Saturday, February 29, 2020

தினமும் உணவில் மிளகு ஏன் அவசியம் : மிளகு மருத்துவ குணங்கள்

ஆரோக்கியமான உணவு சமைத்தலுக்கு சில மசாலாப் பொருட்கள் சேர்க்கப்பட வேண்டியது அவசியம். அவற்றுள் மிளகும் ஒன்று.  ஆனால் இன்று உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகள் எதிலும் மிளகு சேர்க்கப்படுவது இல்லை. மிளகானது ரசம், சாம்பார், புளிக்குழம்பு போன்ற உணவுகளில் சேர்க்கப்படுகிறது.  மாசாலாப் பொருட்களின் பயன்பாட்டில் மிளகு 50% பங்கு வகிக்கிறது. பண்டைய காலத்தில் மிளகின் பெறுமதி காரணமாக அது பணத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டிருகிறது.

இதில் சாதாரண மிளகு, வால் மிளகு என இரு வகைகள் உண்டு. சாதாரண மிளகுதான் அதிகம் பயன்பாட்டில் உள்ளது. பதப்படுத்தப்பட்ட தன்மையின் அடிப்படையில் கரு மிளகு, வெண் மிளகு, சிவப்பு மிளகு, பச்சை மிளகு என மேலும் வகை பிரிப்பர். விசங்களை முறிப்பதற்கு மிளகு பயன்படும். தேள், திருநீலகண்டம், சில வகையான பாம்புகளின் விசத்தைக்கூட மிளகு முறிக்கும் தன்மை கொண்டது.

”பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.” என்பது பழமொழி. உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை நீக்கி உடலுக்குக் குளிர்மை அளிப்பதில் மிளகுக்கு நிகர் எதுவுமில்லை. மிளகு உணவிற்குக் காரம் சேர்க்கும் வாசனைப் பொருளாகச் சேர்க்கப்படுகிறது. ஆனால் அதன் நோக்கம் அது மட்டுமல்ல. மிளகைச் சாப்பிடும் போது அது நாக்கில் உறைக்கவில்லை எனில் உங்கள் உடலில் நச்சுத்தன்மை உண்டு என்றே பொருள். நச்சுத்தன்மையை மட்டுமல்ல உடலிலுள்ள கிருமிகளையும் அழிப்பதோடு தொற்றுநோய்கள் ஏற்படுவதையும் தடுக்கும்.

உட்கொள்ளும் முறை: குறைந்தது கிழமைக்குப் 10 மிளகு மென்று தண்ணீர் குடித்தாலே, கீழே கூறப்பட்ட நோய்களிலிருந்து விடுபட்டு அரோகியமாக வாழலாம். இல்லையெனில் அன்றாடம் சமையலில் சேர்த்தும் கொள்ளலாம். உணவகங்களில் கிடைக்கும் கிழங்கு ரொட்டிகளிலும் காரத்திற்காக இது சேர்க்கபட்டிருப்பதை அவதானிக்க முடியும்.

அவதானம்: அதிக வெப்பமான காலத்தில் இதைப் பாவிப்பதைத் தவிர்க்க வேண்டும். சிறுகுழந்தைகள், வயிற்றுப்புண் உள்ளவர்களும் இதைப் பாவிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

1. வாய்வுக் கோளாறு
இன்று கடையுணவுகள் எதிலும் மிளகு சேர்க்கப்படாமையால் வாய்வுக் கோளாறு என்பது நகரப்புறத்தில் மலிந்து காணப்படுகிறது. இது காலப்போக்கில் குடற்புண், மூட்டு வலி, நெஞ்செரிவு போன்ற மேலும் பல நோய்களைத் துணைக்கு வரவளைக்கிறது. மிளகை அடிக்கடி உண்டு வருபவர்களுக்கு வாயு கோளாறுகள் நீங்கும்.

2. சளி இருமல்
சாதாரண நெஞ்சுச்சளி ஜலதோஷம், நுரையீரல் உட்பட ஆஸ்துமாவைக் கூடக் குணப்படுத்தும் ஆற்றல் மிளகிற்கு உண்டு. அதோடு செரிமானக் கோளாறுகளை மிளகு சரி செய்வதால் அது போன்ற நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது.
மிளகைத் தூளாக்கி, தேன்/ பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டைக்கட்டு, குரல் அடைப்பு மற்றும் இருமல் நிற்கும். 10 துளசி இலைகள், 5 மிளகை 200 ml தண்ணீரில் கொதிக்க வைத்துக் குடித்து வந்தால் நெஞ்சுச் சளி நீங்கும்.

