Monday, July 20, 2020

நவாலியூர் சோமசுந்தரப் புலவர் - கவிதை

தங்கத் தாத்தா என அன்பாக அழைக்கப்பட்ட நவாலியூர் சோமசுந்தரப் புலவர் பற்றிய கவிதை.
பிறப்பிடம்: நவாலி, யாழ்ப்பாணம்
நன்றி: IBCதமிழ்.com
தென்னுலகு தமிழ் மேவிய மூவேந்தர் வழி
இப் பொன்னாட்டிலும் பொன் சுரக்கும்
முத்தமிழ் ஒளி கூட்டிய
தங்கத் தாத்தா சோமசுந்தரம்.

ஊர்த் தோப்பில் தனியாக சுகித்திருக்கிறேன்
இதய அரங்கினிலே நாமிருவர்
வெண் மேலாடை
வெண் வேட்டி
தோழில் மஞ்சள் சால்வை
நீள்பட்டை தரி ஏறு நெற்றி
நரை மீசை தாடி கொண்ட
சுந்தரத் தாத்தாவுடன் செந்தமிழ் பழகுகிறேன்
அத்தோப்பு நாவல் தோப்பு;
கவி பேசுகிறார் சோமசுந்தரம்.

தேன் தமிழ் கொண்டு - நீ
செதுக்கிய சிற்பங்கள் பொன்னா!
பேரா! தங்கம்.. தாத்தா சால்வை நிறமல்ல,
தாத்தாக்குத் தமிழ் அளித்த மிகை.

78 இல் நீர் அவதரிக்க
செந்தமிழும் அறியாது உன் புலமை
முத்தமிழ் தெவிட்ட - நீர்
ஊட்டிய கவியின் பெருமை
பிறவியில் எய்தியது என்று
சொல்லப் பிரியமில்லை
தாயிடம் கொண்டதில் கொஞ்சமாய்
கொடுத்ததாய்க் கொள்கிறேன்

வரகவி நீயோ!
முருகு கவியில் - பல
கருவறைகள் காண்கிறாய்!
நாமகள் நாமம் யாவும் பாவேற்றுகிறாய்!
நம்பிக்கை வாழ்க்கையின் பிடியாம்,
தாத்தாக்குத் தமிழ் வேந்தன் கழல்
வாழ்வது ஜீவ முக்தி.

அந்தாதி, கலம்பகம், வெண்பா பதிகமும்
பல இலக்கியமும் தந்தீர்!
உயிரிளங்குமரன் எனும் இலக்கியக் காட்சி வரைந்து
புலவர் பட்டமும் பெற்று விட்டீரே!
உள்ளத்தில் தமிழ் ஊற்றெடுத்தால்
பாட்டுக்குப் பஞ்சமும் உண்டோ!
தமிழின் பொருள் இனிமையன்றோ!

தமிழ் மூச்சு எனினும் - வெள்ளையன்
மொழியிலும் சளைக்காத உபாத்தியாயன் நீ!
247 தமிழுக்கு 26 ஆங்கிலம் பேரிலகு!
மொழிகள் பல அறிய நாம் அழவும்
எல்லை விரியுமென நீங்கள் அறிவீரே!

இளமையில் கொடுமையாம் வறுமை,
அதிலும் தளராத தமிழ்ப்பற்று உனது!
வறுமை உடலுக்கல்லவோ!
நின் உயிர் தமிழெனும் இனிமையில் வாழுமே!

கவிதை நாடகம்...
கருப்பொருள் என்னவோ!
நாடகமாய்ப் பாலர் நடிக்கும்
இப்புலவன் கவிகள் காண் புகழ்!
கத்தரி காய்கையில் காவலில் சேவகன் - என
பொம்மைக்கும் உயிர் தந்து
சித்தரிக்கும் உன்பா.

உன் சிறுவர் செந்தமிழ் பாலர் பாட்டு
தெவிட்டாத தேனாக - நீ
பாடிய பொய் மட்டும் ஏனோ
ஆடிகளில் சினமூட்டும்
இது மறைவில் பாட்டில் இனிமை
இல்லை என்கிறதா
இல்லை விடுதலை இல்லை!
53 இல் நின் உடல் மரிக்க,
விடுதலை கொண்டது தமிழ்
கவிக்கோடி தன் கடலை
நிறைக்காமல் மாண்டானே என்று

ஏழ் கடல் ஐநிலம் மோதி மீழ
ச(ஜ)னிக்கும் கானம் தோற்கும் உன்கவி
வாழ்க தங்கம்.. தாத்தா என்றும் தமிழுடன்..!

Friday, July 17, 2020

மூப்பு ஏன் வருகிறது? நம் உடலில் நம் மனதின் ஆதிக்கம் என்ன?

நன்றி: tamil.webdunia.com
நாம் மனதில் நினைப்பதையே நமது உடல் செய்கிறது. நமது மனமும் உடலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது. ஒரு குழந்தை பிறக்கும்போது தாய், தந்தை கொடுத்த #உடலை மட்டும் கொண்டிருக்கிறது. அதனால், அது வலிகளை எப்படிக் கையாள்வது என்று அறியாமல் அழுகிறது. அக்குழந்தை இப்புவியில் பிறந்த நாள் தொட்டு அதன் மனமும் (கர்மா) சேர்ந்தே வளர்கிறது. இந்த உடல் அதன் கட்டளைகளிற்கு ஏற்பவே தொழிற்படுகிறது. இவ்வாறு, மனம் இந்த உடலில் பலவாறு ஆதிக்கம் செலுத்தத் தொடங்குகிறது.

சிறுவயதில் நமக்கு மனதில் எந்தக் கவலையும் இருப்பதில்லை. பின்னாளில் சிறிது சிறிதாகப் பல கவலைகள் வந்து ஒட்டிக் கொள்கின்றன. பல துன்பங்கள் நமது மனதை சிறிது சிறிதாகப் பாதிக்கின்றது. இதனால், சிறிது சிறிதாக நம்மை அறியாமலே நமக்கு நம்வாழ்க்கையில் பிடிப்பின்றிப் போகிறது. ஏன் வாழ்கின்றோம், என்று தோன்றுகிறது. சில சமயங்களில் ஏன் பிறந்தோம், என்று கூடத் தோன்றும். இவை நமது உடலை நமது மனதின் கவனத்தில் இருந்து சிறிது சிறிதாக விலக்குகிறது. இதனாலேயே நமது உடல் மூப்படைகின்றது.

இயல்பாகவே நமது மனமானது நமது வாழ்க்கை மீது பாரிய ஆதிக்கம் உடையது. நமது மனதின் எண்ணங்கள் நமது எதிர்காலத்தில் பெரிதும் செல்வாக்குச் செலுத்துகின்றன. இதனையே விவேகானந்தர், "நீ எது நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுகின்றாய்" என்றார்.

இவை எதுவும் ஒரு உடற் பயிற்சியாளனைப் பாதிக்காது. உடற்பயிற்சி செய்யாதவர்தம் உடல் மீட்டாத வீணையைப் போன்றது. அதன் தந்திகள் மற்றும் உடலானது, நாதத்துடன் சங்கமிப்பதில்லை. இதனையே இராவணன், தனது ஒரு தலையுடன் உடலை உருவி சாமகானம் வாசிப்பது போல நமக்குக் கூறியிருக்கலாம். அதாவது, உடற்பயிற்சி செய்யாதபோது நமது உடலானது நமது மனதில் (பெரும் பகுதி மூளையில்) இருந்து விலகிச் செல்ல ஆரம்பிக்கின்றது. இதனால், நமக்கு பல உடலியல் மற்றும் உளவியல் சிக்கல்கள் ஏற்படுகிறது. தற்காலத்து வேலைகள் இது போன்ற நிலமையையே நமக்குத் திணிக்கின்றன. நாம் உடற்பயிற்சி செய்து வந்தால், நமக்கு அது பலவகையில் நன்மை பயக்கும்.
#சாமகானப்பிரியன்

சிலவேளை, "பணம் வந்தவுடன் அவனின் முகத்தில் செந்தழிப்பு வந்துவிட்டது. இளமையாக தோன்றுகின்றான்" என்று பலரும் சொல்லக் கேட்டிருப்போம். அதுவும் நான் கூறும் செயல்விளைவிற்கு அமையவே நிகழ்கிறது. பணம் வந்தவுடன் ஒருவருடைய கவலைகள் அகல்கிறது. மகிழ்ச்சி தாண்டவம் ஆடுகிறது. நாளடைவில் அது அவர்தம் முகத்திலும் பிரதிபலிக்கிறது. இதில் மாய மந்திரம் எதுவும் கிடையாது. "மகிழ்ச்சி" ஒன்றே அவரை அழகாக்குகின்றது. இந்த விளைவு நாம் நினைப்பது போல சில நாளிகைகளில் நிகழ்வதல்ல. சில மாதங்கள் அல்லது வருடங்கள்கூட ஆகலாம். எந்த அளவிற்கு அந்த விளைவு மனதைப் பாதிக்கிறது என்பதைப் பொறுத்தே அவன் வீச்சு, வேகம் அமைகிறது.

