மஹாபாரதம் கதையா, வரலாறா? என்பதை விட்டு விடுவோம். ஆனால், மஹாபாரதம் என்பது வெறும் இதிகாசம் மட்டுமல்ல. இது ஒரு மருத்துவமுறை யோகம் ஆகும். அதனை ஒழித்து மறைத்து இந்த இதிகாசம் எழுதப்பட்டுள்ளது. இங்கே கண்ணன் என்பவன் நமது மனம் ஆவான். மனமே இறைவன் உறையும் இடம் மற்றும் வழிபாட்டின் பிரதானம் ஆகும். விஷ்ணுவை முதல் கடவுளாக வழிபடுபவர் மஹாபாரதத்தை எழுதியமையால் விஷ்ணுவை கண்ணனாக அமைத்து எழுதியுள்ளார்.
உடலில் சித்தர்கள் கூறும் 7 சூட்சும சக்கரங்கரங்களும் பாண்டவர்களும் + கர்ணன்

- குந்தி - மூலாதாரம்
- கர்ணன் - சுவாதிஷ்டானம் - இடை - அம்பு
- பீமன் - மணிபூரகம் - வயிறு - கதை
- அர்ஜுனன் - அனாஹதம் - மார்பு - அம்பு
- தர்மர் / யுதிஷ்டர் - விசுக்தினி - கண்டம் - ஈட்டி
- நகுலன் - ஆக்னா - நெற்றி - வாள்
- சகாதேவன் - சகஸ்ரம் - உச்சி - அங்குசம்.
7 சக்கரங்களும் அவற்றை இயக்கின் உடல் அரோக்கியம் பெறும். கண்ணன் வைத்திருக்கும் குழலில் உள்ள துளைகளும் இதனையே குறிக்கின்றன. வில்லேந்திய அர்ஜுனனின் சாரதி என்பதால் கண்ணனுக்கு பார்த்தசாரதி என்று பெயர் உண்டு. ”சுவாச வீச்சை வைத்து வைத்து அர்ஜுனன் மனம் அறிந்து வண்டியைச்
செலுத்துபவன் கண்ணன்” என்று மஹாபாரதத்தில் கூறப்படுகிறது. இந்த 7 சூட்சும சக்கரங்கள் பற்றி இன்னொரு பதிவில் விரிவாகக் காண்போம்.
குந்தி மூலாதாரத்தில் உள்ள முதல் சக்கரம்.
குந்தியின் புதல்வர்கள் நால்வர்:
- கண்டத்தில் யுதிஷ்டன்
- வயிற்றில் பீமன்
- தோளில் அர்ஜுனன்
- இடையில் கர்ணன், பாண்டுவின் திருமணத்திற்கு முன் பிறந்தவன்.
மாத்திரையின் புதல்வர்கள் இருவர். இவர்கள் நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் பெற்றவர்கள்.
- புருவத்தில் நகுலன் - தொடா வர்மங்கள்
- சஹஸ்ராரத்தில் சகாதேவன் - எதிர்காலம் அறியும் ஆற்றல்.
மாத்திரை - மிகச்சுருக்கமான இடம், கண்ணிமைக்கும் காலம், பாக்கியம்(அதிஷ்டம்)
திரௌபதை, பாண்டவர் மனைவி: நாடிகள் (இடை, பிங்கலை)
நாடிகளைப் பெண்களாக உருவமைப்பது சித்தர்கள் வழக்கமே! உதாரணமாக திருமூலர் நாடி மற்றும் நாளங்களை “கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்...” என்று திருமந்திரத்திலே குறிப்பிடுகின்றார்.
துரியோதனன் எனப்படுவது கட்டறுந்து அலையும் சுவாச அங்குலங்கள் மற்றும் தொடையில் ஓடாது தேங்கிய இரத்தம் ஆகும். இவன் இடையிலுள்ள கர்ணனின் மித்திரன் ஆவான். மனிதனுக்கு உடலிலேயே பிணிகள் ஏற்படுகின்றன. உடலின் 100 தசைப் துண்டங்களையும் அவற்றில் தேங்கிய சுவாச அங்குலங்களையும் திருதராட்சனின் 100 புதல்வர்களாக வடிவமைத்து இருக்கின்றனர்.
இது போல ஏனைய பாத்திரங்களும் கீழ்க் கண்டவாறு உறுப்புகளாகவே இருக்க வேண்டும். ஏனையவை எனது புத்திக்கு எட்டவில்லை.
