Monday, August 31, 2020

வேலின் சிறப்பு

 முருகவழிபாட்டினை முதன்முதலில் தொடங்கியவர் ஆதிசங்கரர் ஆவார். பார்வதி  சூரனை அழிக்க தன்னுடைய சக்தி முழுவதையும் வேலாக மாற்றி முருகனுக்கு அளித்து  ஆசிர்வதம் செய்து அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது. குன்று இருக்குமிடமெங்கும் குமரன் இருப்பது போல வேல் இன்றி முருகனை வழிபடுவது மிக மிக அரிது. வேல் ஞானத்தின் அடையாளம் ஆகும். ஞானம் எனும் ஆயுதம் கொண்டு மாயை எனும் இருளை நீக்க முடியும்.

ஆன்மீகம்
வேலினை அதன் பாதத்திருந்து தலைக்கு தரிசித்தால் அல்லது மனதில் கற்பனை செய்தால் உடலும் உள்ளமும் எழுச்சி பெறும். அதன்போது குண்டலினி மேலெழுகின்றது. உடலில் சேர்த்து வைக்கப்பட்ட சக்தியும் எண்ணங்களும் பிரபஞ்சத்தில் கலக்கும். சக்தி சிவத்தினைச் சேர்கிறது. சக்தி பிறப்பிக்கும் அளவு அதிகரித்து உடலின் அதிர்வு உச்சம் அடைகின்றது. கோபுர #தரிசனமும் இதன் அடிப்படையிலானதே!

வேலினை அதன் தலையிலிருந்து பாதத்திற்கு தரிசித்தால் உடலும் உள்ளமும் சாந்தமுறும். அதன்போது குண்டலினி சாந்தம் கொள்கிறது. உடலில் பிரபஞ்ச சக்தியின் சேர்க்கை நிகழ்கிறது. சிவம் சக்தியில் சேர்கிறது. சக்தி பிறப்பிக்கும் அளவு குறைவடைந்து உடலின் அதிர்வு தாழ்ச்சி அடைகின்றது.

கூரான இடத்தில் ஏற்றங்கள் செறியும் என்பது விஞ்ஞானத்திலும் சொல்லப்படுகின்ற உண்மை ஆகும். இதனால் கூரான பொருளில் முனைவாக்கம் ஏற்படும். இது போன்றதொரு முனைவாக்கம் அல்லது உருக்குலைவுதான் இந்தப் பிரபஞ்சமே தோன்றக் காரணமாக இருந்திருக்கும் என்றும் விஞ்ஞானம் நம்புகிறது. நாம் அப்பொருட்களை காணும்போது அதே முனைவுத் தன்மை நமது மனதிலும் எழுகிறது. காரணம் அப்பொருளின் விம்பம் நமது விழித்திரையிலும் விழுகிறது. திக்கற்று இருப்பவருக்கு ஒரு திசை கிடைப்பது போல, நோக்கங்கள் இல்லாது இருப்பவருக்கு ஒரு முனைவு ஏற்படுகிறது. அதிலே ஒரு நம்பிக்கையும் நிலைத்த தன்மையும் ஏற்படுகிறது. அவருடைய வாழ்வில் முன்னேற்றம் கிட்டுகிறது. இது ஒரு ஞானம் கிடைப்பதையே குறிக்கிறது. இது உண்மையில் ஞானத்தின் சின்னமாகிறது.

வேல் உள்ள இடங்களில் உள்ள ஏற்பட்டுள்ள சலனமான ஏற்றங்கள் யாவும் வேலினால் உறிஞ்சப்பட்டு அந்த இடம் சாந்தம் அடைவதோடு வேலின் சக்தியும் பெருகுகிறது. இதனால் அதனை #பிரார்த்தனை செய்பவர்க்கு வேண்டியவை கிட்ட வழி பிறக்கிறது. ஆனால் எல்லா இடங்களிலும் அதனை வைத்து பூஜிக்கக் கூடாது. அதனால் தீய சக்திகளும் எண்ணங்களும் வளர வாய்ப்புகள் உள்ளது. ஏன் இது போன்ற சக்திவாய்ந்த மூலகங்களைக் கோயில் என்று புனிதமாக ஒன்றை அமைத்து அங்கே வைத்தார்கள்? அங்கே நல்லவர்கள் மட்டும்தான் வருவார்கள். அவர்கள் எண்ணங்கள் மட்டும் நிறைவேறும். நன்மை விளையும். தீயவர்கள் எண்ணங்கள் இதன்பாற்பட்டால் அனைத்தும் பாழாகிவிடும்.

சித்தாந்தம்
வேலானது நுனியில் மிகக் கூர்மையாகவும், இடையில் அகலமாகவும், முடிவில் ஆழமாகவும் இருக்கும். நுனியில் கூரானது போல அறிவானது கூர்மையாகவும் தெளிவாகவும் இருத்தல் வேண்டும். இடையில் அகலமானது போல எண்ணங்கள் மிகவும் அகன்று இருக்க வேண்டும். அனைத்திலும் பரந்த அறிவு சிறிதளவு இருக்க வேண்டும். அனைத்தையும் விரிவான பார்வையில் நோக்க வேண்டும். அடியில் ஆழமாக இருப்பது போல எதிலும் ஆழ்ந்த அறிவு கொண்டிருக்க வேண்டும். எதைக் கற்றாலும் ஆழமாகக் கற்க வேண்டும். இவ்வாறு ஞானத்தின் தன்மையை வேல் விளக்குவதாக ஒரு பொருள் உண்டு.

புராணம்
முருகன் தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படுக்கின்றார். தமிழ்க்குலம் காக்க வேல் கொண்டு அவர் போரிட்டு பல போர்களின் வென்றதன் நினைவாக வேலினை வைத்து வழிபடுவதாகவும் ஒரு கதை உண்டு. ஆதிகாலத்தில் ஈட்டியே சக்தி வாய்ந்த ஆயுதமாகக் கருதப்பட்டது. வேலும் ஈட்டியின் வடிவமுடையதே!

