Saturday, August 20, 2022

என்னை அறிந்தால்… Mr. Keethan

எல்லோரும் தன்னுடைய வாழ்க்கையை அனுபவித்து வாழும்போது என்னால் அப்படி வாழ முடியவில்லை. சுற்றிலும் வறுமை பட்டினி என மக்கள் வாடியிருக்க அவர்களுக்கு மத்தியில் நட்சத்திரம் போல வாழ என்னால் முடியவில்லை. ஒரு கடை முதலாளி கூட ரிப் ரொப் ஆக உடையணிந்திருப்பதை நான் காண்கிறேன். ஒரு இஞ்சினியராக நிறைய சம்பாதித்தும் என்னால் அப்படி ஆடம்பரமாக வாழ முடியவில்லை. எத்தனையோ வாசனைத் திரவியங்களும் சம்போ சோப் அணிகலன்கள் எனப் பல இருக்க அவற்றை எல்லாம் சென்று அழகு பார்த்து தேடி தேடி வாங்க எனக்கு மனமில்லை. எனக்கு என் வாழ்க்கையில் நாட்டம் இல்லாமல் போனாலும் அடிப்படைத் தேவை தவிர்ந்த எதனையும் என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. தேவையான அளவு ஊதியம்; என் செலவு போக வீட்டுத் தேவைக்கும் அனுப்ப முடியும். அதில் எனக்கு மகிழ்ச்சிதான். எதற்கும் ஒரு காரணம் தேவைப்படுகிறது. வீட்டில் ஒரு பொருளை வாங்கி வைத்து மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியாத இக்கட்டான சூழ்நிலையில் வளர்ந்தவன் நான். இப்போது தனியாக ஒரு வாடகை அறையில் வாழ்ந்தும் அதனையே உணர்கிறேன். நான் வாங்கி வைக்கும் பற்பசை சோப் சீனி தேயிலை உட்பட எல்லாவற்றிலும் மாயம் நிகழ்வது போல உணர்கிறேன். இவை இப்படி இருக்க நான் மேலும் ஒரு தலகணி அல்லது கடிகார வாங்கக் கூட பல முறை யோசித்து பல முறை பிற்போடுகிறேன். அது மட்டும் காரணம் அல்ல; எனக்கும் மனம் இல்லை. ஏன் வாழ்கிறேன். யாருக்காக வாழ்கிறேன். என்னைச் சூழ வந்து அந்த மாயம் செய்யும் அவர்கள் அப்படி செய்வதற்கான ஒரு காரணமாக நானே அமைந்து விட்டேன். அவரகள் என்னை அவதானித்து வயிறு பத்தி எரிய நான் எப்படி என்னுடைய வாழ்க்கையை சுகபோகமாக வாழ்வேன்.

வாழலாம், எனக்கென ஒரு வீடு இருந்து ஒரு கார் இருந்தால் நான் அங்கே தேவையான ஆடம்பரம் எல்லாம் புரிந்து காரில் ஏறி அலுவலகத்தில் இறங்கி மீண்டும் சுப்பர் மார்க்கட் சென்று வாழலாம். ஆனால் எனக்கு ஒரு நிம்மதியான ரூம் கூட வாடகைக்குக் கிடையாது. இதற்கு மத்தியில் நான் இப்படியான மக்கள் மத்தியில் எப்படி மகிழ்ச்சியாக உலவுவேன். அதோடு என்னால் அவர்கள் அனைவருக்கும் கொடுக்கவும் முடியாது. அதற்காக என்னிடம் உள்ளவரை அனைத்தையும் கர்ணன் போல் கொடுத்துவிட்டு வாழவும் மனம் இல்லை. எனக்கு சில எதிர்காலத் தேவைகள் இருக்கிறது. அதற்காக நான் அதைச் சேமிக்க வேண்டும். ஆனால் எனக்கு ஒரு பால் போத்தலை 160 ரூபாவுக்கோ, ஒரு மேலதிக குடிபானத்தை 100 ரூபாவுக்கோ, ஒரு அடிப்படைத் தேவை இல்லாத உணவு அல்லது வேறு ஒரு பண்டத்தை 100 ரூபாவுக்கோ வாங்க மனம் இல்லை. ஆயினும் தினமும் 120 ரூபா வரை வீதியோரங்களில் பிச்சை எடுப்பவர்களுக்குக் கொடுக்க நிறைந்த மனம் இருக்கிறது. அது எனக்கு மகிழ்ச்சியையும் கொடுக்கிறது. அவற்றை எல்லாம் சேமித்து அல்லது தவிர்ந்த்து என்னுடைய சின்னச் சின்னச் சந்தோசங்களைப் பூர்த்தி செய்வதில் ஆசை இல்லை.

