Sunday, June 28, 2020

தன் கையே தனக்குதவி, உனையே துணையாய் நீ மாற்றிடு

எப்போதுமே நல்லவர்களாக வாழும் என் அப்பாவி நண்பர்களுக்கு,
இங்கே பாவம் செய்தவரைத்தான் துயர் வந்து வாட்டும், நோய்கள் பீடிக்கும்; நல்லவர்களுக்கு அல்ல, என்பது எல்லாம் பொய். நோய்களுக்கும் (கொரோனா உட்பட) துயர்களுக்கும் பாவ புண்ணியம், நல்லவர் கெட்டவர் எல்லாம் தெரியாது. அவற்றுக்கு ஒட்டிக் கொண்டால் தன் கடமையைச் செய்யத்தான் தெரியும். ஆனால், உங்களுக்குத்தான் உங்கள் கடமைகளைச் செய்யத் தெரியவில்லை.

துன்பங்கள், நோய்கள் குறித்து நீங்கள்தான் கவனமாகவும் திடமாகவும் இருக்க வேண்டும். எத்தனை கோடி பாவம் செய்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தம்மைப் தகுந்தவாறு பலப்படுத்திக் கொண்டால் அவர்களை யாரும் எதுவும் செய்துவிட முடியாது. அதுபோல அவர்கள் கவனாக இருந்தால் நோய்களும் அவர்களைப் பீடிக்காது.

பல யுத்தங்களிலும் போர்களிலும் தீயசக்திகள் நல்ல சக்திகளிற்கு ஈடு கொடுப்பதாக அமைந்திருந்தாலும், நல்ல சக்திகளை தீயசக்திகள் வெல்ல முடியாமல் தோற்றுப் போனதாகவே இதுவரை நாம் புராணங்களில் கேட்டறிந்துள்ளோம். அத்துடன், நல்ல நெறியில் நிற்போருக்குத் துயர்களும் நோய்களும் பீடிப்பது குறைவது. ஏனெனில் அவர்கள், ஏற்கனவே அது போன்ற துயர்களைக் கடந்து அவற்றைத் தாங்குவதற்கான உடல், மன வலிமையைப் பெற்றிருப்பர். ஆனால், சூழ்ச்சிகள் நிறைந்த இந்தக் கலியுகத்தில் இவை எதுவும் துணையாகாது. கூட நின்று உண்ணும் உற்ற நண்பனும் பல சுயநலத் தேவைகளுக்காக துரோகியாக செயற்படும் சந்தர்ப்பங்களை அறிந்து கொண்டும் அவற்றைச் சகித்துக் கொண்டு வாழ வேண்டிய காலத்தில் நாம் வாழ்கின்றோம்.

எனவே, உங்கள் பாதுகாப்பை நீங்களே உறுதி செய்ய வேண்டியது கட்டாயமாகும். "உங்கள் உடலையும் மனதையும் ஆரோக்கியமாகப் பேண வேண்டியது உங்கள் கடமை" என்று புத்தர் குறிப்பிடுகின்றார். இது தான் கடவுள் மற்றும் அவர் அருளாக இருக்கும். இயல்பாகவே இது ஒரு தர்ம மார்க்கத்தில் இருப்பவருக்கு கைவரப் பெற்றதாகவே இருக்கும். முதலில் உங்களைப் பலப்படுத்தி உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். பிறகு, உங்களைச் சூழ உள்ள நல்லவர்களையும் காப்பாற்றுங்கள். முடிந்தால் அந்தத் தீயவர்களையும் நல்லவர்களாக மாற்றி, காப்பாற்ற முயற்சி செய்க.

வானில் இருள் சூழும்போது மின்னல் மின்னும் உனையே! உனையே துணையாய் நீ மாற்றிடு...
முதலில் உன்னைத் திருத்திக்கொள். சமூகம் தானாகத் திருந்தட்டும்.

Saturday, June 20, 2020

மாடுபோல உழைப்பவன் மாடாகிறான். மதி கொண்டு சிந்திப்பவன் மனிதன் ஆகிறான்.

எந்தத் தெய்வத்தை வழிபட்டு முக்தியடைவது? கிருஷ்ணர் அர்ஜுனனுக்குப் பின்வருமாறு போதிக்கிறார்,

"நான் யாதுமாகி நிற்கிறேன்.
கிருஷ்ணர் என்ற ஒரு பொருள் நிலையானது அல்ல.
இவ்வுலகில் அதர்மங்கள் தலை தூக்கும்போது மாயையினை உடலாகத் தரித்து அவதரிக்கிறேன்.
யார் என்னை எவ்வடிவில் ஆராதித்தாலும் அவருக்கு அவ்வடிவில் அருள் புரிகின்றேன்.
சூரியனை வழிபடுபவர்கள் சூரியனை அடைகிறார்கள்.
சந்திரனை வழிபடுபவர்கள் சந்திரனை அடைகிறார்கள்.
சிறிய தேவதைகளை ஆராதிப்பவன் சிறிய தேவதைகளை அடைகிறார்கள்.
பிதிர்களை ஆராதிப்பவன் சிறிய பிதிர்களை அடைகிறார்கள்.
பித்துருக்களை வழிபடுபவர்கள் பித்துருக்களை அடைகிறார்கள்.
என்னை வழிபடுபவர்கள் என்னையே அடைகிறார்கள்."

n ஐ ஆராதிப்பவன் n ஐயே அடைகிறான்.