முருகனின் கதைகள் மக்கள் மனதில் இருக்கும் வரைக்கும் தான் முருகனுக்கு சக்தி இருக்கும். முருகனுக்கு மட்டுமில்ல அவன் அப்பன் சிவனுக்கும் இது தான் நிலை.
#ஆன்மீக_சூட்சுமம்_1
#மெய்ப்பொருள்_காண்பதறிவு

Tuesday, August 25, 2020

உடல் நலம் பேண என்ன செய்ய வேண்டும்? மெய்யுணர மெய்யுணர வேண்டும்

தினமும் உடற்பயிற்சி ஏன் அவசியமாகிறது?
உடலின் அனைத்துப் பாகங்களும் சிறப்புற வேலை செய்ய உடற்பயிற்சி மிக அவசியமாகும். ஆண்டவன் உங்களுக்கென்று தந்தவற்றை நீங்கள் பயன்படுத்தாவிடில், அது உங்களை விட்டு தொலைந்து போகிறது. வெள்ளையர் தமது உடலையும் புத்தி கூர்மையையும் விருத்தி செய்ய உடற்பயிற்சிகளைப் பயன்படுத்தினர். தமிழர்கள் யோகங்கள், வர்மங்கள் மற்றும் அப்பியாசங்கள் பலவற்றைப் பயன்படுத்தினர். அவை இப்போது அழிந்து போயின. உடல் உறுப்புகளை உடனடியாகத் துலக்குவதற்காக எமது மூட்டுக்களில் சக்தி எளிய வடிவில் சேமிக்கப்படுகிறது. உடற்பயிற்சி செய்யாமல் ஒரே இடத்தில் இருந்து வேலை செய்யின் அது பல உடல் உபாதைகளை ஏற்படுத்திவிடும். அதோடு, உயிரை உடலுடன் பிணைத்து வைத்திருப்பது உடல் உறுப்புகளேயாகும். #அவை மீட்டாமல் போகும் பட்சத்தில் அந்தப் பிணைப்புகள் தளர்வுறுகின்றன. அவ்வுறுப்புகளின் செயற்றிறன் குறைவடைகிறது.

மூளையினால் வேலை செய்பவர்களிற்கு, வேலையில் மூழ்கிய பிறகு இடுப்பிற்குக் கீழ்ப்பகுதி பயன்படுத்தப்படுவது குறைவு. உடலில் சுவாச வீதத்திற்கு ஏற்ப அனுசேபம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அதற்காக சுவாச வீதத்தைக் குறைக்க இயலாது. உடல் உறுப்புகளிற்கான இரத்த ஓட்டம் குறைந்துவிடும். அது மட்டுமல்லாமல் அதிகம் துலக்கப்படும் உறுப்புதான் மேம்படுகிறது. இருந்த இடத்தில் இருந்து வேலை செய்தல் உடலுக்கு நல்லதல்ல. மூளையினால் வேலை செய்வதாகக் கூறிக்கொண்டு வாழ்க்கை ஒரு மூடிய கட்டடத்தினுள் வீணடிக்கப்படுகிறது.  தொன்று தொட்டே முளையினால் மட்டும் செய்யப்படும் வேலைகள் இருந்து கொண்டேதான் வந்துள்ளன. ஆனால், அதற்குப் பதிலாக அவர்கள் யோகா போன்ற ஆசனங்களைப் பின்பற்றி வாழ்ந்துள்ளனர். அவை உடலில் உருவாகும் மேலதிக அனுசேப சக்தியை வலுவிழக்கச் செய்ய உதவும். இவற்றைக் கோயில் கோபுரங்களில் சிற்பங்களிலும் செதுக்கிவைத்திருக்கின்றனர்.

இதயம் பெரிதாக வாழ வேண்டும்
சிறிய வட்டத்துக்குள் வாழக் கூடாது.  நமது உயிர் தலைக்குள் மட்டும் அடங்கிவிடக் கூடாது. #கண்களை மூடினால் நீங்கள் இந்த உடலுக்குள் இருப்பதை மறந்துவிட வேண்டும். எங்கும் நிறைந்தது போல உணர வேண்டும். அப்போது உடலின் மூலை முடுக்கெங்கும் இரத்தம் பாய்வதோடு உடற்சமநிலை மீழ்கிறது. #ஐம்புலன்களும் நிரம்பலுறும்போது அது தொடர்பான நியூரோன்கள் அருட்டப்படுவதால் அதுவரை அவை பெற்றுக்கொண்டவை உடனடியாக மீட்கக்கூடியதாக மாறும். உயிர் பிரிந்து சென்று மீண்டும் பிரபஞ்சத்தில் கலக்கும் சுதந்திரத்தையே நாடும். அதைக் கட்டி வைக்க ஐம்புலன்களை மீட்ட வேண்டும். #பிடித்திருந்தால் துன்பம் விட்டு விட்டால் முக்தி.

#உடலும் மனமும் எப்போது நிம்மதி அடைகிறது?
உடலிற்கு சுகம், மனதிற்கு நிம்மதி எப்போது கிட்டும் எனில், ஐம்புலன்களும் இனிமையாக மீட்டப்பட்டு ஓய்வடையும் போதாகும். காதிற்கு இனிய ஓசை, கண்ணிற்குக் குளிர்ச்சியான காட்சிகள், மூக்கிற்கு சுகந்தரும் மணங்கள், நாவிற்கினிய உணவுகள், மெய் காண் வருடல்கள் ஆகியன உச்சம் கண்டு ஓய்வடையின் அவை கிடைக்கப் பெறுகின்றன. அதோடு ஒருவரின்
உடலியல் செயல்பாடுகளைப் பொறுத்தே அவரின் அறிவு மற்றும் சிந்தனைத்திறன் இருக்கும். உம்: ஓடுதல், நடத்தல், கண் இமைத்தல் இன்னும் பல. ”ஓடும் வரையில் வெற்றி நமக்கு. ஓடுதல் நிறுத்தாதே!”

பழக்கம் தான் பெரியது
நினைவில் செயல்கள் எமது நடத்தையில் அதிக செல்வாக்குச் செலுத்துகிறது. நாம் எமது சிந்தனை செய்கையின்றி எத்தனையோ செயல்பாடுகள் செய்கிறோம். இவை ஐம்பொறியால் தகவல்கள் உணரப்பட்டவுடன் செயலாக்கம் பெறுகின்றன. பயிற்சியின் மூலம் எமது வேலைகளை விரைவாக முடிக்க இவைதான் காரணமாகின்றன. எமது பழக்கங்களே அவற்றைத் தீர்மானிக்கின்றன.   எனவே, புதிய பழக்கம் ஒன்றைக் கடைப்பிடிக்கத் தொடங்குகையில் கவனமாக இருக்க வேண்டும்.

