Monday, May 17, 2021

Why Type A and B like electrical outlet is better than the G?

Type A and B electrical socket standards are designed by US which has so many benefits. Some of them are listed as follows,

1. Environmental friendly
2. Easy and efficient production of perfect outlets
3. Safety increased
4. Energy saving - Area of conduction increased
5. Earthed and earth free socket exists
6. No need of rods to insert earth free plugs

But other countries such as United Kingdom (UK) had their own standard because they do not want to have the US stuff in their country. In Sri Lanka, C type has been used so far. Sri Lanka has recently changed its standard to G type which is currently being used in UK. Why Sri Lankan government has not chosen A or C instead of G?

Of course, there are voltage and frequency differences of the AC supplied but will not affect its usage. However, every electrical equipment demands a power need. for example, Electrical Oven - 1000W, Iron Box - 500W. It means that the Type A or B socket with present criteria of 110-127V 15A 60Hz can bear the load of 230V 7.5A 60Hz electrical equipments
.#power matched

Also, there are many people still using A type Chinese electrical equipments in Sri Lanka. But it is challenging to use mobile chargers comes with 3 pins of the UK - G type.

What will you suggest?

1. A and B or
2. G

Be productive

Friday, May 14, 2021

பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சி

பிராணன் உருவமில்லாதது. அது ஒக்சிசன் என்பதை எல்லோரும் அறிவார்கள். சுவாசம் முடிந்து வெளியேறும் போது அது காபனீரொக்சைட்டு ஆகும். இந்த உருவமில்லாத வாயு நீரில் கோள வடிவம் எடுப்பது அநேகருக்குத் தெரியும். அவ்வாறு நம் உடலிலுன் குருதியில் கலந்த வாயு உருண்டை வடிவம் தான். அது மூலத்திற்கும் மூளைக்கும் இடையில் இடம் மாறிக் கொண்டே இருக்கும்.

அந்த உருண்டையை நாம் விரும்பிய இடத்திற்குக் கொண்டு வந்து அந்த இடத்திற்கு தேவையான சக்தியை வழங்க முடியும். உடல் வளர்ச்சிக்கும் உடலின் இளமையைப் பேணவும் சக்தியைப் வழங்குவது இந்தப் பிராண வாயுவே! ஆனால், அளவுக்கு அதிகமாக சக்தி ஒரே இடத்தில் குறுகிய நேரத்தில் பிறப்பிக்கப்படக் கூடாது. அது கலங்களைச் சிதைத்துவிடும். சிக்கலை மேலும் கூட்டிவிடும்.

மனித உயிரிற்கு தேவையான சக்தியைப் பிறப்பிக்க உதவுவது ஒக்சிசன். ஆனால் அது மிகையானால் விசமாகிவிடுகிறது. புதிதான ஒக்சிசனை அதிகம் சுவாசித்தால் உடற் கலங்கள் சிதைவடைந்து மூப்பினை வரவைத்து விடுகிறது. இதனால் மூச்சினை உள்ளே இழுக்க்கும் அளவைக் குறக்க வேண்டும். இழுத்த மூச்சை முழுமையாக சுவாசிக்க வேண்டும்.

பிராணாயாமத்தின் பிரதான நோக்கம் உடல் உறுப்புக்களுக்குத் தேவையான சக்தியை வழங்கி அதைச் சுத்தி செய்து சிறப்பாக செயலுற வைப்பதுதான். அது எந்த பகுதியாகவும் இருக்கலாம். அதில் மூளையும் மேற்தோலும் உள்ளடக்கம்.

திருமூலர் பிராணாயாமம்
பிராணாயாமத்தில் பல வகைகள் உண்டு. அதில் முதன்மையானது திருமூலர் சொன்ன 284 என்ற பிராணாயாமம். திருமூலர் திருமந்திரத்தில் மூச்சை உள்ளே இழுப்பதற்கான, அதை உள்ளே வைத்திருப்பதற்கான மற்றும் வெளி விடுவதற்கான கால அளவுகள் முறையே 16:64:32 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும் என்றார். அதாவது 16 மாத்திரைகள் வளியை உள்ளே இழுக்க வேண்டும். 64 மாத்திரைகள் அதை உள்ளே வைத்திருக்க வேண்டும். 32 மாத்திரையாக அதை வெளியே விட வேண்டும். இப்படி செய்தால் நரை, திரை, மூப்பு நெருங்காது என்கிறார். ஆரம்பத்தில் அதே அளவு செய்யாவிடினும் அதே விகிதத்தில் செய்யலாம். அதனஅதனைச் சுருங்கக் கூறின் 2:8:4 என்று வரும். அதனையே 284 என்று கூறினேன்.

