Wednesday, September 22, 2021

அரியும் அரனும் - 1 - யார் இந்த விஷ்ணு? பாற்கடலை கடைதல் என்பதன் பொருள் என்ன?

அரியும் அரனும்
பாகம் - 1
  • யார் இந்த விஷ்ணு?
  • விஷ்ணு வழிபாட்டின் தார்ப்பரியம் என்ன?
  • பாற்கடலை கடைதல் என்பதன் பொருள் யாது?
 

காத்தல் கடவுள் விஷ்ணு. அவர் பாற்கடலில் பள்ளி கொள்வதாக வேதங்களிலும் புராணங்களிலும் சொல்லப்படுகிறது. உண்மையில் விஷ்ணு என்பது கடவுள் அல்ல;ஒரு வழிபாடு. வைணவர்கள் விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடுகிறார்கள். விஷ்ணு ஏன் கடவுளானார்? இவை எல்லாம் இடையில் பார்ப்பனர் செய்த வேலை என்று ஒரு தொகுதியினர் சொல்வர். அவை குறித்து எனக்குத் தெரியாது. விஷ்ணு வழிபாடு பற்றி நாம் இந்தப் பதிவில் பார்ப்போம்.
 
சிவ வழிபாடு இந்த சீவனை வளர்ப்பதற்குரியது. அதாவது யோகம், நிஷ்டை பற்றியது. ஆனால் விஷ்ணு வழிபாடோ இந்த உடலை பாதுகாப்பது, வளர்ப்பது பற்றியது. அதாவது நரம்புகள், உணர்ச்சிகள் பற்றியது. அதற்கேற்ப வைணவர்களும் தள தள வென்று வெள்ளை நிறமாக இருப்பார்கள்.

அடுத்து ஆதி சிவனும் அந்தராத்மனும். ஆதி சிவன் என்பது சிவனது மறுபெயரும் அந்தராத்மன் என்பது விஷ்ணுவின் மறுபெயரும் ஆகும். ஆதி சிவன் தலையும் - அந்தராத்மன் உடலும் ஆகின்றனர்.

அந்த விஷ்ணு பள்ளி கொள்ளும் பாற்கடல் என்பது இந்த வாயு மண்டலம்தான். இந்தப் பூதவுடலைப் உயிர்ப்பாகப் பேணுவதில் முக்கிய பங்கு இந்தக் காற்று மண்டலத்திற்கு உண்டு. சிவலிங்கத்தில் மேற்பாகம் சிவபாகம், நடுப்பாகம் விஷ்ணு பாகம், அடிப்பகுதி பிரம்ம பாகம் என்று பாத்திருந்தோம். சிவன் என்கிற இந்த சீவனானது இந்தப் பூதவுடல் உள்ளவரை மட்டுமே வாழும். அதனைப் பாதுகாப்பது நமது கடமை என புத்தர் கூடச் சொல்லி இருக்கின்றார். அப்படியான இந்த உடலைக் காப்பதற்காக விஷ்ணு பாற்கடலாகிய இந்த வாயு மண்டலத்திலே பள்ளி கொள்கின்றார். அதற்கான சடங்குகளும் கடப்பாடுகளுமே விஷ்ணு வழிபாடாகத் தோற்றம் பெற்றன.

விஷ்ணுவின் தொப்பிளில் இருந்து முளைத்த தாமரையில் பிரம்மா இருப்பதாக படங்களில் வரையப்பட்டு உள்ளது. மனிதனின் உயிர் அதாவது ஜீவன் தொப்பிள் கொடியினூடுதான் முதல் முதல் இந்தப் பூத உடலில் பிரவேசிக்கிறது. பிரம்மா படைத்தல் தொழில் செய்வது நாம் அனைவரும் அறிந்த விடயம்தான். இந்த உலகில் அந்த உயிர் தோன்றுவதற்குக் காரணகர்த்தா பிரம்ம தேவர்தான் என்பதுவே அதன் பொருளாகும். அதுபோல சிவலிங்கத்தில் அடிப்பகுதியே பிரம்மபாகம் என்று பார்த்தோம். அதாவது படைத்தலுக்குக் காரணமான ஆண் பெண் குறிகள் மனிதனுக்கு அடிப்பகுதியிலேயே உள்ளது. இந்த அறிவு கூட அப்போது அனைவருக்கும் இருந்திருக்கவில்லை.

தாயின் வயிற்றில் உள்ள போது தொப்புளினூடே புகுந்த அந்த சீவன் என்னும் நெருப்பு மூலத்தில் இருந்து வானம் வரை வளர்கிறது. இதனுடைய அடி முடியைத் தேடித்தான் பிரம்மனும் விஷ்ணுவும் தோல்வியடைந்ததாக ஒரு கதை உண்டு. ஆனால் நாம் பாற்கடலில் இருப்பதால்தான் அந்த நெருப்பு அணையாமால் இருக்கிறது. விஷ்ணு பாகமாகிய இந்த உடலும் காக்கப்படுகிறது. இந்த ஜீவன் நிலை கொள்ள இந்தப் பூதவுடல் அவசியம் என்று பார்த்திருந்தோம். விஷ்ணு பாற்கடலிலே ஆதிசேசன் என்னும் பாம்பிலே பள்ளி கொண்டிருப்பார். அது என்ன இந்தப் பாம்பு. உணவு இல்லாமல் இந்த உடலைக் காக்க முடியாது. உடலில் குடல்தான் உணவைச் செரிக்க உதவுகிறது. அதுவே ஆதிசேசன் என்னும் பாம்பு ஆகும். பாம்புகளுக்கெல்லாம் தலைவன் ஆதிசேசன், அது போல எமது ஆஸ்தியாகிய அல்லது உடமையாகிய இந்த உடலிற்கு ஊட்டம் அளிப்பதில் முக்கிய பங்கு வசிப்பது குடல் என்பதே அதன் பொருளாகும். சேடம் என்றால் எச்சம் அந்த வகையில் அந்தப் பாம்பு எமது முன்னாண் ஆகவும் இருத்தல் கூடும்.

அதோடு கண்ணன் நெய்யை விரும்பி உண்பது அனைவரும் அறிந்தது. சிவன் என்பது சீவன் என்றால் அதனைக் காப்பது நரம்பினாலும் சதையினாலும் ஆன இந்த உடலாகும். அதனை வளர்க்க நெய்யே சிறந்த ஊட்டம் ஆகும். அதனாலேயே வைணவர்கள் தள தளவென தசை உடையவர்களாகவும் வெண்தோல் உடையவர்களாகவும் உள்ளனர். அதனால் தான் பசுவை கோமாதா என்று வழிபடுவர்.
 
பாற்கடலைக் கடைவதில் பெரிய பங்கு விஷ்ணுவுக்கு உண்டு. மோகினியாக, கூர்மமாக அவர் அங்கே இரண்டு பாத்திரங்களை ஆற்றுகின்றார். பாற்கடலைக் கடைவது என்பது காற்றாகிய இந்த மாயக் கடலைக் கடைந்து அமுது என்னும் ஊட்டத்தினைப் பெற்று  உடலினை வளர்த்தலாகும். இங்கே மூச்சு என்னும் வடம்தான் வாசுகியாக இருக்கும். மூச்சினை முழம் கொண்டு அழப்பது பண்டைக் காலத்தில் இருந்தே சித்தர்களின் வழக்கம் ஆகும். அப்படியாக பாற்கடலைக் கடையும் பொழுது, விஷ்ணுதான் ஆமையாக / கூர்மமாக அவதாரமும் எடுக்கிறார்.

பின்பு கிடைத்த அமுதைப் பகிரும்போது அதனை அரக்கர்களிற்குக் கிடைக்க விடாமல் தேவர்களுக்கு மட்டும் கிடைக்க மோகினி அவதாரம் எடுக்கிறார். அதாவது இந்த உடலில் உள்ள கெட்ட பகுதிக்கு அமுது கிடைகாமல் நல்ல பகுதிக்கு மட்டும் அமுது கிடைக்க செய்வதே இதன் நோக்கம் ஆகும். மோகினி அவதாரம் என்பது பெண்மையை குறிக்கிறது. அதாவது பெண்மையாக நடந்து கொள்ளும்போது உடலில் தோன்றும் கார்மோன்கள் அவற்றை மேன்மையான பாகத்திற்கு மட்டுமே அந்த அமுது கிடைக்க உதவுகிறது. கீழ்மையான பாகங்கள் பட்டினி போடப்படுகின்றன. தேவர்கள் வாழ்வது மேலோகத்தில் என்பதால் அமுது மேலோகத்திற்கே கிடைக்க வேண்டும். அது போல அசுரர்கள் மாமிசம் எலும்பு உண்பவர்கள். அந்த வகையில் எலும்பு மற்றும் சதைகளுக்கு இந்த அமுது கிடைக்கக் கூடாது.

எனது அம்மாவும் ஏதாவது பொருளை வீணாக்கி விட்டால், நாலுநாளைக்குப் பட்டினி போட்டால்தான் திருந்துவீர்கள் என்று சொல்லுவார்கள். இது தான் அந்த மோகினி அமுதைப் பகிர்ந்த கதை. எது எமக்குத் துன்பம் தருகிறதோ அவற்றைப் பட்டினி போட வேண்டும். எது எமக்கு மகிழ்ச்சி அளிக்கிறதோ அதற்கு ஊட்டமளிக்க வேண்டும். மகிழ்ச்சியாக உள்ளபோது மகிழ்ச்சிக்குரிய கலங்கள் விருத்தியாகின்றன. துன்பமாக உணரும்போது துன்பத்திற்கான கலங்கள் விருத்தியாகின்றன. அதாவது எங்களுக்குப் பிடித்தமானவற்றில் ஈடுபடுவது அதிகரிக்க அதிகரிக்க வாழ்க்கை நிம்மதி நிறைந்ததாகின்றது. அதனால்தான் வாழ்க்கையில் உங்களுக்கு பிடித்ததையே செய்யுங்கள் என்று அறிவுரை சொல்வார்கள்.

அரியும் அரனும் தொரரும் ...

Sunday, August 29, 2021

பிள்ளையார் தோன்றிய வரலாறு - ஓம் என்னும் பிரணவப் பொருள் அமர்ந்த கணபதி

இந்தப் பதிவில் பிள்ளையார் பற்றிய பல உண்மைகளை இன்று உடைத்தெறியப் போகிறேன். அதோடு எந்த வழிபாட்டு முறையையும் குற்றம் சொல்வதற்காக இப்பதிவு செய்யவில்லை. நம்பி நம்பி நொந்து நொந்து ஒன்றுமில்லை என்று சோர்ந்து போன பக்தர்களுக்காக, உண்மைகளை உடைத்தெறியும் முதற்படி.

நான்முகனை பிரணவப் பொருள் தெரியவில்லை என்று நான்கு தலைகளிலும் குட்டி சிறையில் வைத்தான் ஆறுமுகன். பிறகு அதன் பொருளை தன் தந்தை சிவனுக்கே உபதேசம் செய்த கீர்த்தியும் படைத்தவன். ஆனால், அந்தப் பிரணவப் பொருளின் வடிவமாகவே அமர்ந்தவர் பிள்ளையார் என்றுரைத்து முதற் கடவுள் என்றும் போற்றுகிறது சைவசமயம். அனைத்திற்கும் முதற் தேவை மன அமைதி மற்றும் உடல் ஆரோக்கியம் அல்லவா! பிள்ளையாரின் தோற்றம் அதனைப் பெறும் வழியைக் காட்டப் போகிறது. கடவுளின் இருப்பு என்பது எல்லாம் ஒரு பக்கம் போக இது ஞானம் பற்றிய தேடல் ஆக அமையப் போகிறது.

பிள்ளையாரின் பிறப்பு என்று சைவசமயம் ஒரு கதை கூறுகிறது. அதனை முதலில் பார்த்துக் கொள்வோம். உமாதேவியார் நீண்டகாலம் குளிக்காமல் இருந்ததால் வந்த தனது ஊத்தையை உருட்டி ஒரு சிறுவனை உருவாக்கி, காவலுக்கு வைத்து விட்டு குளிப்பதற்காக செல்கிறார். சிவன் வந்து அனுமதி கேட்க, அச்சிறுவன் மறுத்தமையால் கோபத்தில் அவன் சிரசைக் கொய்கிறார். உமாதேவியார் வந்து அவனை உயிர்ப்பிக்க வேண்டியதால் யானையின் தலை ஒன்றை எடுத்துப் பொருத்தி உருப்படி செய்கிறார் சிவன். இது சைவசமயிகள் அநேகருக்குத் தெரிந்த கதை தான்.

மெய்ப்பொருள் ஒன்றும் அதனுள் மறைந்து இருக்கிறது. உமாதேவியார் ஊத்தையை உருட்டி உருவாக்கிய தொப்பைச் சிறுவன் பிள்ளையார். சக்தி சரீரத்தை இயக்கும் சக்தி மற்றும் சிவம் சீவன் அல்லது மூச்சு ஆகும். துதிக்கை நீண்ட குழல் போன்ற மூக்கு. குளியல் எனப்படுவது இரத்தத்தால் அக உடலைக் குளிப்பாட்டுதல் ஆகும்.

பிள்ளையாரின் தோற்றத்தை ஒருவர் தரிசிக்கும்போது, அவர் முதலில் அவதானிப்பது, துதிக்கையும் பின் சற்றுக் கீழே வந்தால் அவர் தொப்பையும் ஆகும். அதன்படி, முதலில் நீண்ட குழல் கொண்ட மூக்கும் பிறகு பெரிய கனவளவுடைய தொப்பையும் தோன்றும். அந்த துதிக்கையில் ஒரு சுழிப்பும் அதில் ஒரு மோதகமும் இருக்கும். இது பிரணவப் பொருளையே குறித்து நிற்கிறது.

பிரணவத்தை சரீரத்தில் பிரயோகிக்கும் முறை
பிரணவம் என்பது எல்லையற்றது. அதனை உடலில் பிரயோகிக்கும் முறை பற்றி மட்டும் இங்கே பார்ப்போம்.
நீண்ட துதிக்கை: முதலில் மூச்சை மெது மெதுவாக வெளியே விட்டு உடலை ஒடுக்கி மிகக் குறும் கனவளவாக்க வேண்டும். அப்போது சுகத்தினை மட்டுமே உணர வேண்டும். உடலில் நோவு தோன்றும் அளவுக்கு நெருக்கக் கூடாது.
துதிக்கையில் மோதகத்தைப் பேணும் சுழிப்பு: சற்று நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும். இப்போது உள்ளே மறை அமுக்கமாக இருக்கும்.
தொப்பை: இப்போது உடலை நெருக்கிய தசைகளைச் சட்டென்று விடுவிக்க, தானே மூச்சு வேகமாக உள்ளே நிறைக்கும். அப்போது உடல் முழுவதும் உள்ள இரத்தம் தொப்பையில் நிறையும்.