உடற்சூடு தணிய என்ன செய்ய வேண்டும்?
உடலில் பிரதானமாக வெப்ப சக்தியும் மின் சக்தியுமே இணைவாகத் தொழிற்படுகிறது. உடல் சூடு அதிகரிப்பின் உடற் பித்தம் தலைக்கு ஏறுகிறது. இதனால் முடி உடிர்தல், மேகச் சூடு போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இப்படியும் ஒன்று உண்டு உடலால் வேலை செய்யாமல் மூளையால் வேலை செய்ய செய்ய மூளைக்கு அதிக சக்தி கிடைக்கப்பெறும். ஆனால், அதனை நெறிப்படுத்தவில்லையெனில் வினையாகிவிடும். இதனைத் தவிர்க்க தினமும் உடல் சோர்வுறும்வரை உடலாலே வேலை செய்ய வேண்டும். #வேட்டையாடப் பிறந்திட்டு மூச்சிரைக்க ஓடியாடித் திரியாமல் ஒரே இடத்தில் நின்று கொண்டு தினமும் தவறாமல் சாப்பிடுவது உடற்சூட்டை மிகையாகக் கூட்டிவிடுகிறது.
That extra energy is your silent killer

உடலை இரண்டு பாகங்களாகப் பிரித்து நோக்கினால், தலை மற்றும் தலை தவிர்ந்த உடல். வெப்ப ஓட்டம் தலையிலிருந்து காலிற்கு இருக்க வேண்டும். #இதற்கு உடல்  தலையை விடக் குறைந்த வெப்ப நிலையில் இருக்க வேண்டும். இதற்கு முரணாகக் காணப்பட 2 காரணங்கள் இருக்கக்கூடும். உடலிலுள்ள மேலதிக சக்தி மற்றும் தலைப் பகுதிக்கான இரத்த ஓட்டம் குறைவாகக் காணப்படுதல்.
தீர்வு:
1. உடற்பயிற்சி அல்லது கடின வேலைகள் உடற் சூட்டைத் தணித்து சாதகமான விளைவை உருவாக்கும்.
உம்: துவிச்சக்கரவண்டி மற்றும் நீச்சல் செய்தல் நல்லது.
2. மேலதிக சக்தியைக் குறைவாகப் பேண விரதம் இருத்தல் (வாரத்தில் ஒருநாள் ஒருவேளை உணவு தவிர்த்தல்) அல்லது உடன் சக்தி வழங்கும் மாப்பொருள் நிறைந்த உணவுகளை வெகுவாகக் குறைத்து மரக்கறி வகைகளை உண்ணல்.
உம்: ஒரு அகப்பை சோறு ஒவ்வொரு அகப்பை கறிகள்.
காலையில் கூழ் குடித்தல் உடல்நலம்ம் மேம்படச் செய்கிறது.

மீட்டாமல் இருக்க உயிருக்கு உடல் மீதான பற்று அற்றுப்போய் இன்பம் மிகாமல் குறுகுகிறது.
#சாமகானப்பிரியன்
#இராவணன்
#சிவன்

# Your physical activities determine your mental activities. Never stop running.
# Unconscious processes may play a larger role in behavior than thought in our activities. Motor reactions are such reaction without cognition. Emotional reaction - very very dangerous if it goes wrong. Out habits influence.
# Energy(plasma) gets deposited near limbs for immediate acts based on your ATP rate. If you don't exercise, it will cause heath issues.

Sunday, August 16, 2020

வானிலே நாம் வீழ்ந்தால்... - கவிதை

எம்மொழியும் சிந்தையுறும் கவி நம் செம்மொழியில்:
"வானிலே நாம் வீழ்ந்தால்..."


மழைத் துளிகள் விளையும் கருநீல முகில்காடு - முத்துச் சிதறல்கள்.

ஆங்கே பலவண்ணத்தில் தோன்றும் அரைநாண்கள் - வானம் வளைந்த போதுகள்.

தாரகைகள் பூத்த வெறுமை நிறத்தடாகம் - தங்க தெறிப்புகள்.

அங்கே கதிரோன் ஒளிநிழலாய் நிலவு - தங்கப் பதக்கம்.

பஞ்சுவிதைகள் திரணைகளாக வெடித்துலவும் நீல வெளி - மனம் கொள்ளும் பள்ளியறை.

அங்கு நிதம் உருண்டுருண்டு உறங்கும் ரசத் திவளை - பகல் அவன்.

பிறப்பிறப்பின் சாட்சிகள், காலை மாலை - செம்மேனியில் வெண்ணாரைத் துளை.

கார்மேகக் குவியலைப் பிளந்திறங்கும் மின்னல்கள் - எரிவான் வெடிப்பு.

அம் மின்னல்கள் உயிர் படைக்கும் வான் விம்பம் - நீல்கடல் மாயம்.

இம்மாய உலகில் யாவும் மாயமே...
வீழ்வோமா மெய் வானிலே!
மனமெனும் உடல் தரித்து...
வானிலே நாம் வீழ்ந்தால்...

- கீதன்

உளநலம் பேணும் மந்திர ஜெபமாலை

மனதை நெறிப்படுத்தும் மந்திர ஜெபமாலை


(2020 புரட்டாதி 16 இற்றைப்படுத்தப்பட்டது)

ஞானம் ஒன்றே என்றும் அளியாத மெய்ப்பொருள் ஆகும். முருகன் கையிலுள்ள வேலும் ஞானத்தின் பொருளையே குறித்து நிற்கிறது. ஞானத்தில் உளநலம் பெரிதும் செல்வாக்குச் செலுத்துகிறது. உடலை நோய்கள் பல பீடிப்பதைப் போலவே மனதினையும் நோய்கள் பீடிக்கின்றன. ஆனால் அவற்றை எளிதில் இனங்காண முடிவதில்லை. மனதை நெறிப்படுத்த ஆன்மீகம் பின்பற்றிய யுக்திகள் பல. உதாரணமாக, தொழுகை செய்தல், திருநீறு அணிதல், கோபுர தரிசனம், தோப்புக்கரணம் இன்னும் பல. அவற்றை நமது வாழ்வியலோடு இணைத்தே மதங்களும் சமயங்களும் தோன்றின. அவற்றுள் ஜெபம் செய்தலும் ஒன்று. பல குழப்பங்களிலிருந்து விடுபட்டு மனதை நெறிப்படுத்த ஜெபம் செய்தலும் ஒரு கருவியாக அமைகிறது.