உலகமே இருண்டிருக்க நான் ஒன்றும் சூரியன் அல்ல; அனைவருக்கும் ஒளி கொடுக்க. என்னிடம் மெழுகுவர்த்திகளே உள்ளன. இப்படியான சூழலில் பளிச்சென்று புத்தாடைகள் அணிந்து சகபாடிகளையோ மக்களையோ மனம் நோக வைத்து, நான் பொது இடங்களில் நடமாட, பொதுப் போக்குவரத்துகளில் பயணம் செய்ய எனக்கு மனம் வரவில்லை. ஒரு கிலோ மீட்டர் என்றாலும் முன்னர் நான் நடந்தது போல, முடியவில்லை என்றாலும் ஒரு ஓட்டோ பிடித்து வீண் செலவு செய்ய மனமில்லை. அது வீண் செலவு அல்ல. என்னுடைய செலவு அவனுக்கு வரவு. அதற்காக நான் சம்போக்களை இறக்குமதி செய்து, அடுத்தவர் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்க நான் சுக போக வாழ்க்கை வாழ முடியாது. இதனால்தான் வெள்ளைக்காரன் சிற்பியில் செய்த சிலைகள், ஓலையில் பின்னிய ஆக்கங்கள், மரத்தில் செதுக்கிய சிலைகளை பல ஆயிரங்கள் கொடுத்து விலைக்கு வாங்குவான் போலும். அவற்றை செய்ய பெரிய மூலதனம் உள்ள பொருட்கள் தேவை இல்லைத்தான். அங்கே அவனுக்கு கொடுப்பதில்தான் கவனம் இருக்கிறது. அவனுடைய செலவு இன்னொருவனை வாழ வைக்கும் என அவன் நன்கு அறிந்திருக்கிறான். ஆனால் எனக்கு அதற்கும் மனமில்லை. சிறுவயதில் ஏழ்மையாக தெருவெல்லாம் திரிந்த அதே சிறுவனாகத்தான் என்னுடைய மனம் இப்போதும் அலை பாய்கிறது.

அதனால் என்னுடைய இஞ்சினியர் என்ற அந்தஸ்திற்கான ஆடை அணிகலன்கள் அணிந்து பட்டையைக் கிளப்பக் கூட எனக்கு மனம் வரவில்லை. எனக்குக் காசு பெரிது அல்ல. அப்படியே நான் அதிகம் சேமித்தாலும் ஒரு போதும் அது என்னை மட்டுமே சாரப் போவதில்லை. என்னைச் சாரப் போவதெல்லாம் நான் அனுபவித்தவை; நான் உடுத்தியது; நான் உண்டது; நான் கழித்தது; நான் சிரித்தது இவை மட்டும்தான். என்னுடைய சேமிப்பெல்லாம் என் குடும்ப செலவு, என் மனைவி மக்கள் செலவு எனத்தான் போகும். அது அன்பின் நிமிர்த்தம். ஆனால் இன்றோ அவர்களும் அது அன்பு அல்ல; கடமை. பிள்ளையைப் பெத்தவன் அதனை வளர்க்க ஆசைப்பட்டே பெறுகிறான். அவர்கட்கு ஆவன செய்வது கடமை. அல்லாது போனால் பெறாமல் போவது நல்லது என்கிற கூற்றும் உண்டு. அப்படி எனில் இலங்கை போன்ற வறிய நாட்டில் யாரும் பிள்ளைகளைப் பெற முடியாது. இங்கே எப்போதும் அன்புதான் வாழும். அனுவிக்காமல் சேர்ப்பவையும் அங்கேதான் செலவாகும். அப்படி இருக்க நான் ஏன் எனக்குத் தேவையான சில மேலதிக செலவுகளைக் கூட செய்ய எனக்கு மனம் இல்லை? எனக்கே அது தெரியவில்லை.