அதோடு மூச்சினை மார்புகள், பிட்டைகள் இரண்டிலும் சேர்த்து நிறைப்பது உத்தமம். இது குறித்து வேறு சில பதிவுகளில் விரிவாகக் குறிப்பிட்டு இருக்கிறேன். அவற்றை இங்கே காணலாம்.

பிள்ளையார் என்ற நாமத்தில் ”யார்” என்பது மூச்சை விடும்போதான அவத்தை ஆகும். ”பிள்ளை” என்பது மூச்சை இழுக்கும்போதான அவத்தை ஆகும். இது நாம ஜெபத்திற்கு உகந்தது.

தோப்புக் காரணத்தால் விளைவது என்ன?
ஒரு குழந்தைக்கும் அன்றாடம் உடற்பயிற்சி செய்கின்ற ஒரு ஆரோக்கிய தேகிக்கும், மனம் சஞ்சலம் இல்லாத போதான சுவாச வீச்சு இதுவாகத்தான் இருக்கும். ஆனால் நாளடைவில் பல காரணங்களால் மாறக் கூடும். தண்டிப்பதும் வெகுமதி அளிப்பதும் மனித வள முகாமைத்துவத்தின் ஒரு பகுதிதான். அந்த ஞானத்தினை மிகச்சிறந்த ஒரு உடல் அப்பியாசத்துடன் சேர்த்து தோப்புக் கரணத்தை வடிவமைத்து இருக்கிறார்கள் நமது முன்னோர்கள். சுவாச ஒழுங்கு மாறும்போதும் மனம் அலை பாய்ந்து திரியும் போதும் அதை இரண்டு தட்டுத் தட்டி கட்டிப் போட அவர்கள் இதனைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆனால், முதல் பாகம் தெரியாதவர்கள் குட்டி குட்டி சொட்டை விழுந்தது தான் மிச்சம் என்று நினைத்திருப்பார்கள்.
இதற்கான விளக்கத்தை ”மூலாதார சக்தி மூளையில் பாய்ந்து விட தோப்புக் கரணப் பயிற்சி உத்தமமாய் அமையும்” என்றும் பக்தி பாடல் ஒன்று கூறுகிறது.

பிள்ளையார் சுழியின் பொருள் என்ன?
செயல் எதையும் தொடங்குமுன் பிள்ளையார் சுழியைப் போற்றுமாறு ஒரு பாடல் விதைந்துரைக்கிறது. பிள்ளையார் சுழி என்று நாம் போடும் "உ" என்பதன் பொருள் இதுவேயாகும். துதிக்கையின் முடிவில் மோதகத்தைப் பேண ஒரு சுழிப்பு இருக்கும். அதனை முதல் நினைந்து எந்தக் காரியத்தையும் துவங்க வேண்டும். நினைத்தால் மட்டும் போதாது. பிரணவத்தைச் செய்ய வேண்டும்.

இதயம் ஒரு கண்ணாடி உனது விம்பம் விழுந்ததடி...
வழமையான உருவ வழிபாட்டில் தரிசனம் செய்வதே வழிபாடு ஆகும். ஆனால், கணபதி வழிபாடு விதிவிலக்கானது. நம் நெஞ்சத்துள் (மூலதாரத்தில்) வைத்து வழிபட வேண்டும். அது போல இறைவனது சின்னங்களை, உ+ம்: திரிசூலம், வேல் ஆகியவற்றை வேண்டியவாறு சிரசில் வைத்து வழிபட வேண்டும்.

சீர்காழி எஸ் கோவிந்தராஜன் பாடிய ஒரு பாடலில்... பிள்ளையாரை வழிபட்டால் "வாராத சித்தி வரும், புத்தி வரும், புத்திர சம்பத்து வரும்..." என்று வருகிறது. இப்போது கூறுங்கள், தன் மகனுக்காகத் தாய் வழிபட்டால் மகனுக்கு எப்படி சித்தி புத்தி புத்திர சம்பத்து எல்லாம் வரும்.

இதெல்லாம் சொல்லுறியே, நீ யார்டா?
முருகனும் நான் தான். பிள்ளையாரும் நான் தான். தமிழ்ப் புலவர் ஔவையாரே பிள்ளையாரைப் இப்படிப் பாடுகின்றார், "அப்பம் முப்பம் அமுது செய்தருளிய #தொப்பை அப்பனைத் தொழவினை அறுமே!". தமிழனுக்கு இதை அப்படியே திருப்பிப் பாடத்தான் தெரியும். ஆனால், எனக்கு உண்மையைத் தெரியும். நோக்கத்தையும் அதன் உட்பொருளையும் விட்டு விட்டு பழம்பெரும் சிறப்புக்களை எண்ணிக் கொண்டாடுவதே தமிழனுக்கு வழக்கம் ஆகி விட்டது. அதற்கு ஒரு கண்டிப்பாக இதைக் கொள்வோம்.

காலத்தின் தேவை காரணமாகவோ என்னவோ பிரணவப் பொருளை அனைவருக்கும் கூற யோகிகள் விரும்பியிருக்கவில்லை. பிரணவத்தின் பலன் பெற அதன் பொருளைத் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. பூ அச்சில போடுவது பூவாகத்தான் வரும். ஒரு பிரச்சினையைத் தீர்க்க ஏற்கனவே அதே #போல வேறு ஒரு பிரச்சினையைத் தீர்த்து இருப்பதே போதுமானது. அது போல பிள்ளையாரின் தோற்றத்தை அனைத்துக் கணமும் மனதில் நிறுத்தினால் நமக்கே தெரியாமல் அந்த நன்மைகள் நமக்குக் கிட்டும் வாய்ப்பும் உள்ளது.

எனது அம்மாவும் தினமும் ஒரு கடவுளுக்கு விரதம் இருந்து கடவுள் வரம் தருவார் என்று உடலை வருத்துகிறார். அவருக்கும் இந்த விளக்கம் எல்லாம் சொல்லிப் பார்த்தேன். அவர் சொன்னார், ”அதெல்லாம் சரிடா, ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் பிள்ளையாரும் இருக்கிறார்” என்றார். இதற்கு மேல் ஒரு மகனாக என்னால் என்ன செய்ய இயலும்.   நீங்களும் உங்களுக்குத் தெரிந்த தீவிர பக்தர்களுக்கு இதனைக் கூறி அவர்கள் பயன்பெற உதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
நன்றி!

"மெய்ப்பொருளின் தேடல் தொடரும்"

Saturday, July 31, 2021

ஒரு குட்டி Story... அடங்குமா இந்த அடங்காத சாதி வெறி!

எனக்கு முக்குலத்தில ஒரு அம்மா, வெள்ளாள குலத்தில ஒரு அப்பா. எனக்கு, எல்லாரையும் போலத்தான், first rank ஐத்தான் பிடிக்கும். அதால அம்மாவைத்தான் அதிகம் பிடிக்கும். ஏனென்றா மாதா பிதா குரு தெய்வம் என்று தானே சொல்லுவாங்க. அதுக்காக நான் அப்பாவிற்குரிய கடமைகளைச் செய்யத் தவறுபவன் அல்ல. ஆனால், அம்மாவைத்தாம் பிடிக்கும். அதோடு அப்பா தன் சம்பாத்தியத்தை முழுவதும் எங்களுக்குச் செலவு செய்து தியாகம் செய்தாரே தவிர, அம்மா தன்னையே வருத்தி பல தியாகங்கள் செய்திருக்கிறார், செய்து கொண்டு இருக்கிறார். தனக்கென்று எதையும் செய்வது இல்லை என்பது தான் இன்னும் துன்பமான விடயம். ஆனால் என்ன சொன்னாலும் செலவு செய்யப் பணம் இருந்தால் என் அம்மாவைப் போன்ற ஒரு தாயால், தந்தையின் தயவு இல்லாமல் ஒழுக்கமாக வளர்த்து எடுக்க முடியும் என்று நான் எங்கு வேண்டுமென்றாலும் அடித்து சொல்லுவேன். அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

அம்மாவும் அப்பாவும் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். ஒரு வகையில் காதல் திருமணம் என்றும் சொல்லலாம். மணப் பொருத்தத்தை விட மனப் பொருத்தம் அவசியமானது என நம்புபவன் நான். ஆனால் சில திருமணங்கள் குடும்பச் சுமைகள் நெருக்கங்கள் காரணமாக சகிப்புத் திருமணமான அமைந்துவிடுகிறது. இவ்வாறு அம்மாவும் அப்பாவும் திருமணம் செய்து கொண்டவுடன் அப்பாவின் குடும்பம் உறவினர்கள் உட்பட வெள்ளாள யாதியினர் எங்களை ஒதுக்கி வைத்தனர். தந்தையின் பக்கம் இருந்து நமக்கு உறவினர் யாரும் இன்றுவரை இல்லை. அப்பப்பா மட்டும் சில காலம் கழித்து எங்களை வந்து கண்டு செல்வார். அவர் இயலாது போன பின், அதுவும் கடந்து போனது.

அந்தத் திருமணத்தின் பின் ஏற்றுக் கொண்டது எனது அம்மாவின் உறவினர்கள் குடும்பத்தவர்கள்தான். அதாவது முக்குலத்தவர்கள். எங்களை பிறந்த காலம் தொட்டே ஆதரித்து பராமரித்து வந்தது தாய்வழி சொந்தங்கள்தான். அம்மம்மா, மாமாமார், சித்திமார் என அம்மா வழி சொந்தங்கள் மட்டுமே எமக்குத் தஞ்சம். சிறு வயது முதலே எமக்கு செய்ய வேண்டிய கடமைகளுக்கு மேலாக, வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு ஆடை, ஆடம்பர பொருட்கள், என அத்தனையும் செய்து கொடுத்தது அம்மம்மாவின் குடும்பத்தினர்தான். அதிலும் குறிப்பாக மாமாமார்தான்.

தந்தைவழி சொந்தங்களில் அநேகரை நான் பார்த்தது கூட இல்லை. முகங்கள் கூடத் தெரியாது.

அவர்கள் நம்மைச் சேர்த்துக் கொள்ளாததற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அப்பாவுக்கு 5 சகோதரங்கள். அந்த ஐவரும் தங்கைகள். அப்படி இருக்க அப்பா இடையில் திருமணம் செய்து கொண்டது கவலைக்குரியதுதான். தமது குலத்தவர் அவர்களைத் திருமணம் செய்யச் சம்மதிக்க மாட்டார்கள். அவர்களைக் கலியாணம் செய்து கரை சேர்க்க வேண்டியே அப்படி அவர்கள் செய்ததாகக் கேள்வி. இப்போது அவர்கள் யாவரும் கல்யாணம் செய்து நன்றாகத்தான் உள்ளனர். அந்த வகையில் கடமைகளைச் சவரச் செய்தது அப்பப்பா மட்டும் என்றே சொல்ல வேண்டும்.

ஆனால் அந்தக் காரணம் வலிதானது அல்ல. அம்மாவிற்கும் 9 சகோதரங்கள். அப்போது யாரும் திருமணம் செய்திருக்கவில்லை. அவர்கள் எதையும் யோசிக்காமல் சேர்த்துக் கொள்ளவில்லையா! அது தான் பாசம். அவர்கள் என்ன தக்காளித் தொக்கா! அவர்கள் குலத்தவர்கள் மட்டும் வரன் கொடுப்பார்களா! இது எண்ணத்தை எடுத்துக் காட்டுகிறது என்பது உங்களுக்கு இப்போதே விளங்கி இருக்கும்.

இருந்தாலும் அம்மா அப்பாவை விட்டுக் கொடுப்பதில்லை. அப்பாவின் ஊர்தான் பிள்ளைகளுக்கும் ஊர் என்பது போலவும், எமது கல்விக்காகவும் தந்தையின் ஊரான சாவகச்சேரியில் தான் யுத்தத்துக்கு முன் சில காலமும் பின் 8 வருடடங்களும் #வாடகைக்கு #வீடுகள் எடுத்து தங்கி இருந்தோம். பிறகு அம்மாவின் சேமிப்பு கொண்டு ஒரு காணி வாங்கி பிறகும் சாவகச்சேரியிலேயே குடியேறினோம். இந்த சேமிப்பில் ஒரு பங்கு அப்பாவின் உழைப்பினுடையது என்றாலும் பெரும்பங்கு அம்மாவின் சம்பாத்தியம், மாமாமார் அனுப்பிய பணத்தையே சாரும். இதில் சம்பாத்தியம் என்பதற்குள் அம்மாவின் சிக்கனம், உழைப்பு போன்றனவும் உள்ளடக்கம்.

மொத்தமாக 8 வாடகை வீடுகள் கழுவிக் குடி புகுந்திருப்போம் இந்தச் சாவகச்சேரியில்… அதற்கும் கூலிக்கு ஆட்கள் வைத்துக் கொள்வது இல்லை. அப்போதெல்லாம் ஒரு நாய் திரும்பிப் பார்க்கவில்லை. இடையில் அக்காவுக்கு சாமத்திய வீடு செந்திருந்தோம். அப்போதும் அங்கே அதற்கான செலவு உட்படப் பல பண நகை சதுர உதவிகள் செய்தது மாமாக்களும் அம்மம்மாவின் உறவினர்களும்தான். அங்கே அப்பாவின் உறவினர்களும் வந்திருந்தனர். அப்பப்பாவும் வந்திருந்தார். அவர்களை நான் வரவேற்கிறேன். அத்துடன் குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்னவெனில் எனது ஏனைய இரண்டு சகோதரிகளுக்கும் சொந்த வீடு மற்றும் போதிய வசதிகள் ஆதரவுகள் இல்லாமையால் சாமத்திய வீடு செய்யப்படவில்லை.