- நாசி - அசுவத்தாமன்
- நாக்கு - துரோணர்
- அஸ்தினாபுரம் - வாய்
- கடோற்கயன் (பீமன் மகன்) - தொப்பை, இவனைக் கர்ணன் சக்தி அஸ்திரம் கொண்டு வதைப்பான்.
- பீஸ்மர் - இரப்பை
- திருதராட்சன் - உள் மூச்சு - உயிர்வாயு / பிராணனும் அதன் ஆசைகளும் (பிரேத ஆத்மா) + வலது கண்ணுக்குரிய நாடி என்றும் பொருள் உண்டு (தச நாடிகள்).
- காந்தாரி - வெளி மூச்சு - கரியமில வாயு + இடது கண்ணுக்குரிய நாடி என்றும் பொருள் உண்டு.
பார்த்திபன் (அர்ஜுனன்) இலக்கு வைப்பதில் கை தேர்ந்தவன். பார்ப்பதன் மூலம் இலக்கு முடிவு செய்யப்படுகிறது. ஆனால் அது இரு புஜங்கள் கொண்டே அது அடையப்படும்.
பார்த்தசாரதி (கண்ணன்) அந்த இலக்குகளைச் செலுத்துபவன். புறத்தில் மட்டுமல்ல பார்வையால் அகத்திலும் அக உடலிலும் மாற்றங்களை உண்டாக்கும் சிறப்பை உடையவன். இதனால் தான் அவனுக்குக் கண்ணன் என்றும் பெயர் உண்டு.
கண்ணன் மகாபாரதத்தில் மனதைக் குறிக்கின்றான்.
அனைவருக்கும் மனமாக இருந்து வழி நடத்துபவன். இதனை அவனே கீதையில் தெளிவாகச் சொல்கின்றான்.
கண்ணன் ஒரு தனிப்பொருள் இல்லை. நமக்கு மேலே நம்முள் நாமாக இருந்து நம்மை வழி நடத்துபவன். நாம் அவன் இடத்தை அடைந்து சிந்தித்தால் நல் மார்க்கம் கிட்டும். அதாவது அவனது ஞானத்தையும் அவன் நின்றதாகச் சொல்லப்படும் நெறியினையும் மேல் நிறுத்தி கண்ணனாக நின்று முடிவுகளை எடுக்க வேண்டும்.
உதாரணமாகக் கீதையில் நான் என்று கண்ணன் கூறுபவற்றை, நீங்கள் உங்கள் ஆசை, சுயநலம், ஆணவம் யாவும் துறந்து சற்று மேலே சென்று, நீங்கள் கூறுவது போல "நான் ..." என்று கூறிப் பாருங்கள்... அனைத்தும் புலனாகும்.
அர்ஜுனன் உடலிலுள்ள 7 சூட்சுமச் சக்கரங்களில் அநாகதச் சக்கரத்தைக் குறிக்கின்றான். நாங்கள் கண்களால் சிறந்த அகச் சூழலை உருவாக்க முடியும். ஆரோக்கியத்தையும் மனத் தெளிவையும் ஏற்படுத்த முடியும்.
கர்ணன் என்றால் சிறந்த காதுடையவன். கர்ணன் மஹாபாரதத்தில் அந்தச் சக்கரங்களில் சுவாதிஷ்டானத்தைக் குறிக்கின்றான். சுவாதிஷ்டானம் கவசம் மற்றும் குண்டலத்தை வழங்கும். அதாவது கட்டுடல் (6 packs) மற்றும் ஒருமுகப்படுத்தப்பட்ட கூர்மையான கேட்கும் திறன் கிட்டும். கண்ணன் கர்ணனுக்கு துரோகம் செய்கின்றான். கண் இருப்பதால் காது என்னும் புலன் பூரணமாகப் பயன்படுத்தப்படுவது இல்லை.
கண், காது இரு புலன்கள்.
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மகாபாரதப் போர் நிகழும். இளம் பருவத்தில் வளர்ச்சியின்போது ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தினால் மஹாபாரதம் அனைவர் வாழ்விலும் நிகழ்கிறது. சரியான உணவுமுறை இல்லாத போதும் போதிய உடற்பயிற்சி இல்லாத போதும் மீண்டும் மஹாபாரதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நன்றி!
தேடல் தொடரும்...
இற்றைப்படுத்தியது (3): 06 மாசி 2121
இற்றைப்படுத்தியது (4): 25 பங்குனி 2121