முறையான பயிற்சி அவசியம்
வெவ்வேறு நேரங்களில் உடலுக்குத் தேவையான சக்தியின் அளவு மாறுபடுகிறது. அதற்கேற்ப பிராணயாமம் மாறுபடும். உதாரணமாக உணவு உண்டவுடனான ஒட்சிசன் தேவை மாறுபட்டது. ஆகையால் காலை மாலை பிராணயாமம் செய்வதே ஏற்றது. பல பிராணாயாம முறைகளில் 284  முறை அநேகர் அறிந்தது. அனைத்து உறுப்புகளையும் பரிகரிப்பதாலும் இலகுவானது என்பதாலும் பிறருக்குக் கற்றுத் தரப்பட்டது. இருப்பினும் அதனை ஒரு குருவிடம் பயிற்சி பெற்ற பின்பே செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் அதைப் பொருட்படுத்தாது அநேகர் தாமாக செய்து பார்த்து சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர்.

அப்படி பிழையாக பிராணாயாமம் செய்து சுவாச ஒழுங்கு சிக்கலுக்கு உள்ளானவர்கள் மீழ வழி உண்டு. மிருகங்கள் சுவாசிக்கும் போது இப்படி எல்லாம் சிந்தித்து சுவாசிப்பது இல்லை. அவை இயல்பாக இயற்கையான் சுவாசம் உடையன. நாமும் பூர்வீர்த்தால் மிருக தேகம் படைத்தவர்கள் தான். எனவே நாமும் இயல்பாக சுவாசித்து முன்னைய சுவாசத்திற்கு திரும்ப இயலும்.

இந்த முறையில் அவர்கள் முதன்மையாக ஊட்டம் அளிக்க முயல்வது தலைமை உறுப்பான மூளைக்கு ஆகும். ஆனால் அளவாக ஊட்டம் அளிக்க விளைந்தனர். இன்று அதனைப் பின்பற்றுபவர்கள் தவறாக அதனைப் பின்பற்றுவதால் அதிக சக்தி உருவாகி மூளையின் செயல்பாட்டை மேலும் மழுங்கடித்து விடுகிறது.

பிள்ளையார் வழிபாடு
பிரணவத்தின் படியான பிராணாயாமத்தினையே பிள்ளையார் வழிபாடு குறித்து நிற்கிறது. அதனை ஒரு காணொலியாக பதிவிட்டு இருக்கிறேன். அதன்படி அந்த உருண்டையானது பிராணாயாமத்தின்போது எப்போதும் தொந்தியிலேயே (வயிற்றிலேயே) வைத்திருக்கப்பட வேண்டும். இல்லையேல் அதன்போது பிறப்பிக்கப்படும் அதிகமான சக்தி சிக்கலை உண்டு பண்ணிவிடும். இதனை நன்கு உணர்ந்து அதன் இடத்தை சரியாக மாற்றுவதில் தேர்ச்சி பெற்றவர்கள் அதனை விரும்பிய இடத்தில் வைத்து அந்த இடங்களில் உள்ள நோய்களைக் குணப்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் பிள்ளையாரின் வலது தந்தம் உடைந்து உள்ளது. இது இடது பக்கத்திலேயே இதயம் உண்டு என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதையோ அல்லது சில பிராணாயாமம் கூறுவதுபோல் வலது மூக்கினால் உள் இழுத்து இடது பக்கத்தினால் வெளிவிட வேண்டும் என்பதையோ குறிக்கிறது.

சிவ வழிபாடு
நாசியில் வெளி மூச்சு வீச்சாக அடித்து வெளியேற வேண்டும். அதற்கு நாசித் துவாரத்தை சிறிதாக்கி வயிற்றில் தம் கட்டி மூச்சை, முழுமையாக வெளியேறுமாறு உடலை, முக்கியமாக வயிற்றை ஒடுக்க வேண்டும். இதன்போது "ம்" என்ற ஓசை அடி நாவில் (கழுத்தில்) ஒலிக்கும். இது பற்றிய முழுமையான பதிவு, ”சிவாய நம” எனும் பஞ்சாச்சரத்தின் பொருள்.