அப்போது எல்லாம் ஒட்டாத சொந்தம். அப்போது எல்லாம் ஒட்டாத யாதி இடையில் வந்து குருவிச்சை மாதிரி ஒட்டிக் கொண்டது. அதுவும் சுரண்டலுக்குத்தான். கொடுப்பதற்கு அல்ல. ஒட்டு இல்லாத போதே இடையில் பலமுறை ஏமாற்றி, தான் வாயை வயிற்றைக் கட்டி சேமித்த பணத்தையும் சீதனமாகக் கொடுத்த பணத்தையும் பறித்ததாக, அம்மா அடிக்கடி வருத்தம் கொள்வார். எல்லோரும் பெற்றுக் கொள்வதற்கென்றால் வருவார்கள். நானும் கொடுப்பதை வரவேற்பவன்தான். ஆனால் ஏமாற்றிப் பிடுங்குவதை அடியோடு வெறுக்கிறேன்.

குடும்பத்தின் இடையில் விழுந்த  சிறு விரிசலைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட அவர்கள் அதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். முதலில் பணம்.. ஒட்டு மொத்த ஊருடன் ஆசிரியரும் சேர்ந்து ஒரு தொகை பணத்தினை ஒரு பிள்ளை வெளிநாடு சென்று படிப்பதற்காக எனச் சொல்லி பினாமி ஒருவருக்குக் கட்ட வைத்தனர்.

அத்தோடு அவர்கள் கொட்டம் அடங்கவில்லை. நான் காபொத உத படிக்கும்போது அதைக் குழப்ப பல சதிகள் செய்தனர். நான் முதல் முறை பரீட்சையில் நான் எதிர்பார்த்த மட்டத்தை அடைய முடியவில்லை. இரண்டாம் முறை படித்தேன். இப்போது அவர்களின் இரண்டாவது சூதாட்டம் தொடங்கியது. எப்படி எனறு தெரியவில்லை. அநேகமாக களத்தினை உருவாக்காது, வாய்ப்புக்களைச் சரியாகப் பயன்படுத்தி இருக்க வேண்டும். மாமாவில் ஒருவர் கதிர்காமம் அழைத்துச் சென்ற போது அங்கே ஒரு கூத்தை அரங்கேற்றினர். இப்படியாகப் பல ஆதாரங்களைத் திரட்டிக் கொண்டனர். இப்போது இரண்டாவது முறை நான் பரீட்சையில் படித்து நன்றாக எழுதி இருந்தேன். அதையும் குறைத்துப் பெறுபேறு போடச் செய்தனர். அவர்களின் சாட்சிகளைப் பாருங்கள்… அம்மாவின் செல்லப் பிள்ளை நானாம்.

ஆனால் உண்மையில் அப்படி ஒன்றுமில்லை. எல்லாப் பிள்ளைகளும் அம்மாக்கு ஒன்றுதான். அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்து கொடுக்கும் ஒரு தன்னலமற்ற தாய். இங்கே ஆண் பிள்ளை என்று கூடச் சிறப்பாக எதுவும் செய்தது கிடையாது. எலோருக்கும் ஒன்றுதான். இதனால் சகோதரிகளுக்குச் சீதனம் தரமாட்டேன் எனப் பலமுறை சண்டை செய்துள்ளேன். அதனால் அந்தப் பணம் கட்டப்பட்டது எனது பெறுபேறுகளை உயர்த்த எனச் சாட்சி சொல்லப்பட்டது. ஊரும் இந்த ஊர்ப் பள்ளிக் கூடமும் சேர்ந்து என் பெறுபேற்றைப் போலியான ஆதாரங்கள் காட்டிக் கூறு போட்டு விற்றன. அதுதான் இந்த ஊர்ப் பள்ளிக் கூடம் ஆயுற்றே… இனி ஏனைய சாதிகள் வேறு இடம் செல்ல வேண்டியது தான். எப்படி எமது பணம் ஏமாற்றி பறிக்கப்பட்டது. அது எனது ஊழலுக்காகக் கட்டப்பட்டதாக ஆதாரம் காட்டப்பட்டது. இறுதியில் நான் கடினப்பட்டுப் படித்துப் பெற்ற பெறுபேறுகளும் பறிபோனது. இது கொஞ்சம்தான் எனக்கு நடந்ததில் நான் கூறிய கொஞ்சம்… இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.

எனக்கு நடந்தது எல்லாம் நீங்கள் அறிவீர்கள் என நான் சுருக்கமாகச் சொல்லி முடித்திருக்க முடியும். ஆனால் இவர்கள் பரப்பி வைத்துள்ள வதந்திகள் யாரிடம் எந்த இடத்தில் எப்படி உள்ளது என்பதை நான் அறியேன். சிங்களவர்கள் கூடப் பலவாறு குழப்பப் பட்டனர். அவர்களுக்குக் கூட இன்னும் முழுமையான உண்மை தெரியாது. மாமா, கிறிஸ்தவர், முருகன் கதிர்காமம் சன்னதி, இயக்கம், ஆமி, பிள்ளையார், அப்துல்கலாம், முஸ்லிம், தண்ணி அடிக்காதது, கிளாஸ் லெவலுக்கு படிகிறது, சாதி, மதம், லவ்வர மாத்தின, லவ் லொட்டு லொசுக்கு இன்னும் எத்தனையோ காரணங்கள் சொல்லப்பட்டது… இனாப் இனாப்.

இது எல்லாம் போக அம்மா மற்றும் நாங்கள் சாமியைக் கும்பிடுவதால் சாமிதான் எமக்கு உயர்ந்த பெறுபேறுகளைப் போட்டுத் தருவதாகவும் சொல்லப்பட்டது. இதுபோல ஆயிரக்கணக்கில் வதந்திகள் பரப்பபட்டன. இதில் வருத்தத்துக்கு உரிய விடயம் என்னவெனில் இதில் பிள்ளையார் கொண்ட அமைப்பு ஒன்றும் இதில் தொடர்புடையது. பௌத்தத்தில் பிள்ளையார் இருப்பதால் இது அவர்களின் கூட்டுச் சதியோ என நான் எண்ணுகிறேன். பௌத்தம் என்றால் எல்லாவற்றையும் ஒருமித்து நோக்க வேண்டாம். ஏதோ ஒரு பணத் தேவை ஏற்பட்ட அமைப்பு. தர்மத்தை பேணும் அமைப்புகள் இன்னும் உள்ளன. இந்த மோசடியால் பல அப்பாவிகளின் உயிர்கள் பறிபோனது என்பது மட்டும் திண்ணம்.

அத்துடன் இவர்களின் ஆட்டம் அடங்கவில்லை. இந்த மோசடி சிறிது சிறிதாகக் கசிய வெளிக்கிட்டதும் அதற்குக் காரணம் நாம் தான் என நினைத்து நமது குடும்பத்தை பழிவாங்கியது. ஏற்கனவே இவர்கள் கிளப்பிய வதந்திகள் ஒரு பக்கம் என்னையும் என் குடும்பத்தையும் கடுமையாக தாக்குகிறது. அது போக குடும்பத்துக்குள் இறங்கிக் கும்மியடித்தது அந்த யாதி வெறி. இன்கே உள்ள உயர்வு தாழ்வைப் பயன்படுத்திக் குரோதத்தை ஏற்படுத்தி ஒட்டு மொத்த நிம்மதியையும் கெடுத்து வைத்தது.

இப்போது சொல்லுங்கள் நாம் செய்த குற்றம் என்ன? அனைத்தையும் இழந்தது யார்? துன்பத்தை அனுபவிப்பது யார்? இதனால் பலன் அடைந்தது யார்? இதிலே எனக்கு செய்யப்பட்ட hardcore psychotronic physical mental treatments பற்றி நான் குறிப்பிடவில்லை. அதை எல்லாம் சொல்ல ஒரு நாள் போதாது. அப்படி நீண்டு கொண்டே போகும்.

இப்போது பாசம் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. எமது குடும்பத்தில் உள்ள படிக்காமல் உள்ள வெளிநாடு சென்று படிக்கக் காசு கட்டப்பட்ட என் அண்ணனில் அவர்கள் அக்கறை கொள்கிறார்களாம். அந்தக் காசைத் திருடி கொண்ட களவாணிகள், 7 வருடங்கள் ஆகிறது அவருக்கும் ஒன்றும் செய்து கொடுக்க துப்பு இல்லை. அங்கே நன்றிக் கடனைச் செலுத்துவதாகச் சொல்லி என்னைப் படிக்க விடாமல் துன்புறுத்துவது குடும்ப நின்மதியைக் கெடுப்பது… இது போல இன்னும் பல களவுகள் செய்ய அத்திவாரம் போடுகிறார்கள் புரிகிறதா!

மனிதன் சந்தர்ப்பவாதி என்று நான் அறிவேன். இந்த சாதி போல எந்த சாதியும் நாறல் சாதியாக இருக்க முடியாது. என் அனுபவத்தில் சொல்கிறேன்.

நான் துன்பங்களுக்கு ஆளாகும்போதெல்லாம் நான் செய்த தவறு என்ன எனப் பல முறை யோசித்து வருந்தி இருக்கிறேன். விடை கூறப்பட்டது இவையான். கனவு கண்டது, முட்டையத் தொட்டது, கொட்டையைத் தொட்டது, கையில போட்டது லூசுக் கூட்டம்…

நான் என் துன்பத்தை மறந்தாலும் என் அம்மா படும் துன்பம்… என் அம்மா அடிக்கடி சொல்வார்கள், தான் 2 ரூபா பலோடா தின்னாமல் நடந்து சென்று அதைச் சேமித்ததாக… விரதம் பிடிக்காத கடவுள் கிடையாது. அதில் அந்த நயவஞ்சகன் பிள்ளையாரும் உள்ளடக்கம். வீட்டில் வருடத்திற்கு 5, 6 நாள்தான் அசைவம். எல்லாம் கோயில்களிலும் கொடியேறும். எங்களுக்கு கம்ப போக முதல் அம்மா தான் முடி வெட்டி விடுவார். அம்மா காலை உணவு சாப்பிட்டு 9 வருடங்கள் ஆகிறது. வீட்டை விட்டு வெளியில் பயணம் சென்றால் ஒரு சிற்றுண்டி குளிர்பானம் அருந்துவது கிடையாது. காய்ந்து போய் வீடு வந்துதான் சோறு தண்ணி எதுவென்றாலும். மிக்சர் முறுக்கு கச்சான் கூட கடையில் சாப்பிட்டால் கட்டுபடியாகாது என்று வீட்டில் இருந்து செய்து எடுத்துப் போய் கோயிலில் சாப்பிட்ட பல சந்தர்ப்பங்கள் உண்டு.

என் பாடசாலைப் பருவத்தில் நொருக்குத் தீனிக்கென்று பத்து ரூபா என் பையில் கிடையாது. இப்படி எல்லாம் சேர்த்த பணம். அதை கொள்ளை அடித்து, என் வயித்தில அடித்து, அவ்வளவு ஒழுக்கமாக இருக்கிற, நான் தான் பரீட்சை மோசடி செய்தாக வதந்தி பரப்புது இந்த தமிழ் இனம். இடையில் இது எல்லாம் அறிந்த போது உருத்திராட்சம், திருநீறு, சாமி என எல்லாரையும் தூக்கி எறிந்தேன் நான். ஏமாத்துக்காரக் கடவுள்.

பிறந்ததில் இருந்து தனக்கென எதுவும் அனுபவித்திராத அடிச்சுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார் என் அம்மா. அவர் ஒரு பிள்ளையை இப்படித் துன்பப்பட விட்டு, இன்னொரு பிள்ளையை டியூன் பண்ணி அந்த அம்மாவை வாழ்நாள் முழுவதும் நிம்மதி இல்லாமல் பண்ணுறியள். அப்பவும் ஒன்றும் அனுபவிக்கவில்லை. இப்பவும் ஒன்றும் அனுபவிக்கவிக்கவில்லை. இடையில இருந்து யாருக்காகவோ கஸ்டப்படுது அந்த ஜீவன். அந்தப் பிள்ளை சும்மா கிடந்து கொண்டு வாய்க்கு வந்த தூசனம் எல்லாம் சொல்லி அம்மாவை பேசுது. இதுக்கெல்லாம் பின்னணி அந்த நாரல் சாதியும் இந்த நாறல் ஊரும் தான். இங்க வந்து எத்தனயோ தரம் அம்மாவின் மேல ஏறி மிதிக்கிற மாதிரி, அம்மா காலுக்க கிடந்து மிதிபடுற மாதிரி, அம்மா அடி வாங்கிற மாதிரிப் பல சந்தர்ப்பங்களை நான் பார்த்திருக்கிறே.

அம்மா செய்த பாவம் என்ன? அம்மா ஒரு பச்சைக் குழந்தை போல எந்த சூதுவாது தெரியாதவர். தனக்கெனவும் வாழாமல் யாருக்காக வாழுறாங்க என்றும் தெரியாத ஒரு வாழ்க்கை. 59 வயது, அம்மம்மாவை விட வயது கூட போல உள்ளார். முதுகு கூடக் கூனி உள்ளது. முதுகு கூன கூட இவர்கள் பரப்பிய வதந்தியின் விளைவு ஏதோ ஒன்றுதான் கழுத்திலே விசத்தை ஏற்றியுள்ளது. இப்படியாக எங்கள் குடும்பத்தைக் காரணம் இல்லாமல் துன்பத்துக்கு மேலே துன்பத்துக்கு ஆளாகிற. அங்கே கம்பஸ் இல் உள்ள போது, நான் குழம்பி விடுவேன் என்று, எனக்கு இது குறித்து ஒன்றும் சொல்ல மாட்டார். அந்த அப்பழுக்கற்ற தாய் பட்ட துன்பம் நீங்கத்தான் இறைவன் செயலால் அடிக்கடி நான் கம்பஸ் லீவு கிடைத்து இங்கே வந்து இருந்திருக்கிறேன்.

இப்படியான அநியாயம் தாங்க முடியாமல் தான் இப்போது கொரோனாவும் வந்து அனைவரையும் அழிக்கிறது. நான் வயிரெரிஞ்சு சொல்லுறண்டா! ஒரு கொரோனா இல்ல 100 கொரோனா வந்து கூட இந்த இனம் எல்லாம் அழிஞ்சு போகும். அப்போதாவது இந்த பூமி சுத்தமடையும். அதுக்குப் பிறகு ஒரு தாய் இப்படியான இடர்களை எல்லாம் சந்திக்க வேண்டி இருக்காது. அப்பாவிகள் துன்பப்பட வேண்டி இருக்காது. எல்லாம் அழிஞ்சு போவியள். நாசமாப் போவியள். ஒன்ம் மிஞ்சாது. மிஞ்சினாலும் நான் அழிப்பன். நாசமாப் போக…

இந்த நாகரீகத்தில நல்லவனா இருக்கிற நான் ஒரு பொருட்டு இல்லை என்றால்… கேடு கெட்ட வேலை செய்யுற இந்த இனம் எனக்கு ஒரு பொருட்டு இல்லை; ஒரு மயிர். அத்தனையும் அழித்தொழிப்பன். அழிஞ்சு போகும் எண்டு எப்போதோ எழுதியாச்சு. பார்த்திருந்து அழிஞ்சு போ!