நான் இப்படியாக இருப்பதால் அப்படியான மன நிலையுள்ள ஒருத்திதான் எனக்கு பொருத்தமானவள். அவள் அப்படி இல்லையெனினும் அவள் தன்னுடைய ஆடம்பரச் செலவுகளைச் செய்து கொள்ளட்டும். ஆனால் எனக்கு அப்படியான செலவுகள் செய்வதில் அப்போதும் நாட்டம் இல்லைத்தான். நான் அப்படி இருப்பது அவளுக்கு பிடிக்கவில்லை என்று சொன்னால், அவற்றை என்னிடம் சொன்னால் அவளுக்காக நான் நிச்சயம் அதனை மாற்றிக் கொள்வேன். எதற்கும் எனக்கு ஒரு காரணம் வேண்டும். (நான் யாருக்காக வாழ்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை. யாருக்காக என்ற சிவாஜியின் பாடல்தான் பொருத்தமானது… எல்லாம் என்னால் முடிந்தாலும் யாருக்காக செய்ய வேண்டும்.) ஆனால் என்னுடைய செயல்கள் போக்குகள் இயல்பாக மேற்கண்ட வாறுதான் அமையப் போகிறது. அதனை என்னால் சுயமாக மாற்ற முடியாது. அது என்னுடைய உயிரினில் ஊறிய விடயம். ஆத்மாவில் கலந்த ஒன்று. ஆனால் நான் வெளிநாடு சென்றால் அங்கேயும் இப்படியே நடந்து கொள்ள மாட்டேன். அங்கே எல்லோரும் வாழ்வது போல, ஒரு சராசரி மனிதன் வாழ்வதுபோல என்னை மாற்றிக் கொண்டு வாழ்வேன். அதில் எனக்கு வருத்தம் இல்லை. ஒருவன் உணவுக்கு இல்லை என்னும்போது நான் ஒரு ஐஸ் கிறீம் சாப்பிடக் கூச்சமாக இருக்கிறது.

இங்கே நடக்கும் அரசியல் போல அல்ல என் வாழ்க்கை. ஏழை மக்கள் வாழ்க்கை ஏதோ என்று போக அதற்குப் பொறுப்பானவர்கள், ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்களது வாழ்க்கை பாதிப்படையும் என்பதால் மாற்றங்களைத் தவிர்ப்பதும், தாம் மக்கள் பணத்தில் குடித்து கும்மாளம் போடுவதுதான் இங்கே அரசியல். இதில் இன மத பேதம் எதுவும் கிடையாது. நான் இந்த நாட்டு வரிப்பணத்தில் படித்து வளர்ந்தவன். எனக்கு அதன் நன்றிக்கடன் இன்னமும் கொஞ்சம் இருக்கிறது. அவற்றை எல்லாம் தாண்டி ஒரு அறையைப் பூட்டிக் கொண்டு என்னால் கொண்டாட்டமாக வாழ முடிந்தாலும், அவரகள் அறிகின்ற பொழுது, அவர்கள் கண்ணெதிரே கும்மாளம் போட என்னால் ஒரு போதும் முடியாது. ஒரு வகையில் பார்த்தால் இங்கே சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் எல்லோரும் (நான் உட்பட) ஏனைய ஏழை மக்களுக்கு சேர வேண்டிய ஒன்றைத் தடுத்தோ அல்லது தட்டிப் பறித்தோதான் அப்படி வாழ்கிறோம். அப்படியிருக்க அவர்களின் வாழ்க்கை சற்று உயர்வதைப் பற்றிக் கூடச் சிந்திக்காமல் இருக்க என்னால் முடியவில்லை. என்னால் கொடுத்து உதவ முடியவில்லை என்றாலும் அவர்கள் உழைபாலேயே அவர்கள் வாழ வழிகள் வகுக்க மிகுந்த ஆர்வம் உடையவன் நான். அவை எதுவும் பலனளிக்காது என்று போக அவர்கள் முன் ஜோதிபோல கண் குத்தலாக வாழாது, வெளிநாடு சென்று அங்கே உழைத்து அனைவர் போலும் வாழ நினைக்கிறேன்.

எனக்கு பிறரைப் போல ஒழித்து வாழ்வதில் விருப்பம் இல்லை. வெள்ளைக்காரன் போல வெளிப்படையாக (frankly) வாழ விரும்புகிறேன். Super market சென்றால் அங்கே நான் எதையும் திருட மாட்டேன் என்று எனக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும் அங்கே என்னை நோட்டமிடுபவர்களுக்கு நான் எடுத்த பொருட்களைத் தூக்கிக் காட்டிக் கொண்டே shopping ஐத் தொடர்கின்றேன். அதற்காகவே கூடைகளைக் (shopping baskets) கண்டு பிடித்தார்கள் போலும். நான் இவற்றுக்கெல்லாம் புதியவன். பொது இடங்களில் சத்தமில்லாமல் நடந்து அருகில் வந்து பயமுறுத்த மனமில்லை. இடையூறு இல்லாத #சந்தமுடைய சத்தத்தை எழுப்பிக் கொண்டே ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கின்றேன். ஆரம்பத்தில் பிறருக்கு அது இடையூறாக இருந்தாலும் பின்னாளில் அது நிச்சயம் பழகிவிடும். வழக்கமான செயற்பாடுகளின்போது மிதமான சந்தத்தினால் எந்தப் பாதிப்பும் இல்லை. அவை ஒரு ஊக்குவிப்பாகவும் அறிவிப்புமாகவுமே இருக்கும். இவை யாவும் என்னுடைய பிறவிக் குணங்கள். என் வாழ்க்கை தோறும் நான் அனுபவித்த வாழ்க்கை என்னை செதுக்கியவை. இந்தக் குணம்தான் ஜெசிக்காவின் அந்த செயலை வாழ்த்தி அந்தப் பதிவு போட என்னைத் தூண்டியது. அவன் மீது எனக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் இப்போது அங்கே சொல்லிக் கொள்ள எதுவும் இல்லை. நன்றி