எதை நீ தொலைத்தாலும் மனதைத் தொலைக்காதே! இந்த உடல் நமது மனதின் விம்பமாக மட்டும் அமையாது ஒன்றில் ஒன்று பின்னிப் பிணைந்தது. ஒன்றில் ஏற்படும் பாதிப்பு இன்னொன்றில் பிரதிபலிக்கிறது. ஆனால் எது நமது கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றால் அது நமது மனம்தான். அதனை சரியாகக் கையாண்டால் நமது வாழ்வை வெற்றி கொள்ள இயலும். பல சோதனைகள் நம்மை வாட்டும். பல துயர்கள் நம்மைத் துரத்தும். ஆனால், நாம் நம்மனதைத் தளராமல் வைத்திருந்தால் அனைத்தையும் வெற்றிகரமாகத் தாண்டிவிடலாம். எதுவும் நம்மை அசைத்துவிட முடியாது. எந்த ஒருபோதினிலும் மனம் உடைந்து போகக் கூடாது; பின்வாங்கி விடக் கூடாது; முயற்சியைக் கைவிடக் கூடாது.

மனம் ஒரு மாய மந்திரக் கட்டு. இது ஒரு நூலின் தலைப்பு ஆகும். உடலில் #தானாக வரும் அநேக பாதக விளைவுகள் மனதில் ஏற்படும் கோளாறுகளாலேயே நிகழ்கிறது. நீங்கள் தொடர்ச்சியாகப் பல குழப்பங்களை, தீர்க்க முடியாத புதிர்களைக் சந்தித்தால் நாளடைவில் அதன் விளைவு உங்கள் உடலிலும் பிரதிபலிக்கும். உங்கள் இரத்த அழுத்தங்கள் மாறுபடும். உங்கள் இதயத் துடிப்பு ஒழுங்கற்றதாகும். உடலில் இன்னும் பல பாகங்களில் என்ன என்னவோ #சொல்ல முடியாத நோய்கள் எல்லாம் ஏற்படும். சிலவேளை பல பாகங்களில் காயங்களைக் கூட ஏற்படுத்த வல்லது, இந்த மனம். இதன் உச்சத்தினை இங்கே காணலாம், ஒருவர் தனக்குத் தீ சுட்டது போல அல்லது இரும்பால் அடித்தது போல கனவு கண்டு எழும்போது உடனே அல்லது நாளடைவில் அந்த இடத்தில் தீக் காயம் அல்லது அடிபட்ட தழும்பு ஏற்பட்டு இருப்பதை அவதானிக்க முடியும்.

ஒரு குட்டிக் கதையுடன் இந்தப் பதிவை முடிப்போம். என் அன்னை கூறினார், தான் நடராஜர்பத்து படித்த நாளன்று, இரவு கனவில் பயங்கரமாக ஒருவர் வீட்டின் முன் இருந்தது போலவும் அதனை ஒரு பாம்பு தன் கைகள் மற்றும் வால் கொண்டு பிடித்துச் சென்றது போலவும் கனவு கண்டதாகச் சொன்னார்.

அதற்கு நான், பஜனையும் பக்தியும் நமது மனதிற்குத் தென்பு தருபவை. மனம் உடைந்து விடாமல் தாங்கிப் பிடிப்பவை. மனதின் தெளிவே நமது நிம்மதி மற்றும் எதிர்கால வெற்றியைத் தீர்மானிக்கிறது. நீங்கள் அது போன்ற பக்தியினால் திருப்தி அடைந்தமையால் உங்கள் மனம் நிம்மதி, பலம், தெளிவு அடைந்திருக்கிறது. உங்கள் மனம் தெளிவு அடைந்தமையால் அது தனது எதிர்கால நிகழ்வுகளை வெற்றிகரமாகச் செய்ய இயலும் என்பதை உணர்கிறது. இதனை உணர்த்தவே உங்கள் மனம், நீங்கள் ஏற்கனவே கேட்ட, பார்த்த ஆச்சரியம் நிறைந்த கதைகளின் பகுதிகளை இணைத்து உங்களிற்குக் கனவாகக் காட்டி இருக்கிறது, என்றேன்.

மனதின் ஒட்டுமொத்த நிலவரமே நமக்குக் கனவாக வருகிறது. கனவு நனவாவதாகப் பலர் சொல்லும் கதைகளும் இதன் பாற்பட்டவையே. காலைக் கனவு பலிக்கும் என்பதும் கூட இதனுடன் தொடர்புபட்டதுதான். இங்கு கூறப்பட்ட கருத்துக்களில் பல ஆன்மீக மர்மங்களுடன் தொடர்புபட்டவை. ஆனால், அவை எதிரியின் கைகளில் சிக்காமல் இருக்கும் நோக்குடனும் தீய எண்ணங்கள் கொண்டவர்களை, பயத்தினால் அடக்கி வைத்திருக்கும் நோக்குடனும் அவை கதைகள் கூறி, பல சடங்கு சம்பிரதாயங்களில் மறைத்து வைக்கப்பட்டன. ஆனால், இந்நாளில் அவை பயனின்றிப் போய்க்கொண்டு இருக்கின்றன.

தொடர்ந்து, இதிலிருந்து வேறுபட்டு மனங்களின் சங்கமத்துடன் தொடர்பான ஒரு கதையும் சொன்னார். தான் ஆதிசேடன்(பருந்து) வீட்டின் மேலே பறக்க அதனை வழிபட்ட போது, அன்று இரவு கனவில், ஒரு பருந்து மேலிருந்து இறங்கி முற்றத்து மணல் கும்பியில் இருந்த பாம்பினைப் பிடித்துச் சென்றது. மறுநாள் காலை அதே இடத்தில் ஒரு பருந்து இறங்கி மண்ணைக் கவ்விச் சென்றதாகச் சொன்னார். இது பற்றி இன்னொரு பதிவில் பார்ப்போம்.

"மனம்போல வாழ்க்கை"

Tuesday, July 14, 2020

சந்ததி விருத்தி பற்றி வள்ளுவர் என்ன கூறுகிறார்

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.

      (அதிகாரம்: வான் சிறப்பு, குறள் எண்: 19)

தேவநேயப் பாவாணர் உரை:

மழை பெய்யாவிடின் இப் பரந்தவுலகின் கண் அறக்கொடையும் தவமும் ஆகிய இருவகை நல்வினைகளும் செய்யப்பெறா. தானம் என்பது, நல்வழியில் ஈட்டப்பட்ட பொருளை, தெய்வப் பற்றுக் கரணியமாகக் கோவிற்கும் அடியார்க்கும் , அருளுடைமை கரணியமாக இரப்போர்க்கும், ஈடின்றிக் கொடுத்தல். தவம் என்பது ஐம்புலவடக்கம் பற்றித் துறவறத்தார் கடுமையாகவும், மகப்பேறு முதலியன கருதி இல்லறத்தார் எளிமையாகவும், உடலை வருத்துதல். கடுமையாக வருத்தும் வகைகள் துறவறவியலிற் கூறப்பெறும், எளிமையாக வருத்தும் வகைகள் உண்டி சுருக்குதல், எளிய வுடையுடுத்தல், இன்பம் விலக்கல் முதலியன. "மகன்றந்தைக் காற்று முதவி யிவன்றந்தை யென்னோற்றான் கொல்லெனுஞ் சொல்." என்று திருவள்ளுவரும், "முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாட்சுமந்து" என்று பட்டினத்தடிகளும் பாடியிருப்பதால், தவம் துறவறத்தின் மேலதென்று வரையறுப்பது பொருந்தாது. தானம் பிறர்க்குக் கொடுப்பது; "தவம் தன்னை ஒடுக்குவது". தானம் என்பது தென்சொல்லென்பதை என் 'வடமொழி வரலாறு' என்னும் நூலிற் கண்டு தெளிக.

மேற்படி வள்ளுவர் குறளுக்கான தேவநேயப் பாவாணர் உரையின்படி, தவம் எனபது துறவு பூண்டோர் மட்டும் செய்வது அல்ல. இல்லறத்தினரும் பிள்ளைப்பேறு வேண்டி தவம் இருப்பர் என்பது புலனாகிறது. இதற்காகத் தம்பதியினர் உண்டி சுருங்குதல், எளிய வுடையுடுத்தல், இன்பம் விலக்கல் (இதனை அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் நூலில் கண்ணதாசன், ”வரவு 15 நாள் செலவு 1 நாள்” என்றும் கூறியுள்ளார்) போன்றன செய்யக் கடவர் என்று அவர் குறிப்பிடுகிறார். இதன்படி தம்பதியினர் தம்மை ஒடுக்கி ஒரு குழந்தையைச் செய்தற் பொருட்டு மேற்கொள்ளும் இவையும் தவமே என்கிறார்.

”சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்று ஒரு பழமொழியும் உண்டு. அங்கே அவர்கள் சந்திரன் தேய்ந்து பின் வளர்கின்ற 6 ஆம் நாளாகிய, சஷ்டி திதியை சிறப்பாகக் குறிப்பிடுகின்றனர். அந்நாளில் முருகக் கடவுளை நினைத்து விரதமிருந்து வழிபட்டால் பிள்ளைப்பேறு கிட்டும் என்கின்றனர். சிலர் அமாவாசை மறுதினம் முதல் சஷ்டி வரை (6 நாட்கள்) விரதம் இருப்பர்.

ஆணின் சுக்கிலமும் (விந்து) பெண்ணின் சுரோணிதம் (கருமுட்டை) சேர்ந்து கரு உருவாகும் என்பது அனைவரும் அறிந்ததே. இதிலே ஆணின் சுக்கிலத்தில் மிகவும் பலம் வாய்ந்த ஒன்றே கருத்தரிக்கிறது. ஆண் சுக்கிலம் பெண்ணின் சுரோணிதம் இரண்டும் அதிகசக்தி கொண்டவையாக இருக்கும்போது அதன் உறுதியின்மை காரணமாக கருக்கட்டல் நிகழாமல் போக வாய்ப்பு இருக்கிறது. இதனால் இருவரில் ஒருவரேனும் விரதம் இருந்து உடலை ஒடுக்கும்போது இந்த உறுதியற்ற தன்மை நீங்கி குழந்தை பிறக்கும் என்பதையே இது குறித்து நிற்கிறது.

இதில் மேலும் அமிர்தம் கடைந்தால், இதனை இப்படியும் உபயோகிக்கலாம் என நான் கருதுகிறேன். ஆண், பெண் இருவரது நிறமூர்த்தத்திலும் உயரம், நிறம், கண் நிறம் போன்ற இயல்புகள் இருக்கும். இவற்றில் வெள்ளை நிறம், நீல நிறக்கண், அதிக உயரம் உடைமை போன்ற ஆட்சியான இயல்புகள் குழந்தை கொண்டிருப்பது விரும்பத் தக்கது. இவ்வியல்புகளைக் காவும் நிறமூர்த்தங்கள் பெண்ணிடம் இருந்து 23 உம் ஆணிடம் இருந்து 23 உம் சேர்ந்தே கரு உருவாகிறது. இதில் ஏதாவது ஒருவரிடம் இருந்து ஆட்சியான இயல்பு வந்துவிட்டால் போதுமானது, குழந்தையும் அந்த இயல்பினைக் கொண்டிருக்கும்; #விரும்பத்தக்கது. இருவரிடம் இருந்தும் பின்னடைவான நிறமூர்த்தம் வந்து விட்டால், குழந்தையும் பின்னடைவான இயல்பினையே உடையதாகிறது; #விரும்பத்தகாதது. அதற்காக, அந்த இயல்புள்ளவர் தவிர்ந்த மற்றையவர் விரதம் இருத்தல், ஆட்சியான இயல்புகள் குழந்தையை வந்தடைய அதிக வாய்ப்பினை ஏற்படுத்தும். விரதம் இருப்பவர் உடல் ஒடுக்கப்படுவதாலேயே இவ்வாறு நிகழ அதிக வாய்ப்பு உள்ளது.

Monday, July 13, 2020

மனிதனைக் கடவுள் படைத்தான்; கடவுளை மனிதன் படைத்தான்.

ஒரு குட்டிக் கதையுடன் பதிவை ஆரம்பிக்கிறேன். அம்மா ஒரு கதை சொன்னார், தான் ஒருமுறை விடத்தல்தீவு என்னும் ஒரு இடத்திற்கு, பேரூந்தில் செல்லும்போது, அயந்து தூங்கி விட்டதாகவும், திடீரென அவ்விடத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் உள்ள இயேசு காட்சி தந்தததால் திடுக்கிட்டு விழித்துக் கொண்டதாகவும், தன்னால் சரியான இடத்தில் இறங்க முடிந்ததாகவும், அல்லாவிடில் தான் இறங்க வேண்டிய இடத்தைத் தவற விட்டிருப்பேன் என்றும் சொன்னார்.
நான் அதற்கு பின்வருமாறு கூறினேன். அப்பிரதேசத்தில் உள்ள மக்கள் அந்த தேவாலயத்திற்கு தினமும் சென்று வழிபடுபவர்களாக இருப்பார்கள். அதனால் நீங்கள் அந்த இடத்தைக் கடக்கும்போது அவர்களது அந்த எண்ண அலைகள் உங்கள் மனதில் கலந்து அது போன்ற காட்சி கிடைத்திருக்கும் என்றேன். அந்த அலைகளின் தூய்மை உங்களை எழுப்பி இருக்கும், என்றேன். தான் கண்டது அந்த ஊர் தேவாலய இயேசுவை ஆயிற்றே! என்று அம்மா கூறினார். எல்லா இயேசு சிலைகளும் ஓரளவு ஒருமைப்பாடு உடையவையே! அவை அந்த ஊர் கட்டிட அமைப்புகளுடன் கலந்து அவ்வாறு காட்சி தோன்றி இருக்கலாம்.

அம்மா தொடர்ந்தார், முன்னாளில் தான் நடராஜர் நடனமாடியதைக் மனத்திரையில் காட்சியாகக் கண்டேன். இப்போது காண முடிவதில்லை. ஏதோ மந்திரம் சூனியம் செய்து விட்டார்கள் என...
நான் சொன்னேன், அப்போது உங்களுக்கு ஒரு நடனத்தைக் காட்சிப் படுத்திப் பார்க்கும் அளவிற்கு மனம் தெளிவாக இருந்தது. ஆனால், இப்போது அந்த அளவிற்குத் தெளிவு இல்லை. அதனால்தான் உங்களால் அது போன்ற காட்சிகளைக் காண முடிவதில்லை. எதிரிகள் எத்தனை குழப்பங்களும் செய்யலாம். அது உங்கள் தெளிவிற்குத் தடையாக இருக்காது. ஆனால், நீங்கள் அக்குழப்பங்களிற்கு இசைந்து கொடுப்பதுதான் உங்களைக் குழப்புகின்றது. நீங்கள் தடுமாறாமல் நிலையாக இருந்தால், யாராலும் உங்கள் தெளிவை உங்களிடம் இருந்து பறிக்க முடியாது.

நல்ல வேளை, நமது ஊரில் விகாரைகள், மசூதிகள் போன்றன பெரிய அளவில் இருந்திருக்கவில்லை. இல்லையெனில், அல்லா, புத்தர் ஆகியோர் கூட அம்மாவிற்குக் காட்சி கொடுத்திருப்பார்கள்.

இப்போது தலைப்புக்கு வருவோம். கடவுள் இந்த அளப்பரிய பிரபஞ்சத்தை, எண்ணரிய உயிர்களைப் படைத்தார் என்பதை ஐன்ஸ்டீன் கூட ஏற்றுக்கொள்கிறார். நானும் ஏற்றுக் கொள்கிறேன். எனவே கடவுள் இருக்கிறார். எல்லாமாக உறைந்திருக்கிறார் என வைத்துக் கொள்வோம்.

ஆனால், அவர் யார்? எப்படி இருப்பார்? கடவுள் ஒருவரே. ஆனால் என்னுடைய கருத்துப்படி, நாம் பார்ப்பது போல, சிவன், சக்தி, புத்தர் என உருவம் எதுவும் இருந்திருக்கவில்லை. அந்த வடிவில் அவர்கள் வந்து அருளும் புரிந்திருக்க வாய்ப்பும் இல்லை. இஸ்லாமிய மதம் இதைக் கருதியே உருவமற்ற தொழுகைகளை வகுத்திருக்கிறது.

பிறகு, இது போன்ற உருவங்களை கொடுத்தது யார்?
மனிதனே இந்த வடிவங்களைக் கடவுளுக்குத் தந்திருக்கிறான். இதனையே நான் "கடவுள்  மனிதனைப் படைத்தார். மனிதன் கடவுளைப் படைத்தான் என்கிறேன்".