இதனையே சிவ வழிபாட்டில் # நாவிற் குடிலை எனக் கூறப்படுகிறது. இந்து வழிபாட்டு முறைகளில் இந்த யோகத்தை முதலில் கண்டறிந்தது sஇவன் என்றே கூறப்படுகிறது. அந்த வகையில் ஆதியோகி சிவன் ஆவான். சிவனின் மூச்சில் வேதம் தோன்றியதாக சில பாடல்கள் அழகாகக் கூறுகின்றன.

விஷ்ணு வழிபாடு
இதை விஷ்ணு வழிபாடு வேறு வகையில் சொல்கிறது. மஹாபாரதத்தில் ஒழித்த வைக்கப்பட்ட இரகசியம் பற்றி முழுமையான ஒரு பதிவு செய்திருக்கிறேன். மஹாபாரதம் உண்மைக் கதையா? புனை கதையா? மஹாபாரதமும் 7 சக்கரங்களிலான சித்து மருத்துவமும். அதன்படி அந்த மூலம் முதல் கழுத்து வரை உருளும் உருண்டையினை, 6 மையச் சக்கரங்களில் நிறுத்த வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் உடலின் அந்தப் பகுதிகளை ஆரோக்கியமாக வைத்திருப்பது குறித்து மஹாபாரதக் கதை முழுவதுமே கூறப்பட்டுள்ளது.

முருகன் வழிபாடு
உடலில் அழகும் இளமையும் விளங்க பிராணாயாமம் செய்ய வேண்டும். இதனை முருகக் கடவுள் வழிபாடு வேறு முறையில் குறித்து நிற்கிறது. "முருகு" என்றால் அழகு. முருகன் என்றால் அழகன். நாம் அழகாக இளமையாக மாறுவதற்கான ஞானத்தினை முருகன் கொண்டிருந்தான். நாம் அழகாக வேண்டும் எனில் வள்ளியையும் தெய்யானையையும் மணக்க வேண்டும். நான் தான் முருகன். என்ன இவன் அலம்புகின்றான் என்று யோசிக்காதீர்கள்.

தெய்வானை என்றால் தெய்வ ஆணை. எமது உடலில் தெய்வ ஆணை மூச்சு ஆகும். அதனை பிராணயாமம் கொண்டு சரிப்படுத்த வேண்டும். அதிக மூச்சினை கொள்வது உடலுக்கு ஆகாது என்பதால் எமது நுரையீரலாகக் கருதப்படும் தெய்வானையை எப்போதும் வெறுமையாக வைத்திருக்க வேண்டும். அதன் அளவைப் பெரிதாக்கும்போது உடலில் ஒட்சிசன் வாயுவின் அளவு அதிகரிக்கும்.

அவர்களின் ஆராய்ச்சி அத்துடன் முடிந்து விடவில்லை. கொடியில் விளைந்த கிழங்கு வள்ளி என்று இதயத்தை அவர்கள் அழைக்கிறார்கள். ஆதி காலத்தில் இதயத்திற்கு வள்ளி என்ற பெயர் இருந்துள்ளதா என ஆராய வேண்டும். அதன்படி, முருகன் ஆசைக்கு வைத்துக் கொண்டவள் வள்ளி. வள்ளி நமது உடலில் இதயம் (இருதயம்) ஆவாள். இரத்தத்தை உடலின் பகுதிகளுக்கு கிள்ளி கிள்ளி வழங்குபவள். வாரிக் கொடுப்பவன் வள்ளல் என்றால் அதன் பெண்பால் வள்ளி என்று அமைத்தனர் சித்தர்கள். இதற்கு இன்னொரு கதையும் படித்தேன்.