3. புற்று நோய்
இன்றைய அவசர உலகில் உடலுக்கு ஆரோக்கியமில்லாத உடன் உணவுகளைச் சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படும் நிகழ்தகவு அதிகரிக்கிறது. மிளகிற்கு புற்றுநோய் ஏற்படுவதைத் தடுத்து அதைக் குணப்படுத்தும் ஆற்றல் உண்டு.

4. இரத்த அழுத்தம்
இப்போதெல்லாம் குறித்த வயதைக் கடந்தவுடனேயே அநேகருக்கு இரத்த அழுத்தம் வந்து தொற்றிக் கொள்கிறது. மிளகு ரத்த அழுத்தத்தை சீராகப் பேண உதவுகிறது.

5. பல் நோய்கள்
பற்களை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் பேணுவதற்கு மிளகு பயன்படும்.  மிளகு பற்களில் ஏற்படும் கிருமித் தொற்றுக்களை நீக்கி ஈறுகளின் ஏற்படும் பல்சொத்தையைப் போக்குகிறது.
பல்வலி, சொத்தைப்பல், ஈறுகளில் ரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் மிளகுத்தூளும் உப்புத்தூளும் சேர்த்துப் பல் துலக்கி வந்தால் அனைத்தும் குணமாகும்.

6. மலட்டுத்தன்மை
மிளகு உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை நீக்கி உடலினைக் குளிர்மையாகப் பேணுவதால் விதைப்பையில் அதிக விந்தணுக்கள் தக்க வைக்க உதவுகிறது. இவ்வாறு அது மலட்டுத் தன்மையை நீக்க வல்லது.

7. தோல் நோய்கள்
இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் ஆற்றல் மிளகிற்கு உண்டு. எனவே இது தோலில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி இளமையைத் தர வல்லது. தோலில் ஏற்படும் நிறமாற்றங்களையும் குணப்படுத்த மிளகு பயன்படும்.

8. பொடுகு
பொடுகு என்பதும் தோல் நோய்களுள் ஒன்றே. உடல் சூட்டினாலும் கிருமித் தொற்றினாலுமே பொடுகு ஏற்படுகிறது. மிளகின் நற்குணங்கள் இதனையும் குணப்படுத்த உதவும்.

9. போதை பழக்கம்
சிகரெட், பீடி, புகையிலை போதை பழக்கங்களிற்கு அடிமையாகி இருந்தால், அதிலிருந்து விடுபட அவற்றை பயன்படுத்தத் தோன்றும் வேளைகளில் மிளகை உட்கொண்டு வந்தால் அது போன்ற தீய பழக்கங்களிலிருந்து விடுபடலாம் .

Monday, February 24, 2020

அக்கினிக்குஞ்சு - தழல் வீரத்தில் குஞ்சென்றும் உண்டென்றும் உண்டோ! எண்ணமே உயர்ந்தது. எண்ணம் போல வாழ்க்கை

இன்று ஓமந்தையில் பேரூந்து ஒன்றும் மகிழுந்து ஒன்றும் மோதியது. பின்னர் யாரோ இரண்டையும் கொழுத்திவிட்டார்களாம். கொழுத்தியது வெறும் 18 வயது சிறுவர்கள் என்று ஒரு நண்பன் ஏளனமாகக் கூறினான். நான் கூறினேன்; சிறு குழந்தை கொழுத்தினாலும் பற்றும், இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது. கொழுத்தப்பட்ட தகவல் உண்மையானது அல்ல.