வாழ்க்கையில் தொடர்ச்சியான கடும் உழைப்பு இருந்தும் சிலர் வெற்றியடையாமல் போவது ஏன்? மேலே கிருஷ்ணர் கூறியதன்படி ஒருவர்  தான் வழிபடுவதையே அடைகின்றார். சிலர் மட்டுமே சிந்தித்து செயலாறுகின்றனர். ஏனையோர் தாம் கொண்ட பழக்கத்திபாலோ அல்லது எழுந்தமானமாக வேலையின் போக்கிலோ வேலை செய்கின்றனர். அவர்கள் கண்ணும் கருத்தும் (வழிபாடு) அவர்களின் வேலையினைச் செய்து முடிப்பதிலேயே இருக்கிறது. பழக்கத்தில் செய்பவர்கள் அதே விளைவையே மீண்டும் மீண்டும் அடைகின்றனர். எழுந்தமானமாகச் செய்பவர்கள் எழுந்தமானமான விளைவுகளை, அதாவது திட்டமாகக் கூற முடியாத விளைவுகளை அடைகின்றனர். ஆனால் எப்போதும் வேண்டிய விளைவை அடைய முடிவதில்லை.

சிலர் வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருப்பர். ஆனால் முன்னேற்றம் அடைவதில்லை. ஆனால் அவர்கள் எதை நோக்கி ஓடுகிறார்களோ அதை நிச்சயம் அடைகின்றனர். அதில் மாற்றமில்லை. அதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் தமது வேலைகளை, சிறிதும் மாற்றாது அதே போக்கின் செய்கின்றனர். பிறகு மாற்றம் இன்றி ஏற்றம் எப்படி வரும்? நமது செயல்பாடுகளில் மாற்றத்தினையும் ஏற்றத்தையும் கொடுக்க வல்லது நமது சிந்தை மட்டுமே ஆகும். அதனைச் சிறிதும் கூட அவர்கள் வழிபடுபது கிடையாது. அதன் மீது அவர்கள் கவனம் திரும்புவது கிடையாது. பிறகு முன்னேற்றம் எப்படி இருக்கும்?

ஆங்கிலத்தில் hard work, smart work என்று இரண்டு பதங்கள் உண்டு. எந்நேரமும் அலுவலுடன் இருத்தல் நமக்கு எப்போதும் நன்மையானது என்று பொருள் படாது. ஆனால், அந்த அலுவலின் பயனை அவ்வாறே நமக்கு ஈட்டித் தரும். நாம் வெறுமனே நமது கடமைகளைச் செய்து முடிப்பதில் கவனமாக இருக்காமல் சிந்தித்துச் செயல்பட்டால் அனைத்தும் நமது கைவசமாகும். இதற்கு நாம் நமது ஓட்டத்தை நிறுத்தி நமது சிந்தனைக்கு நேரம் ஒதுக்கி வழிபட வேண்டும். அது நமக்கு வேண்டிய மாற்றங்களையும் ஏற்றங்களையும் பெற்றுத் தரும். ஞானத்தின் வலிமை பற்றி பிறிதொரு பதிவில் பார்த்திருந்தோம். ஞானத்தினால் அடைய முடியாதது என்று எதுவும் இல்லை. இதனை உணர்ந்து கொண்டால் வாழ்வு வளமாகும். நாளை நமதாகும்.

நமது வாழ்க்கை நில்லாமல் ஓடிக் கொண்டேதான் இருக்கும். அதன் பின்னே ஓடிக்கொண்டு இருந்தால் நமது வாழ்க்கையையே இழந்து கொண்டு இருக்கிறோம் என்பதைக் கூட நம்மால் உணர்ந்து கொள்ள முடியாது. உடல் உழைப்பால் வேலை செய்யும் தொழிலாளிகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் தினமும் தமது வேலைகளை மாடுபோல் செய்வதிலேயே கவனம் செலுத்திகிறார்கள். அவர்கள் சற்று சிந்தித்திருந்தால் அதனையே எளிமையாகச் செய்யும் முறை ஒன்றினைக் கண்டுபிடித்திருப்பார். வீட்டுப் பெண்களை எடுத்துக் கொண்டால், அனேகர் காலை எழுந்தவுடன் இயந்திரம் போல அன்றாடம் செய்யும் வேலைகளைச் செய்கின்றனர். அவற்றில் எந்த மாற்றமும் கிடையாது. இதனால் அவர்களால் வீட்டினைச் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியாமல் போகிறது. வாழ்க்கையும் தினமும் ஒரே மாதிரி அமைவதால் வாழ்க்கையும் சலித்துப் போகிறது.