நாம் கொண்ட ஞானமானது பல காலமாக பல உடல்களில் வேட்டையாடி வேடையாடிக் கிடைத்தது. தான் விளைய வைத்த தினையை கவண் கல் கொண்டு, குறி பார்த்து, தொலைவுக்கு, எறிந்து எறிந்து காவல் காப்பவள் வேடுவச்சி வள்ளி. அவளை காதலித்து திருமணம் செய்கின்றான் முருகன். அதன்படி இரத்தத்தை வயிற்றில், மூளையில் அல்லது வேறு இடத்தில் தேங்கி துன்பம் செய்ய விடாது அதனை உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் பாய்ச்ச வேண்டும். அதற்கு இதயத் துடிப்பின் ஓசையைக் கேட்டுக் கொண்டு உடலின் பாகங்களை தியானித்தால் (நினைத்தால்) போதும்.

"உயிர்களே இன்பத்தைத் தேடி தேடி தேகத்தில் வந்ததே" என்று ஒரு பாடல் வரி உண்டு. ஆனால் அது உண்மை அல்ல. சுயத்தின் பயனாக சுகம்  ஏற்படவில்லை. சுகத்தின் பயனாகவே சுயம் ஏற்பட்டது. இந்த உயிர் சுயமின்றி இன்ப துன்பம் அறியாமல் இருந்தது. இந்த உடலில் வந்து சிக்கிக் கொண்டது. அது போல மூளைக்காக உடல் இல்லை. உடலுக்காகவே மூளை உண்டு. உடலை நன்கு துலக்குவதே கிரியா சக்தி ஆகும். நாம கெத்தா உலாத்தணும்!

அவ்வாறு நளும் உடற்பயிற்சி செய்பவர் பிராணாயாமம் செய்யத் தேவை இல்லை. அதனால்தான் மேலை நாட்டவர்களுக்கு பிராணாயாமம் அதிகம் தேவைப்பட்டிருக்கவில்லை. ஆனால், உடற்பயிற்சியை விரும்பாத ஞானிகள் ஞானம் மூலம் உடல் அக உறுப்புகளைத் துலக்க சில வழிகளை வகுத்தனர்; பிராணாயாமம் தோன்றியது.

பிராணாயாமத்தின் நன்மைகள்
இதன்போது பின்வரும் நன்மைகள் கிட்டும்.

1. நாசியின் சூடு குறைக்கப்படும். அதனால் மூளைச் சூடு குறையும்.
2. உடலின் அநேக பாகங்களுக்கு இரத்தம் பாய்ச்சப்படும்.
3. உடற் பாகங்கள் மசாஜ் செய்யப்படுகின்றன.
4. உடற்கலங்கள் புதுப்பிக்கப்படுகிறது.

மூச்சை முழுமையாக வெளிவிட்டு மீழ உள்ளே இழுக்கும் சுழிப்பில் கலப்பிரிகை நிகழ்கிறது.

பிராணாயாமத்தில் பிரதானமாகக் கவனிக்க வேண்டியவை (பிரணவ முறை)
மூச்சை உள்ளே இழுத்தல்
• #இழுக்கும்போது வயிற்றுப் பகுதிக்குள் நிறைக்க வேண்டும்.
• தேவையான வேகத்தில் அளவாக இழுக்க வேண்டும்.

மூச்சை நிலைப்படுத்தல்
• #ஒரு முறை இழுத்த மூச்சை அதிக நேரம் உள்ளே வைத்திருக்க வேண்டும்.
• அந்த சக்தி உருண்டையை சக்தி தேவைப்படும் இடத்தில் நிலைப்படுத்த வேண்டும்.
• புதிய வளியானது உடற்கலங்களைக் சிதைக்கும் கூறுகளைக் கொண்டுள்ளது.
• உடலை அதிகம் வருத்தக் கூடாது.

மூச்சை வெளிவிடுதல்
• #அதனை வெளிவிடும்போது கரியமில வாயுவை முழுமையாக வெளியேற்ற வேண்டும்.

எண்ணம் சக்தியின் ஒரு வடிவம்

நம்பினால் தான் சோறு எண்டது போல, உண்மை பொய் ஆராயாது நம்பி நடந்தால் நன்மை தரும் மர்மங்களே இந்து மதம் வகுத்தவற்றில் உள்ளன. காரணம் அவையும் நம்பிக்கைப் பரிசோதனை மூலம் நிறுவப்பட்டவையே. இயற்கைக்கு அப்பால் மனித உலகை இயக்குவது எண்ணங்களே ஆகும்.

