கர்மாவை நீங்கள் கண்மூடித்தனமாக நம்பலாம்; #காசி. கையில் எடுத்து கையாளத் தேவையில்லை. அவ்வாறு முயல்பவர் தேவர்களின் ஆதிக்கத்துக்கு, தொல்லைக்கு மிகவும் ஆளாவார்கள். பிறகு அவர்களின் செயல்பாடு அவர்களைப் பைத்தியமாக்கும்.

தமிழர் சிவனை மட்டுமல்ல. வேறு எவரையும் மதிக்கவில்லை. தன்னை, தன் மயிலை மட்டுமே மலையென நம்பினர்.

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

சிவன் பழத்தை பிள்ளையாருக்கு கொடுத்தது வேதம், என்றும் உண்மை என்று வைக்கும் இந்திய சிவனுக்கு, பழனியில் நின்று #பழனிக்காக முருகன் சண்டை செய்ததுவும் என்றும் உண்மை; வேதம் என்பது தெரியாதா!

அது பாற்கடலைக் கடையும் சூத்திரம் ஆகும்.

• தெரிந்தே நடிக்கிறார்களா?
• இந்தியாவும் தேவர் வசமாகிவிட்டதா?
• அல்லது அவர்களின் பற்றுகள், முழுமையான ஞானத்தை அடைய விடாமல் தடுக்கிறதா?
• உண்மையை அறிந்த தந்தை செய்ய வேண்டிய கடமை என்ன?
• கடமையை செய்யாத தந்தையை கடவுளாக மதிக்க மாட்டார்.

தமிழர்கள் துர்கர்மாக்கள் எனக்கு புரிகிறது. அதற்கு தண்டனைகள்; கொடுத்து அகதியாக உலகம் முழுவதும் அலைகின்றனர். இப்போது கர்மா முடிந்தது. இப்போது நீ அவர்களின் நிலத்தை நாடக வழங்கும் தீர்வுக்கு உடன் படுவாயா அல்லது தடையாக நிற்பாயா?

காலன் என்பது தமிழர்களுக்கு வேதத்தில் வகுக்கப்பட்ட கடமை ஆகும். ஈசன்; கரிகாலன். அதற்காகவே இறுதியாக உலகை படைத்த விஷ்ணு, வாமன அவதாரத்தில் குடையை மட்டும் விட்டு வைத்தார். நான் உன்னை மூத்தவனாக மதிக்கிறேன். வருடம் ஒருமுறை எழுந்து பார்க்கும் மாபலி இன்று ஒரு வரம் கேட்கிறான். அதை நீ கொடுத்தே ஆக வேண்டும்.

நீ இந்தியாவுடன் சேர்த்துக் கொண்டாலும் பரவாயில்லை. ஆனால் தமிழர்களின் நிலம் H, பாரி, கழுத்துப் பகுதி, ஆலகாலவிஷம் மீண்டும் சொந்தமாக வேண்டும்.

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல
எனக்கு சிவனை அவ்வளவு பிடிக்கும்

தந்தையின் கடமையை, கர்மாவை செய்து முடிப்பதே ஒருவனுக்கு பிறவியின் நோக்கமாகும். நான் சூரியனை தினமும் கும்பிடுவேன். ஏனெனில் இந்த உலகத்தில் ஒளிமுதல், சக்திமுதல், உயிர் எல்லாமே சூரியனே! ஒருநாள் சூரியன் வராதுபோனாலே உலகம் பனியில் உறைந்து போகிறது. சூரியன் சிவனின் முக்கிய அம்சமாகும். கடவுளை தினமும் வெட்ட வெளியில் தரிசித்துக் கொண்டே கோயிலுக்கு செல்கிறார்கள், மனிதர்கள்.