நமது வாழ்க்கையில் பல வகையான குழப்பங்கள் வந்து சூழக் கூடும். நாம் அன்றாடம் சந்திக்கின்ற ஒவ்வொரு விடயங்களும் நமது அறிவிற்கு உரமாகும். அதிலே விசத் தன்மை கொண்ட மறைபொருட்கள் கலந்திருப்பின் அவையும் அழியாமல் அங்கேயே நிலைகொண்டுவிடும். எந்த ஒரு விடயமும் நமது மனதிற்குள் சென்று விட்டால், அவற்றை எளிதில் நீக்கிவிட முடியாது. தீயவையும் இதற்கு விதிவிலக்கல்ல. தீய எண்ணங்கள் நம் மனதில் விதைக்கப்பட்டால் அவை தோப்பாக மாறி, ஞான ஒளியை நம்மிடம் இருந்து மறைத்துவிடுகிறது. அவற்றை மறக்க நினைத்தால் அவை மேலும் வலுவாக வேரூன்றிவிடுகிறது.

ஜெபம் செய்தல் இது போன்ற தீய எண்ணங்களில் இருந்தும், இதுவரை நாம் செய்த பாவங்களில் (குற்ற உணர்ச்சி) இருந்தும் நம்மை விடுவிக்கிறது. அதோடு, மனதை ஒருமுகமாக வைத்திருக்கவும் இது உதவுகிறது. மனதில் பல மாறுபட்ட எண்ணங்கள் வராமல், நம்மைத் தெளிவித்து சரியான மார்க்கத்தை காட்டவல்லது. ஞாபக மறதி ஏற்படுத்தும் காரணிகளில் குழப்பமும் ஒன்று ஆகும். ஆகையால், இது மறதி எனும் நோயை விரட்டும் மருந்தும் ஆகும். இதன் தொழிற்பாடு முற்றிலுமாக உளவியலுடன் தொடர்புடையது.

இதனை அளவீட்டுடன் செய்வதற்காக ஜெபமாலை பயன்படுத்தப்படுகிறது. கண்ணை மூடிக்கொண்டு, ஒரு ஜெபமாலையைக் கையில் பிடித்து அதை எண்ணி எண்ணி ஒரே பொருளை மீண்டும் மீண்டும் உச்சரிப்பர். இந்த வழக்கம் அநேக மதங்களிலும் உள்ளது. கிறிஸ்தவர்கள் சிலுவை பொருந்திய மணிமாலையைப் பயன்படுத்தி மேரி மாதா அல்லது இயேசுவின் நாமம் ஜெபிப்பர். இஸ்லாம், பௌத்த மதங்களிலும் ஜெபம் செய்யும் வழக்கம் உண்டு.

இந்து மதத்தில் அநேகமாக 108 மணிகள் கொண்ட மாலை பயன்படுத்தப்படும். அதோடு இந்துக்கள் ”ஓம் - அஉம்” என்ற இந்த உலகம் தோன்றும்போது உருவான ஓசையையும் மந்திரத்தில் இணைத்து ஓதுவர். சுவாச வீதத்தைச் செம்மைப்படுத்த அது உதவுகிறது. விஷ்ணு பக்தர்கள் துளசி மாலை கொண்டு நாராயண நாமமும், சிவபக்தர்கள் உருத்திராட்ச மாலையும் வைத்து பஞ்சாட்சரமும் உச்சரிபர். சந்தன மாலை, ரத்த சந்தனமாலை, ஸ்படிக மாலை, ருத்திராட்ச மாலை, துளசி மாலை, செந்துளசி மாலை என இன்னும் பலவகை உண்டு.

இதன் பயனை மேலும் செம்மைப்படுத்த

  • ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து,
  • கண்களை மூடிக்கொண்டு,
  • வேறு சிந்தனைகள் தவிர்த்து,
  • கைகளில் சின் முத்திரை பிடித்து அல்லது ஜெபமாலையின் மணிகளை எண்ணிக்கொண்டு,
  • ஏதாவது மனதிற்கு பரவசம் தரும் சிறு வசனங்களை
தொடர்ச்சியாக மனதினுள் உச்சரிக்க வேண்டும்.

இதனையே சம்பந்தர், “விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்...” என்னும் பாடலில் பின்வருமாறு கூறுகின்றார். வான்வரை விறகுகள் அடுக்கப்பட்டு இருந்தாலும் அதனுள் புகுகின்ற சிறு கொடிய நெருப்பானது அவை அனைத்தையும் எரித்துச் சாம்பலாக்க வல்லது. அது போல நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் எரித்து அவற்றிலிருந்து நம்மை விடுவிப்பது “சிவாயநம” என்ற ஐந்தெழுத்தாகும் என்கிறார். “சிவாயநம” எனும் ஓசை மனதிற்கு அமைதியைத் தருவதாக சைவர்களால் உணரப்பட்டிருக்கிறது.

Tuesday, August 11, 2020

நீ நல்லவனா இல்லை கெட்டவனா?

எவரும் இங்கு பிறக்கும்போது முழுமையாக நல்லவராகவோ கெட்டவராகவோ பிறப்பது கிடையாது. அவரவர்களுக்கு ஏற்படும் சூழ்நிலைகள் அப்படி அவர்களை ஆக்கிவிடுகிறது. அதற்கு போதிய வழிகாட்டி இன்மை, வளரும் சூழல், போட்டி பொறாமைகள், சில மன உளைச்சல்கள், வறுமை போன்றன காரணமாக அமைகின்றன. இதைத் தவிர்க்க சில வழிகள் உள்ளன. எப்போதும் பொறுமையே நமக்கும் நம்மைச் சார்ந்தோருக்கும் அனைவருக்கும் நன்மை பயப்பது.