இப்போது இரண்டு சாதிகள் பற்றிய சிறந்த கருத்துக் கணிப்பு உங்களுக்கு வந்திருக்கும் எனறு நினைக்கிறேன்.

இப்போது இதனை உங்களி சிலர் இதனை கடுமையாக ஆட்சேபிக்கலாம். யாரோ ஒருவரோ ஒரு ஊரோ ஒரு பள்ளிக்கூடமோ செய்த குற்றத்துக்காக ஒட்டுமொத்த யாதியையும் எடை போடுவது தவறு என்று. எடை என்றதும் ஞாபகம் வருகிறது. என் வளர்ச்சியைத் தடைப்படுத்த 6 வருடங்களுக்கு முன் என் உணவில் கசக் கிருமிகளைக் கலந்து காண நோயை ஏற்படுத்திய கயவர்கள் இவர்கள். இப்போதும் எனக்கு அது எக்ஸ்ரீம் நிலையில் உள்ளது. அதனால் கழுத்தில் நிழநீர்க்கட்டிகளில் #பெருங்காயம் ஏற்பட்டு சீழ் வடிகிறது. கனவு காண்பதும் குற்றமாம்.

இனி இதற்கும் சேர்த்து கதை அடித்துவிடும் அந்த கூட்டம். என்னை வாயை மூடிக்கொண்டு இருக்குமாறு பலமுறை வலியுறுத்தப்பட்டிருக்கிறது. குற்றம் செய்தவன் மட்டும்தான் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். நான் எட்டுத் திக்கும் கேட்க முழங்குவேன். மாட்டுக்கும் நீதியைத் தந்தானாம் தமிழன். எனக்கு இவர்கள் தந்த நீதி என்ன. என்னைப் பற்றிய வதந்திகள் பல மாற்று உருவத்தில் படங்களில் வருவதைக் காண முடிகிறது. இதில் விஜய், அஜித், ரஜினி உட்படப் பல சிறு நடிகர்களும் உள்ளடக்கம். நூற்றுக் கணக்கில் படங்கள். ஆயிரக்கணக்கில் திரைப் பாடல்கள். இதை எல்லாம் சொன்னால் என்னை விசர் என்றுதான் சொல்வார்கள். இது இப்போது யாதியைத் தாண்டித் தமிழனின் சதியாகிறதே!

அப்படி எனில் ஒன்று, அவர்கள் யாவர் என்று கண்டுபிடித்து அவர்களை ஊரறிய விலக்கி வையுங்கள். அல்லது நீங்கள் அந்த சாதி இல்லை என்று விலகிச் செல்லுங்கள். இப்போது நான் தமிழன் இல்லை என்று விலகிப் போகவில்லையா! அதுபோல... ஆனால், அதன் நிழலில் குளிர் காய்ந்தவர்களுக்கு அது கொஞ்சம் கஸ்டமான விடயம்தான். கூட்டுச் சேர்ந்து கெடுத்து வாழ்வதை விட அப்படி ஒரு கூட்டே தேவை இல்லை என்பது என் கருத்து. இல்லை எனில் மூடிட்டு நின்று சொல்லுறதக் கேள்டா கூமுட்டை. நீ ஒரு இப்படிப்பட்ட கேவலமான சாதியைச் சேர்ந்தவன். இரண்டில் ஒன்றைச் செய்! மூடிட்டு கேள்!


சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்

இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்

பட்டாங்கில் உள்ள படி!

என்னை வாழ வைத்த நல்ல உள்ளங்கள் அனைத்திற்கும் கோடான கோடி நன்றி!

Monday, May 17, 2021

Why Type A and B like electrical outlet is better than the G?

Type A and B electrical socket standards are designed by US which has so many benefits. Some of them are listed as follows,

  1. Environmental friendly
  2. Easy and efficient production of perfect outlets
  3. Safety increased
  4. Energy saving - Area of conduction increased
  5. Earthed and earth free socket exists
  6. No need of rods to insert earth free plugs

But other countries such as United Kingdom (UK) had their own standard because they do not want to have the US stuff in their country. In Sri Lanka, C type has been used so far. Sri Lanka has recently changed its standard to G type which is currently being used in UK. Why Sri Lankan government has not chosen A or C instead of G?

Of course, there are voltage and frequency differences of the AC supplied but will not affect its usage. However, every electrical equipment demands a power need. for example, Electrical Oven - 1000W, Iron Box - 500W. It means that the Type A or B socket with present criteria of 110-127V 15A 60Hz can bear the load of 230V 7.5A 60Hz electrical equipments
.#power matched

Also, there are many people still using A type Chinese electrical equipments in Sri Lanka. But it is challenging to use mobile chargers comes with 3 pins of the UK - G type.

What will you suggest?

  1. A and B or
  2. G









Be productive

Friday, May 14, 2021

பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சி

பிராணன் உருவமில்லாதது. அது ஒக்சிசன் என்பதை எல்லோரும் அறிவார்கள். சுவாசம் முடிந்து வெளியேறும் போது அது காபனீரொக்சைட்டு ஆகும். இந்த உருவமில்லாத வாயு நீரில் கோள வடிவம் எடுப்பது அநேகருக்குத் தெரியும். அவ்வாறு நம் உடலிலுன் குருதியில் கலந்த வாயு உருண்டை வடிவம் தான். அது மூலத்திற்கும் மூளைக்கும் இடையில் இடம் மாறிக் கொண்டே இருக்கும்.

அந்த உருண்டையை நாம் விரும்பிய இடத்திற்குக் கொண்டு வந்து அந்த இடத்திற்கு தேவையான சக்தியை வழங்க முடியும். உடல் வளர்ச்சிக்கும் உடலின் இளமையைப் பேணவும் சக்தியைப் வழங்குவது இந்தப் பிராண வாயுவே! ஆனால், அளவுக்கு அதிகமாக சக்தி ஒரே இடத்தில் குறுகிய நேரத்தில் பிறப்பிக்கப்படக் கூடாது. அது கலங்களைச் சிதைத்துவிடும். சிக்கலை மேலும் கூட்டிவிடும்.

மனித உயிரிற்கு தேவையான சக்தியைப் பிறப்பிக்க உதவுவது ஒக்சிசன். ஆனால் அது மிகையானால் விசமாகிவிடுகிறது. புதிதான ஒக்சிசனை அதிகம் சுவாசித்தால் உடற் கலங்கள் சிதைவடைந்து மூப்பினை வரவைத்து விடுகிறது. இதனால் மூச்சினை உள்ளே இழுக்க்கும் அளவைக் குறக்க வேண்டும். இழுத்த மூச்சை முழுமையாக சுவாசிக்க வேண்டும்.

பிராணாயாமத்தின் பிரதான நோக்கம் உடல் உறுப்புக்களுக்குத் தேவையான சக்தியை வழங்கி அதைச் சுத்தி செய்து சிறப்பாக செயலுற வைப்பதுதான். அது எந்த பகுதியாகவும் இருக்கலாம். அதில் மூளையும் மேற்தோலும் உள்ளடக்கம்.

திருமூலர் பிராணாயாமம்
பிராணாயாமத்தில் பல வகைகள் உண்டு. அதில் முதன்மையானது திருமூலர் சொன்ன 284 என்ற பிராணாயாமம். திருமூலர் திருமந்திரத்தில் மூச்சை உள்ளே இழுப்பதற்கான, அதை உள்ளே வைத்திருப்பதற்கான மற்றும் வெளி விடுவதற்கான கால அளவுகள் முறையே 16:64:32 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும் என்றார். அதாவது 16 மாத்திரைகள் வளியை உள்ளே இழுக்க வேண்டும். 64 மாத்திரைகள் அதை உள்ளே வைத்திருக்க வேண்டும். 32 மாத்திரையாக அதை வெளியே விட வேண்டும். இப்படி செய்தால் நரை, திரை, மூப்பு நெருங்காது என்கிறார். ஆரம்பத்தில் அதே அளவு செய்யாவிடினும் அதே விகிதத்தில் செய்யலாம். அதனஅதனைச் சுருங்கக் கூறின் 2:8:4 என்று வரும். அதனையே 284 என்று கூறினேன்.

முறையான பயிற்சி அவசியம்
வெவ்வேறு நேரங்களில் உடலுக்குத் தேவையான சக்தியின் அளவு மாறுபடுகிறது. அதற்கேற்ப பிராணயாமம் மாறுபடும். உதாரணமாக உணவு உண்டவுடனான ஒட்சிசன் தேவை மாறுபட்டது. ஆகையால் காலை மாலை பிராணயாமம் செய்வதே ஏற்றது. பல பிராணாயாம முறைகளில் 284  முறை அநேகர் அறிந்தது. அனைத்து உறுப்புகளையும் பரிகரிப்பதாலும் இலகுவானது என்பதாலும் பிறருக்குக் கற்றுத் தரப்பட்டது. இருப்பினும் அதனை ஒரு குருவிடம் பயிற்சி பெற்ற பின்பே செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் அதைப் பொருட்படுத்தாது அநேகர் தாமாக செய்து பார்த்து சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர்.

அப்படி பிழையாக பிராணாயாமம் செய்து சுவாச ஒழுங்கு சிக்கலுக்கு உள்ளானவர்கள் மீழ வழி உண்டு. மிருகங்கள் சுவாசிக்கும் போது இப்படி எல்லாம் சிந்தித்து சுவாசிப்பது இல்லை. அவை இயல்பாக இயற்கையான் சுவாசம் உடையன. நாமும் பூர்வீர்த்தால் மிருக தேகம் படைத்தவர்கள் தான். எனவே நாமும் இயல்பாக சுவாசித்து முன்னைய சுவாசத்திற்கு திரும்ப இயலும்.

இந்த முறையில் அவர்கள் முதன்மையாக ஊட்டம் அளிக்க முயல்வது தலைமை உறுப்பான மூளைக்கு ஆகும். ஆனால் அளவாக ஊட்டம் அளிக்க விளைந்தனர். இன்று அதனைப் பின்பற்றுபவர்கள் தவறாக அதனைப் பின்பற்றுவதால் அதிக சக்தி உருவாகி மூளையின் செயல்பாட்டை மேலும் மழுங்கடித்து விடுகிறது.

பிள்ளையார் வழிபாடு
பிரணவத்தின் படியான பிராணாயாமத்தினையே பிள்ளையார் வழிபாடு குறித்து நிற்கிறது. அதனை ஒரு காணொலியாக பதிவிட்டு இருக்கிறேன். அதன்படி அந்த உருண்டையானது பிராணாயாமத்தின்போது எப்போதும் தொந்தியிலேயே (வயிற்றிலேயே) வைத்திருக்கப்பட வேண்டும். இல்லையேல் அதன்போது பிறப்பிக்கப்படும் அதிகமான சக்தி சிக்கலை உண்டு பண்ணிவிடும். இதனை நன்கு உணர்ந்து அதன் இடத்தை சரியாக மாற்றுவதில் தேர்ச்சி பெற்றவர்கள் அதனை விரும்பிய இடத்தில் வைத்து அந்த இடங்களில் உள்ள நோய்களைக் குணப்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் பிள்ளையாரின் வலது தந்தம் உடைந்து உள்ளது. இது இடது பக்கத்திலேயே இதயம் உண்டு என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதையோ அல்லது சில பிராணாயாமம் கூறுவதுபோல் வலது மூக்கினால் உள் இழுத்து இடது பக்கத்தினால் வெளிவிட வேண்டும் என்பதையோ குறிக்கிறது.

சிவ வழிபாடு
நாசியில் வெளி மூச்சு வீச்சாக அடித்து வெளியேற வேண்டும். அதற்கு நாசித் துவாரத்தை சிறிதாக்கி வயிற்றில் தம் கட்டி மூச்சை, முழுமையாக வெளியேறுமாறு உடலை, முக்கியமாக வயிற்றை ஒடுக்க வேண்டும். இதன்போது "ம்" என்ற ஓசை அடி நாவில் (கழுத்தில்) ஒலிக்கும். இது பற்றிய முழுமையான பதிவு, ”சிவாய நம” எனும் பஞ்சாச்சரத்தின் பொருள்.

இதனையே சிவ வழிபாட்டில் # நாவிற் குடிலை எனக் கூறப்படுகிறது. இந்து வழிபாட்டு முறைகளில் இந்த யோகத்தை முதலில் கண்டறிந்தது sஇவன் என்றே கூறப்படுகிறது. அந்த வகையில் ஆதியோகி சிவன் ஆவான். சிவனின் மூச்சில் வேதம் தோன்றியதாக சில பாடல்கள் அழகாகக் கூறுகின்றன.

விஷ்ணு வழிபாடு
இதை விஷ்ணு வழிபாடு வேறு வகையில் சொல்கிறது. மஹாபாரதத்தில் ஒழித்த வைக்கப்பட்ட இரகசியம் பற்றி முழுமையான ஒரு பதிவு செய்திருக்கிறேன். மஹாபாரதம் உண்மைக் கதையா? புனை கதையா? மஹாபாரதமும் 7 சக்கரங்களிலான சித்து மருத்துவமும். அதன்படி அந்த மூலம் முதல் கழுத்து வரை உருளும் உருண்டையினை, 6 மையச் சக்கரங்களில் நிறுத்த வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் உடலின் அந்தப் பகுதிகளை ஆரோக்கியமாக வைத்திருப்பது குறித்து மஹாபாரதக் கதை முழுவதுமே கூறப்பட்டுள்ளது.

முருகன் வழிபாடு
உடலில் அழகும் இளமையும் விளங்க பிராணாயாமம் செய்ய வேண்டும். இதனை முருகக் கடவுள் வழிபாடு வேறு முறையில் குறித்து நிற்கிறது. "முருகு" என்றால் அழகு. முருகன் என்றால் அழகன். நாம் அழகாக இளமையாக மாறுவதற்கான ஞானத்தினை முருகன் கொண்டிருந்தான். நாம் அழகாக வேண்டும் எனில் வள்ளியையும் தெய்யானையையும் மணக்க வேண்டும். நான் தான் முருகன். என்ன இவன் அலம்புகின்றான் என்று யோசிக்காதீர்கள்.