நாம் செய்யும் காரியங்கள் மேன்மையுற வேண்டின் நமது சிந்தனைக்கு நேரம் ஒதுக்குதல் அவசியமாகும்.

இன்னும் எளிமையாகச் சொன்னால், மாடுபோல உழைப்பவன் மாடாகவே ஆகின்றான். மதி கொண்டு உழைப்பவனே மதிவான் ஆகின்றான்; மனிதன் ஆகின்றான்.

இறைவன் படைப்பில் ஏற்றத்தாழ்வுகள். நீ கொண்டு வந்ததென்ன? நீ கொண்டு போவதென்ன?

  ஏழை, பணக்காரன், உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி, இனம், மதம் என நாம் வகுத்த பிரிவுகளுக்கு மேலே இறைவன் வகுத்த பிரிவுகள் மிகவும் விநோதமானவை; நியாயமற்றவை. மிருகங்கள், பறவைகள், ஊர்வன, ஈரூடகவாழிகள், கடல்வாழிகள், நுண்ணங்கிகள் எனப் பல வகையான படைப்புகள் இறைவனுடையவை. அவற்றில் மனிதன் மட்டும் சற்று அறிவுள்ள மிருகமாகக் கூர்ப்பு அடைந்துவிட்டதாக சாள்ஸ் டார்வின் சொல்கிறார். ஆனால், அவற்றிலும் இறைவன் வைத்த வேறுபாடுகள் கொஞ்சமல்ல. கறுப்பு, வெள்ளை, உயரம், குட்டை, பருமன், மெலிவு, அறிவு, முட்டாள் என இன்னும் பல. இவற்றில் குறைகளைத் தாங்கிப் பிறப்பவர்கள் எந்தத் தவறும் செய்யாமல் அதற்காகச் சபிக்கப்பட்டவர்கள் ஆகிறார்கள். இறைவன் கொடுத்த குறைகள் எல்லாம் குறைகள் அல்ல. மனிதர் மனமே குறைகள் உடையது.

 அந்நாளிலும் கடவுள், தேவர், அசுரர் என்று பிரிப்புக்கள் இருந்ததாகப் புராணங்கள் சொல்கின்றன. அப்போது தேவர்கள் புத்திசாலிகளாகவும் அதேவேளை நல்லவர்களாகவும் இருந்தார்கள். அவர்களிற்கு அனைத்தும் கிட்டியதனால் அவர்கள் நல்லவர்களாக இருந்திருக்கக் கூடும். அவர்கள் தமது புத்தி கூர்மை கொண்டு பல சாதனைகளும் சக்திகளும் படைத்திருந்தார்களாம். ஆனால், அசுரர்களோ முரட்டுப் பலம் பொருந்திய முட்டாள்களாக இருந்தனராம். அதோடு கெட்டவர்களாக இருந்தார்கள். அது அவர்களுக்கு எதுவும் கிடைக்கப் பெறாமையின் விளைவாக இருக்கலாம். ஆனால், அவர்களிலும் சிலர் முத்துக்கள் போல அறிவாளிகளாக இருந்து வந்துள்ளனர். ஆனாலும், அவர்களிலும் அனேகர் சேர்க்கை சரியின்மையினால் கெட்டவர்களாகவே இருந்தனர். அவர்கள் தமது அறிவு கொண்டு பல சாதனை புரிந்து, நெடுந்தவம் புரிந்து சக்தி பல படைத்து மக்களையும் தேவர்களையும் துன்புறுத்தினார்களாம். அது அவர்களின் இந்தப் பாகுபாடுடைய கடவுள் மீதான வெறுப்பின் நிமித்தமாக இருக்கலாம். அத்தனையும் அருமையான ஒப்புமை. அன்றும் மாறவில்லை. இன்றும் மாறவில்லை. தேவர்கள் அழகும் தேஜஸும் நிறைந்தவர்கள். அசுரர்கள் அழகற்ற அருவருப்பான இருள்சூழத் தோற்றமளிப்பவர்கள். இவை வெறும் தோற்றங்கள்தான் உண்மை நிலை முற்றிலும் மாறாக இருந்ததாகப் பல புராணக் கதைகள் உண்டு.