எண்ணங்கள் சக்தியின் ஒரு வடிவமே ஆனால் மனித விருப்பங்களிற்கு இயைபான விளைவை ஏற்படுத்துபவை. எண்ணங்களே பரிணாமம் உட்பட மனிதத்தில் அனைத்தையும் தீர்மானிக்கின்றன. உடனடியாக இல்லை எனினும் சற்றும் காலம் தாழ்த்தி எண்ணங்களின் பாலான மாற்றத்தை அவை ஏற்படுத்தும்.

The universe is intelligent. And it made us intelligence.
Whatever getting complex become intelligence but may not be in perceivable form.

சித்தர்களால் உடலில் இனம் காணப்படும் சூட்சும சக்கரங்களும் இதனையே சாரும். உண்மையில் அப்படி எதுவும் இல்லை.

கையை நினைத்தால் கை முனைப்படையும். காலை நினைத்தால்... அது போல தலையை நினைத்தால் அதாவது நினைப்பை நினைத்தால் அது முனைப்படையும். அப்போது அதை நிறைவேற்ற அது எம்மை நம்மை ஒட்டு மொத்தமாக தூண்டும். பிற சக மனிதர்களின் சிந்தையையும் தூண்டும். எனினும் அதில் ஐம்புலன்களே அதன் விளைவில் பெரிதும் செல்வாக்குச் செலுத்துகின்றன. அதாவது நாமே அதற்கு வேண்டிய சொற்களை உச்சரிப்போம். நமது மூச்சில் அது தெய்வ ஆணையாகி நம்மை நமது சக்திகளை அதன்பால் இயக்கும்.

நமது மனமே நம்மை ஏனைய உயிர்களிடம் இருந்து மேன்மைப் படுத்துகின்றன. அம்மனமானது நம்பிக்கைகளாலும் அனுபவத்தினாலும் வடிவம் கொள்கிறது. அதனை உரிய உத்திகள் இன்றி அவ்வளவு இலகுவில் மாற்றி விட முடியாது. நமது மனதை குறித்தவாறு ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கென்றே பல வழக்குகள் இந்து சமய வழிபாட்டில் உள்ளன. உண்மையில் அவற்றிற்கு இறைவனே தேவை இல்லை.

நாம் எதை நினைக்கிறோமோ அந்தக் கணத்தில் நமது சூட்சும தேகத்தில் அதுவாகவே நாம் இருக்கிறோம். உதாரணமாக மீனை நினைத்தால் நமது உடலில் மீன் உருவில் முனைப்பு ஏற்படுகிறது. எமது எண்ணங்களால் இந்த உடல்கள், புற பொருட்கள் உருவாகவில்லை. அவற்றை நாம் உணர்ந்தமையாலேயே எண்ணங்களே உருவாகின.

நாம் ஒரு காட்சியை ரசித்துக் காணும்போது அதனுள்ளே மூழ்கியது போல அதனுள் இருப்பது போல உணர்கிறோம். அக்காட்சிக்கு ஏற்ற உணர்ச்சி (சுகம், துக்கம், மகிழ்ச்சி) உண்டாகிறது. மல்லிகையை நினைத்தால் அதன் சுகந்தத்தை அனுபவிக்க முடிகிறது. ஆனால் எமது உயிர் உடலை விட்டு எங்கும் செல்வதில்லை. ஒவ்வொரு புலனையும் பெறும்போதும் அப்புலனிலேயே உயிர் அல்லது பிராண வாயு மையம் கொள்கிறது. எனில் அந்த மாயம் மனதின் வசம் உண்டு. இதன் உளவியல் விளக்கம் என்ன?

"மன்னனும் நானே
மக்களும் நானே
மரம் செடி கொடியும் நானே"

என்றான் கண்ணன். கண்ணனின் இலக்கணம் நமது மனம் ஆகும். பார்த்தனுக்கு வழி காட்டுவது போல எமக்கு சரியான வழியைக் காட்டுபவன்.

அனைத்தும் நானே... அது உண்மையே!

உண்மையில் மன்னன் நான் என்று நாம் நம்பிவிடும்போது நமது சூட்சும தேகம் (நமது ஞானத்தில் மரம் எப்படி உள்ளதோ) மரத்தின் வடிவத்தை எடுக்கிறது. இப்படியே ஏனையவையும்...