ஏன் இந்த உருவ வழிபாடு? ஏன் இந்தத் பூஜைகள், தொழுகைகள், தேரோட்டங்கள், பஜனைகள்?
மிருகப் பிறவியில் இருந்து மனித வாழ்க்கைக்கு மாற மனிதர்க்கு, பக்தி அவசியமாகும். உயிரை உடலெங்கும் நிறையச் செய்து காரியங்களை சிறப்புறச் செய்ய பக்தி அவசியமாகிறது.  பக்தியின் அவசியம் பற்றி இன்னொரு பதிவு இட்டுள்ளேன். ஆனால், பக்தி செலுத்த எல்லாம் வல்ல ஒரு பொருள் தேவைப்பட்டது. அதுவும் உருவ வழிபாடு ஏற்படுத்தப்பட ஒரு காரணமாகும். அது மட்டுமன்றி, மனிதனின் எண்ணங்கள் வலிமை வாய்ந்தவை. பின்னாளில் செயலுருப் பெறுபவை. அதேபோல மக்கள் எழுச்சியால் ஏற்படும் பேரலை மிகவும் வலிமை (சக்தி) வாய்ந்தது. அது இந்த உலகில் நினத்துப் பார்க்க முடியாத, நுண்ணியமான பல மாபெரும் மாற்றங்களை நிகழ்த்த வல்லது. ஆனால், அது போன்ற ஒருமைப்பட்ட எழுச்சியை, பேரலையை ஒரு தனிமனிதனால் ஏற்படுத்திவிட முடியாது. அது போன்ற போன்ற பேரலை நிகழ்வதையோ, அதில் தானும் பங்கு கொள்வதையோ ஒரு தனி மனிதன் அறிந்திருக்க மாட்டான்.

அதனை நாம் எப்படி ஏற்படுத்துவது என்று சிந்தித்தபோது மனிதன் கடவுளுக்கு ஒரு உருவம் கொடுக்கிறான். மதம் என்று ஒரு பெருங் கூட்டத்தைத் திரட்டுகிறான். அக்கூட்டத்தினர் ஒரே சிந்தையில் அந்த இறைவனை நோக்கி வழிபடுகிறார்கள். எண்ணங்கள் சங்கமிக்கின்றன. இதனையே ஆன்மீகம் என அழைத்தனர். இப்போது ஒவ்வொருவர் எண்ணங்களையும் வேண்டுதல்களையும் அந்த கூட்டத்தில் உள்ள ஒவ்வொருவரும் அவர்களை அறியாமலேயே சுமந்து கொள்கின்றனர். அது சுமையே அல்ல. கூட்டு வேலையின் எளிமை பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. அங்கே காலப்போக்கில் சில சடங்கு, சம்பிரதாயங்கள் வந்து ஒட்டிக் கொள்கின்றன. இவ்வாறுதான் தெய்வங்கள், மதங்கள் தோன்றின.

இறைவனிற்கு சக்தி அளிப்பவன் பக்தன் ஆகின்றான். இறைவன் என்று அந்த உருவச் சிலையைத்தான் கூறுகிறேன். எங்கும் நிறை பரப்பிரம்மத்திற்கு சக்தி அளிப்பவன் மனிதன் என்று அது பொருள்படாது.

இன்று இது போன்ற எழுச்சியை ஏற்படுத்தும் சக்தி பகுதியாக ஊடகங்கள் கையில் உள்ளது. அதனால் பல பாரிய மாற்றங்களைக் எற்படுத்த முடியும். ஆனால், பக்தர்கள் வேண்டுதல்களை அது நிறைவேற்றற் பாலற்றது. இதை அறிந்து ஊடகங்கள், திரைப்படங்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டும்.

”மெய்ப்பொருள் காண்பதறிவு”

கீதை, என் பார்வையில்

”அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்பது போல அறிபவர் பார்வைக்கு ஏற்ப அறிகின்ற பொருள் மாறுபடும். இது பற்றி வார்த்தைக்கு உயிர் கொடுப்பவன் வாசகன் எனும் ஒரு பதிவில் விரிவாகக் கூறியுள்ளேன். கீதையின் சாரம் என்னுடைய அறிவிற்கு வேறொரு கோணத்தில் புலப்படுகிறது. அதனை இங்கு பகிர்கின்றேன். அதுவே கீதையை நாம் பார்க்க வேண்டிய கோணம் என்றும், கீதையின் அர்த்தம் என்றும் நான் நினைக்கின்றேன்.

கடவுளாக நாம் வழிபடும் கிருஷ்ணர் எனப்படுவது வெறும் கற்சிலைகள் அல்ல. கண்ணன் குழந்தையாகப் பிறந்தது முதல் மகாபாரத யுத்தம் நிகழ்த்தியது வரையான கதைகளை நாம் அறிவோம். அக்கதைகளை வழிபடுகின்றோம்; அவன் போற்றிய தர்மங்களை வழிபடுகின்றோம்; அவன் நின்ற மார்க்கத்தை  வழிபடுகின்றோம். அக்கதைகளில் வரும் கதா பாத்திரங்களாக நாம் பகவானைக் காண்கின்றோம். அவனது கொள்கைகளையும் தர்மங்களையும் சிந்தையேற்றுகின்றோம். நாமும் அந்த மார்க்கத்தில் நிற்க விளைவதுதான் உண்மையான வழிபாடாக இருக்கும். அக்கதைகள் இருக்கும்வரை ஸ்ரீ கிருஷ்ணரும் அருள் பாலித்துக் கொண்டே இருப்பார்.

புராணங்களில் கிருஷ்ணர் பின்வருமாறுதான் சித்தரிக்கப்படுகிறார். எல்லோர் உள்ளங்களிலும் உறையும் பரமாத்மா விஷ்ணு, கருணையே வடிவானவர், தர்மமே உருவானவர். நமது சிந்தையில் , நமது சுய விருப்பு வெறுப்பு மீறி மேன்நின்று #நமக்குள்ளிருந்தே உண்மையை உரைக்கிறார். "நீ என்னை அடையும்போது நீயே யாவும் ஆகின்றாய். நீ மேன்நிலை அடைந்து விட்டாய். நீ இனித் தர்மத்தை நிலைநாட்டுவதற்கு உரியவன். இதை நீ பிறர்க்கும் போதிப்பாய். அவர்களும் என்னை அடைய வழிகாட்டுவாய்" என எம்மையே செயலாற்றுமாறு பணிக்கிறார். இவைதான் பரம்பொருளின் இரகசியங்கள். உள்ளத்திலே உறையும் பரமாத்மாவை வெளியில் தேடிப் பயன் இல்லை. தர்மத்தின் மேலான சக்திகள் யாவும் சுருங்குகிறது அங்கே!