இங்கே வாழ்க்கைக்கான மிகப்பெரும் படிப்பினை ஒன்று ஒழிந்திருக்கிறது. தீயை மூட்டுவது வலியதல்ல; தீயூட்ட அவன் மனதில் தோன்றிய அந்த குரோத எண்ணம் தான் வலியது. நீங்கள் எத்தனை பாடுபட்டு முன்னேறினாலும், சிகரம் தொட்டாலும், மாளிகைகள் பல கட்டினாலும், எல்லாம் ஒரு கணத்தில் கூடச் சுக்கு நூறாகலாம். இதற்குப் பெரிதாய் எதுவும் நிகழத் தேவை இல்லை. தீவிரவாதிகள் அல்லது ஒரு படை தேவை என்று இல்லை. யாராவது ஒருவரது மனதில், எவராவது ஒருவரது மனதில் உங்களுக்கு எதிராகக் குரோத எண்ணம் ஒன்று அழுத்தமாகத் தோன்றி விட்டால்ப் போதும். இது போன்ற உங்கள் மீதான குரோத எண்ணங்கள் யாருடைய மனதிலும் தோன்றாமல் இவ்வுலகில் வாழ்வது ஒரு கலை. அதற்கு அன்பு மட்டுமே ஒரே வழி. அவர்கள் துன்பம் தந்தாலும் அன்பு செலுத்த வேண்டும். குறைந்தது அவ்விடர்களைத் தாங்கிக் கொண்டு விலகிச் செல்ல வேண்டும். "அடப் போடாங் கொய்யால. நான் பாட்டுக்கு என் வேலையப் பார்த்துட்டுப் போனாலும் தேடியே வந்து கரைச்சல் தாரான். அன்பு செலுத்தச் சொல்லுற" என்று நீங்கள் மனதுக்குள் கொந்தளிப்பது புரிகிறது." அப்ப நீ பண்ணித்தான் பாரேன். நீயாப் புரொஞ்சுக்குவ." என்பது என்னுடன் அதிகம் வாதிடும் அனைவருக்கும் நான் கூறும் பதில். அப்படியே கொந்தளித்தாலும், அது உன்னைத் தான் பலவீனப்படுத்தும்; எதையுமே மாற்றி விடாது.

எத்தனை திருத்தமாக அழுத்தமாக நீ விடயங்களைக் கற்கிறாயோ அவை அத்தனை காலம் ஞாபகம் இருக்கும். நீ என்று உன்னை உணர்வது உன்னை அல்ல. உனது எண்ணக் கோர்வையை; அதன் ஊற்றை. அவை எப்படி உனக்குள் வந்தன. வாழ்க்கை உன்னை அடித்து அடித்து உதைத்து உதைத்து அவற்றை உன்னுள் திணித்தன. அங்கேயும் அழுத்தம் எத்தனையோ செல்வாக்குச் செலுத்தி இருக்கிறது. இந்த எண்ணங்களைக் குழப்பித் தனது எண்ணங்களை விதைத்துச் சித்துவித்தை புரிவது ஒரு கலை. இதனைக் கொண்டு பல மனிதர்கள் இன்னும் இங்கு ஆட்டி வைக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் எளிதில் உங்களை மாற்றிக் கொள்ளாவிடில் அது சாத்தியமல்ல. கேட்டுக்கொள்ளுங்கள், "நீங்கள் நீங்களாகவே இருங்கள்." இப்போது புரிகிறதா? மந்திரங்களின் மகிமை. ஆனால் சமஸ்கிருதத்தில் அல்ல மூடர்களே!

உணர்ச்சிவயப்படும் போது நீ கூறும் அத்தனை வார்த்தைகளும் மிகவும் அழுத்தமாகக் கூறப்படுவதுடன் அவை உனது மூளையில் ஆணித்தரமாகப் பதிந்து கொள்ளும். அதன் பிறகு நீ எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் அதன் சாரம் வந்து ஒட்டிக் கொள்ளும். அதற்குரிய செயலை நீ ஆற்றாதவிடத்து உன்னுள்ளேயே இருந்து உன்னைக் கொல்ல ஆரம்பிக்கும். நீங்கள் உணர்ச்சிவயப்படும் போது கொள்ளும் அழுத்தம் மிகவும் வலிமையானது. அவை மின்சாரமாக உங்கள் மூளையில் தோன்றி ஓட ஆரம்பிக்கும். சிதறும் இலத்திரன்கள் அருகிலுள்ளவற்றை எரித்துக் கரியாக்குவதைப் போல, அவை நெறிப்படுத்தப் படாதவிடத்து, "நீங்கள்" என்று நீங்கள் உணரும் உங்களையே எரித்துச் சாம்பலாக்கிவிடும். அவதானமாக இருங்கள்.