 நாம் வெறுமனே சற்றுப் பருமனான பெண்ணை, குண்டம்மா என்று வெகுவில் சொல்லிவிட்டுப் போகிறோம். நிச்சயமாக நான் அல்ல மக்களே. ஊர் சொல்ல நான் பலமுறை கேட்டிருக்கிறேன். குள்ளமானவரைக் கட்டையன் என்கிறோம். என்னையே பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். கறுப்பானவர்களை கரியன் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். உண்மையில் அவர்கள் எந்தப் பாவமும் செய்யவில்லை. ஆனால், இறைவன் அளித்த தண்டனைகள் இவை. இவை எப்படித் தர்மமாக இருக்கும். இன்னும் சில வேளைகளின் கறுப்பான பிள்ளை பிறந்தால் கரிகரன், கண்ணன் என்று பெற்றோர் பெயரும் சூட்டிவிடுகின்றனர். தன் முக்கத்தைக் கண்ணாடியில் பார்க்கும்போது மட்டும் இதனை உணரும் அப்பிள்ளை இப்போது ஒவ்வொரு அழைபிலும் இதனை உணரும். இவை மட்டுமல்ல இன்னும் உண்டு. பிறப்பிலேயே புத்திகூர்மை சற்று தங்கியுண்டு என்பது விஞ்ஞானிகளே ஒப்புக் கொண்ட விடயம்.

 என்னுடைய நண்பன் ஒருவன் தான் ஒரு கூர்ப்பு சம்பந்தமான நூலில் கற்றதைக் கூறினான். நாம் இப்போது மனிதர்களாகப் பார்க்கும் மனிதர்களை "கோமோ சப்பியன் சப்பியன்" என்பர். ஆனால், இப்போதும் முழுமையாகக் குரங்கிலிருந்து முழுமையாகப் பரிணாம வளர்ச்சியடையாத மனிதர்கள் சாதரண மனிதர்களோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனராம். இதை நான் என் அம்மாவிடம் கூறியபோது, அம்மா சொன்னார். "இப்போது எல்லோரும் குரங்குப் புத்தியுடன் தானே இருக்கிறார்கள்; பிறகு என்ன." இது அது அல்ல மக்களே! இது நுண்ணறிவு இயற்கையில் குறைந்த தன்மை ஆகும். அவர்களின் சிந்தனை மட்டுப்படுத்தப்பட்டது.

 இதனை அவர்கள் வேண்டும் என்றே கூறவில்லை. நான் என் அன்னையை நன்கு அறிவேன். அவர் தனக்கென எதுவும் கொள்ளாது எந்த வஞ்சமும் இன்றி தனது பிள்ளைகளுக்காகப் பாடுபடுபவர். அவர் யாருடய மனதும் புண்பட வேண்டும் என்ற நோக்கத்தில் நடந்து கொள்பவரல்ல. அவர்களின் ஞானத்திற்கு அது எட்டவில்லை, அவ்வளவுதான். சில விடயங்களை எல்லோருக்கும் கூறிப் புரிய வைத்துவிட முடியாது. அதற்கு அவர்கள் அதற்கான ஞானம் படைத்திருக்க வேண்டும். ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தால் அங்கே அவர்களுக்கு அதற்கான ஞானம் போதாமல் இருப்பதை அறிந்து கொள்ளலாம். எனக்கு அறியாமல் பிழை செய்பவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும். அவர்களுக்கு அந்த ஞானத்தை எப்படியாவது புகட்டிவிட வேண்டும் போல இருக்கும். பலமுறை முயற்சி செய்து தோல்வியுற்றிருக்கிறேன். ஆனால், அதற்கான ஞானம் படைத்திருந்தும் அத்தனை உண்மையும் தெரிந்திருந்தும் தவறு செய்பவர்களை என்ன செய்வது? அவர்களை மன்னிக்கவே முடியாது.

 ஏன் இது பற்றி வெளிப்படையாகப் பேசப்படுவது இல்லை? சிலர், அது பிறர் மனதைப் புண்படுத்தும் எனக் கருதுகின்றனர். இன்னும் ஒரு காரணமும் உண்டு. பாதிக்கப்பட்டவர்கள், இவை வெளிப்படையாகப் பேசப்படுதல் தமது மதிப்பைக் குறைத்துவிடும் என நினைக்கின்றார்கள். பாதிக்கப்படாதவர்கள், வெளிப்படையாகப் பேசப்பட்டால் தம்மிடம் நஷ்ட ஈடு ஏதாவது கேட்டு விடுவார்களோ என்று அஞ்சி நசுக்கிடாமல் இருந்துவிடுகின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல. பிரச்சினைகளை ஒப்புக் கொள்ளாமல் ஒருபோதும் தீர்வுகளை எட்டிவிட முடியாது.