வெளியில் நான் யார் சொல்வதைக் கேட்டும், பிறர் நாடகங்களைப் பார்த்தும் ஏமாந்து பலருடன் வன்மமாக நடந்து கொண்டிருக்கலாம். மதி மயங்கி மாயைகளில் சிக்கி பிழையான முடிவுகளை எடுத்திருக்கலாம். ஆனாலும் என்னுக்கு உள்ளே (உள்ளம்) எப்போதும் (கடவுளைப் போல) தூய்மையாகத்தான் இருக்கிறது. அதில் சிறிதும் களங்கம் இல்லை. ஆகையால் அங்கே எல்லாம் சரியாகத்தான் நடக்கும். அதில் யாரும் ஐயம், பயம் கொள்ளத் தேவை இல்லை. சங்கு சுட்டாலும் வெண்மை தரும். இப்போ வெள்ளை அல்லாதவர்கள் என்னைச் சுட நினைக்கக் கூடாது. அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள் 🙏. இவை குறித்து வெள்ளைக் காரனுக்கு நன்றாகத் தெரியும். அவனுக்கு நேர்மையும் இரக்கமும் நன்றாகத் தெரிந்த உணர்வுகள். அவனுடன் பழகுகிறவர்களுக்கு அவன் எப்போதும் விசுவாசமானவன் (Diplomatic acts aside). சிறந்தவர்களைப் பார்த்து நானும் கற்றுக் கொள்கிறேன். இங்கே துன்பத்தை விதைப்பவர்களுக்கு இயேசுவை சிலுவையில் அறைகின்ற காட்சியைக் திரும்ப திரும்ப காட்டி ஈவு இரக்கம் வரவைக்க வேண்டும். நெற்றிக் கண்ணுடன் இருக்கும் சிவனைப் பார்த்தது போதும்.
#உருகும் இதயம்தான் இந்த உலகினில் சொர்க்கம்.

Sunday, May 8, 2022

தூசன விசிலும் மாயா மாயா வித்தையும்

நாம் ஒருவரின் முகத்தினை, அவரின் அங்க அடையாளங்களினைக் கொண்டு இனம் காண்கிறோம். அப்படி இனம் காண உதவும் அங்க அடையாளங்கள், ஒருவருக்கொருவர் மாறுபடுகிறது. உதாரணமாக கண், காது, மூக்கு, இமை, மரு, மேடு பள்ளம், நிறம், முடி, நெற்றி, வாய், கன்னக்குளி எனப் பல அடையாளங்கள் உண்டு. ஒவ்வொருவரும் இவற்றில் சிலவற்றைக் கொண்டு ஒருவரை இனம் காண்பர்.

அவை ஒருவரின் பிறப்பிலிருந்தான அனுபவங்கள் சம்பந்தப்பட்டது. அதனைப் பிறர் அறிந்து கொள்வது அரிது. ஒருவரை ஆழ்ந்த நித்திரைக்குக் கொண்டு போய் பல புகைப்படங்களைக் காட்டினால் அவர் எந்தெந்த முகங்களை ஒரே மாதிரியாக இருக்கிறது என்று சொல்கிறாரோ;
அல்லது யார் யாரைப் பார்த்து “அவர்கள் ஒருவர் போல இருக்கிறார்” என்று சொல்கிறாரோ...
அவற்றுக்கு இடையிலான ஒற்றுமையைக் கொண்டு அவர் எந்தெந்த அடையாளங்களைக் கொண்டு ஒருவரை இனம் காண்கிறார் என்பதை அறிந்து கொள்ளலாம். அப்படியாக ஒருவரின் இனம் காணும் முறையை Frame செய்து கொள்ளலாம்.