”தவளையும் தன் வாயால் கெடும்”
அவசரப்பட்டு வார்த்தைகளை வெளிவிடுதல் மிகவும் தீங்கானது.
கூறிய வார்த்தைகள் மற்றும் செய்த சபதங்களுக்காக வஞ்சனைகள் செய்வதுவும் ஒருவர் தீயவராக மாறுவதற்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. இது பல வேளைகளில் நண்பர்களையும் எதிரியாக்கிவிடுகிறது. இதனால் நண்பர்கள் தீய வழியில் செல்வதோடு அவர்களால் நமக்கி கிட்டவிருந்து உதவிகள் பலவும் தூரம் செல்கின்றன. அதனால்தான், எப்போதும் அமைதியாக இருத்தல் பல பிரச்சினைகளைத் தவிர்த்துவிடுகிறது. நாம் அன்பாக நடந்து கொள்ளாமல் அதை மற்றவரிடம் எதிர்பார்த்தல் சற்றும் முறையல்ல. ஒருவர் வறுமையில் இருக்கும்போது கை கொடுக்காமல் இருத்தல் அவரைத் தீய வழிப்படுத்தலாம்.

நாம் நமது வாயினால் தான் அநேக விடயங்களைக் கெடுத்து வைக்கிறோம். தீயவற்றை எல்லாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், நல்லனவற்றை மட்டும் வெளியே சொல்லுங்கள். அது உங்களுக்கும் நல்லது கேட்பவருக்கும் நல்லது. ஏனெனில் நீங்கள் சொல்வது நல்லன மட்டுமாயிற்றே! தீயவை உங்களுடன் முடங்கிக் கிடக்கும்; உங்களுடன் முடிவடையும். நல்லவை பெருகும்.

அநேகர் நல்லவர்களாக இருந்தாலும் ஏன் சிக்கல்கள் ஏற்படுகிறது?
1. ஏமாற்று வேலைகள் செய்யும் சில பேராசை பிடித்தவர்கள் தவறு செய்துவிட்டு பிறர் மீது சுமத்துதல்

2. இதனால் தவறு செய்யாத நிரபராதிகள் தண்டிக்கப்படுதல்.
தவறேதும் செய்யாது தண்டனை அனுபவிக்கும் வலி மிகவும் கொடியது. பொறுத்துக் கொள் தோழா! அதனால் கிடைக்கும் ஞானமும் அளப்பரியது. அதன் பின்னே உன்னை வெல்ல இங்கே யாரும் கிடையாது. சிரித்துக் கொண்டே இரு. அதுவும் பழகிடும்.

3. அனைவரையும் ஒரே மாதிரி எடைபோடுதல்.
ஒருவர் தவறு செய்யும்போது எல்லோரையும் கெட்டவர்கள் என நினைத்து விலகிச் செல்லுதல். அனைவரையும் சந்தேகித்து அவசரத்தில் எதிர்வினை ஆற்றுதல்.  பிறகு உண்மையை உணரும் போது யாவும் கடந்து போய்விடுகிறது. நெருப்பு தூய்மையானது. ஆனால் தொட்டால் எரித்துவிடும்.

4. பொறுப்புகள் என்றவுடன் ஓடி ஒழிவது; உரிமைகள் என்றவுடன் தூக்கிக் கொண்டு வருவதல்.
எல்லோரும் தமக்கு நிகழ்வதே அதிகூடிய துன்பம் / வலி என்று நினைத்துக் கொள்கின்றனர். ஒவ்வொருவரும் தானே அதிகமான பங்கு கடமைகளை நிறைவேற்றி விட்டதாக நினைத்துக் கொள்கின்றனர். அதனால் தமக்குத்தான் அங்கிகாரம் அளிக்க வேண்டும்; பதவி வழங்க வேண்டும் என்று கோருகின்றனர். எல்லோரும் அவ்வாறே வாதிட்டால் உண்மை என்ன? வலியின் எந்த எல்லை வரை நீங்கள் சென்று கடமை புரிந்தாலும் அதுவே உச்சம் போல தோன்றும். ஆனால் அது மாயை. “கடமையைச் செய். பலனை எதிர் பாராதே என்பர்”. இக்காலத்தில் முட்டாளாக வாழ அதுவே சிறந்த வழி. ஆனால் சமூகம் சுமூகமாக இருக்கும்.

போன்றனவே சமூகத்தில் பல குழப்பங்களை ஏற்படுத்துகின்றன.

கோபம் இயலாமையின் வெளிப்பாடு ஆகும். ”ஆத்திரக்காரனுக்குப் புத்தி மத்திமம்” என்பதால் கோபத்தில் நாம் எடுக்கும் முடிவுகள் யாவும் யாவர்க்கும் மீட்க முடியாத நட்டத்தினையே பெற்றுத் தரும்.

இறைவன் இருக்க ஏன் நன்மை தீமை இரண்டும் இருக்கின்றன? அநியாயங்கள் நிகழ்கின்றன?
இதற்கான பதிலை கீதையிலே கிருஷ்ணர் சொல்கிறார். நன்மை, தீமை யாவும் மனித அறத்துடன் தொடர்புடையவை. உண்மையில் அப்படி எதுவும் இல. மனித அறத்தில் நான் தலையிடுவதில்லை. நான் அனைத்திற்கும் சாட்சி பூதமாகவே இருக்கின்றேன். நான் சாட்சியாக இருப்பதை உணர்ந்து கொண்டவர்கள் தவறுகளையோ தீவினைகளையோ ஆற்ற மாட்டார்கள்.
இதுவும் உண்மை, இருள் என்று ஒன்று உள்ளபடியால்தான் ஒளியின் தேவை இருக்கிறது.


Sunday, August 9, 2020

மனதிற்கு எரிச்சலூட்டும் புறக்காரணிகளைக் கையாழுதல்

Thanks: lianedavey.com
எரிச்சலூட்டும் செயல்பாடுகளைக் கண்டு இருவர் எளிதில் குழப்பம் அடைவர்.

  1. அச் செயல்பாடுகளை பிறருக்கு வழமையாகச் செய்வோர்.
  2. அச் செயல்பாடுகளால் வழமையாகத் துன்புறுபவர்கள்.