எப்போதும் கோபம் போன்ற மறை அதிர்வுகள் எமக்கு இழப்பையே ஈற்றில் ஈட்டித் தரும். அன்பு, சாந்தம், புன்னகை, மகிழ்ச்சி போன்ற நேர் அதிர்வுகள் எமக்கும் எம்மைச் சார்ந்தோருக்கும் நன்மை பயக்கும். மறை அதிர்வுகளை உருவாக்குவதில் நான் கூடத்தான் ராஜா. ஆனால் நான் ஒரு போதும் அதை நினைத்ததேயில்லை. நான் கடவுளுக்காகப் பிறந்தவன். சாத்தான் களுக்காக அல்ல. அதோடு அவை என்னையும் பாதிக்கும் என்பதை அண்மையில் உணர்ந்து கொண்டேன். சிலர் செயல்கள் நமக்குப் பிடிக்கவில்லை அல்லது தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றாலும் கூட அன்பான புன்னகை செய்வதே என்றும் அதன் விளைவைக் குறைக்கும்.

அதுவும் இலங்கையில எங்கே போய்த் தேடுவது. மக்களோடு மக்களாக நின்று கூத்தாடுவார்கள். இலங்கை வளர்ச்சியடைஞ்சிட்டாலும்...

Monday, February 17, 2020

பாவம் என்றால் என்ன? நண்பனுடன் கலந்துரையாடல்

என் நண்பன் ஒருவன் என்னிடம் 'beef' கொத்து சாப்பிட்டு இருக்கிறாயா என்று சொல்லிக் கொண்டே தனது மதியச் சாப்பாட்டு முடிச்சை அவிழ்த்தான். நான் "இல்லையடா, நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை. பசுவைக் கொல்லுதல் பாவம்." என்றேன். பாவம் என்றால் என்ன? தனக்குத் தெரியாது. வரவிலக்கணம் கூறு என்று நக்கலாகக் கூறினான். நானோ இன்னொருவரோ இன்னொரு உயிரோ வருந்தும்படியாக நாம் என்ன செய்தாலும் அது தான் பாவம் என்றேன்." அதற்காகப் பாவம் என்றால் கருட புராணத்தில் கூறியது போல தண்டனைகள் எல்லாம் கிடைக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. விளங்கவில்லை. அதில் என்ன பாவம் என்றான். அதனால் எனக்கு எதுவும் ஆகாது என்றால் பிறகு பாவம் பற்றி ஏன் கவலை கொள்ள வேண்டும் என்றான்.

நீ இப்போது சாப்பிடுகிறாய். இன்னொரு உயிர், ஐயோ எனக்குச் தராமல் சாப்பிடுகிறானே என்று வருந்தினால் அது உனக்குப் பாவம் ஆகும் என்றேன். என்னதான் பாவத்தால் எதுவும் விளையாது எனினும், ஜீவகாருண்யம் என்று ஒன்று இருக்கின்றதல்லவா? நமக்கும் மனச்சாட்சி என்று ஒன்று இருக்கின்றதல்லவா? அதெப்படி நான் உழைக்கிறேன்; என் சாப்பாடு. சாப்பிடுகிறேன். இதில் அவனுக்கு நான் ஏன் தரவேண்டும். இதில் என்ன பாவம் என்றான்.

ஆம், கடினப்பட்டுத் தான் உழைக்கிறார்கள். இந்தப் பூமியில் நாம் அனைவரும் தோன்றினோம். வளங்களும் இயற்கையாகவே தோன்றின. அதில் அனைவருக்கும் சம உரிமை உண்டு. ஆனால், உழைப்பதாகச் சொல்பவர்கள் செய்வது என்ன. ஒரு நிலப்பரப்பைத் தமது வயல் எனப் பிடித்து வைத்துக் கொள்கிறார்கள். அதில் தமது உழைப்பைச் செய்தோ, வேலையாட்கள் வைத்தோ விவசாயத்திற்கு அதை ஏதுவாக மாற்றி அதில் விதைகளை விதைக்கிறார்கள். அதில் சூரிய ஒளி விழுகிறது. இப்புவியெங்கும் விழும் வெயிலில் அனைவருக்கும் தானே பங்கு உண்டு. அதன் துணை கொண்டு நெல் விளைகிறது. அதை விற்றுப் பணம் எடுத்துக் கொண்டு தமது உழைப்பு என்கிறார்கள். அதை வாங்கியவர்கள் அதைச் சமைத்து விற்கிறார்கள். இது போல ஏதோ ஒரு வகையில் அனைவருக்கும் சொந்தமானதை நீ ஏமாற்றி உனதாக்கிக் கொண்டு சம்பாதித்த பணத்தைக் கொண்டு நீ வாங்கிய உணவு இது. இதில் அனைவருக்கும் பங்கு உண்டு.