கீதா சாரத்தை மேலும் விரிவாக பார்ப்போம்,
கிருஷ்ணர் என்பதை ஒரு தனிப் பொருளாக வெளியிலேவைத்து நாம் பார்க்கக் கூடாது. அவர் நாம் மனச்சுத்தம் அடைந்து, அவரைச் சரணடையும்போது நம்முள் ஒன்றுபட்டவர் ஆகின்றார். நாம் நமது அற்ப எண்ணங்களைக் கைவிட்டு தர்ம மார்க்கத்தைக் கைக்கொள்ளும்போது, அந்த தர்மம், நமது சிந்தையிலேயே மேன்நின்று கிருஷ்ணராக நமக்கு வேண்டிய ஞானத்தினை உபதேசிக்கிறது. நீங்கள் கிருஷ்ணரைச் சரணடையும்போது அவனது தர்மங்களைத் தாங்கியவன் ஆகின்றீர்கள். இப்போது அவர் வேறு நீங்கள் வேறு அல்ல. இப்போது கண்ணன் பார்த்தீபனுக்கு உரைத்த கீதையின் சாரத்தை உங்கள் அற்பஅறிவு யாவற்றையும் கடந்து, உங்களுக்கு நீங்களே, அனைத்திற்கும் மேல் நின்று, உரைப்பதாகச் சொல்லிப் பாருங்கள். இப்போது நீங்கள் பிறப்பு, இறப்பினைக் கடந்தவர்கள். கிருஷ்ணரின் தர்மத்தில் வாழ்பவர்கள்.
  1. பிறந்தவர்கள் இறக்கிறார்கள். இறந்தவர்கள் பிறக்கிறார்கள். ஆனால் நான் பிறப்பு இறப்பு அற்றவன்; அனைத்து உயிரினங்களுக்கும் மேலானவன். நியாயங்கள் மீறப்பட்டு அநியாயம் தலைதூக்கும்போது நான் அவதரிக்கிறேன். எவர் என்னை எவ்வடிவில் வழிபடுகிறார்களோ அவர்களுக்கு நான் அவ்வடிவிலேயே அருள் புரிகின்றேன். (2:274:6,8,11)
  2. என்னைப் புலன்களால் உணர முடியாது. ஆனால், நான் எங்கும் நிறைந்திருகின்றேன். அனைத்து உயிர்களிலும் உறைந்திருக்கும் ”ஆத்மா” நானே! அனைத்து உயிர்களுக்கும் தொடக்கம், முடிவு, இடை நானே!  உயிர்களின் பிறப்பிற்கும் மரணத்திற்கும் காரணம் நானே! பிரம்மத்திற்கும் அழியா மோட்சத்திற்கும் ஒப்பற்ற பேரின்பத்திற்கும் உறைவிடம் நானே! (9:4, 10:20,39,34, 14:27)
  3. யாகங்களையும் தவங்களையும் ஏற்பவனாகவும் அகில லோக நாயகர்களுக்கு மேலானவன் ஆகவும் அகில பிராணிகளுக்கு உற்ற நண்பன் ஆகவும் உள்ளேன். யாவும் என்னிடம் இருந்தே விரிகின்றன. இதை அறிந்தவர்கள் அன்புடன் என்னை வழிபடுகின்றார்கள். என் பக்தன் என்னையே வந்தடைகின்றான். (5:29, 10:8, 7:23, 10:10, 16:65)
  4. யோக மாயையினால் நன்கு மூடப்பட்டுள்ள எனது அழிவற்ற, ஒப்பற்ற, பரசொரூபத்தை, பக்தி குறைந்தவர்கள் அறிவதில்லை. என்னிடத்து மனதை வைத்து, என்னிடம் பக்தி பூண்டு, என்னை ஆராதித்து, என்னையே வணங்குபவர்கள் என்னை அடைவார்கள். அதிக பாவத்தைச் செய்தவனாக இருந்தாலும் ஞானப்படகால் அப்பாவப் படகைக் கடப்பாய். எனது பக்தன் என்றும் நாசமடைந்ததில்லை. (7:25, 9:34: 4:36, 9,30,31)
  5. மன அடக்கக் குறைவால் என்னை உணரத் தவறியவன் எப்பாவமும் செய்தவன் அல்லன். ஆகவே, அவனும் புண்ணியம் செய்வதற்குரிய உலகங்களில் வாழ்ந்து பின் நல்லோர் வீட்டில் பிறந்து, முற்பிறவி ஆன்மீக அறிவைப் பெற்று, என் பால் மேலும் ஈர்க்கப்பட்டு பல பிறவிகள் எடுத்தேனும் பக்குவமடைந்து, என்னை வந்தடைகிறான். (5:29, 10:8, 7:23, 10:10, 16:65)
  6. யார் எனக்கு இலை, மலர், கனி, நீரை பக்தியோடு அர்ப்பணம் செய்கிறார்களோ, அக்காணிக்கையை நான் அன்புடன் ஏற்றுக் கொள்கிறேன். என்றும் என்னையே தியானித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு, என்னை அடைவதற்கான யோகசேமங்களையும் புத்தியையும் வழங்கி என்னை அடையச் செய்கிறேன். என்னை உள்ளபடி அறிந்து வழிபடாதவர்கள், துன்பம் நிறைந்த பிறவிச் சுழற்சியின்படி வாழ்ந்து, அதிலிருந்து  விடுபட முடியாமல் உழல்கின்றனர். (9:26,22, 10:10,11, 9:24)
  7. எவர் தங்களின் பிறவிக் கடமைகளை எனக்கு அர்ப்பணித்து (என்னுடைய கடமைகளைத் தங்களின் பிறவிக் கடமைகளாக்கி), என்னையே பரகதியாகக் கொண்டு என்னையே வணங்குகிறார்களோ, அவர்களை மரணக் கடலிலிருந்து விடுபட்டவர்கள் ஆகிறார்கள். மனிதன் தனது இயல்பான கடமையால் என்னை அர்ச்சித்தும், அப்பக்குவ நிலையை அடைகிறான். பக்குவம் பெற்ற மகான்கள் என்னை வந்தடைந்த பின், துன்பத்துக்கு இருப்பிடமாகிய பிறவிக் கடலில் வீழ்வதில்லை. (12:6,7, 18:46, 8:15)
  8. இருந்த போதிலும், உலக ஆசைகளின் பொருட்டு மதி மயக்கம் கொண்டவர்கள் விரைவில் பலன் பெறும் பொருட்டு பிற தெய்வங்களை வழிபடுகின்றனர். அப்போதும் நான் அவர்களின் நம்பிக்கையின்படி அவர்கள் வேண்டியவற்றைப் பெற வைக்கிறேன். உண்மையில் அவை அனைத்தையும் வகுத்து வழங்குவது நானே! இதை உணராத அற்ப அறிவுடைய அவர்கள் என்னை அடைவதில்லை. மாறாக, அவர்கள் வழிபட்டவர்களையே அடைகின்றனர். மீண்டும் மீண்டும் ஆசைகொண்டு துன்பத்தை அனுபவிக்கின்றனர். (4:12:7:20-23:9:24,25)
  9. இங்ஙனம் உண்மையை அறியாதவர்களும் தத்துவத்தை உணர்ந்த பெரியோரிடம் கேட்டறிந்து அதில் பெரும் நம்பிக்கை வைத்து வழிபட்டு மரணக் கடலைக் கடக்கின்றனர். “நான்”என்னும் கர்வத்தைக் களைந்து ”உன்னுடையது” என்பதைக் கைவிட்டு, “எல்லாமே இறைவனுடையது” என்கிற தூயபக்தியோடு, சர்வ வல்லமை பொருந்திய என்னை சரணடை, எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிப்பேன். என்னிடம் மனதை வை, என் பக்தனாக இரு; என்னை வழிபடு; என்னையே அடைவாய். கீதையை அவமதிக்காது குறை காணாது, ஆர்வத்தோடு கேட்டு வந்தாலே மனிதன் பாவங்களிலிருந்து விடுபட்டு, புண்ணியம் செய்தவர் உலகை அடைகிறான். (13:25,18:66,65,71)
நன்றி: www.wijeygeethainbrief.com

அவனது மார்க்கத்தை நாம் கைக்கொள்ளும்போது அவனுடைய தர்மங்களை நாம் வழிபடும்போது, கண்ணன் தேரோட்டியாக நம்முள் இருந்து நமது மனம் எனும் தேரை ஓட்டுகின்றான். நமக்குச் சரியான நேரத்தில் சரியான தீர்மானங்களை அவன் வழங்குவான். அதை  விடுத்து உள்ளே அவனிருக்க வெளியே சிலைகளில் தேடிப் பயனில்லை. இதுவே இறை வழிபாட்டின் தார்ப்பரியம் ஆகும்.

எண் இரண்டும் ஆரோக்கிய வாழ்வும்

நாளுக்கு இரண்டு, வாரத்துக்கு இரண்டு, மாசத்துக்கு இரண்டு, வருடத்திற்கு இரண்டு என்று ஆயுள்வேதத்தில் சுருக்கமாகக் கூறப்படுவது என்ன?
நாளுக்கு இரண்டு என்பது ஒருநாளைக்கு இருமுறை மலம் கழிக்கவேண்டும்.

வாரத்திற்கு இரண்டு என்பது வாரத்தில் இரண்டு முறை எண்ணை தேய்த்து குளிக்க வேண்டும். இதனையே ஔயாரும் ”சனி நீராடு” என்றார். சனிக்கிழமைகளில் நல்லெண்ணெயை உடல் முழுக்க தேய்த்து நீராட வேண்டும்.

மாதத்திற்கு இரண்டு என்பது மாதத்தில் இரண்டு முறைதான் மனைவியுடன் உடலுறவு கொள்ளவேண்டும் என்பதாகும். இதனை அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் நூலில் கண்ணதாசன், ”வரவு 15 நாள் செலவு 1 நாள்” என்றும் கூறியுள்ளார்.

வருடத்திற்கு இரண்டு என்பது வருடத்தில் இரண்டு முறை பேதிக்கு சாப்பிட்டு வயிற்றை சுத்தப்படுத்த வேண்டும்.

Sunday, July 12, 2020

உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கையில்...

எல்லோருக்கும் தனது வருங்கால கணவன் அல்லது மனைவி பற்றி அதிக கனவுகள் இல்லை என்றாலும், அவர் இப்படித்தான் நடக்க வேண்டும், இப்படி எல்லாம் நடக்கக் கூடாது என்று ஒரு சில தவிர்க்க முடியாத நிபந்தனைகள் இருக்கும். இவை ஒத்துப் போகாவிடில் வாழ்க்கை கசக்கும். சிலருக்கு எதுவும் சரி என்ற மனநிலையும் இருக்கலாம். ஆனால், ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தனது எதிர்பார்ப்புகளை தனது நடத்தைகளில் வெளிக்காட்டும்போது அதை மெச்சும் பெண்ணோ அல்லது ஆணோ, நெருங்கிச் சென்றால் மட்டுமே காதல் சாத்தியமாகும்.