 சிலரின் கருத்து, அதிகமாக உண்டு கழிப்புற்றவரே உடற்படுமன் அடைவர், அது அவர்கள் பிழை என்பதாகும்.  எதிலும் விதிவிலக்குகள் இருப்பது தவிர்க்க முடியாத ஒன்று. உடலின் வடிவம், வளர்ச்சி நமது உடலில் ஏற்படும் ஹார்மோன் ஓட்டங்களிலேயே தங்கி உண்டு. இவற்றை இயற்கையாக நமது ஜீன்கள் (பரம்பரை அலகுகள்)  தான் தீர்மானிக்கிறது. ஆனால், அவற்றை மாற்ற மனிதனில் மதியினால் முடியுமாயிருந்த பல சரித்திரங்கள் உண்டு. அவற்றில் சில மெஞ்ஞான சக்கரம் சார் யோகங்கள் மற்றும் வர்மக்கலைகள் ஆகும். இவை ஜீன்கள் மூலம் கடத்தப்பட்டாலும் இவற்றில் சிலவற்றை நமது சந்ததிக்கு தொடராமல் மாற்றிக்கொள்ள முடியும். உதாரணமாக, உடற்பருமன், புத்திகூர்மை, உயரமின்மை போன்றவற்றை மாற்ற யோகம் மற்றும் சில மன, உடற்பயிற்சிகள் பயன்படும். இது பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளேன். ”குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான். எனில் இன்னமும் குரங்குகள் எப்படி எஞ்சியிருக்கின்றன?” இதனையும் வாசித்துத் தெரிந்து கொள்க.

 இறைவன் அனைவருக்கும் சரிசமமாகக் கொடுக்கவில்லை. இதை அனைவரும் புரிந்துகொண்டு அவர்கள் மனம் நோகாமல் நடந்துகொள்ள வேண்டும். இது போன்ற இன்னொரு சுவாரசியமான கதையோடு இன்னொரு பதிவில் சந்திப்போம்.

Sunday, June 14, 2020

வார்த்தைகளுக்கு உயிர் கொடுப்பவன் வாசகன்

 வார்த்தைகள் உயிரற்றவை. அவை விடயங்களின் கருக்களை மட்டுமே தாங்கி நிற்கும். அவற்றிற்கு மதிப்பும் இல்லை. உயிரும் இல்லை. அவற்றிற்கு வாசகர்கள்தான் உயிர்  கொடுக்கின்றார்கள். அவற்றுக்கான அர்த்தம் வாசகர்களின் ஞானத்திற்கு ஏற்பவே கற்பிக்கப்படுகிறது. அத்தோடு வார்த்தைகளுக்கான மதிப்பு அவற்றைக் கூறுபவரிலும் தங்கியுண்டு. கூறப்படும் சந்தர்ப்பர்த்திலும் தங்கியுண்டு.

 உதாரணத்திற்கு ”ஓம் நமசிவாய” என்பதனை சிரஞ்சீவி மந்திரமாக, சைவசமய மதபோதகர்கள் அறிகிறார்கள். அதே வார்த்தைகளை ஒரு பைத்தியகாரன் கூட தினம் உச்சரித்துக் கொண்டு இருக்கலாம். அதன்போது அதன் அர்த்தத்தினை, பிறிதொரு சைவசமயி அன்றி வேறொருவர் அறிந்திலர். ஒரு படிப்பறிவு இல்லாத நபர் கூடப் பெறுமதி மிக்க விடயங்களை எமக்குப் பலதடவை சொல்லி இருக்கலாம். ஆனால், அதே வார்த்தைகளை இன்னொரு கற்றவர் சொல்லும்போது அவற்றினை நாம் முக்கியத்துவம் மிக்கவையாக உணர்கிறோம். உண்மை அதற்குப் புறம்பானதாகக் கூட இருக்கலாம். சில வேளைகளில் கற்றவர் கூறியவை பொய்ப்படலாம். ஒரு வழிப்போக்கன் கூறியவை பல அனுபவ ஞானங்களைக் கொண்டிருக்கலாம்.

 வார்த்தைகளின் பெறுமதி அவற்றை நாம் எவ்வாறு உருவேற்றி உணர்கிறோம் என்பதிலேயே தங்கியுண்டு. ஒரே வார்த்தைகளை நாமே பலமுறை பலர் கூறக் கேட்டிருப்போம். ஆனால், அவற்றின் மதிப்பினையும் அவர்கள் நம்மீது காட்டிய கரிசனையினையும் அறிந்திரோம். பின்னாளின் அதே வார்த்தைகளைப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் கேட்கும்போது அதில் பொதிந்துள்ள விலைமதிப்பற்ற அர்த்தங்கள் புரியவரும். சிலவேளைகளின் புரியாமலும் போகலாம். சிலர் போகிற போக்கில் சொல்லிச் செல்லும் விடயங்களை, மேதைகள் பல பெயர்கள் சூடி, புகழ் சூட்டி, முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகப் பறை சாற்றுவர்.