இந்த உணவு கிடைக்காமல் ஒரு உயிரோ, ஜீவனோ எங்கோ ஒரு மூலையில் ஏங்கினால் அது உனக்குப் பாவம் தான் என்றேன். ஆனால் எங்கோ உணவின்றித் துன்பப்படும் அனைத்து ஜீவன்களையும் உன்னால் கவனிக்கவோ அவற்றுக்குப் பசியாற்றவோ முடியாது. அதோடு அப்படி செய்யின், உன் கடமையையும் செய்ய முடியாது போய்விடும். எனவே "உன்னால் முடிந்த அளவுக்குக் அனைவருக்கும் கொடுத்துப் பகிர்ந்து உண்ண வேண்டும்" என்றேன். இதுதான் கடவுளுக்கும் மகிழ்ச்சி தரும். அவரின் படைப்பின் நோக்கமும் அதுவே என்றேன். கடவுளும் இதுவும் என்று சீறினான்... அப்படி ஏன் நான் செய்ய வேண்டும், என் உழைப்பில் நான் ஏன் தர வேண்டும். நான் என் உடல் உழைப்பால் பெற்றது அவை. இயேசு கூட உதவி என்று கேட்டு வந்தவர்க்கு தூண்டில் தான் கொடுத்தார். உழைத்துத்தான் இந்த உடலை ஜீவனம் செய்ய வேண்டும் என்று அவர் கூறியதாகச் சொன்னான்.

ஆம், நீ உழைத்தாய். உனக்கு அதற்கான சக்தி எப்படி வந்தது? நீ சாப்பிட்டாய். சாப்பாடு எப்படி வந்தது. அது அனைவருக்கும் சொந்தமானது, என்று கேட்க மறுடியும் அது உடல் உழைப்பு என ஆரம்பித்து விட்டான். நீ உன் உடலை உண்ட உணவினாலேயே பெற்றாய். இந்த உடல் உன் பிறப்பிற்கு முன், நீ உன் அம்மாவின் கருவில் தோன்ற முன் இருந்திருக்கவில்லை. ஆம், அது என் அம்மா, அப்பா உழைப்பு என மீண்டும்... ஹா... நீ ஒன்றும் இல்லாதவன். நீ இந்த உலகில் உதிக்க முன்னும் இந்த உடல் உன்னிடம் இல்லை. நீ மரித்த பின்னும் எரித்தாலோ புதைத்தாலோ எப்படியோ அந்த உடல் இந்தப் பூமியில் இடண்டறக்க கலந்துவிடும். ஏன் நீ இறந்த உடனேயே அது நீ சொல்வதைக் கேட்காது. அது உனக்குச் சொந்தமும் ஆகாது. நீ எதை எடுத்துக் கொண்டாயோ அது இங்கேயே எடுக்கப்பட்டது என்றேன்.

இது போலத்தான் எல்லாம். பிறக்கிறோம், உழைக்கிறோம் அது கொண்டு அனுபவிக்கிறோம் இது தானே கால ஓட்டத்தில் எழுதப்படாத விதி. அப்படி எனில் உழைப்பது எல்லாம் வீண்தானா என்று கேட்டான். இல்லை, இந்த உழைப்பின் ஒன்று மட்டும் உண்மை என்றேன். உழைப்பின்போது நீ அனுபவித்த வலியும் மன உழைச்சலும் மட்டும் உனக்குச் சொந்தமானது. அதற்கான உரிமை உனக்கு உண்டு. ஆனால், "நீ நன்றாக உண்டு; தேக, மன அரோக்கியமாக இருந்து அந்த வலிகள் இல்லாமல் அந்த உழைப்பினைச் செய்திருக்க முடியும்” என்று கூறி முடித்துக் கொண்டேன்.

Sunday, February 16, 2020

கடவுள் யார்? அவர் எங்கே இருக்கிறார்? மதங்களில், சமயங்களில் சிறந்தது எது?