இதனால்தான் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமாக (arrange marriage) இருந்தாலும் கூட, திருமணத்துக்கு முன்னர் சில தினங்கள் பழகிப் (dating) பார்ப்பதை நான் பரிதுரைப்பேன். ஆனால் பழகுதல் (dating) என்றால் நீங்கள் நினைப்பது போன்றது அல்ல. கருத்து, நடத்தை ஒருமைப்பாடு அறிய ஒன்றாக வெளியே செல்வதையும் அவ்வாறு குறிப்பிடுவார்கள். அதோடு ஆண்கள் எல்லோரும் பெண்களை ஏமாற்றுவதற்காக அலைபவர்கள் என்று ஒட்டுமொத்தமாக ஒரேமாதியாக எடைபோடுதல் (stereotyping) சரியானதல்ல; அது தவறு. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அனைத்தையும் ஒரேமாதியாக எடைபோடுதல் (stereotyping) தவறான முடிவுக்கே இட்டுச் செல்லும்.

வளர்ச்சியடையாத நாடாக இலங்கையின் அபாயம்

  • வளர்ச்சியடைந்த நாடுகளில் தினம் பில்லியன் கணக்கில் பணம் அச்சிடப்பட்டுக் கொண்டே உள்ளது.
  • இலங்கை தொடர்ச்சியாகக் கடன் வாங்கிக் கொண்டே உள்ளது.
  • இலங்கையின் வெளிநாட்டு நாணய மாற்றுவீதம் அல்லது அந்நியச் செலாவணி வீழ்ந்து கொண்டே உள்ளது.
  • உள்ளூர்ப் பொருளாதார வளர்ச்சிகள் ஏதும் இல்லாமலேயே, பயனற்ற பல அபிவிருத்தித் திட்டங்களை அரசு கடன் வாங்கி வாங்கி செய்துகொண்டே இருக்கிறது.
  • இதிலே வெளிநாட்டு வர்த்தகம், நாணய மாற்றுவீதம், பொருளாதாரம், அந்நியச் செலாவணியில் ஊழல் நடந்து கொண்டே இருக்கிறது.
  • இலங்கையிலுள்ள பொறுப்பற்ற, முட்டாள் பொருளாதாரவியலாளர்கள் அவ் ஊழல்களை இனம் காணமுடியாமல் அல்லது இனங்கண்டும் காணாதது போல இருக்கிறார்கள்.
  • வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒருவருக்கு இலங்கை வழங்கும் கூலிகள் போல 10 மடங்கு கூலிகள் வழங்கப்படுகின்றன. இலங்கை போன்ற வளர்ச்சியடையாத நாடுகளில் உள்ளவர்களின் கடின உழைப்பினைச் சொகுசாக வளர்ச்சியடைந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றனர்.
  • இலங்கை அரசோ திரைசேரி தீர்ந்து விடுவதாகக் கூறி அடிக்கடி கடன் வாங்குவதில் குறியாக உள்ளது அல்லது வங்கிகளில் உள்ள மக்கள் பணத்தினை வாங்கி திரைசேரியை நிரப்பிக் கொள்கிறது  அல்லது எப்போதும் மக்கள் அடிமையாக உள்ள துறைகளான தொலைத்தொடர்பு, வாகன வரி போன்றவற்றை உயர்த்துகிறது அல்லது பணத்தினை அச்சிடுகிறது. மீண்டும் இலங்கைப் பணத்தின் பெறுமதி வீழ்கிறது.

இலங்கைப் பிரஜை ஒவ்வொருவரும் அவருக்கே தெரியாமல் பல லட்சங்களைக் கடன் சுமையாக மேற்கூறிய வடிவங்களில் சுமந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இது ஒரு பின் தங்கிய நாடு; உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வழங்க இயலாத நாடு; தன் உழைப்பினை வளர்ச்சியடைந்த நாடுகளுக்குத் தாரை வார்க்கின்ற நாடு; புத்தி இல்லாதவர்களின் உழைப்பை புத்தி உள்ளவர்கள் பல வகையில் கொள்ளையிட்டுச் சொகுசு வாழ்க்கை வாழும் நாடு; நாட்டையே கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் வாழும் நாடு, கடன் சுமை நிறைந்த நாடு.

புத்தியில்லாத நான்கு இனங்கள், இந்த நாட்டினிலே உள்ள வளங்களை மட்டும் கருத்தில் கொண்டு (சுரண்டுவதற்காக),  இப்படிப்பட்ட நாட்டில் உரிமை கோரிக் கொண்டு, அந்தக் கடன் சுமையில் எனக்கும் கொஞ்சம் தா! எனக்கும் நாட்டின் சொத்துக்களில் உரிமை உண்டு. எனக்கும் அதிகாரம் வேண்டும் என்று சண்டை  செய்து கொண்டு இருக்கின்றன. இதில் என்ன கொடுமை என்றால் தமிழினமோ தன்னை அழிப்பதற்காக வாங்கப்பட்ட கடன்களையும் தானே தீர்ப்பேன் என்று கங்கணம் கட்டுகிறது. இவை அனைத்தையும் நன்கு கவனித்தால் சொத்துக்களையும் வளங்களையும் உள்ளிருந்து பார்க்கும் குருட்டுக் கூட்டம் அதற்காகச் சண்டை செய்யலாம். ஆனால், இது ஒரு சபிக்கப்பட்ட நாடு ஆகும். உண்மையில், எனக்கு இந்தக் கடன் வேண்டாம் நீயே பாதிப் பொறுப்பை ஏற்றுக்கொள் என்று புறந் தள்ளப்பட வேண்டிய நாடு இது.

சுயநலவாதம் பாராட்டும், குறுகியகால மகிழ்ச்சியான வாழ்க்கையில் மட்டும் லயித்து இருக்கின்ற இந்நாட்டுப் பிரஜைகளுக்கு அது புரியாது. இல்லை, பிரஜைகள் என்று ஒட்டு மொத்தமாக எல்லோரையும் நான் குற்றம் சொல்ல மாட்டேன். உண்மையில் கீழ்மட்டங்களில் வேலை செய்யும் சிங்களத் தொளிலாளர்கள் பற்றி நான் அதிகம் கவலை கொள்கிறேன். அவர்கள் வேலைகள் மிக நேர்த்தியானவை. ஆனால், அதற்கான ஊதியம் மிகக் குறைவு. உதாரணத்திற்கு, கடின உழைப்பினை வழங்கும் ஒரு சிங்கள மேசன் பெறும் கூலி ரூபா 1200 ஆகும். ஆனால், இங்கு தமிழ் பிரதேசங்களில் பெரும் சிரத்தை இன்றி வேலை செய்யும் மேசன் பெறும் கூலி ரூபா 1500 ஆகும். இன்னும் பல இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இதனை நான் பலரிடமும் ஆலோசித்துள்ளேன். அவர்கள் கூறியவை சில... ரயில்பாதை ஓரங்கள், தாழ்வான பகுதிகள் போன்ற இடங்களில் காணப்படும் சிங்களவர்களின் அத்திவாரமே இல்லாத, தாழ்வான வீடுகளைப் பார்க்கும்போது பெரிதும் மனவருத்தமாக இருந்ததாகப் பலர் கூறி இருக்கின்றனர். எத்தனையோ இடங்களில் அடிக்கடி மண்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுப் பல பொருட் சேதங்களும் பல உயிர்ச் சேதங்களும் ஏற்படுகின்றன. ஆனால் அவற்றை அரசு கண்டும் காணாமல் விடுவதாகவும் நகரப் புறங்களையே அடிக்கடி கடன்கள் வாங்கி அபிவிருத்தி செய்வதாகவும் கூறியிருக்கின்றனர். ஒரு பக்கம் ஒரு அரசு கடன் வாங்கி தாமரைக் கோபுரம் அமைக்கிறது. இன்னொரு பக்கம் இன்னொரு அரசு கடன் வாங்கிக் கடலிலே மண்போட்டு சிங்கப்பூர் அமைக்கிறது. இவை எல்லாம் நாட்டின் உண்மையாக அபிவிருத்திக்காக அவர்களே தொடங்கியவை அல்ல. பல பழைய கடன்களின் அழுத்தம் மற்றும் பல உள்நோக்கங்களுக்காகவே அத்திட்டங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

வாங்கப்படும் கடன்கள், இலங்கை ஈட்டும் பொருளாதாரம் தமிழர்களிற்கும் கிட்டுவதில்லை; சிங்கள மக்களுக்கும் கிட்டுவதில்லை. எனில் அது எங்கே போகிறது. இடையிலுள்ள முதலைகள் அவற்றைச் சாப்பிட்டுவிடுகின்றன. அரசியல்வாதிகள், தரகர்கள், இறக்குமதியாளர்கள், வெளிநாட்டவரிடம் ஊதியம் பெற்று நாட்டையும் நாட்டின் வளங்களையும் விற்பவர்கள் மற்றும் காட்டிக் கொடுப்பவர்கள் என இந்த முதலைகள் பல வகைப்படுகின்றன.