 கல்லிலே கலைவண்ணம் காண்பது சிற்பியின் தனிச் சிறப்பு. வார்த்தைகள் அவற்றைக் கூறுபவர் நோக்கத்தை முழுமையாகத் தாங்கிச் செல்லும் என்பது பொய்யானது. ஆனால் சிலவேளை அதைவிட மிக அதிகமான ஞானத்தைக் கூட ஒருவனுக்குப் பெற்றுத் தரலாம். உண்மையில் ஞானம் வளர்ந்தது 3 முறைகளினால் ஆகும். 1.தனது அனுபவத்தில் கிட்டிய படிப்பினைகள் மூலமானது. 2.அவற்றைத் தொகுத்து ஒரு குரு அல்லது நூல்கள் பிறருக்குப் புகட்டியதன் மூலமானது. 3.ஒருவர் கற்பித்த விடயங்களைப் இன்னொருவர் தமது அறிவிற்கேற்ப பிறிதொன்றாக விளங்கிக் கொள்வதன் மூலமானது ஆகும்.

 ஒரு அவையில் மிக முக்கியமான விடயங்களை ஒருவர் பேசுகின்றார். ஆனால், அங்கே இருப்போரின் சரி அரைவாசி பேர்கள் கூட அவற்றினைச் செவிமடுத்துக் கடைப்பிடிக்க மாட்டார்கள்; பயன் பெற மாட்டார்கள். சில வேளைகளில் இதுவும் உண்மைதான். பல வேளைகளில் பாற்கடலில் முத்துக்கள் மறைந்துள்ள போலவும் உப்புக்கல்லினுள் சில வைரக் கற்கள் போலவும் அர்த்தமற்ற வார்த்தைகள் நடுவே வாழ்க்கைக்கு முழுப் போதனையும் சொல்லும் சில வார்த்தைகள் மறைந்திருக்கும். அவை குறித்த சிலரை மட்டும் அடைய வேண்டும் என்பதற்காக அவ்வாறு வரையப்படுவதும் உண்டு. அத்தனையும் வாசித்து அறிந்த ஒருவரே அது போன்ற போதனைகளைக் கையாளத் தகுதியுடையவர் என எழுத்தாளர் நினைத்திருக்கலாம்.

 அனேகர் வார்த்தைகளை நாம் அலட்சியப்படுத்துவது வழக்கம். அது ஆணவத்தின் விளைவாகும். அவற்றைச் சிரத்தியுடன் செவிமடுத்து அதில் அடங்கியுள்ள உண்மைத் தன்மையினை ஆராய வேண்டியது அவசியமாகும். வார்த்தைகளின் மீதான நமது சிரத்தைதான் அவற்றின் உண்மையான பெறுமதியை நமக்கு உணர்த்த வல்லது. இது ஒருவருடைய ஞானத்தை விரைவில் பூரணப்படுத்துகிறது. அதோடு விரைவில் அவரை வெற்றியாளனாகவும் ஆக்குகின்றது.

 இதுவும் உண்மைதான்,
"அவமாய் உளல்வோருக்கு அறிவிக்கப் போகாதே! அறிவிக்கப் போகாமல் திடமுடன் நிற்பாயாயின் தித்திக்கும் இன்பம் பெற்றிடுவாயே!"
ஆர்வம் இல்லாமல் இருப்பவரை வலிந்து நாடி கற்பிற்பதைவிட நமது கடமைகளைச் செய்வது இன்பமானது. சிலரின் மூடச் செயல் காண, அவர்தம் மடந்தை நிலை கண்டு உடையன பகரவே மனம் வரும். ஆனால், அவர்களிற்கு அவ்வார்த்தைகளின் மதிப்பு ஒரு போதும் முழுமையாக விளங்கிவிடாது. அது வீண் பிரயத் தனமாகவே முடியும். அவர்களுக்கு இந்த உலகின் சூட்சுமங்கள் அனைத்தையும் ஒருபடியில் சொன்னாலும் அவை வெறும் வார்த்தைகளாகவே அமையும்.

Tuesday, June 9, 2020

Does Gene Influence Knowledge of a Person?

It is all we know that the intelligence of a human is influenced by gene and other environmental factors. Also, there are stories saying knowledge of a father also be carried to his son. However, those are just folk tales as we think of.

Obviously, there must be a knowledge transmission through genes. But, the things will not be realized or acquainted nevertheless they are induced. It happens when a child is with his father. A child starts to follow the habits of his father soon. If he is separated from his family, he will not imitate his father since there is less probability for him to see such in other environments.