தெய்வானை என்றால் தெய்வ ஆணை. எமது உடலில் தெய்வ ஆணை மூச்சு ஆகும். அதனை பிராணயாமம் கொண்டு சரிப்படுத்த வேண்டும். அதிக மூச்சினை கொள்வது உடலுக்கு ஆகாது என்பதால் எமது நுரையீரலாகக் கருதப்படும் தெய்வானையை எப்போதும் வெறுமையாக வைத்திருக்க வேண்டும். அதன் அளவைப் பெரிதாக்கும்போது உடலில் ஒட்சிசன் வாயுவின் அளவு அதிகரிக்கும்.

அவர்களின் ஆராய்ச்சி அத்துடன் முடிந்து விடவில்லை. கொடியில் விளைந்த கிழங்கு வள்ளி என்று இதயத்தை அவர்கள் அழைக்கிறார்கள். ஆதி காலத்தில் இதயத்திற்கு வள்ளி என்ற பெயர் இருந்துள்ளதா என ஆராய வேண்டும். அதன்படி, முருகன் ஆசைக்கு வைத்துக் கொண்டவள் வள்ளி. வள்ளி நமது உடலில் இதயம் (இருதயம்) ஆவாள். இரத்தத்தை உடலின் பகுதிகளுக்கு கிள்ளி கிள்ளி வழங்குபவள். வாரிக் கொடுப்பவன் வள்ளல் என்றால் அதன் பெண்பால் வள்ளி என்று அமைத்தனர் சித்தர்கள். இதற்கு இன்னொரு கதையும் படித்தேன்.

நாம் கொண்ட ஞானமானது பல காலமாக பல உடல்களில் வேட்டையாடி வேடையாடிக் கிடைத்தது. தான் விளைய வைத்த தினையை கவண் கல் கொண்டு, குறி பார்த்து, தொலைவுக்கு, எறிந்து எறிந்து காவல் காப்பவள் வேடுவச்சி வள்ளி. அவளை காதலித்து திருமணம் செய்கின்றான் முருகன். அதன்படி இரத்தத்தை வயிற்றில், மூளையில் அல்லது வேறு இடத்தில் தேங்கி துன்பம் செய்ய விடாது அதனை உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் பாய்ச்ச வேண்டும். அதற்கு இதயத் துடிப்பின் ஓசையைக் கேட்டுக் கொண்டு உடலின் பாகங்களை தியானித்தால் (நினைத்தால்) போதும்.

"உயிர்களே இன்பத்தைத் தேடி தேடி தேகத்தில் வந்ததே" என்று ஒரு பாடல் வரி உண்டு. ஆனால் அது உண்மை அல்ல. சுயத்தின் பயனாக சுகம்  ஏற்படவில்லை. சுகத்தின் பயனாகவே சுயம் ஏற்பட்டது. இந்த உயிர் சுயமின்றி இன்ப துன்பம் அறியாமல் இருந்தது. இந்த உடலில் வந்து சிக்கிக் கொண்டது. அது போல மூளைக்காக உடல் இல்லை. உடலுக்காகவே மூளை உண்டு. உடலை நன்கு துலக்குவதே கிரியா சக்தி ஆகும். நாம கெத்தா உலாத்தணும்!

அவ்வாறு நளும் உடற்பயிற்சி செய்பவர் பிராணாயாமம் செய்யத் தேவை இல்லை. அதனால்தான் மேலை நாட்டவர்களுக்கு பிராணாயாமம் அதிகம் தேவைப்பட்டிருக்கவில்லை. ஆனால், உடற்பயிற்சியை விரும்பாத ஞானிகள் ஞானம் மூலம் உடல் அக உறுப்புகளைத் துலக்க சில வழிகளை வகுத்தனர்; பிராணாயாமம் தோன்றியது.

பிராணாயாமத்தின் நன்மைகள்
இதன்போது பின்வரும் நன்மைகள் கிட்டும்.

  1. நாசியின் சூடு குறைக்கப்படும். அதனால் மூளைச் சூடு குறையும்.
  2. உடலின் அநேக பாகங்களுக்கு இரத்தம் பாய்ச்சப்படும்.
  3. உடற் பாகங்கள் மசாஜ் செய்யப்படுகின்றன.
  4. உடற்கலங்கள் புதுப்பிக்கப்படுகிறது.

மூச்சை முழுமையாக வெளிவிட்டு மீழ உள்ளே இழுக்கும் சுழிப்பில் கலப்பிரிகை நிகழ்கிறது.

பிராணாயாமத்தில் பிரதானமாகக் கவனிக்க வேண்டியவை (பிரணவ முறை)
மூச்சை உள்ளே இழுத்தல்
  • #இழுக்கும்போது வயிற்றுப் பகுதிக்குள் நிறைக்க வேண்டும்.
  • தேவையான வேகத்தில் அளவாக இழுக்க வேண்டும்.

மூச்சை நிலைப்படுத்தல்
  • #ஒரு முறை இழுத்த மூச்சை அதிக நேரம் உள்ளே வைத்திருக்க வேண்டும்.
  • அந்த சக்தி உருண்டையை சக்தி தேவைப்படும் இடத்தில் நிலைப்படுத்த வேண்டும்.
  • புதிய வளியானது உடற்கலங்களைக் சிதைக்கும் கூறுகளைக் கொண்டுள்ளது.
  • உடலை அதிகம் வருத்தக் கூடாது.

மூச்சை வெளிவிடுதல்
  • #அதனை வெளிவிடும்போது கரியமில வாயுவை முழுமையாக வெளியேற்ற வேண்டும்.

எண்ணம் சக்தியின் ஒரு வடிவம்

 

நம்பினால் தான் சோறு எண்டது போல, உண்மை பொய் ஆராயாது நம்பி நடந்தால் நன்மை தரும் மர்மங்களே இந்து மதம் வகுத்தவற்றில் உள்ளன. காரணம் அவையும் நம்பிக்கைப் பரிசோதனை மூலம் நிறுவப்பட்டவையே. இயற்கைக்கு அப்பால் மனித உலகை இயக்குவது எண்ணங்களே ஆகும்.

எண்ணங்கள் சக்தியின் ஒரு வடிவமே ஆனால் மனித விருப்பங்களிற்கு இயைபான விளைவை ஏற்படுத்துபவை. எண்ணங்களே பரிணாமம் உட்பட மனிதத்தில் அனைத்தையும் தீர்மானிக்கின்றன. உடனடியாக இல்லை எனினும் சற்றும் காலம் தாழ்த்தி எண்ணங்களின் பாலான மாற்றத்தை அவை ஏற்படுத்தும்.

The universe is intelligent. And it made us intelligence.
Whatever getting complex become intelligence but may not be in perceivable form.

சித்தர்களால் உடலில் இனம் காணப்படும் சூட்சும சக்கரங்களும் இதனையே சாரும். உண்மையில் அப்படி எதுவும் இல்லை.

கையை நினைத்தால் கை முனைப்படையும். காலை நினைத்தால்... அது போல தலையை நினைத்தால் அதாவது நினைப்பை நினைத்தால் அது முனைப்படையும். அப்போது அதை நிறைவேற்ற அது எம்மை நம்மை ஒட்டு மொத்தமாக தூண்டும். பிற சக மனிதர்களின் சிந்தையையும் தூண்டும். எனினும் அதில் ஐம்புலன்களே அதன் விளைவில் பெரிதும் செல்வாக்குச் செலுத்துகின்றன. அதாவது நாமே அதற்கு வேண்டிய சொற்களை உச்சரிப்போம். நமது மூச்சில் அது தெய்வ ஆணையாகி நம்மை நமது சக்திகளை அதன்பால் இயக்கும்.

நமது மனமே நம்மை ஏனைய உயிர்களிடம் இருந்து மேன்மைப் படுத்துகின்றன. அம்மனமானது நம்பிக்கைகளாலும் அனுபவத்தினாலும் வடிவம் கொள்கிறது. அதனை உரிய உத்திகள் இன்றி அவ்வளவு இலகுவில் மாற்றி விட முடியாது. நமது மனதை குறித்தவாறு ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கென்றே பல வழக்குகள் இந்து சமய வழிபாட்டில் உள்ளன. உண்மையில் அவற்றிற்கு இறைவனே தேவை இல்லை.

நாம் எதை நினைக்கிறோமோ அந்தக் கணத்தில் நமது சூட்சும தேகத்தில் அதுவாகவே நாம் இருக்கிறோம். உதாரணமாக மீனை நினைத்தால் நமது உடலில் மீன் உருவில் முனைப்பு ஏற்படுகிறது. எமது எண்ணங்களால் இந்த உடல்கள், புற பொருட்கள் உருவாகவில்லை. அவற்றை நாம் உணர்ந்தமையாலேயே எண்ணங்களே உருவாகின.

நாம் ஒரு காட்சியை ரசித்துக் காணும்போது அதனுள்ளே மூழ்கியது போல அதனுள் இருப்பது போல உணர்கிறோம். அக்காட்சிக்கு ஏற்ற உணர்ச்சி (சுகம், துக்கம், மகிழ்ச்சி) உண்டாகிறது. மல்லிகையை நினைத்தால் அதன் சுகந்தத்தை அனுபவிக்க முடிகிறது. ஆனால் எமது உயிர் உடலை விட்டு எங்கும் செல்வதில்லை. ஒவ்வொரு புலனையும் பெறும்போதும் அப்புலனிலேயே உயிர் அல்லது பிராண வாயு மையம் கொள்கிறது. எனில் அந்த மாயம் மனதின் வசம் உண்டு. இதன் உளவியல் விளக்கம் என்ன?

"மன்னனும் நானே
மக்களும் நானே
மரம் செடி கொடியும் நானே"

என்றான் கண்ணன். கண்ணனின் இலக்கணம் நமது மனம் ஆகும். பார்த்தனுக்கு வழி காட்டுவது போல எமக்கு சரியான வழியைக் காட்டுபவன்.

அனைத்தும் நானே... அது உண்மையே!

உண்மையில் மன்னன் நான் என்று நாம் நம்பிவிடும்போது நமது சூட்சும தேகம் (நமது ஞானத்தில் மரம் எப்படி உள்ளதோ) மரத்தின் வடிவத்தை எடுக்கிறது. இப்படியே ஏனையவையும்...

I love with the shape of you என்பது இதற்குப் மேலும் வலு சேர்க்கும்.

ஆனால் அதோடு மன்னராக இருக்கும்போது மன்னனின் கடமைகளைச் செய்ய வேண்டும்... இவ்வாறே யாவும்...

எனவே சில வேத வசனங்களைக் கேள்வி கேட்காமல் அப்படியே நம்ப வேண்டி இருந்தது. அப்படி நம்பினாலேயே நன்மை கிட்டும். இது போன்ற கோட்பாடுகளே இந்து மதத்தில் அநேகம் உண்டு. தற்காலத்தில் அதற்கான காரணங்கள் நிலை பெறாத காரணத்தால் அருகிப் போகின்றன. அதுவும் நன்றாகவே நடந்தது.

கீதாசாரமும் இதே போக்கிலேயே இருக்கிறது. எந்த மறுப்பும் இல்லாமல் நம்பினால் அது அப்படியே ஆகிவிடுகிறது.

அப்படி ஒரு அளப்பரிய சக்தி இருக்கு என நம்புவது தான் அப்படி ஒரு அளப்பரிய சக்தியை உருவாக்குது. அந்த சக்தி அருள் புரியும் என்ற நம்பிக்கை தான் அருளை வழங்குகிறது. நம்முள் ஏற்படும் அந்த ஏற்றம் தான் வெளியே உள்ள சக்தியைத் தூண்டுகிறது. நாம் சக்தியின் பிள்ளைகள்.
அனுமன் மறந்த சக்திகளும் அவையே!
சக்தி என்றால் என்ன என்பதை அறிவியல் நன்கு அறியும்.

இந்த உலகையும் தனக்குக் கிடைத்த வாழ்க்கையையும் நேசிக்கும் உயிர்கள் தானாகவே நீண்ட ஆயுளைச் சுபீட்சம் பெறுகின்றன. ஏனையவை தானாக மறைந்து போகின்றன. குறுகிய காலத்திலும் நீண்டகாலத்திலும் இதுவே உண்மை. இதயத்தின் சின்னஞ்சிறு துடிப்புகளில் ஜீவன் இன்னும் வாழுதே!

எண்ணங்கள் ஒரு சுற்று சுற்றி மீழ எழும்போது மீண்டும் வலிமை பெற்றால் மீண்டும் எழும். மனிதனின் சூட்சும மனவுடன் அடிப்படையில் எண்ணங்களை ஞாபகப்படுத்தி மீட்கும் இயந்திரம். அவை உடலில் புள்ளிகளுடன் தொடர்புபட்டே சேமிக்கப்படும். இதற்கு காரணம் மூளை எனும் இயந்திரத்திற்கு தூண்டல் நமது உடல் ஆகும். உடல் முழுவதுமாக எண்ணற்ற மின்கலங்கள் உள்ளன. அவை ஒருங்கிணைந்து செயற்படாவிடில் சிக்கல் ஏற்படும்.

இந்த மனம் எனும் சக்கரத்தில் உள்ளே போடப்பட்டவை எவையும் தானே தப்பி விடாது. ஒரு எண்ணம் கூடாதது எனில் அது மீழ எழும்போது அதனைச் சாந்தப்படுத்த வேண்டும். இன்னொரு நல்ல என்ணம் கொண்டோ, கொள்கை கொண்டோ அல்லது உடலால் கடமை செய்வதில் கவனம் செலுத்துவதன் மூலமோ அல்லது நற்கருமங்களில் பங்கு கொள்வதன் மூலமாகவோ இதனை செய்யலாம். இவை அனைத்தும் பலனளிக்காது போனால் ஒருவர் மனநலம் பாதிப்படைய அதிக வாய்ப்பு உள்ளது.

இன்பமான நினைவுகளை சேகரியுங்கள்.

துன்பமான நினைவுகளை மறந்திடுங்கள்.

நாளடைவில் உங்கள் மனம், இன்பமான நினைவுகளால் மட்டும் நிரம்பிவிடும்.