I love with the shape of you என்பது இதற்குப் மேலும் வலு சேர்க்கும்.

ஆனால் அதோடு மன்னராக இருக்கும்போது மன்னனின் கடமைகளைச் செய்ய வேண்டும்... இவ்வாறே யாவும்...

எனவே சில வேத வசனங்களைக் கேள்வி கேட்காமல் அப்படியே நம்ப வேண்டி இருந்தது. அப்படி நம்பினாலேயே நன்மை கிட்டும். இது போன்ற கோட்பாடுகளே இந்து மதத்தில் அநேகம் உண்டு. தற்காலத்தில் அதற்கான காரணங்கள் நிலை பெறாத காரணத்தால் அருகிப் போகின்றன. அதுவும் நன்றாகவே நடந்தது.

கீதாசாரமும் இதே போக்கிலேயே இருக்கிறது. எந்த மறுப்பும் இல்லாமல் நம்பினால் அது அப்படியே ஆகிவிடுகிறது.

அப்படி ஒரு அளப்பரிய சக்தி இருக்கு என நம்புவது தான் அப்படி ஒரு அளப்பரிய சக்தியை உருவாக்குது. அந்த சக்தி அருள் புரியும் என்ற நம்பிக்கை தான் அருளை வழங்குகிறது. நம்முள் ஏற்படும் அந்த ஏற்றம் தான் வெளியே உள்ள சக்தியைத் தூண்டுகிறது. நாம் சக்தியின் பிள்ளைகள்.
அனுமன் மறந்த சக்திகளும் அவையே!
சக்தி என்றால் என்ன என்பதை அறிவியல் நன்கு அறியும்.

இந்த உலகையும் தனக்குக் கிடைத்த வாழ்க்கையையும் நேசிக்கும் உயிர்கள் தானாகவே நீண்ட ஆயுளைச் சுபீட்சம் பெறுகின்றன. ஏனையவை தானாக மறைந்து போகின்றன. குறுகிய காலத்திலும் நீண்டகாலத்திலும் இதுவே உண்மை. இதயத்தின் சின்னஞ்சிறு துடிப்புகளில் ஜீவன் இன்னும் வாழுதே!

எண்ணங்கள் ஒரு சுற்று சுற்றி மீழ எழும்போது மீண்டும் வலிமை பெற்றால் மீண்டும் எழும். மனிதனின் சூட்சும மனவுடன் அடிப்படையில் எண்ணங்களை ஞாபகப்படுத்தி மீட்கும் இயந்திரம். அவை உடலில் புள்ளிகளுடன் தொடர்புபட்டே சேமிக்கப்படும். இதற்கு காரணம் மூளை எனும் இயந்திரத்திற்கு தூண்டல் நமது உடல் ஆகும். உடல் முழுவதுமாக எண்ணற்ற மின்கலங்கள் உள்ளன. அவை ஒருங்கிணைந்து செயற்படாவிடில் சிக்கல் ஏற்படும்.

இந்த மனம் எனும் சக்கரத்தில் உள்ளே போடப்பட்டவை எவையும் தானே தப்பி விடாது. ஒரு எண்ணம் கூடாதது எனில் அது மீழ எழும்போது அதனைச் சாந்தப்படுத்த வேண்டும். இன்னொரு நல்ல என்ணம் கொண்டோ, கொள்கை கொண்டோ அல்லது உடலால் கடமை செய்வதில் கவனம் செலுத்துவதன் மூலமோ அல்லது நற்கருமங்களில் பங்கு கொள்வதன் மூலமாகவோ இதனை செய்யலாம். இவை அனைத்தும் பலனளிக்காது போனால் ஒருவர் மனநலம் பாதிப்படைய அதிக வாய்ப்பு உள்ளது.

இன்பமான நினைவுகளை சேகரியுங்கள்.

துன்பமான நினைவுகளை மறந்திடுங்கள்.

நாளடைவில் உங்கள் மனம், இன்பமான நினைவுகளால் மட்டும் நிரம்பிவிடும்.

தோன்றும் எந்த எண்ணமும் மன மகிழ்ச்சியை உண்டாக்கும்.

எப்போதும் மனம் இன்பத்தில் திழைக்கும்.

”பிடித்திருந்தான் துன்பம் விட்டுவிட்டால் முக்தி”

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...