பிறகு அவருக்கு அது போல ஒத்த அங்க அடையாளங்களை உடையவர்களைக் காட்டினால் அவர் ஒரே ஆள் என்று இனம் காண்பார். குறைந்தது அவற்றில் தனக்குத் தெரிந்த நபரை அவர் நினைத்துக் கொள்வார். இப்படியான குழப்பங்களால் ஒருவர் குழம்பி தன்னுடைய நண்பருக்கோ அல்லது கூட இருப்பவர் ஒருவருக்கோ அவர்களைக் காட்டி பார்த்தாயா அவரை போல் உள்ளது. இவரைப் போல் உள்ளது என்று சொன்னால் அவர்கள், ”போடா பேயா உனக்கு விசர்” என்பார்கள். ஏன் என்றால் அவர்களுக்கு அந்த முகங்கள் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். அவர்களுக்கு வேறு ஒருவர் போல் இருக்கும்.

இது போலத்தான் தூசன விசில்கள். அதென்னடா அது தூசன விசில்கள். Black Market அல்லது Dark Net இல் விற்கப்படுகிறதா? ஆம், ஒவ்வொருவரின் பெயரிலும் விற்கப்படுகிறது. அதனை வாங்கி ஊதினால் அந்தப் பெயரை உடையவருக்குத் தூசனம் கேட்கும். #இல்லை, சும்மா காமெடிக்கு சொன்னேன்.

இதுவும் முகங்களை இனம் காண்பது போன்ற குழப்பம்தான். நாம் சொற்களை தொனி (Phonemes) களைக் கொண்டே இனம் காண்கிறார்கள். அந்த வேலையை மூளை தானே செய்யும். அதற்கான அனுபவம் அதற்கு முதல் எல்லாம் அந்த சொற்களைக் கேட்பதிலிருந்தானது. அதுவும் ஒருவருக்கு ஒருவர் வேறுபடும்.

இதனை மாற்றி தூசனச் சொற்களிற்கு இயற்கையான ஓசைகளான காற்றின் ஓசையையோ, தண்ணீர் சிந்தும் ஓசையையோ பதிந்து விடலாம். அது எப்படி செய்யப்படுகிறது என்பது குறித்து இன்னும் தெளிவில்லை.
ஒரு வேளை மீயொலி (Super Sonic) மூலம் காற்று வீசும்போது போடப்படுகிறதோ
அல்லது தூசனச் சொற்களை வேறு காற்று வீசும் ஓசை போன்ற வற்றுடன் ஒன்றாக ஒலிப்பதிவு செய்து இரவில் போடப்படுகிறதோ
அல்லது நாம் கேட்கும் பாடல் கருவிகளில் பாடலுடன் பதியப்படுகிறதோ அல்லது பழக்கப்படும்வரை live இலேயே ஒரே சொற்களுடன் போடப்படுகிறதா தெரியவில்லை. இப்படியாக ஒரு சொல்லை கேட்கும்போது இன்னொரு சொல்லாகக் கேட்கும் குழப்பத்தை ஒருவருக்கு ஏற்படுத்தி விடலாம்.

இதன் பிறகு அவர் சாதரண கலந்துரையாடல்களில் ஈடுபடும்போது அந்த விசிலை ஊதினால் அந்த குறித்த நபருக்கு மட்டும், எதிரில் உள்ள நபர் உரைத்த  வார்த்தை தூசனமாகக் கேட்கும். அந்தக் குறித்த நபர் எதிரில் உள்ளவர் தன்னை பேச்சோடு பேச்சாக தூசனத்தில் திட்டுவதாக நினைத்து அவரைப் பகைத்துக் கொள்வார். தானே தனித்து தானாக அனைவரிடத்தும் இருந்து விலகித் தானாக வீணாகிப் போவார். அது மட்டுமல்ல இப்போதெல்லாம் சிலர் அது ஒரு வித்தை என நினைத்து தாமும் பேச்சோடு பேச்சாக ஏனையோரையும் காயப்பட்டுத்துகின்றனர்.

தீயவற்றை விதைத்தால் தீயவைதானே முளைக்கும். பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும். இவை எல்லாம் திட்டமிட்டு சமுதாயத்தில் விதைக்கப்படும் விச விதைகள். Competition இல் போட்டியாளர்கள் குறைந்தால் பங்கு பற்றுபவருக்கு வெற்றி எளிதில் கிட்டும். அதுபோல ஒரு பந்தியில் பங்கிடப்படும்போது ஒருவர் குறைந்தால் ஏனையோரது பங்கின் அளவு அதிகரிக்கும்.
அதனால Never give up. Keep trying. Keep moving. Keep looking. அடுத்து Long LiveHappy LifeMerit ஊ.

நன்றி வணக்கம் !

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...