  ஒருவர் உங்களை எரிச்சலூட்டும் வகையில் ஏதாவது செய்யின் அதனைச் சகித்துக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும். உங்களது கடமைகளை செய்வதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உண்மையில் அந்த நோக்கத்தில் அவர் செய்திருந்தால் உங்களிடம் இருந்து எரிச்சலூட்டும் செயல்பாடு ஒன்றை அவர் எதிர்பார்ப்பார். நீங்கள் அமைதிகொள்வதால் ஒவ்வொரு முறையும் எதிர்பார்த்து களைத்துப் போய்விடுவார். ஒருநிலையில் அவர், மனநிலை பாதிக்கப்பட்டு நீங்கள் செய்யும் சாதாரண செயல்பாடுகளை தனக்கு எரிச்சலூட்டச் செய்யும் பதில் செயற்பாடுகளாக அவர் எடுத்துக் கொள்வார். இதனால் ஒவ்வொரு முறை அவர் உங்களுக்கு எரிச்சலுட்டும்போதும் உங்களது ஒவ்வொரு வழமையான செயல்பாடுகளைப் பார்த்துக் குழம்புவார்; துன்பமடைவார்; மனநிலை மேலும் பாதிக்கப்படுவார். நீங்கள் எந்த எதிர்வினையும் ஆற்றாமலேயே, பாவம் எதுவும் ஈட்டாமலேயே உங்கள் கணக்கு முடிந்தது.

  பலவீனமானவர்கள்தான் இது போன்ற காரியங்கள் செய்து தங்களை பலவான்கள்போல காட்டிக் கொள்ள முயல்வர். எப்படியாயினும் நீங்கள் உங்கள் நிலையிலிருந்து தளர்ந்து, அவர்களின் கீழ்மை நிலைக்குச் சென்றுவிடக் கூடாது. ஆனால், ஒருமுறை நீங்கள் அவ்வாறு செய்பவருக்கு அதன் தன்மையை எடுத்துரைக்க வேண்டியது உங்கள் கடமை ஆகும். அதற்கு மேலே அவர் அல்லலுறட்டும். தன் கர்மாவால் தானே மாழட்டும். நமக்கென்ன!

  உங்கள் கடமையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வெறுமனே கைகளால் வேலை செய்யாமல் முழுமனதாக வேலை செய்ய வேண்டும். அப்போதுதான் செய்யும் கருமங்கள் செவ்வணே அமையும்.  நீங்கள் உங்கள் கடமைகளைச் செய்யும்போது அவற்றை, பிறர் தவறாக நினைப்பார்கள் என்று பலவாறு குழம்பி நிற்கக் கூடாது. அவ்வாறு குழப்பம் கொள்ளின் உங்கள் கடமையைக் கூட உங்களால் சரிவரச் செய்ய முடியாமல் போய்விடும். எந்த சூழ்நிலையிலும் உங்களது வேலைகளை தயக்கமேதுமின்றி செய்து பழக வேண்டும். இயன்றவரை அவை பிறரைப் பாதிக்காது என்று உறுதி செய்வது நல்லது. அவை பிறருக்கு இடையூறாக இருப்பின் அதனை உங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது அவர்தம் கடமையாகும். எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக இருக்க முயல வேண்டும்.
“நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது உன் நம்பிக்கையும் சக்தியும்  கூடுகிறது; எதிரியின் சக்தி குறைவடைகிறது. நீ குழப்பமாக கவலையாக இருக்கும்போது உன் சக்தியும் நம்பிக்கையும் குறைகிறது; எதிரியின்  சக்தி அதிகரிக்கிறது.”

  ஒவ்வொருவரும் இவ்வாறு செயற்பட்டால் சமூகத்தில் குழப்பங்களின் ஊடுருவல் குறைந்து அமைதியும் மகிழ்ச்சியும் பெருகும். குழப்பமே நோக்கமாகி அதன் மூலம் நன்மை அடைய நினைக்கும் நாரதர்கள் சிலர் இருக்கும்வரையில் அது நடைமுறைச் சாத்தியம் குன்றியதுதான்.

”ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம் உயிரிலும் ஓம்பப்படும்.”

சவால்களை முறியடித்து வாழ்வில் வெற்றி அடைவது எப்படி?

thanks: sial.school

"அதிஷ்டத்திற்காகத்தான் காத்திருக்க வேண்டும், கடின உழைப்புக்காக அல்ல. உங்கள் #மதியால், உங்கள் #உழைப்பால் வரும் விளைவை அதிஷ்டம் எதுவும் செய்ய முடியாது. ஏன் கர்மாவும்கூட ஒன்றும் செய்துவிட முடியாது."

நாம் யாரிற்கும் தீங்கின்றி நேர்மையாக வாழ்ந்தாலும் பல பிரச்சினைகள் அறியாமல் வந்து ஒட்டிக் கொள்வது ஏன்?
நாம் ஒவ்வொரு இடங்களுக்குச் செல்லும் போது, ஒவ்வொரு நிகழ்வுகளில் பங்கு கொள்ளும்போது அடுத்தவர்களின் வாய்ப்பைத் தட்டிப் பறிக்கின்றோம். இந்த உலகில் பெறுமதி உள்ள பொருட்கள் அனைத்திற்கும் கேள்வி அதிகம் உண்டு. ஆனால் இருப்பு குறைவாகவே உள்ளது. அதனாலேயே அவை பெறுமதி உடையவையாக உள்ளன.

ஆகையால், வாழ நினைப்பவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் சவால்களாகவே இருக்கும். பிரச்சினைகளைச் சந்திக்காமல் வாழ விரும்பினால் அதற்கு ஒரே வழி எங்கும் செல்லாமல், எதிலும் பங்கு கொள்ளாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டியதுதான். பிறகு என்ன செய்ய? பிரச்சினைகளையும் தடைகளையும் தாண்டி உங்கள் பயணம் தொடர வேண்டும். "தடையைத் தாண்டி நீ நடையைப் போடுடா! வாழ்க்கை முழுக்க இருக்கு ஜோருடா!" பல தோல்விகள் வரினும் இலக்கை நோக்கிய உங்கள் ஓட்டம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். "நதி போல ஓடிக் கொண்டிரு!", "ஓடும் வரையில் வெற்றி நமக்கு ஓடுதல் நிறுத்தாதே!" உண்மையில் இது இரு பொருள் கொண்டுதான் கவிஞர் எழுதி இருக்க வேண்டும். அது குறித்து பிறிதொரு பதிவில் பார்ப்போம்.

