Monday, March 16, 2020

எமக்கு மட்டும் கேட்கும் எரிச்சலூட்டும் ஓசைகள் : தொனி மாயத் தோற்றப்பாடுகள் - Phonemes Hallucinations

ஒரு குழப்பமான சொல்லைச் சொல்லுவார்கள். அதை நீங்கள் பலவாறு தினமும் பலமுறை சிந்தித்துக் குழம்புவீர்கள். இப்போது அதில் உள்ள ஒவ்வொரு தொனிப்பும் உங்களுக்கு கரைபாடம் ஆகிவிடும். இப்போது அச்சொல்லில் வரும் தொனிகளைக் குழப்பி அது கொண்டு உருவாக்கக் கூடிய எரிச்சல் ஊட்டக் கூடிய சொல்லைத் தேர்ந்தெடுத்து அதை அத்தொனிகளைக் கொண்டே கணினி துணைக் கொண்டு உருவாக்குவார்கள். "பாம்!" இப்போது அதனைப் பலவாறு பல முதல்களுடன் இணைத்து ஒலிப்பார்கள். நீங்கள் மட்டுமே அதைக் கேட்பீர்கள். அநாவசியமாகப் பல பேருடன் குழம்புவீர்கள்; சண்டை பிடிப்பீர்கள்.
இதன் மாற்றுப் பொறிமுறை (Reverse Engineering) உம் உண்டு. சூழலில் அடிக்கடி ஒலிக்கும் ஓசைகளின் தொனிகளை எடுத்துக் கோர்வையாக்கி, வேண்டிய வடிவமாக்கி அதை உங்கள் மனதில் ஆழமாகப் பதியச் செய்துவிடுவர். இப்போது எவ்வெப்போது அந்த ஓசை உங்கள் சூழலில் ஒலிக்கிறதோ, அப்போதெல்லாம் நீங்கள் அந்த வடிவமைக்கப்பட்ட சொற்கள்/ஓசைகளைக் கேட்பீர்கள். உதாரணம்: வானொலி இரைச்சல், தொலைபேசி ஒலிப்பான் அதறல்கள், அரவச் சத்தங்கள், தட்டும் சத்தங்கள் போன்றன ஒலிக்கும் போது நீங்கள் வேறு ஏதாவது உணர்வது.

ஆனால் இதனைச் செய்வதற்கு உங்களுடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அவசியம். அவ்வாறு அல்லாமல் அவ் ஓசைகளை உங்கள் மனதில் ஆழமாகப் பதிவது கடினம். நீங்கள் கேட்கும் பாடல்களில் சேர்த்துப் பதிந்தும்கூட வைக்க வாய்ப்பு உள்ளது.

இதில் என்ன மர்மம் எனில் நீங்கள் மட்டுமே இவ் ஓசைகளைக் கேட்பீர்கள். அருகில் உள்ளவர்களைக் கேட்டால் அப்படி எதுவும் கேட்கவில்லை என்றே சொல்வார்கள். அது உண்மைதான். உங்கள் மனம்தான் ஓசைகளைத் தவறாக வாசிக்கக் கற்றுக் கொண்டுவிட்டது.

பழக்கம்தான் பெரிசு.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்.
Drilled holes are easily followed by nails.
It is easy to draw over a picture already drawn.
A known song is easy to be followed once you have start up.

Tips: Lighten up your mind when you are studying.
Needles are easy to pierce in wool rather than rock.

Thursday, March 5, 2020

ஆண்கள்: வேண்டாம் இந்த சீதனக் கொடுமை...

ஒரு சில இனங்கள் மட்டுமே பின்பற்றும் விநோதமான திருமணக் கலாச்சாரம்தான் இந்தச் சீதனம். ஒரு ஆணிற்கு, ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கும்போது, மாப்பிள்ளை வீட்டார் வேண்டும் பெறுமதியைப் பெண் வீட்டார் பணமாகவோ, நகைகளாகவோ, சொத்துக்களாகவோ திருமண தினத்தன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ கொடுத்தாக வேண்டும். சில திருமணங்களின்போது திருமணத்தின் பின்பும் சீதனம் செலுத்த அனுமதிக்கப்படும். அதற்காகக் குறித்த காலம் வாய்தாவாக வழங்கப்படும். அதற்குள் பேசிய சீதனம் செலுத்தப்படாமல் திருமண பந்தம் முறிந்து போன சந்தர்ப்பங்களும் உண்டு. வெளிச் சமூகப் பார்வையில் இதனால் ஒரு ஆண் (மணமகன்) நன்மை அடைவது போலத் தோன்றும். அது எப்போதும் உண்மை அல்ல. குடும்பக் கட்டமைப்பின் உள்ளே பார்க்கும்போது இதனால் அதிக நஷ்டம் அடைவதும் மன உளைச்சலுக்கு உள்ளாவதும் ஆண்களே. ஆனால் கொடி பிடிப்பது என்னமோ பெண்கள் தான்.