The fact behind maybe, the Neurons need to be fired in between appropriate neural nodes in his brain itself to establish connections among the nodes. The nodes are structurally hatched from his gene but the connections are not conducted in his gene. So, the memory is only accessible to one only if he gets involved in any related events.
This is how ancient people (sages) could have attained immense wisdom by just doing yoga. They might have able to fire neurons appropriately throughout using their yoga practices. Therefore, they could have realized and recalled the memory stored in their genes. Another evidence could be, boys are often intelligent in electronics and electrical.

Tuesday, June 2, 2020

வாசிப்பு எப்படி மனிதனைப் பூரணப்படுத்தும்?

”ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஒரு சிறைச்சாலை  மூடப்படும்” என்று வீவேகானந்தர் கூறுகின்றார். ஞானம் (அறிவு) ஒன்றே மெய்ப்பொருளாகும். ஒரு மனிதனை அளித்து விட முடியும். அவனுக்காக வைத்த சிலைகளையும் உடைத்து விட முடியும். ஆனால், அவனது சிந்தனையையும் சித்தாந்தத்தையும் யாராலும் எதுவும் செய்துவிட முடியாது. அந்த ஞானத்தைப் பெருக்கும் வழிகளில் வாசிப்பு மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. அத்தோடு, வாசிக்கும்போது மூளைக்குத் தொடர்ச்சியாக வெல்லம் வழங்கப்படுகிறது. இதனால் கிரகிக்கும் ஆற்றம் மேம்படுவதால் கற்றல் செயற்பாடு எளிதாகின்றது.

வாசிப்பதால் கிட்டும் நன்மைகள்,
  1. அறிவு
  2. மனதை ஒருமுகப்படுத்தும் திறன்
  3. பொறுமை
  4. சாந்தம்
  5. ஞாபகசக்தி
  6. கிரகிக்கும் ஆற்றல்
  7. மொழித்திறன்
  8. சொல்வன்மை
  9. ஆளுமை
  10. சாதூர்யம்
கற்றலுக்குப் பொறுமை, சாந்தம், ஞாபகசக்தி, கிரகிக்கும் ஆற்றல் ஆகியன மிக அவசியம் ஆகும். அத்தோடு நமது திறமைகளைப் வெளிப்படுத்திப் பயனுறச் செய்ய மொழித்திறன், சொல்வன்மை,  ஆளுமை, சாதூர்யம் ஆகியனவும் அவசியம் ஆகின்றன. இவை யாவற்றையும் வாசித்தல் நமக்குக் கற்றுத் தருகிறது. அனுபவ அறிவை எதுவும் வெல்ல முடியாது என்பது மறுக்க முடியாத ஒன்றாகும். ஆனால் வயதில் முதியவர்களுக்கு அனுபவம் அதிகம் என்பதே அநேகர் எண்ணமாகும். வாசிப்பு அதனையும் பொய்யாக்கிக் காட்டக் வல்லது. அனுபவம் என்பது என்ன? ஒரு குறித்த தருணத்தில் சரியான முடிவை எடுக்க உதவும் எமது முன்னறிவு ஆகும். நான் இதைக் கதை ஒன்றின் மூலம் விளக்கலாம்.

ஒரு சிறுவன் வெளியே சென்று வீடு திரும்புகின்றான். அவனது வீட்டில் உள்ள அனைவரையும் கயவர்கள் சூழ்ந்திருக்கின்றனர். அவன் அவர்களை நன்கு அறிந்திருந்தான். அவர்கள் அனைவரையும் கொன்று தீயூட்டுகின்றனர். இப்போது அவன் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து நிற்கின்றான். அவன் மனதில் சிந்தனைகள் சிதறுகின்றன. ”நான் அங்கே ஓடிச் சென்றால் அவர்கள் என்னையும் கொன்று விடுவர். தவிர்த்து உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாக விலகிச் சென்றால், நான் தப்பித்துக் கொள்ளலாம். அதோடு, என்னால் அவர்களைப் பழிவாங்கவும் முடியும். நான் மடிந்து விட்டால் யார் திருப்பிக் கொடுப்பது.”
”அவன் தன் கண்ணீரைப் புதைத்துக் கொண்டு பதுங்கிக் கொள்கின்றான்.”

பின்னாளில் தன் வாழ்க்கையினைச் திடப்படுத்திக் கொண்டு சிறிது சிறிதாக அக்கயவர்களை இனம் கண்டு பழி வாங்குகின்றான். இது ஒரு சிறந்த படிப்பினை ஆகும். இனிக் குழந்தைகள், பாசத்தில் கட்டுண்டு வீழ்ந்துபோகும் சாதாரண மனிதர் போல அல்லாது, கடமை மட்டும் கருத்தென இருக்கும் சத்திரியர் போல வளர்க்கப்பட வேண்டும். நாமும் அவ்வாறே வாழப் பழக வேண்டும். யாரும் பாதிக்கப் பட்டவனாக வாழக் கூடாது. சாகவும் கூடாது. அத்தனையும் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும். "அதர்மத்தைக் கையில் எடுத்தவன் அதை அனுபவித்தே ஆக வேண்டும்." இதில் உறவு எதிரி என்று வேறுபாடு கிடையாது. உன் பழியை நீயே தீர்த்துக் கொள்.