மிரட்டல்கள் செய்து ஏமாற்றும் கயவர் கூட்டம்
இந்த உலகில் அநேக செயற்பாடுகள் மிரட்டல்கள் மூலமாகவே நிறைவேற்றப்படுகிறது. அனைவருமே ஏதாவது ஒரு வகையில் மிரட்டலுகளுக்கு உள்ளாகி இருப்பார். பலரும் இன்னமும் மிரட்டல்களின் பிடியிலேயே செயற்படுகின்றன. அவை வெளியில் சொல்ல முடியாதவையாக இருக்கலாம். சொத்துக்களை ஏமாற்றி அபகரிப்பதற்கு அன்று தொட்டுக் கையாளப்படும் முறைகளில் இதுவும் ஒன்று. முதலில் உங்களை ஏதாவது தவறு செய்ய வைப்பர். அதற்கான சூழல்களை ஏற்படுத்துவர். பிறகு அதனை சாட்சிப்படுத்தி வெளிப்படுத்தி விடுவேன் என மிரட்டுவர். அநேகமாக அவை மானத்திற்குப் பங்கம் விளைவிக்கும் தவறுகளாக இருப்பதே வழக்கம். உ.ம்: மது, மாது, களவு இன்னும் பல... இதனை எச்சக்களை நாய்கள் என்று அழைப்பர்.

"திருடனுக்குத் தேள் கொட்டினால் பேசாமல் இருக்க வேண்டும்" அல்லவா!

இது போன்ற சவால்களிலிருந்து தப்பிக்க ஒரே ஒரு வழிதான் உள்ளது. தவறு செய்வதற்குச் சந்தர்ப்பம் இடங் கொடுத்தாலும் தவறுகள் செய்யக் கூடாது. எப்போதுமே நேர்மையாகவே நடக்க வேண்டும். அதோடு அது போன்ற மிரட்டல்களிற்கு அடி பணியவே கூடாது. குறுகிய கால விளைவை சிந்திப்பதை விடுத்து நீண்ட காலத்துக்குச் சிந்திக்க வேண்டும். நீங்கள் செய்யும் செயற்பாடுகளின் விளைவுகள் தெரியாதவிடத்து அவற்றைச் செய்யவே கூடாது. அந்தச் செயற்பாடுகள் பலரின் உயிரைக்கூடக் குடிக்கலாம். அத்துடன் ஒரு போதும் நிதானத்தை இழந்துவிடக் கூடாது.

வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றுவதும் இரண்டாவது பிரபல்யமான ஏமாற்றுமுறை ஆகும். அதனிலிருந்தும் கவனமாக இருக்க வேண்டும்.

நவீன முறைத் சித்திரவதை முறைகளைக் கண்டுபிடிக்க முடியாதது ஏன்?

தவறு செய்பவர்கள் ஒரே முறையினையே தொடர்ந்து பின்பற்றினால் மாட்டிக் கொள்வர். அதனால், அதையே தடையின்றி தொடர்ச்சியாகச் செய்ய #ஒரே #மாதிரியான #விளைவுகளுடைய, அதனை ஒத்த பல திட்டங்கள் வைத்திருப்பர். அதனை மாற்றி மாற்றி செயல்படுத்துவர்.  ஒவ்வொரு முறையிலும் பல மாற்றங்கள் இருக்கும். இதனால், அது எங்கிருந்து செய்யப்படுகிறது, அதற்குப் பயன்படுத்திய உத்தி என்ன, செய்பவர் யார் போன்றவற்றைக் கண்டுபிடிப்பது கடினம். அதனால் அவர்கள் வெளிப்படையாகவே நடமாடக் கூடியதாக உள்ளது.

இவ்வாறான சவால்களை முறியடித்து வாழ்வில் வெற்றி அடைவது எப்படி?
நீங்கள் எங்கே சென்றாலும் என்ன செய்தாலும், உங்களது வீட்டுடனான உறவு மட்டும் வலுவாக இருக்க வேண்டும். உங்கள் நலனுக்காகக் குரல் கொடுக்க ஒரு கூட்டம் இருக்க வேண்டும். அது நண்பர் கூட்டமாகக் கூட இருக்கலாம். இலக்குகளை வரையறுத்து அதை நோக்கித் தினம் ஒரு அடியாவது எடுத்து வைக்க வேண்டும். ஒன்றை அடைவதற்காக இன்னொன்றை கடமையாகச் செய்பவர்கள் விரைவில் அதன் மீதும் வாழ்க்கையின் மீதும் வெறுப்படைகிறார்கள். இலக்குகளை வைத்து அதை நோக்கி அதையே முழுமூச்சாகச் செய்பவர்கள் அதிலே மேலும் நாட்டம் கொண்டு வெற்றியடைகிறார்கள். எத்தனை தோல்விகள் வரினும் துவண்டுவிடக் கூடாது.

எல்லோரும் போல சுலபமான பாதையைத் தெரிவு செய்யாது, வித்தியாசமான பாதையைத் தேர்ந்தெடுங்கள். எது வந்த போதும் அதிலேயே நிலைத்து இருங்கள். ஆனால் நீங்கள் தனித்து விடவில்லை என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். தடைகள் இல்லாத பாதையில் செல்ல நினைப்பதைவிட, தடைகளைத் தகர்க்க, தவிர்க்க, தாங்கிக் கொள்ளக் கற்றிருத்தல் வேண்டும். தடைகளின்றிப் பாதைகளே கிடையாது.

வாய்ப்புகள் எப்போது கிட்டாது; உங்களுக்காகக் காத்திருக்கப் போவதுமில்லை
உழைப்பால் உயர்ந்த காலம் கற்காலம். இப்போது வாழ்க்கை ஒரு சூதாட்டம், அதிலும் தர்மம், அதர்மம் உண்டு. உடையவற்றை உடையவரே நம்பும் வகையில் ஏமாற்றியே இங்கே அநேக பணம், பொருள் ஈட்டப்படுகிறது. எங்களால் முடிந்தவரை நம் இருப்பை உறுதிப்படுத்துவதிலேயே மக்கள் நாட்டம் செல்கிறது.

உதாரணமாக, எத்தனை இலட்சங்கள் ஊதியம் பெறுபவராக இருப்பினும் ஒருவர் பொது போக்குவரத்தைப் பயன்படுத்துகையில் மிகுதியையும் கேட்டுப் பெற மறப்பதில்லை. அவர் நின்று பயணம் செய்தாலும் இருந்து பயணம் செய்தாலும் அதே அளவு பணம்தான் அறவிடப்படுவார். ஆனால், அவர் ஒரு தனிப்பட்ட வாடகை வண்டியில் சென்றால் அது போல் பல மடங்கு பணம் கொடுத்தே தீர வேண்டும்; கொடுக்கின்றார். முந்திக் கொள்பவர்கள் இருக்கைகளைப் பெற்றுக் கொள்கின்றனர். எப்போதும் வாய்ப்புகள் வருவதில்லை. அத்தோடு வரும் வாய்ப்புகளின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட்டதே! முந்திக் கொள்பவர் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வர். வருகின்ற வாய்ப்புகள் உங்களது விருப்பம் அல்ல எனில் ஒதுங்கி நிற்கலாம். ஆனால் எதுவும் இங்கே உங்களுக்காகக் காத்திருக்கப் போவதில்லை.