தோன்றும் எந்த எண்ணமும் மன மகிழ்ச்சியை உண்டாக்கும்.

எப்போதும் மனம் இன்பத்தில் திழைக்கும்.

”பிடித்திருந்தான் துன்பம் விட்டுவிட்டால் முக்தி”

Saturday, April 3, 2021

சாதனைகள் பல படைத்ததாகக் கூறும் மூத்த மொழிகள், இன்று கை கட்டி நிற்பது ஏன்?

ஆங்கிலேயர்கள் ஆங்கிலம் கற்பித்தே தமது நாட்டை வளர்த்து விட்டார்கள். நம்மில் பலர் நமது மொழிகளைக் கற்று விட்டு வேலை இல்லாமல் நிற்கிறோம்.

இன்னமும் நாம் ஆங்கிலம் கற்றால்தான் உயர்நிலையை அடைய முடியும் என்ற நிலையில்தான் நிற்கிறோம். அநேக உயர் படிப்புக்களை ஆங்கிலத்திலேயே கற்கிறோம்.

இதன் பொருள் சிங்களவர்களோ, தமிழர்களோ மற்றும் பிறமொழி பேசும் அயல் நாட்டவர்களோ அடிப்படையிலேயே புத்திசாலிகள் அல்ல, அவர்களிடம் உயர்வாக, சுயமாக ஒன்றைப் உருவாக்ககும் திறமை கிடையாது என்பதாகும். ஆனால், கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்தமொழி என்ற பெருமைக்கு மட்டும் குறைச்சல் இல்லை.

"தமிழ் கற்றும் கலைகள் மூலம் சம்பாதிக்கலாம்..." என்று ஒரு கூட்டம் கிழம்பும். எத்தனை பேர் யாரிடம் இருந்து சம்பாதிப்பீர்கள்... நாட்டில் உற்பத்தித்திறன் இல்லை எனில் மண்ணையும் கல்லையும் தின்ன வேண்டிய நிலைதான் வரும். உற்பத்தித்திறனைக் கொண்ட, தற்கால மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய தொழில்நுட்பங்கள் எல்லாம் மேலைத்தேயர் கல்வியிலேயே உள்ளது. இதற்கு மூத்த மொழி என்ன பதில் சொல்லப் போகிறது!

எதிர்காலத்தில் உயர்கல்வி படிக்கும் பிள்ளைகள் ஆங்கிலத்தில் தான் படிக்கப் போகிறது. இதற்கு ஒன்று செய்திருக்கலாம். தமது பிள்ளைகளுக்குத் தாய் மொழியாக ஆங்கிலத்தையே ( அல்லது ஒரு மேலைத்தேயர் மொழியை உ+ம்: மண்டரின், டொட்ச், ப்ரெஞ்ச்) போதித்து இருக்கலாம். ஒரு தலைமுறையில் துன்பம் நீங்கி இருக்கும்.

அதில் நாட்டம் இல்லை. தமது மொழி, பாரம்பரியம் ... ஆனால் அவர்களிற்கு சுயமாக ஒன்றை செய்யத் துப்பு இல்லை. மேலை நாட்டவர் தொழில்நுட்ப ஞானங்கலைப் பெற ஆங்கிலம் கற்பர். இந்தக் கேள்விக்கு முடிந்தால் பதில் சொல்லுங்கள், மூத்த குடிகள்!

சும்மா கிழி!

Saturday, February 6, 2021

சாதியும் அதன் நீதியும்

நன்றி: மனுதர்மம் சாதியும் நீதியும், நூல்.

சாதி என்று சொல்வதை விட சாதிசனம் என்று சொல்வது மிகப் பொருத்தமான சொல் ஆகும். மனிதர்கள் எல்லோரும் கெட்டவர்கள் அல்ல. ஒரு சிலர் தமது சுயநலத்துக்காக, அணி திரட்டிச் செய்யும் செயல்களால் ஏற்படும் வலி ஆயுள் வரை நீடிக்கிறது. இந்த உலகையும் உலக மக்களையும் வெறுக்கக் செய்கிறது.

ஈஸ்ட் என்று ஒரு பண்டம் கேக் செய்வதற்கு பேக்கரியில் வாங்கிப் பயன்படுத்தி இருப்பீர்கள். அது செயலற்ற நிலையில் பேணப்படும் ஒரு வகை கிருமி (பக்ரீரியா) என்பதும் அதனைச் செயற்படுத்த சுடுநீர் சேர்க்க வேண்டும் என்பதும் பயன்படுத்தும் ஒரு சில பேருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். பக்ரீரியாக்களில் உடலில் சில பகுதிகளில் தங்கி நன்மை செய்பவையும் உண்டு; தீங்கிளைப்பவையும் உண்டு.

ஆயுதத் தீவிரவாதம் முடிந்து நுண் உயிரியல் தீவரவாதம் தலை தூக்கும் நேரம் இது. யீஸ்ட் போலவே வேறு கிருமிகளையும் உறங்கு நிலைப்படுத்தி பொதி செய்து இரகசியமாக கஞ்சா விநியோகிப்பது போல விநியோகிக்கிறார்கள் போலும். அவற்றைக் கொள்வனவு செய்து சுவாசிக்கும் காற்று, பருகும் நீர், உண்ணும் உணவு என ஒன்று கூட விடாமல் அனைத்திலும் கலந்து  மனிதர்கள் செய்யும் நரித்தனம் கொஞ்ச நஞ்சமாக இல்லை. இவை எல்லாம் தானாக நிகழ்பவையாகவே தோன்றும். காரணம் அந்த வகைக் கிருமிகள் அநேக இடங்களில் இருப்பவை தான். ஆனால், அவை அற்ப அளவிலேயே காணப்படுவதால் எளிதில் நம்மைத் தாக்கி விட முடியாது. அதனை அழிக்கும் ஆற்றல் உடலிற்கு ஏற்கனவே உண்டு. கணிசமான அளவு இருந்தால் மட்டுமே உடலில் நோயெதிர்ப்பு சக்தியைத் தாண்ட இயலும்.

இன்று இனம் தெரியாத நோய்கள் பல படையெடுக்கின்றன. கூட நின்று உண்டு துரோகம் செய்பவர்கள் மத்தியில் இப்படி ஒரு நிலை நிச்சயம் இருக்கத்தான் செய்யும். அவர்களை நரி என்றால் தப்பில்லை.

எனக்குத் தரம் 5 இல் கல்வி கற்பித்த ஆசிரியர் ஒருவர், இனம் காண முடியாத ஒரு சிறுநீர் சார் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கேள்வியுற்றேன். அவர் சாதிக் கலப்புத் திருமணம் செய்தவர் தான். அவருக்கும் இப்படி ஒரு வகைக் கிருமியின் வேலைதான் நிகழ்ந்திருக்க வேண்டும். ஆதாரம் இல்லாத மரண தண்டனைக்கு மேலான தண்டனை ஒன்று இருக்குமானால் அது இந்த உலகில் பல வலிகளைத் தாங்கிக் கொண்டு வாழ வேண்டிய நிலையே ஆகும். உயிரிற்கு அரிதாகவே ஆபத்து விளைவிக்கும் எனினும் திரும்ப திரும்ப வந்து நமக்கு சகஜமான வாழ்வில் சிக்கல்கள் கொடுக்கும்.

இவை சாதிப் பழிகளை மட்டும் தீர்க்கப் பயன்படுத்தப்படும், புதிய முறை ஒன்று அல்ல. பல அமைப்புகளால் ஏற்கனவே கையாளப்பட்ட முறை தான். அதற்கு தீர்வு ஒன்றும் உண்டு. புற ஊதாக் கதிர்மூலமான கிருமித் தீர்வுகள் செய்வதற்கென வளர்ச்சியடைந்த பிரதேசங்களில் அமைப்புகள் உண்டு. காரணம், இது ஒரு முறை வந்தால் அப்படியே சென்று விடுவது அல்ல. நாம் வாழும் உறைவிடம், பயன்படுத்தும் உடைகள், உபகரணங்கள் என பல விடயங்களில் அதன் தாக்கம் தேங்கி நிலைத்து நிற்கும். நீரில் கலக்கப்பட்டிருந்தால் ஒரு பாத்திரத்தில் எடுத்த நீரில் ஒரு நாளின் பின், ஆடை போன்ற ஒரு படை மிதப்பதை அவதானிக்க முடியும்.
இதன் உச்சத்தில் நாம் இன்று கொரோனா காண்கின்றொம்.

மனிதன் கீழ்த்தனமான நடவடிக்கைகள் அத்துடன் முடிந்து போய் விடவில்லை. வளியில் எளிதாகப் பற்றும் சில பதார்த்தங்களும் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, பொஸ்பரஸ் உரங்கள். அவற்றை வளி, நீர், உணவில் கலந்த பிறகு அது இரத்ததில் ஊறி நிற்கும். பின்னர் ஒலி மற்றும் புலன்களில் ஏனையவற்றையும் துலக்குவதன் மூலம் அதனை உடலில் அந்ததந்த இடங்களிற்கு வரவழைத்துத் துன்புறுத்துகிறார்கள். அது மூச்சு அதிகமாயின் உடலினுள் தகனம் அடைந்து இன்னல்களை விளைவிக்கிறது.

இப்போது இதைப் பதிவிடும்போது கூட, இவற்றை அறிந்து கொண்டால் கவனமாக நடந்து கொள்வர் என நினைக்கத் தோன்றுவதை விட தாமும் அதற்குப் பழி தீர்க்கவென்று இவற்றையும் இன்னும் பல முறைகளையும் பயன்படுத்துவீர்களோ என்ற அச்சமே அதிகம் உள்ளது.

ஜெயம்ரவி நடித்த கோமாளி பட எழுத்தாளருக்கு...
இங்கே எங்கே மனிதம் வாழ்கிறது.

அலாப்பல்கள் தொடரும்...

யோக முத்திரைகள்

முத்திரைகள் தொடுகைப் புலனைகளைப் பற்றியதே! எல்லாப் புலன்களும் மூளையில் தூண்டல்களை ஏற்படுத்தும். எனினும் ஏனைய புலன்களை விட இலகுவாக எவரையும் துன்புறுத்தாமல் அமைந்தது தொடுகைப் புலன் ஆகும். அது துணைக் கொண்டு வேண்டிய இடங்களைத் தூண்டி நோய்களின்றி ஆரோக்கியமாக வாழ இயலும். இந்து மதமும் பௌத்த மதமும் இதன்பால் ஒன்றுபடுகின்றன.

நகங்களில் நரம்புகள் ஒன்று கூடுகின்றன. உள் உறுப்புக்களின் நரம்புகள் முறையே ஒவ்வொரு விரல்களிலும் முடிவதாக ஒரு கருத்து உள்ளது. மேலதிக சுவாசமானது உள்ளே அதீத சக்தியைப் பிறப்பித்துப் பல சிக்கல்களை உருவாக்க வல்லது. அப்படி சுவாசத்திலிருந்து தொடுப்பற்ற வளிநிரல்களை பாதுகாப்பாக எரித்து முடிப்பதுவும் முத்திரைகளின் ஒரு நோக்கம் ஆகும்.

சின் முத்திரை
சின் முத்திரையின் நோக்கம் இதயத் துடிப்பின் சந்தத்தை நமது மூளையின் முக்கிய பகுதிக்குத் திருப்பி விட்டு அதனை உயிர்ப்புறச் செய்வதாகும். அதற்கு மின் சைககளும் பயன்படுத்த முடியும். அதன் மீடிறனை அதிகரிப்பதன் மூலம் உயிர்களைத் துன்புறுத்தவும் இயலும். தியானத்தின்போதும் யோகத்தின்போதும் இம்முத்திரை பிடிக்கப்படும்.

கைகளைக் கூப்பி வணங்குவது ஏன்?
ஒருவரைக் காணும்போது கைகளைக் கூப்பி ஏன் வணங்குகின்றோம்! கைகள் கூப்பிய நிலை உயர் சக்தி நிலை. கைகளைக் கூப்பியவாறு செய்யும் செயல் மனமார செய்ததாகிறது. அது போலியானதாக இருப்பது அரிது. விரும்பியோ விரும்பாமலோ அவை நிதர்சனமாகும். இது ஐம்புலன்களில் தொடுகையின் செய்கை ஆகும். இதன் அடிப்படையிலேயே சத்தியம் செய்தல் வழக்காகி இருக்கக்கூடும்.

கல்லைக் கரம் கூப்பி வணங்குவது ஏன்?

இது போல கரம் கூப்பி இறை உரு ஒன்றைத் தரிசிக்கும்போது அந்த உரு நம்முள் பிரதிபலிக்கிறது. இதனால் உடலினுள் பல நேயமான செயற்பாடுகள் நிகழ்கின்றன. இவை ஒரு குத்து மதிப்பான ஆய்வின் பெயரில் நமது முன்னோர்கள் வகுத்தவையே தவிர அவை முற்றிலும் சிறந்தவை என்று கூறிவிட முடியாது. நாம் அங்கேயே நின்று கொண்டிருந்தால் நமது சமூகம், தாழ்ந்து போவதையும் ஏனைய விஞ்ஞானத்தில் உயர்ந்த சமூகத்தினரில் இருந்து பின் தங்குவதோடு பலவாறு ஏமாற்றப்படும்.

உடலில் இருக்கும் தூங்கல்களில் கால்களும் கைகளுமே பெரியவை. அவற்றை கூப்பும் போது மிகப் பெரிய தூண்டல் மாற்றம் ஒன்றை மூளை உணர்கிறது. எனவே அதன்போது மனதுள் எண்ணுபவை நிலை பெறும். வலது கைகளால் அதிகமாக வேலை செய்பவர்கள் கை கால் கூப்பி வழிபடும்போது வலது புறத்தை அதிகமாக நிறைத்து வழிபட வேண்டும்.

திருஞானசம்பந்தர் இதனையே கை ”கால் கூப்பித் தொழீர்...” என்று பாடியுள்ளார். இவர் ஐம்புலன்களையும் அதிகம் மீட்டுமாறு வலியுறுத்துகின்றார். நமசிவாய என்ற 5 எழுத்தும் ஐம்புலன்களைக் குறிக்கக் கூடும். இடையில் உண்மைக்கும் மனிதர்களுக்கும் இடையில் ஏற்பட்ட இடைவெளி அனைத்தையும் மாற்றி அமைத்து விட்டது.