ஏன் தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்த நாடுகள் கடன்களை வாரிக் கொடுத்துக் கொண்டே உள்ளன? அதற்கும் காரணம் அதுதான், அதிக கடனினை ஒரு நாடு கொண்டிருக்கும்போது அதனால் மீண்டு வரவே இயலாது. அந்நாடு தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து வரும் நாடாகவே இருக்கும். அப்போதுதான் அந்த வளர்ச்சியடைந்த அதனால் கிட்டும் அனுகூலங்களை அனுபவிக்க முடியும். கடனாக அவர்கள் கொடுப்பதில் பெரும்பகுதி இங்கேயே ஈட்டப்பட்டவையாகத்தான் இருக்கும்.

இவற்றையெல்லாம் அறிந்து கொள்வதற்கு மட்டுமே எனக்கு அறிவு போதுமாக இருந்தது. அன்றி, இவற்றை எல்லாம் தீர்க்கும் அறிவு எனக்கு இல்லை. அதற்கான துறையும் என்னுடையதல்ல. ஆனால், ஒரு பிரஜையாக அந்தப் பொறுப்பில் சிறுபங்கு என்னுடையது. நாளாந்தம் பத்திரிகை கூட ஒழுங்காக வாசிக்காத நான் அறிந்தவையே இத்தனை என்றால், இவை தவிர நான் அறியாத எத்தனையோ கதைகள் இருக்கிறது. தெற்கில் முஸ்லிம்கள் வாழும் பகுதி எப்படி இருக்கிறது மற்றும் அவர்கள் அனிபவிக்கும் கஸ்டங்கள் எத்தனை என்று நான் பார்த்தது கூட இல்லை. என்னுடைய சொந்த இடமான வடக்கில் கூட நான் சொற்ப இடன்களையே பார்வையிட்டிருக்கிறேன். இப்படி வடக்கிலிருந்து தலைநகர் கொழும்பு செல்லும் பாதையுடன் கொழும்பு, கதிர்காமம், மன்னார் (திருக்கேதீச்சரம்) வவுனியா தவிர ஏனைய இடங்களை நான் உதாரணத்திற்குக் கூடப் பார்த்தது கிடையாது.

இப்படி எல்லாம் இருக்க, ஒரு புத்தியுள்ளவரின் தெரிவு யாதாக இருக்கும் எனில் எப்படியாவது தன்னுடைய தகமைகளை வளர்த்துக் கொண்டு பிறிதொரு வளர்ச்சியடைந்த நாட்டில் போய் குடியேறுவதாகவே இருக்கும். ஆகக் குறைந்தது அவுதிரேலியா இற்காவது சென்று இந்தக் கடன் சுமைகளில் இருந்து தப்பி விட வேண்டும். கடன் சுமை என்றால் அது உள்நாடு வாங்கிய கடன் மட்டுமல்ல, வளர்ச்சியடைந்த நாடுகளால் தமது சொகுசுக்காகத் திணிக்கப்படும் பல சுமைகளையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

இப்படி இருக்க இலங்கை அரசு ஒண்டும் இந்தச் சுமைகளைத் திணிப்பதில் குறைந்தது அல்ல. இங்குள்ள சிறுபான்மைகள் இங்கு வாழப் பூரண சுயந்திரம் கிடையாது என்று வெளிப்படையாக சட்டபூர்வமாக அறிவித்தால் அவர்கள் சென்று குடிபுகுவதற்கு கை நீட்ட எத்தனையோ நாடுகள் தயாராக உள்ளன. ஆனால், அப்படி இங்கு எந்த அறிவிப்பும் கிடையாது. ஆனால் எல்லாம் உட் குடைச்சல்களாக இருந்துகொண்டே இருக்கின்றன. தப்பித்துப் போகவும் முடியாது. நிம்மதியாக வாழவும் முடியாது. அவர்கள் அதிகாரத்தைக் கூடப் பிரித்துத் தர முடியாது என்று கூறியபோதே எல்லாம் வெளிச்சம் ஆகிவிட்டது, இவர்கள் சிறுபான்மையினரை அடிமையாக்கி அவர்தம் உழைப்பைச் சுரண்டுவதற்கே அவர்களை இன்னமும் விட்டு வைத்திருக்கின்றனர் என்பது.

சிறுபான்மையினருக்கு உரிமை வேண்டாம், அதிகாரம் வேண்டாம். அவர்தம் தலையில் கடன் சுமை வேண்டும். அவர்தம் உழைப்பு வேண்டும். வெளிநாட்டில் இருந்து அவர்கள் சார்பாக வரும் அந்நியச் செலாவணி வேண்டும். பிறகு எல்லோருக்கும் சம உரிமை என்று பறைசாற்றிக் கொள்வது. ஆனால், வெளிவரும் அரச கட்டளைகள் யாவும் சிங்களத்தில் மட்டுமே வெளியாகின்றன. தேரர்கள் சிலர் சிங்கள பௌத்த நாடு என்று கூவுகின்றனர். பிறகு சிறுபான்மையினர் யார். அவர்களை இன்னமும் ஏன் வைத்திருக்கின்றனர். இது ஒரு ஜனநாயக சோசலிசக் குடியரசு நாடு என்பதைச் சொல்லக் கேட்டால் கூச்சமாக இருக்கிறது.

இந்தப் பழி என்பதை அப்படியே தூக்கி சிங்கள மக்கள் தலையில் போட்டுவிட நான் ஒன்றும் அறிவற்றவன் அல்ல. இப்படி என்றால் என்னவென்றே தெரியாமல் அன்றாடக் கடமைகள் செய்யும் சிங்கள மக்கள்தான் பெரும்பான்மையானவர்கள். ஆனால் இனம் என்று குரல் கொடுத்தால் ஓடி வந்து குடை பிடிக்கும் முட்டாள்களாக அவர்கள் வளர்க்கப்பட்டு இருக்கின்றனர். சில இனவாதம் பிடித்த, இனத்தை வைத்து தமது அரசியல்களைக் கட்சிதமாக முடித்துக் கொள்பவர்கள் எண்ணம் இதுதான். அவர்களுக்கு தாங்கள் முதன்மை வகிக்க வேண்டும். தாங்கள் முதன்மை வகிக்க வேண்டும் எனில் தாங்கள் மட்டும் இருந்து என்ன பயன். அவர்கள் போடும் கூத்தைப் பார்த்துப் பாராட்டுவதற்காகவே சிறுபான்மையினரை விட்டு வைத்திருக்கின்றனர்.

இலங்கையில் இலவசக் கல்வியின் நிலை என்ன? இலங்கையில் வழங்கப்படும் இலவசக் கல்வியை அனைவரும் மெச்சுகின்றனர். என்னுடைய பார்வையில் அது முற்றிலும் மாணவர்களை பலவீனமாக்குகின்றது. வெளிநாடுகளில் உள்ள இளைஞர், யுவதிகள் குறைந்த வயதில் #தேவையான தொழிற் கற்கையைப் பூர்த்தி செய்து வேலை செய்யத் தொடங்கிவிடுகின்றனர். தனியாரில் குறைந்த வயதில் முடிக்கக் கூடிய பட்டப் படிப்புகள் இழுத்தடிக்கப்படுகின்றன. மனிதனின் அதிக ஆக்க பூர்பமான சிந்தனைக் காலங்கள் யாவும் பல்கலைக் கழகங்களில் வீணடிக்கப்படுகின்றன. இந்த முறைக்கும் காரணமும் அந்நிய நாட்டவர்தான். இலங்கை ஏன் இன்னும் வளர்ச்சியடையவில்லை என்பது பற்றி இன்னொரு பதிவு செய்துள்ளேன். அதோடு, சிறு வயது முதல் கற்ற கல்வி எத்தனை வீதம் சராசரி வாழ்வில் பயன்படுத்தப்படுகிறது என்றால் மிகவும் சொற்பமே. பிரயோகக் கல்வியை மேம்படுத்தாமல் எப்படி ஒரு நாடு வளர்ச்சியடைய முடியும்.
இலவசமாகக் கிடைப்பதால் கல்வியின் மதிப்பு அனைத்து மாணவர்களுக்கும் விளங்குவதில்லை. அதன் தேவை என்ன என்பதை மறந்து வெறுமனே கடமை நிமித்தம் பாடசாலை செல்கிறார்கள். அக் கல்வி எந்தப் பயனும் இல்லாமல் காற்றோடு காறாகப் போகின்றது. இலவசக் கல்வி நிறுத்தப்பட்டு, நல்ல புள்ளி வாங்கும் பிள்ளைகளுக்கும் நல்ல செயல்திறன் உள்ள பிள்ளைகளுக்கும் 100% வரை புலமைப்பரிசில் வழங்குதல் இதனைத் தவிர்க்க உதவும். அப்போதுதான் அதற்கு இது போன்ற கோமாளித்தனமான போட்டி இருக்காது; இலவசக்கல்வி என்ற இவர்கள் போடும் ஆட்டமும் அடங்கும்; படிக்கும் பிள்ளைகள் தொல்லைகள் இன்றிச் சுதந்திரமாகப் படிக்கவும் முடியும்; படிப்பின் அருமையும் மாணவர்களுக்குப் புரியும். ஆனால், எத்தனையோ வீணான திட்டங்களுக்கு செலவு செய்யும் நிதியைவிட இலவசக் கல்விக்கான நிதி புறக்கணிக்கத்தக்கது என்று சிலர் வாதிடுகின்றனர். அதுவும் ஒரு வகையில் உண்மையே! ஆனால் பாடத் திட்டங்களை மாற்றுதல் மிக அவசியம், என்பதை யாரும் மறுக்க முடியாது.