இங்கே சிறுவன் எடுக்கும் கோடிட்ட வசனத்திற்கு மேலுள்ள வசனங்களும் அதன் பின்னரான வசனங்களும் ஒரு சந்தர்ப்பத்தை வரையறுத்து நிற்கின்றன. அப்போது அச்சந்தர்ப்பத்திற்கு ஏற்ப அவன் எடுக்கும் முடிவு சரியாக அமைகிறது. இது ஒரு அனுபவம் ஆகும். இது போல வாசிப்புப் பகுதியில் ஒவ்வொரு வசனத்தையும் எடுத்து நோக்கின், அதன் மேலும் கீழும் உள்ள யாவும் சந்தர்ப்பங்களைம் அவ்வசனம் அதற்கான தீர்வையும் குறித்து நிற்கும். நீங்கள் ஒரு புத்தகத்தை வாசித்து  முடிக்கும்போது விளையுளாக இது போன்ற எண்ணிலடங்காத சிக்கல்களையும் தீர்வுகளையும் நீங்கள் பயிற்சி செய்து இருப்பீர்கள். அவ்வாறே வாசித்தல் உங்கள் தொடர்ச்சியான அறிவோட்டத்தையும் பிரச்சினைகளைத் கையாளும் திறனையும் மேம்படுத்துகிறது. உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களிற்கு உங்களால் நொடிப் பொழுதுகளில் தீர்வு காண முடியும். ஏனெனில் நீங்கள் ஏற்கனவே அவை போன்ற சிக்கல்களைப் பயிற்சி செய்து விட்டீர்கள்.

இவ்வாறு வாழ்க்கையில் நீங்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை நீங்கள் முறியடித்து முன்னேறும்போது உங்கள் வாழ்க்கையும் முன்னேற்றம் அடைகிறது. உலக பணர்க்காரர்கள் வரிசையில் முதலிடம் வகிக்கும் பில் கேட்ஸ் அடிக்கடி வாசிப்பு பற்றி வலியுறுத்துகின்றார். வாசிக்க மனம் இல்லாமல் இருக்கும்போது என்ன செய்வது. அதற்கு ஒரு ஊக்கமாக இதனைக் கொள்ளலாம். பிறர் அறியாத விடயங்களை அறிந்தவராக நீங்கள்  ஒரு இருக்கும்போது உங்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியை நீங்கள் அனுபவித்ததுண்டா? நீங்கள் தொடர்ச்சியாக வாசிப்பதன் மூலம் அதனைத் தொடர்ந்து அனுபவிக்க முடியும். இல்லையெனில் வாசிப்பு போன்று தொடர்ச்சியாக நமக்கு அறிவுசார் விடயங்களைக் கற்றுத் தரும் திரைப்படங்களும் மேலே கூறிய நன்மை பயக்கும்.

புத்தகம் சிறந்த ஆசிரியர் என்பர். அதனால்தான் வெள்ளையர்கள் அவற்றை அதிகம் விரும்பினார்கள். வள்ளுவர், தத்துவங்களை இரு வரியில் சொல்லியிருக்கலாம். ஆனால், அதனை வெறுமனே வாசித்து முடிக்கும் கணத்தில் அனைவராலும் விளங்கிக் கொண்டுவிட முடியாது. அதற்கு உள்ளார்ந்த ஞானம், பொறுமை வேண்டும். அவற்றை நிஜத்திலோ, கற்பனையிலோ அனுபவ ஞானத்தினால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும். அது அத்தனை சாரமாக உள்ளது. ஆனால் ஏனைய புத்தகங்கள் அப்படி அல்ல. ஆனால், வெள்ளையரின் புத்தகங்கள் மொழி காரணமாக, அவற்றை வேறு ஒருவர் கற்றுத் தர வேண்டியுள்ளது. அதோடு அது விரைவில் குறித்த பாடங்களையே வெறுக்கச் செய்துவிடுகிறது.

வாசிப்பினால் கிடைக்கும் நன்மை பற்றி இத்தனை சான்றுகள் கூறுவதன் நோக்கம், அவற்றை நீங்கள் ஞாபகம் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அல்ல. அதன் மதிப்பை உணர்ந்து நீங்கள் பின்பற்ற வேண்டும் என்பதே ஆகும்.

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...