காயப்பட்டால் வலி ஏன் வருகிறது?
உணர்ச்சி இருந்தபடியால்தான் வலி வருகிறது.
சதை பிண்டத்தில் எப்படி வலி?
தொடர்ந்து கிடைத்த ஒன்று இல்லாமல் போகிறது அல்லது மிகையாகிவிட்டது.
இது போன்ற விளைவுகளை ஆராய்ந்தே முத்திரைகளும் யோகமும் வளர்ந்தன.

மண் சூடாகும் வரை உரம் போடுதல் வேண்டும். அது போல உடலில் சூடு இருந்தாலேயே அது உயிர்ப்புடன் இருப்பதாகப் பொருள். இள வயதில் இது சற்று அதிகமாகவே இருப்பதோடு அது அலை பாய்ந்து திரியும். எனினும் அதிக சூடு அல்லது மாறுபடுகின்ற சூடு நல்லதல்ல. கண நேரத்தில் மணி நேரப் பயணம் செய்பவன் யோகி ஆவான். அதாவது அதனை அப்படி அவன் உணர்ந்து கொள்ள அவனது உடலுக்கும்  மனதுக்கும் வேகம் வேண்டும்.  அதனை முத்திரைகள் அவனுக்கு வழங்கும். அத்தோடு, ”இடையறாத ஓசையில் அமைதியையும் அமைதியில் இடையறாத வேலையும் கண்டு கொள்ளக் கூடியவனே சிறந்த யோகி” என விவேகானந்தர் சொகின்றார்.

உடலில் ஓரிடத்தில் வலி இருந்தால் ஏனைய இடங்கள் அதிகம் ஊழியம் செய்யப்படுவது இல்லை. ”ஆட்டி விட்டு விட்டால் ஏறும்”. அதாவது உடலின் எந்த உறுப்பையும் துலக்கி விட்டு ஓய்வாக்கினால் அந்த உறுப்பு இரத்ததால் நிறைக்கப்படும்.

தேடல் தொடரும்...
நன்றி!

Sunday, January 31, 2021

நினைத்தபோது நீ வர வேண்டும் - வேலும் மயிலும் - குண்டலிலினி எழுகை


வேலும் மயிலும் ஞானத்தின் அடையாளங்கள் ஆகும்.

மூலாதாரத்தில் கணபதியும் சிரசினில் முருகனும் இருத்தி வழிபடுவது வழக்கமாகும். மூலாதாரம் எனப்படுவது முள்ளந்தண்டின் அடிப்பகுதியில், குரங்குகளிற்கு வால் காணப்படும் இடம் ஆகும். அதாவது குண்டலினி எனப்படும் வளித் திரளையை (குண்டலினி) மூலாதாரத்தில் பேணுவதே வழமையாகும். முதல் வணக்கத்துக்குரியவர் கணபதி ஆவார். ஆனால் சிந்திக்கும்போது உடனே அது மேலே முனைப்படைந்து தலையை அடைய வேண்டும்.

சிந்திக்கும் போது அதற்குத் தேவையான சக்தி, புஜம் கொண்டு கொடும் வேலை செய்யும் போது தேவையான சக்திக்கு இணையானது. அதன் பிறப்பாக்கத்திற்கு மூச்சு அதிகம் தேவைப்படுவதோடு மூளைக்கு அருகிலேயே அது நடைபெற வேண்டும். அதற்கு குண்டலினி எழுகை என்று சித்தர்கள் சொல்வது நிகழ வேண்டும். ஆனால், செயற்பாடு எதுவும் இல்லாதபோது மூச்சு குறைந்து, குண்டலினி மீண்டும் குளிர்ச்சியடைந்து மூலாதாரத்தை அடைய வேண்டியது கட்டாயம் ஆகும். அல்லாத பட்சத்தில் உடல் அளவிலும் மனதளவிலும் பல சீர்கேடுகள் நிகழும் என்பது கட்டாயம் கவனிக்கப்பட வேண்டியது.

ஞானத்தின் நிறம் கருநீலம் என ஞானி ஒருவர் குறிப்பிடுகின்றார். அதாவது மனம் தெளிவடைந்து ஞானம் உச்சம் பெறும்போது கண்களை மூடினால் மயில் நீல நிறத்தில் ஆங்கே ஒளி தோன்றும். அப்போது மூளையானது உடல் கடந்து உச்ச மீடிறனில் செயற்படத் தொடங்குகிறது என்று பொருள். ஆகவே நான் நினைக்கும்போது முருகன் வேல் கொண்டு நீல மயில் ஏறி வர வேண்டும் என்பதே வேல் மயில் வழிபாட்டின் நோக்கம் ஆகும். ”வேலும் மயிலும்” என்று பெயரிட்டுக் கொள்ளும் வழக்கமும் இருந்தது.

Sunday, January 24, 2021

மஹாபாரதம் உண்மைக் கதையா? புனை கதையா? மஹாபாரதமும் 7 சக்கரங்களிலான சித்து மருத்துவமும்

மஹாபாரதம் கதையா, வரலாறா? என்பதை விட்டு விடுவோம். ஆனால், மஹாபாரதம் என்பது வெறும் இதிகாசம் மட்டுமல்ல. இது ஒரு மருத்துவமுறை யோகம் ஆகும். அதனை ஒழித்து மறைத்து இந்த இதிகாசம் எழுதப்பட்டுள்ளது. இங்கே கண்ணன் என்பவன் நமது மனம் ஆவான். மனமே இறைவன் உறையும் இடம் மற்றும் வழிபாட்டின் பிரதானம் ஆகும். விஷ்ணுவை முதல் கடவுளாக வழிபடுபவர் மஹாபாரதத்தை எழுதியமையால் விஷ்ணுவை கண்ணனாக அமைத்து எழுதியுள்ளார்.

உடலில் சித்தர்கள் கூறும் 7 சூட்சும சக்கரங்கரங்களும் பாண்டவர்களும் + கர்ணன்

  1. குந்தி - மூலாதாரம்
  2. கர்ணன் - சுவாதிஷ்டானம் - இடை - அம்பு
  3. பீமன் - மணிபூரகம் - வயிறு - கதை
  4. அர்ஜுனன் - அனாஹதம் - மார்பு - அம்பு
  5. தர்மர் / யுதிஷ்டர் - விசுக்தினி - கண்டம் - ஈட்டி
  6. நகுலன் - ஆக்னா - நெற்றி - வாள்
  7. சகாதேவன் - சகஸ்ரம் - உச்சி - அங்குசம்.

7 சக்கரங்களும் அவற்றை இயக்கின் உடல் அரோக்கியம் பெறும். கண்ணன் வைத்திருக்கும் குழலில் உள்ள துளைகளும் இதனையே குறிக்கின்றன. வில்லேந்திய அர்ஜுனனின் சாரதி என்பதால் கண்ணனுக்கு பார்த்தசாரதி என்று பெயர் உண்டு. ”சுவாச வீச்சை வைத்து வைத்து அர்ஜுனன் மனம் அறிந்து வண்டியைச் செலுத்துபவன் கண்ணன்” என்று மஹாபாரதத்தில் கூறப்படுகிறது. இந்த 7 சூட்சும சக்கரங்கள் பற்றி இன்னொரு பதிவில் விரிவாகக் காண்போம்.

குந்தி மூலாதாரத்தில் உள்ள முதல் சக்கரம்.
குந்தியின் புதல்வர்கள் நால்வர்:

  • கண்டத்தில் யுதிஷ்டன்
  • வயிற்றில் பீமன்
  • தோளில் அர்ஜுனன்
  • இடையில் கர்ணன், பாண்டுவின் திருமணத்திற்கு முன் பிறந்தவன்.

மாத்திரையின் புதல்வர்கள் இருவர். இவர்கள் நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் பெற்றவர்கள்.

  • புருவத்தில் நகுலன் - தொடா வர்மங்கள்
  • சஹஸ்ராரத்தில் சகாதேவன் - எதிர்காலம் அறியும் ஆற்றல்.

மாத்திரை - மிகச்சுருக்கமான இடம், கண்ணிமைக்கும் காலம், பாக்கியம்(அதிஷ்டம்)

திரௌபதை, பாண்டவர் மனைவி: நாடிகள் (இடை, பிங்கலை)
நாடிகளைப் பெண்களாக உருவமைப்பது சித்தர்கள் வழக்கமே! உதாரணமாக திருமூலர் நாடி மற்றும் நாளங்களை கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்... என்று திருமந்திரத்திலே குறிப்பிடுகின்றார்.

துரியோதனன் எனப்படுவது கட்டறுந்து அலையும் சுவாச அங்குலங்கள் மற்றும் தொடையில் ஓடாது தேங்கிய  இரத்தம் ஆகும். இவன் இடையிலுள்ள கர்ணனின் மித்திரன் ஆவான். மனிதனுக்கு உடலிலேயே பிணிகள் ஏற்படுகின்றன. உடலின் 100 தசைப் துண்டங்களையும் அவற்றில் தேங்கிய சுவாச அங்குலங்களையும் திருதராட்சனின் 100 புதல்வர்களாக வடிவமைத்து இருக்கின்றனர்.

இது போல ஏனைய பாத்திரங்களும் கீழ்க் கண்டவாறு உறுப்புகளாகவே இருக்க வேண்டும். ஏனையவை எனது புத்திக்கு எட்டவில்லை.

  • நாசி - அசுவத்தாமன்
  • நாக்கு - துரோணர்
  • அஸ்தினாபுரம் - வாய்
  • கடோற்கயன் (பீமன் மகன்) - தொப்பை, இவனைக் கர்ணன் சக்தி அஸ்திரம் கொண்டு வதைப்பான்.
  • பீஸ்மர் - இரப்பை
  • திருதராட்சன் - உள் மூச்சு - உயிர்வாயு / பிராணனும் அதன் ஆசைகளும் (பிரேத ஆத்மா) + வலது கண்ணுக்குரிய நாடி என்றும் பொருள் உண்டு (தச நாடிகள்).
  • காந்தாரி - வெளி மூச்சு - கரியமில வாயு + இடது கண்ணுக்குரிய நாடி என்றும் பொருள் உண்டு.

பார்த்திபன் (அர்ஜுனன்) இலக்கு வைப்பதில் கை தேர்ந்தவன். பார்ப்பதன் மூலம் இலக்கு முடிவு செய்யப்படுகிறது. ஆனால் அது இரு புஜங்கள் கொண்டே அது அடையப்படும்.

பார்த்தசாரதி (கண்ணன்) அந்த இலக்குகளைச் செலுத்துபவன். புறத்தில் மட்டுமல்ல பார்வையால் அகத்திலும் அக உடலிலும் மாற்றங்களை உண்டாக்கும் சிறப்பை உடையவன். இதனால் தான் அவனுக்குக் கண்ணன் என்றும் பெயர் உண்டு. 

கண்ணன் மகாபாரதத்தில் மனதைக் குறிக்கின்றான்.
அனைவருக்கும் மனமாக இருந்து வழி நடத்துபவன். இதனை அவனே கீதையில் தெளிவாகச் சொல்கின்றான்.

கண்ணன் ஒரு தனிப்பொருள் இல்லை. நமக்கு மேலே நம்முள் நாமாக இருந்து நம்மை வழி நடத்துபவன். நாம் அவன் இடத்தை அடைந்து சிந்தித்தால் நல் மார்க்கம் கிட்டும். அதாவது அவனது ஞானத்தையும் அவன் நின்றதாகச் சொல்லப்படும் நெறியினையும் மேல் நிறுத்தி கண்ணனாக நின்று முடிவுகளை எடுக்க வேண்டும்.
உதாரணமாகக் கீதையில் நான் என்று கண்ணன் கூறுபவற்றை, நீங்கள் உங்கள் ஆசை, சுயநலம், ஆணவம் யாவும் துறந்து சற்று மேலே சென்று, நீங்கள் கூறுவது போல "நான் ..." என்று கூறிப் பாருங்கள்... அனைத்தும் புலனாகும்.

அர்ஜுனன் உடலிலுள்ள 7 சூட்சுமச் சக்கரங்களில் அநாகதச் சக்கரத்தைக் குறிக்கின்றான். நாங்கள் கண்களால் சிறந்த அகச் சூழலை உருவாக்க முடியும். ஆரோக்கியத்தையும் மனத் தெளிவையும் ஏற்படுத்த முடியும்.

கர்ணன் என்றால் சிறந்த காதுடையவன். கர்ணன் மஹாபாரதத்தில் அந்தச் சக்கரங்களில் சுவாதிஷ்டானத்தைக் குறிக்கின்றான். சுவாதிஷ்டானம் கவசம் மற்றும் குண்டலத்தை வழங்கும். அதாவது கட்டுடல் (6 packs) மற்றும் ஒருமுகப்படுத்தப்பட்ட கூர்மையான கேட்கும் திறன் கிட்டும். கண்ணன் கர்ணனுக்கு துரோகம் செய்கின்றான். கண் இருப்பதால் காது என்னும் புலன் பூரணமாகப் பயன்படுத்தப்படுவது இல்லை.
கண், காது இரு புலன்கள். 

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மகாபாரதப் போர் நிகழும். இளம் பருவத்தில் வளர்ச்சியின்போது ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தினால் மஹாபாரதம் அனைவர் வாழ்விலும் நிகழ்கிறது. சரியான உணவுமுறை இல்லாத போதும் போதிய உடற்பயிற்சி இல்லாத போதும் மீண்டும் மஹாபாரதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நன்றி!
தேடல் தொடரும்...

இற்றைப்படுத்தியது (3): 06 மாசி 2121
இற்றைப்படுத்தியது (4): 25 பங்குனி 2121

Wednesday, January 13, 2021

சூரியன் திருநாள்

thanks: oneindia.com
சூரியன் இல்லாவிடில் விடியாது, இருளாது, காற்றடிக்காது, கடலலை இருக்காது, உண்ண உணவிருக்காது, இவ்வுலகில் உயிர்களே இருக்காது.

சூரியன் தன்னை வணங்குபவர்களையும் வெறுப்பவர்களையும் சமமாக ரட்சிக்கிறான்.

இவ்வுலகில் படைத்தல், காத்தல், அழித்தல் அனைத்திற்கும் காரண கர்த்தா அவர்தான்.

சூரியன் நிலை குலைந்து போனால் அனைத்தும் ஸ்தம்பித்து விடுகிறது.
ஈரேழு உலகங்களுக்கும் அவர்தான் கடவுள்.

திருமூலர் திருமந்திரத்தில் சிவனைச் சூரியன் எனக் குறிப்பிடுகின்றார்.