உங்கள் கைமீறிப்போன விடயங்களைக் கடந்து செல்வது மேல்
உங்களுக்கு நடந்த அநியாயங்களைச் சொன்னால், அதனால் பாதிக்கப்பட்டவர் தவிர ஏனையவர் அனுதாபம்தான் கொள்வரே தவிர எதுவும் மாறிவிடப் போவதில்லை. அவற்றைப் பறைசாற்றித் திரிவது வீணானது. அவற்றை நினைத்து வருந்துதல் உங்களை மேலும் கீழே கொண்டு செல்லும். ஏனெனில், கவலை வாழ்க்கைக்கு அனைத்து வகையிலும் எதிரி ஆகும். அதற்கான நியாயத்தினை உங்களால் வழங்க முடியாவிடின், அதனை உங்கள் கட்டுக்குள் கொண்டு வர முடியாவிடின் அவற்றைக் கடந்து செல்வதே மேலானது. அது உங்கள் மேலதிக இழப்புகள் ஏற்படாமல் தடுப்பதோடு உங்களது முன்னேற்றத்திற்கும் தடையாக நிற்காது.

இந்த உலகில் எவை எல்லாம் நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அவை எல்லாம் கண்டிப்பாக நடந்தே தீரும். ஆகையால் இதுவரை நடந்த, இப்போது நடைபெறுகிற விடயங்களை நினைத்து மனதைக் குழப்பிக் கொள்ளாதீர்கள். ஒரு சில விசமக் குணம் படைத்தவர்களைப் பார்த்து எல்லோரையும் அவ்வாறுதான் என்று எடை போடாதீர்கள். அது உங்களுக்கு வாழ்க்கை மீதான வெறுப்பை ஏற்படுத்தும்.  நீங்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்களும் உண்டு. அவர்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.

கிடைக்கிறது கிடைக்காமலிருக்காது.
கிடைக்காமலிருக்கிறது கிடைக்காது.
எவை நமக்குக் கிடைக்க வேண்டும் என்று இருக்கிறதோ அவை மட்டுமே கிடைக்கும். “போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து” ஆகும்.
ஆனால், அவை கிடைப்பதில் முயற்சிக்கும் பங்கு உண்டு!

இந்த உலகில் இலட்சியமாக வாழ்வது கடினம்
குழப்பம் விளைவித்து வெற்றி கொள்ளும் இந்த உலகில் நடிக்காமல் நேர்மையாக வாழ்வது கடினம்.நேர்மையாக வாழ்ந்தால் சிலரின் நட்பைச் சம்பாதித்தாலும் பலரின் எதிர்ப்பைப் சந்திக்க வேண்டி வரும். இங்கே எல்லோரும் 100% நல்லவர்கள் அல்ல. உங்கள் நேர்மைக்காக அவர்களைக் காட்டிக் கொடுக்க வேண்டிய நிலைமைகள் பல வரும். அப்போது அது உங்களுக்குப் பல வகையில் தீங்கு பயக்கும். நீங்கள் உங்கள் கடமையில் மட்டும் நேர்மையாக இருத்தல் நலம்.

நடிக்காவிடில் கிடைக்க வேண்டிய பல கிடைக்காமல் போகும். நடித்தால் கிடாகாததது பலவும் கிடைக்கும். பிறகு சிறிய சிறிய துரோகங்கள் மறந்தும் போகின்றன. நேர்மையாக வாழ்வது என்று கூறி அனைத்தையும் இழக்கவா! அல்லது நடித்து அனைத்தையும் அனுபவித்து விட்டு மீண்டும் எதுவும் அறியாதது போல் நடிக்கவா ஒருவர் விளைவார்...
”உலகத்தோடு ஒத்து ஒழுகு”
குழப்பங்களிற்கு ஈடு கொடுக்க நீங்கள் கொடியவர்களாக மாறினாலும், உள்ளே எரிந்து கொண்டிருக்கும் நேர்மை எனும் நெருப்பை மட்டும் அணைய விட்டுவிடாதீர்கள்.

மெய்ப்பொருள் காண்பது அறிவு
நீங்கள் கேட்கும் பார்க்கும் அனைத்தையும் அப்படியே நம்பி விடாதீர்கள் சில சம்பவங்கள் ஒருவரைக் காரணம் வைத்துச் செய்யப்படுகின்றன. வெற்றுக் கண்ணால் பார்த்தால் அது தவறான ஒருவரையே குற்றவாளியாகக் காட்டும். நிதானமாகக் காத்திருந்து முடிவுகள் எடுப்பது அனைவருக்கும் சுபம்.

ஏன் என்று தெரியாமல் பல தாக்குதல்கள் நிகழும், இது குறித்துக் காரணம் தேடி நிற்கையில், "உன் கூட்டாளியை எனக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் தாக்கினேன்" என்று பதில் வரும். அத்துடன் அந்தக் கூட்டு முடிவடைகிறது. உன் கூட்டாளி கொள்கை உன் கொள்கை அல்லாதவிடத்து, அனுசரித்து நடக்க முடியாதவிடத்து தனித்திருப்பதே சுபம்.

கதைகட்ட ஒருவன் பிறந்து விட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு
காப்பாற்ற சில பேர் இருந்து விட்டால்
கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு
கோர்ட்டுக்குத் தேவை சில சாட்சி
குணத்துக்கு தேவை மனசாட்சி

தீயதைப் பாக்காதே!
தீயதைக் கேட்காதே!
தீயதைப் பேசாதே!
தீய எண்ணங்கள் உள்ளே போனால் திரும்பத் திரும்பத் தடக்கலுறும். தீயவனாக வாழாதவிடத்து, தீயவனாக மாறாவிடத்து அது துன்பமே விளைவிக்கும்

Everyday our life has something to attain our goals. Do them all and never quit. You will achieve it one day.

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...