பின்னாளில் சூரியனை வழிபடுவதையும் கைவிட்டு விட்டேன். உள்ளே இருக்கும் உயிரை நான் ஏன் வெளியில் தேட வேண்டும். நானே சூரியனின் அம்சம் தானே! பிறகு நான் ஏன் அவரை வெளியே வணங்க வேண்டும் என்று விட்டுவிட்டேன்.

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

நீ அப்பனாக இருந்தால், உனக்கு என் உடல் பொருள் ஆவி எல்லாம் உடமை. ஆனால் நான் என் நிலத்து இறையாண்மையை தர முடியாது. நீ வேண்டும் என்றால் எங்களை உன்னுடன் சேர்த்து வைத்துக் கொள். ஆனால், எமது ஞான வேலை, கோகினூர் வைரத்தை, முத்தை தர முடியாது. இலங்கையின் இறையாண்மையே காதல்; இதயம்; வேல்; ஞானம் ஆகும். இலங்கையே வரைபடத்தில் வேலின் தோற்றம் கொண்டது.

இலங்கை நிலம் இங்கே இருக்கும்போதே, அதன் இறையாண்மையை (கோகினூர் வைரத்தை) திருடிக் கொண்டு போய்விட்டனர். அதாவது ஒரு ஆண்மை இல்லாத பெண்ணாக இலங்கை நிலம். வழங்கப்பட்ட சுதந்திரம் போலி நாடகம்.

அந்த ஞானவேல் விலைமதிப்பற்றது. ஞானமே அனைத்தின் எல்லை என்று முன்பே சொல்லி இருந்தேன். இப்போது எம்மிடம் இருப்பது வேல் மட்டுமல்ல; திரிசூலமும் இன்று எம்மிடமே உள்ளது. இந்தியாவின் இறையாண்மையும் இன்று எம் கையிலேயே உள்ளது.

ஏழை குசேலனுக்குத் தோழமை
தாள்தந்து வாழவைப்பேன்
என்று கண்ணன் வந்தான்

குசேலன் ஒருவேளை குகனில் ஏழைகளாக இருக்கக் கூடும்.

இதே நம்மளுக்கு வேலையாப் போச்சு. எங்களுக்கு பெயர் எல்லாம் தேவை இல்லை. இதயத்தின் வேலை இரத்தத்தை Pump பண்ணுவதுதான். ஆனால் என்ன பாதுகாப்பு இல்லை. Protection இல்லை.

தனிநாடு பற்றி கதைப்பதை அறிந்தால் கொன்னுடுவாங்கடா!
எல்லோரும் பின்னுக்கு வர மாட்டான். அப்படி பின்னுக்கு வாறவன் "அவனுக்கு தேவையான நியாயம் இருந்தால்" ஒன்றும் செய்ய மாட்டான்.
பீஷ்மர் (Bissu Mar)

யார் இந்த பீஷ்மர்?

கந்தன் (சந்தனு) மகாராஜாவுக்கும் கங்கைக்கும் பிறந்தவர் பீஷ்மர் ஆவார்.

பீஷ்மர்: அஷ்தினாபுரத்தை தர்மம் அலங்கரிக்கும்வரை, அதற்கு காவலாக இருப்பேன்; பிரம்மச்சரியம் பூண்டு வாழ்வேன்.

#Bishma - Bikku.mar, Bishu.mar, Peace.mar
#Paari #Kavali

முல்லைக்கு தேர் கொடுத்த பாரி
கனி கொடுக்க மறுக்கும் முல்லைகள்

ஏன் இலங்கை மட்டும் வளர்ச்சியடையாமல் தேங்கியது?

அவன் என்னைக் கேட்கிறான்.
"நீங்க சோம்பேறியாக இருந்ததற்கு நாங்கள் என்ன செய்ய?"

வலது குறைந்ததுகள் (பாரி)
வலது தந்த தாது - Try the Latest Version

• இயற்கையானது (Naturally) - அதிகம் ஆதிகாலத்தில்
• செயற்கையானது (Made to be) - அதிகம் இந்தக் காலத்தில்

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...