உலகிலே பல மதங்கள், சமயங்கள் உள்ளன. அவை பல்வேறு கடவுள்களைப் போற்றுகின்றன. எதிலும் ஒன்றில் ஒன்று சிறப்புக் குறைந்ததாயில்லை. அல்லா என்றாலும் இயேசு என்றாலும் சிவன் என்றாலும் புத்தர் என்றாலும் ஒரே பரவசமே உண்டாகிறது. இலங்கையில் நாலு மதங்கள்தான். ஆனால் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கில் உண்டு. பெயரிடப்படாமல் மேலும் பல உண்டு. அனைத்து மதங்களும் தர்மத்தையே போதிக்கின்றன. எம்மை ஆட்டி வைக்கும் சக்தி ஒன்று உண்டு என்றே சொல்கின்றன. ஆனால் மனித சக்தியை விஞ்சி அவை நேரடியாக உதவிட முடிவதில்லை. நான் ஒருநாள் அப்பாவிடம் "கடவுள் என்பது பொய்யா? எல்லாம் செப்படி வித்தையா?" எனக் கேட்டபோது, அப்பா பின்வருமாறு சொன்னார்.

"நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே,
சுற்றி வந்து முணு, முணுக்கும் மந்திரங்கள் ஏதடா!
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ!
நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்..!"
-சித்தர் சிவவாக்கியம்.

கல்லொன்றை வைத்து, அதற்குப் பூக்கள் வைத்து, அதைச் சுற்றி வந்து, மந்திரங்கள் முணு முணுத்து என்ன பயன். அந்த நட்ட கல்லும் பேசுமா? நாதன் நம்முள்ளேயே இருக்கிறார் என்பதைக் காட்டுமா? சட்டியில் வைத்து சுட்டு சமைத்த கறியின் சுவையை அந்தச் சட்டி, சட்டுவம் தருமா? இவை எல்லாம் முதற்படிகள். உண்மை நிலையை நமக்கு அறிவிக்க நாம் கைக் கொள்ளும் கீழ் நிலை செய்கைகள். நாதனாகிய ஈசன் நம்முள் இருக்கிறார். இதனை நாம் ஈற்றில் பக்தி மேலோங்கும் போது உணர்ந்து கொள்வோம். மெய்ப்பொருள் ஒன்று தான். ஞான ஒளி ஒன்று தான் மெய்ப்பொருள்.  ஏனைய அனைத்தும்  நம்மை அதை நோக்கி இட்டுச் செல்ல செய்யப்பட்ட ஏற்பாடுகளே!
என்றார்.

நாம் நினைப்பதையே நமது உடல் செய்கிறது. ஆனால் தனது அறிவிற்கு எட்டினாற் போல அவை மாறுபடும். ஒவ்வொரு தசையும் நமது எண்ணங்களுக்கே கட்டுப்பட்டவை. இது எந்த அளவிற்கு ஆழமானது என்றால் அதனை உங்களால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது. நமது எண்ணங்களே நமது  வாழ்க்கை எப்படி அமையப் போகிறது என்பதைக் தீர்மானிக்கின்றன. இதனையே "எண்ணம்போல வாழ்க்கை" என்பர். விவேகானந்தர் கூட "நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுகிறாய்" என்றார். ஆக, நமது சிந்தை எதை நோக்கி இருக்கிறதோ அதில் புலமைத்துவம் அடையும். அதில் வெற்றியும் காணும். அதோடு, எந்த அளவிற்கு அதிலேயே வேரூன்றி இருக்கிறது என்பதிலேயே வெற்றியின் அளவு தங்கியுள்ளது. இப்படிப் பல மதங்கள் பல சிறப்புகளோடு இருக்க, எது சிறந்த மதம்? எதை நான் பின்பற்றுவது? என்ற குழப்பங்களே தேவை இல்லை. எல்லா மதங்களினதும் நோக்கங்கள், கருணை, பக்தி, அன்பு, மகிழ்சி, தர்மம் போன்றனவே.

எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான். அவன் ரஜினிகாந்தின் தீவிர விசிறி. அவருடைய படங்கள், பாடல்களைக் கேட்கும்போது தனக்கு உள்ளே பட்டாம்பூச்சிகள் பறப்பதாகச் சொன்னான். தனக்குள் ஒரு உத்வேகம், சக்தி உருவாகிறது என்றான். நான் சொன்னேன், இந்த அன்பு என்ற உறவு தான் ஒருவனுக்கு நம்பிக்கை அளித்து அவனை உயர்த்துகிறது. இதே உறவுதான் கவுளுக்கும் பக்தனுக்குமான உறவு. இன்னொரு இடத்தில் அம்மாவுக்கும் பிள்ளைக்குமான உறவு. பிறிதொரு இடத்தில் காதலனுக்கும் காதலிக்குமான உறவு. அனைத்து சமயங்களும் இதனையே எதிர்பார்க்கின்றன. கருணை செய்தல், மனமுருகுதல் போன்றவற்றையே மதங்கள் வேண்டி நிற்கின்றன. இவை இதற்காக இசை, நடனம் போன்ற கலைகளைப் பயன்படுத்துகின்றன. அவை நம்மில் ஒரு எழுச்சியை ஏற்படுத்துகிறது. நமது மனதில் ஒரு தீயை ஏற்றுகின்றன. நமது இலசியத்தை நோக்கி நம்மை இலகுவாக இட்டுச் செல்கின்றன. நீ ஒரு மதத்தையும் பின்பற்றாவிடினும் இது போன்ற நற்குணங்கள் உன்னை உயர்த்தும் சக்தி படைத்தவை. ஏன் நீ ரஜினி என்னும்போது கூட அதே பரவசம் ஏற்படக்கூடும். ஆனால் உன் உழைப்பு வேண்டும். பிள்ளையார் வந்து காரைக்காலம்மையை கையிலைக்குத் தூக்கி விட்டது போல உன்னை யாரும் தூக்கி விடப்போவது இல்லை. ஆனால் பக்தி செய்வதில் நீ அத்தனை தேர்ச்சியுற்றால் அதுவும் சாத்தியமே!

ஆரோக்கியமான வாழ்விற்கு மஞ்சள்

சாதாரண கறிமஞ்சளில் இருவிரலால் கிள்ளி எடுக்கும் சொற்ப அளவு பொன்பால் தயாரிக்கப் போதுமானது.

முட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், கரி மஞ்சள், நாக மஞ்சள், காஞ்சி ரத்தின மஞ்சள், குரங்கு மஞ்சள், குட மஞ்சள், காட்டு மஞ்சள், பலா  மஞ்சள், மர மஞ்சள், ஆலப்புழை மஞ்சள் என்று மஞ்சளிலேயே பல வகைகள் உண்டு.

Friday, February 14, 2020

கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்

அது போல ஒலியியல் மின்சுற்றில் ஒலிபெருக்கி மின்வாய் உள்ள ஒருங்கிணைந்த மின்சுற்றுத் துண்டம் கூட, ஒலிபெருக்கி இணைக்கப்படா விட்டாலும் பாடலைப் பாடிக் கொண்டு தான் இருக்கும்.

இது போலவே எமது உடலிலும் மூக்கு மசிறும், நுரையீரல் பிசிறும், செவிப்பறையும் எனப் பல பாகங்கள் பேசும் வல்லமை படைத்தவை. நாம் நினைப்பவற்றை உச்சரிக்காவிடினும் நமது மனம் அதைக் கேட்க முடிகிறது. இந்த விளைவிலிருந்து தப்பவே பாடகர்கள் செவிப்பன்னியை அணிகின்றனர். நாம்  ஒன்றை நினைக்கையில், அதைப் பேசாவிடினும் எமது உடலில் மூச்சு வீதத்திலும் இரத்தத்தில் அமுக்கத்திலும் மாறுபாடு ஏற்படும். அதிலுள்ள நெருங்கங்களை நாம் பேசிய போதான ஒலி நெருக்கங்களுடன் ஒப்பிட்டு, நாம் நினைப்பவற்றை நம்மைப் பற்றிய தகவல்களை ஆராய்வதன் மூலம் ஊகிக்க முடியும். இன்னும் மேலாக நாம் வேகத்தை மாற்றிச் சிந்தித்தாலும் அதிலுள்ள நெருக்கல்களுக்கு இடையிலான விகிதங்களை ஒப்பிட்டு ஊகித்துக் கொள்ள முடியும். இன்னும் மேலாக அந்த அமுக்க அளவின் தீவிரத்தின் மூலம் நமது உணர்ச்சியைப் புரிந்து கொண்டு நாம் நினைப்பவற்றை இன்னும் திருத்தமாக ஊகித்து அறிந்து கொள்ள முடியும். இவற்றை ஓசை, காட்சி மூலம் உங்களுக்கு வெளிப்படுத்த நீங்க அதற்குச் செய்யும் எதிர்வினையைக் கொண்டு அதை உறுதியும் செய்து கொள்ள முடியும்.
"தானாடா விடினும் தசை ஆடும்."

அப்பறம் இந்த என்னைப் போன்ற குரல்? இது தொழில்நுட்ப யுகம் செல்லம்.
இது எப்பிடி இருக்கு...

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...