ஒரு கடவுளுக்கான இலட்சணங்களில் எதுவும் குறைந்தில்லை.


thanks: oneindia.com

மனதில் ஒரு தீர்க்கமான நோக்கத்துடன் காலையில் சூரியனை தரிசித்தால் ஒரு மாயம் நிகழும்.

#அடி முடி தேடிய கதை
உயிரின் இலக்கணம் சூரியன் ஆகும். உடலின் இலக்கணம் பூமி ஆகும்.

உயிரிக்குப் புதுமை அளிப்பது சூரியன் ஆகும்.
உயிருக்குப் பழமை புகட்டுவது பூமி ஆகும்.

புவி வாழ் உயிர்களிற்கு ஆதி பூமி ஆகவும் அந்தம் சூரியன் ஆகவும் இருக்கிறது.

எமது உயிர் சூரியனுக்கு ஒப்பானதும் உடல் புவிக்கு ஒப்பானதும் ஆகும்.
உயிர் நிலைக்க சுவாசம் அவசியம் ஆகும். உடல் நிலைக்க இதயத் துடிப்பு அவசியம் ஆகும்.
"அண்டத்தில் இருப்பதைப் பிண்டத்தில் காண்பாய்" என்பது முன்னோர் வாக்கு.

#சத்துவ குணம்
சூரியன் போல நீங்கள் ஒளி வீசிக் கொண்டு இருந்தால்,
சூரியனைத் தனது கையால் மறைப்பவர் ஒளியை இழந்து இருளில் தவிப்பதுபோல,
உங்களை ஏமாற்றுபவர்கள் தாமே நஷ்டம் அடைவர்.
நல்லவர்களை ஏமாற்றுவதால் அவர்கள் அடையும் நஷ்டத்தை விட அதிக நஷ்டத்தை இந்தப் புவி சந்திக்க நேரிடும்.

நெருப்பு சுடும் என நெருப்பினை நீங்கின் விரைவில் பனியும் சுடத் துவங்கும்.
உயிர்கள் பூமியை நீங்கினாலும் சூரியன் தீண்ட மறுத்தாலும் அதை விடுத்து ஒரு பெருவாழ்வு ஒருபோதும் கிட்டாது.

சூரியன் போல நீ சுடர் விட்டுக் கொண்டு இருந்தால் நட்சத்திரங்கள் அடங்கித்தான் போக வேண்டும்.

#தாமத குணம்
ஆனால் தாமத குணம் படைத்தவர்களோ தாமும் துன்புற்று அது நிமித்தம் பிறரையும் துன்புறுத்துவர்.

உடலிற்கு ஆதாரம் உயிர் என்பதுபோல
இதயத் துடிப்பிற்கு ஆதாரம் சுவாசம் என்பதுபோல
புவிக்கு ஆதாரமும் உலகின் முதலாவது அதிசயமும் சூரியன் ஆகும்.
எல்லா உயிர்களுக்கும் ஆதரமாக விளங்கும் சூரியனைப் போற்றி
இனிய தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

thanks: vegrecipesofindia.com

Sunday, January 10, 2021

”சிவாய நம” எனும் பஞ்சாச்சரத்தின் பொருள்

இற்றைப்படுத்தியது (2): 22 தை 2021
இற்றைப்படுத்தியது (3): 08 ஆவ 2021

சிவன் என்பதன் பொருள் யாது?
அது ஒரு இடுகுறிப் பெயர் ஆகும். எல்லாவற்றிற்கும் மேலான ஒரு பொருளை சிவம் எனப் பெயரிட்டது சைவ சமயம். ஸ்வ என்பது மூச்சுவிடும் போதான காற்றின் ஓசை ஆகும்.  சுவாசமே உயிரின் ஆதாரம் ஆகும். அதனால் ”ஸ்வ” (சிவ) என்றால் உயிரின் ஆதாரம் என்று பொருள். வடமொழியில் “நம” என்றால் தமிழில் போற்றி என்று பொருள். அந்த உயிரின் ஆதாரமான மூச்சை வணங்குகிறேன் என்று பொருள் வரும். அதோடு சிவனுக்கு என்று சில விசேட இயல்புகள் உண்டு.

சிவ நாம ஜெபம் என்றால் என்ன?
முதலில் அவனை அறிதல். அறிந்த பின் அவனுள் உறைதல். அதாவது அவனாகவே வீற்றிருத்தல். அப்போது சிவ குணங்கள் எம்மிலும் நிறையும்.

இதன் பயன் யாது? சிவனருட் பயன் என்ன?
இதனால் அருள் என்று ஒன்றும் கிட்டுவது இல்லை. நமக்குள்ளே ஒரு மாற்றம், நம் உள்ளத்தில் ஒரு மேன்மை ஏற்படுகிறது. உள்ளத்தில் மேன்மை ஏற்பட வாழ்க்கையிலும் மேன்மை ஏற்படும். அதனால் அருளை நீங்களே உங்களுக்கு வழங்க வேண்டும். ஏனெனில் சிவன் பெயரை ஜெபித்தலின் பொருள் சிவமாக வீற்றிருத்தல் ஆயிற்றே! இப்போது நீங்கள் சிவன்! இதன் உச்சத்தில் சிவனடியார்கள் எங்கும் சிவத்தினைக் காண்பர். அனைவரும் சிவனின் குணங்களுடன் காட்சியளிப்பர்.
மந்திர ஜெபத்தின் இதர நன்மைகள் பற்றி அறிய மனதை நெறிப்படுத்தும் மந்திர ஜெபமாலை என்னும் பதிவைப் படிக்குக.

சிவனது உயர் குணங்களில் அன்பு மிக முக்கியமானது.
" அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே "
                                   திருமூலர் திருமந்திரம் - 270/3047. 

ஒருவன் தர்மத்தை ஒழுக்க நெறிகளை அறிந்திருந்தாலும் அதைக் கடைப்பிடிப்பது சுலபமான காரியம் அல்ல. அதற்கு மனமும் உடலும் ஒத்துழைக்க வேண்டும். அதற்கு அவனைப் போற்றி, அவனை உணர்ந்து, அவன் அருள் பெற வேண்டும். இதனையே "அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி..." என்று சிவ புராணத்தில் சொல்லப்படுகிறது.

ஔவையாரின் விளக்கம்
வடமொழியில் உள்ள சிவாய நம என்னும் பஞ்சாட்சரத்திற்கு தமிழ்ப் புலவர் ஔவையாரின் விளக்கமும் ஒன்று நல்வழியில் உண்டு. அதனை அப்படியே மறுப்பு ஏதும் இன்றி ஏற்றுக் கொள்வோருக்கு நன்மை உண்டாகிறது; வாழ்வில் சந்தேகம் ஒழிகிறது.

”சிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்கு
அபாயம் ஒரு நாளும் இல்லை - உபாயம்
இதுவே; மதியாகும்; அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்.”
                                                நல்வழி - 15

பொருள்: சிவாய நம என்னும் சிந்தனையில் ஆழ்ந்திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை. மகிழ்வாக வாழ்வதற்கு உரிய தந்திர மந்திரம் இதுதான். இதுவே நமது அறிவு கண்ட மதியாக இருக்கவேண்டும். அல்லாத அறிவின் மதிப்பீடு எல்லாம் விதியால் நமக்குக் கிடைத்தவை.
சிவாய நம, சிவ்+ஆயம்+நம, சிவன் துணவர் நம்முடையவர், சிவன் தோழராக நாம் இருப்போம், நிகழ்வுகள் எல்லாமே சிவ் என்னும் உணர்வு. (diamondtamil.com)

சிவ நாமம் ஜெபிப்பவர் எவ்வாறு இறைவனின் குணங்களைப் பெறுகின்றார்?
 ஒரு அழகிய வாசமுடைய பூவின் வாசத்தினை நாம் நுகர்கின்றோம்; நமக்கு சுகம் உண்டாகிறது. அதன் அழகினை ரசிக்கின்றோம்; நமக்கு மகிழ்ச்சி உண்டாகிறது. அதனை வருடுகிறோம்; நமக்கு நல்ல உணர்ச்சி உண்டாகிறது. ஆனால் அந்தப் பூவானது நம்முடைய அங்கம் அல்ல. ஆனால் அந்த சுகம், மகிழ்ச்சி, உணர்ச்சி நமக்குள் உண்டானவை. அந்தப் பூவினை அறிந்து கொண்ட பிறகு, அதனை நினைக்கும் போதெல்லாம், அவை மீண்டும் எம்முள் உண்டாகின்றன. அவற்றை நாம் நினைக்கும் ஆழத்தைப் பொறுத்து அவை மேலும் எம்முள் வலுப்பெறுகின்றன.

இறை வழிபாடும் அதே மாயத்தையே நிகழ்த்துகிறது. முதலில் நாம் இறவனின் குணங்களை அறிகின்றோம். அவர் உண்மையில் இருக்கலாம்; இல்லது இருக்கலாம்; கவலையில்லை. சிவனின் குணங்களை அறிந்து கொண்ட பிறகு, சிவனை நினைக்கும் பொழுதெல்லாம் ”சிவாய நம” உச்சரிக்கும் போதெல்லாம், சிவ குணங்கள் எம்முள் வலுப்பெறுகின்றன. அவன் வழி நடக்கின்றோம்; அவனையே வெளியிலே காண்கின்றோம். அவனது குணங்களை பாமரரும் அறிய இலகுவான வழி கதைகள் ஆகும். அதனால்தான் வேலின் சிறப்பு என்ற பதிவில் இறைவனின் கதைகள் வாழும்வரைதான் இறைவன் வாழுவான் என்று குறிப்பிட்டிருந்தேன்.

சிவனின் குணங்கள் யாவை?
சைவ சமயம் சிவனுக்கென்று தனியாக குணங்களை அதிகம் வகுக்கவில்லை. மாறாக பொதுவான இறைவனின் குணங்கள் கூறப்படுகின்றன. இறைவன் குணங்களை எட்டாகச் சுருக்குகின்றது சைவசமயம். பரிமேலழகர் வரையறுத்த இறைவனின் எண்குணங்கள் ஆவன,

  1. தன்வயத்தினர் ஆதல்
  2. தூய உடம்பினர் ஆதல்
  3. இயற்கை உணர்வினர் ஆதல்
  4. முற்றும் உணர்தல்
  5. இயல்பாகவே பாசங்களின் நீங்குதல்
  6. பேரருள் உடைமை
  7. முடிவு இல் ஆற்றல் உடைமை
  8. வரம்பு இல் இன்பம் உடைமை

இவற்றை ஒரு கசடு அற அறிந்து கொண்ட பின்னர் இறை வழிபாடு செய்வதே ஒருவருக்கு முழுப் பயனையும் அழிக்கும். இல்லையெனில் அவன் சிந்தையில் வைப்பவன் பொருள் ஓதுவோரிலும் மேலோங்கும். அதன் பின் செய்யப்படும் சிவ நாம ஜெபம் ஒருவருக்கு சிறப்பான நன்மைகளை நல்கும்.

”காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்நெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.

பிற் குறிப்பு: சைவசமயம் பஞ்சாட்சரத்தை தூல பஞ்சாட்சரம், சூட்சும பஞ்சாட்சரம், மற்றும் அதிசூட்சும பஞ்சாட்சரம் என 3 வகைப்படுத்துகிறது.
அதில் தூல பஞ்சாட்சரம் எனப்படும் “ந” இல் தொடங்கும் நகர பஞ்சாட்சரம் - நமசிவாய. இது இனிய உலகியல் வாழ்வை நல்குவது. வலிய தீவினைகள் எல்லாம் அடங்கிவிடும்.
சூட்சும பஞ்சாட்சரம் எனப்படும் ”சி” இல் தொடங்கும் சிகர பஞ்சாட்சரம் - சிவாய நம. இது வீடு பேறு அல்லது முக்தியை நல்குவது. சதாசிவம் முதல்வகை இருந்து கருணைபுரிந்து அருள் செய்வன்.
இவற்றின் விளக்கம் தெரியவில்லை. 

குறிப்பு: இது இந்து மதத்தையோ சைவ சமயத்தையோ வளர்ப்பதற்காக செய்யப்பட்ட பதிவு அல்ல. சிறந்த தெளிவைப் பெற முதற்படி.

Tuesday, January 5, 2021

Earth Coinsides a Darkspot of the Sun in December and Coronavirus SARS - 2

thanks: laprovincia.es

"The first human cases of COVID-19, the disease caused by the novel coronavirus causing COVID-19, subsequently named SARS-CoV-2were first reported by officials in Wuhan City, China, in December 2019." [1]

The Tsunami also caused 227,000 fatalities in 14 countries in December 26 2004. [2]

December seems to be the month with high riskiness and source of dread.

"A selfish cytoplasmic gene is a gene located in an organelle, plasma or intracellular #parasite that modifies reproduction to cause its own increase at the expense of the cell or organism that carries it." [3]

"Intracellular parasites are micro-parasites that are capable of growing and reproducing inside the cells of a host."
There are two types namely, Facultative intracellular and Obligate intracellular.
Obligate intracellular parasites need a host cell to live and reproduce. [4] eg: All viruses

"Virus or Bacteria that can enter and survive within eukaryotic cells are shielded from humoral antibodies and can be eliminated only by a cellular immune response. Some examples of infectious diseases of global importance that are caused by intracellular microorganisms include tuberculosis, leprosy, typhoid, listeriosis, Legionnaire’s disease, malaria, leishmaniasis, Chagas’ disease, and toxoplasmosis. Most microorganisms are destroyed by the host tissues through processes that usually involve phagocytosis and lysosomal disruption. However, some organisms, called intracellular pathogens, are capable of avoiding destruction by growing inside macrophages or other cells. During infection with intracellular pathogenic microorganisms, the element #iron is required by both the host cell and the pathogen that inhabits the host cell." [5]

Iron percentage the surface and the underground water increase when there is changes inside the earth. For example, when the subducted primordial crust, resting under the bottom of the upper mantle descended towards the core mantle boundary, mantle plumes ascended front the lower mantle to the upper mantle. This phenomenon is known as mantle over turn. Look at this video. This may cause volcanic eruption, tectonic plate moments, earth quakes and hence the Tsunami. Also, #iron and other elements are pushed into the upper layer of the earth which would makes the water contaminated with the elements. It helps the intracellular pathogens already exists rarely in the earth lives to infect and spread widely.

References:



Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...