ஒரு குடும்பத்தினுள்ளே, அதுவரை அக்குடும்பத் தேவைகளை எல்லாம் கட்டிச் சேர்த்த சொத்துகள் யாவும் பெண்களுக்கு சீதனமாகவும், அப்போதும் அதற்கு முன்பும் ஏற்பட்ட பொறுப்புக்கள் (கடன்கள்) எல்லாம் ஆண்களுக்கும் வழங்கப்படுகிறது. நன்றாகக் கவனியுங்கள் சொத்துக்கள் பெண்களுக்கு; பொறுப்புக்கள் ஆண்களுக்கு. இது மட்டுமல்ல, இப்போதெல்லாம் பெண்கள் தமக்கு சமவுரிமை வேண்டும் எனக்கோரி, கல்வி கற்கின்றனர். அது தவறல்ல. அப்போது அவர்கள் சீவிச் சிங்காரித்துக் கல்லூரிக்குச் செல்லும் செலவுகள் மேலதிகம். இது போகக் கல்வி கற்ற பெண்ணிற்கு கற்ற மாப்பிள்ளையையே திருமணம் செய்து கொடுக்க வேண்டும். அப்போது அவர்களுக்கு வழங்க வேண்டிய சீதனப் பெறுமதியும் அதிகமாக இருக்கும். ஏனெனில் மாப்பிள்ளை வீட்டார், மாப்பிள்ளையின் படிப்புச் செலவை திருப்பி எடுக்க வேண்டுமாம். என்ன செய்ய அவனும் இதனால் பாதிக்கபட்டு இருக்கக்கூடும். ஆண் பெண் இருபாலாரும் வாழும் வீடுகளிலே, அப் பெண்களிற்குச் சீதனம் கொடுப்பதற்காக பல தேவைகள் நிறைவேற்றப்படாமல் சொத்துக்கள் சேர்க்கப்படும். இதனால் வஞ்சிக்கப்படப் போவது ஆண்மகன்களும் தான். அது மட்டுமல்ல ஆண்மகன்கள் ஓரளவு வளர்ந்து விட்ட பின்னே, பெற்றோர்கள் ஆரம்பித்து விடுவார்கள். நீதான் உன் சகோதரிகளுக்குச் சீதனம் கொடுத்தாக வேண்டும் என்று. இதனால் ஆண்மகன்கள் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றார்கள்.

எங்கள் வீட்டில் அம்மாவின் ராஜ்ஜியம் தான். அதனால் பெண்கள் கேட்கும் சகல சமவுரிமைகளும் பெற்றுக் கொடுக்கப்படும். நான் அதனை வரவேற்கிறேன். எங்கள் வீட்டில் ஆணையும் பெண்ணையும் வேறுபடுத்தி எதுவும் வழங்கப்படுவது கிடையாது. அனைவருக்கும் எல்லாம் சமமாக, தேவையானபோது வழங்கப்படும். அனைவருக்கும் சம சுதந்திரம் கிடைப்பதால் என் பேச்சை என் இளைய சகோதரிகள் கூடக் கேட்க மாட்டார்கள். தனக்குத் தான் வைத்தது தான் சட்டம் என்று சண்டை செய்வார்கள். நான் எனக்காக எதுவும் செய்யுமாறு கேட்பதில்லை; எவரையும் கேட்டது மிக மிக அரிது. அவர்களின் நன்மைக்காக ஏதாவது அறிவுரை சொன்னாலும் அதனை ஏற்றுக் கொண்டு நடக்க மாட்டார்கள். ஆனால் இதுவும் உண்மை, அவர்கள் என்னிடம் உதவி என்று பெரிதாக எதுவும் கேட்டதுமில்லை. இது அந்தச் சமவுரிமை கொடுத்த திமிராகக் கூட இருக்கலாம். நான் அம்மாவிடம் கேட்டேன்; அனைவருக்கும் சமவுரிமை. வெறுமனே ஆணாகப் பிறந்த குற்றத்திற்காக, நான் ஏன் என் சகோதரிகளுக்குச் சீதனம் தர வேண்டும் என்று. அவர் சொன்னார்; நீ சீதனம் தர வேண்டாம். உன்னைப் படிப்பித்த செலவைத் தா. நான் என் மகள்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறேன் என்று. பிறகு என்ன, சொத்துக்கள் பெண்களுக்கு; பொறுப்புக்கள் ஆண்களுக்கு. அதோடு இந்த சமூகத்தில் அப்படித்தான் கடைப்பிடிக்கப்படுகிறது என்றும் சொன்னார். I do not care about this bloody society. எங்கள் வீட்டில் எல்லாம் இந்தச் சமூகத்தில் உள்ளது போலவா கடைப் பிடிக்கப்படுகிறது.

ஆக வெறுமனே ஆணாகப் பிறந்த ஒரு குற்றத்திற்காக ஒரு ஆண்மகன் தன் பல கனவுகளைப் புதைத்துத் தன் சகோதரிகளிற்குச் சொத்துச் சேர்க்க ஒத்துளைக்க வேண்டும். அது போதாமல் போனால் அவனும் உழைத்தோ கடன்கள் வாங்கியோ தனது சகோதரிகளிற்குச் சீதனம் கொடுத்துக் கல்யாணம் செய்து வைக்க வேண்டும். இதிலும் ஒரு ஆண்மகனும் பல பெண்மகள்களும் உள்ள வீடுகளில் நிலைமை கவலைக்கிடம். அதுவரை தந்தை சேர்த்த சொத்துக்களும் சகோதரிகளுக்கு, ஆண்மகன்கள் உழைப்பும் சகோதரிகளிற்கு அதில் எஞ்சிய கடன் மட்டுமே ஆண்மகன்களுக்கு. இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் மேலே குறிப்பிட்ட தந்தையும் இது போன்ற சூழலில் பாதிக்கப்பட்ட ஒருவராகத்தான் இருந்திருப்பார். #அவரும் ஒரு ஆண்தானே. இவை யாவும் தாண்டி ஒரு ஆண்மகன் திருமணம் செய்யும்போது அவனுக்குச் சீதனம் கொடுத்தால் தான் என்ன கொடுக்கவில்லை என்றால் தான் என்ன.

எப்போதும் சமவுரிமை வேண்டும் என்று கேட்கும் பெண்களே இதில் எங்கே வாழ்கிறது சமவுரிமை. ஒரு வீட்டில் இருந்து ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணிற்கும் சமமாகத்தான் அனைத்தும் வழங்கப்படுகிறதா?

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா! நீ கண்ணை மூடித் தூங்கிடடா!

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...