நான் ஒரு மொரட்டுவப் பல்கலைக் கழகப் பொறியியல் பீட மாணவன். நான் இந்த நாட்டின் மீது மிகுந்த அக்கறை கொண்டவனாக இருந்தேன். என்னுடைய ஒவ்வொரு பார்வையிலும் இந்த நாட்டின் வளர்ச்சியை எப்படி மேம்படுத்துவது என்பதும் ஒரு எண்ணமாக இருந்து வந்தது. தன்னிறைவை இந்த நாடு அடைய முடியாமை குறித்தும் வருத்தமாக இருந்தது. இதே நாட்டில் இலவசக் கல்வியில் கற்றவன்; கற்பவன். அந்தக் கடன்கள் யாவும் எனக்கு ஒரு சுமையாகவே இருந்து வந்தது. பிறகு அனைத்தும் எனக்குத் தெளிந்து கொண்டது. இந்த நாட்டிலேயே உழைத்து நான் நினைத்த அளவிற்கு முன்னேற முடியாது என்பது எனது எண்ணமாகும். அதற்குக் காரணம், இந்த நாடு வளர்ச்சியடைந்து வரும் நாடு, இங்கேயும் அதுதான் இடிக்கிறது. அதனால், வெளிநாடு சென்று உழைத்தால் 10 மடங்கு கூலி தருவார்கள். அதனில் சற்றுச் சேமித்து இங்கே அனுப்பினால் அப்போதும் அந்த கல்வி கற்ற கடன் தீரும் என்பது எனது எண்ணமாக இருந்தது. காரணம், வெளிநாட்டுப் பணம் உள்ளே வரும்போது அந்நியச் செலாவணி வருகிறது அல்லவா. ஒருபோது முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச வெளிநாட்டில் இருந்து உள்நாட்டிற்குப் பணம் அனுப்பவர்கள், பொன் முட்டை இடும் வாத்துகள் என ஒரு ஊடக நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

பின்னாளில் எனது எண்ணமும் பிழையாகிவிட்டது. நான் கற்பது பொறியியலில் மென்பொருள் துறை. இதில் அநேகம் வளர்ச்சியடைந்த நாட்டு மென்பொருள் நிறுவனங்களே தமது தேவைகளை இலங்கையில், குறைந்த ஊழியத்தில் செய்து கொள்கிறார்கள். இதனால், வளர்ச்சியடைந்த நாடுகளில் பலர் வேலைவாய்ப்பை இழந்து, தமது வேலைகளைக் கீழைத்தேய நாடுகளுக்குத் தர வேண்டாம் எனப் போராடுவதான செய்திகளை நான் பார்த்திருக்கிறேன். அதிலும் ஊழல்தான் நடக்கிறது இங்கே. சராசரியாக ஒரு பொறியாளனுக்கு இங்கே வழங்கப்படும் ஊதியம் 1.5 லட்சம் ரூபா(குறைந்தது 80,000 முதல் கூடியது 8,9 லட்சங்கள்)  என்று இருந்தால், அந்த வேலையைச் செய்து கொடுப்பதற்காக வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து 4 லட்சம் ரூபா வரை பெறப்படுகின்றது. எனவே நாட்டுக்குள் 4 இலட்சம் ரூபா வந்து விட்டால், அதற்கான அந்நியச் செலாவணியை நாம் நாட்டுக்குப் பெற்றுக் கொடுத்து விட்டோம்.

இதனால்தான் ஏனைய பொறியியல் துறைகள் போலல்லாது மென்பொருள் துறை இலங்கையின் பொருளாதாரத்தில் கணிசமான பங்கு வகிக்கிறது. ஆனால், நமக்குச் சராசரியாக 1.5 இலட்சம் ரூபாயை வழங்கப்படுகிறது. மீதிப் பணத்திற்கு என்ன நிகழ்கிறது. அத்தனையும் கொள்ளைதான். பிறகு, மென்பொறியாளர்களை வெளிநாட்டுக்குச் செல்லவிடாமல் பல மறைமுகத் தடுப்புகள் ஏன்? அங்கு செல்பவர்கள், தமது உறவுகளுக்குப் பணம் அனுப்புவார்கள் அல்லவா? இங்குதான் சிக்கல் இருக்கிறது. ஒருவருக்கு சிங்கப்பூரில் 8 லட்சம் ரூபா ஊதியம் அளிக்கப்பட்டால், அவர் தன் வாழ்க்கைச் செலவுகள் போக 2.5 இலட்சம் ரூபாயை இலங்கைக்கு அனுப்ப இயலும் என்பது என் கணிப்பு. அது 1.5 இலட்சங்களை விட அதிகமாயிற்றே. ஆனால், அதனால் அந்நியச் செலாவணியில் வருவாயில் 1.5 லட்சம் ரூபாய் நட்டம் ஏற்படுகிறதே!

இப்போது புரிகிறதா? இன்னமும் ஏன் சிறுபான்மையினருக்கு இன்னமும் இங்கே உரிமை, அதிகாரம் வழங்காவிடிலும் வைத்திருக்கிறார்கள் என்று. உள்ளே இருந்து பார்த்தால் எதுவும் புரியாது. சற்று வெளியே வந்து ஜோசித்துப் பார்த்தால் நான் கூறியவற்றில் உள்ள அனைத்து உண்மைகளும் தெரியும். இங்குள்ள சிறுபான்மை மக்களில் 40 வீதமானவர்களிற்கு தமது சொத்துக்களை விற்றால், முகவர் நிறுவனங்கள் மூலம் அவுஸ்ரேலியாவிற்குச் செல்வதற்கான பணம்  கூடக் கிடைத்துவிடும். இங்குள்ள மக்களை அகதியாக அரசு அறிவித்தால் விமானச் சீட்டுப் போதும், நண்பர்கள் உறவுகள் என்று அனைவருமே இடம் மாற இயலும். ஆனால் அப்படி ஒரு சம்பவம் ஒரு நாளும் நடக்காது. சிறுபான்மையினர் மீதும் #கூட அந்தக் கடன் சுமை திணிக்கப்பட்டுத்தான் இருக்கிறது. இந்த நாட்டின் கீழ்நிலை மக்கள் அடிமை போல, மேல்நிலையில் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களுக்காக தமது உடல் உழைப்பை வழங்குவதற்குரியவர்கள்.

யப்பானியத் தொழிலதிபர் ஒரு யூ டியூப் காணொலியில் தெரிவித்திருந்தார். கல்வி கூடங்களில் வேலைகளைச் செய்து ஊதியம் பெறுவதற்கே சொல்லித் தரப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல்தான் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு நிதிசார் கல்விகள் சொல்லித் தரப்படுவதில்லை; மறைக்கப்படுகின்றன. அல்லாவிடில் அந்தத் தொழில்களைச் செய்வதற்கு ஆட்கள் இருக்க மாட்டார்கள். இன்னொன்றும் சொன்னார், நீங்கள் பணத்தைச் சேமித்துப் பயனில்லை. பணவீக்கத்தைச் சமாளிப்பதற்காக, தினமும் கோடிக்கணக்கில் பணம் அச்சிடப்படுகிறது. அதன் மதிப்புக் குறைந்து கொண்டே போகிறது. இதனுடன் ஒப்புடுகையில் வங்கிகளில் உங்களுக்கு வழங்கப்படும் வட்டி மிகக் குறைவு. உங்கள் சேமிப்பு வீணானது. நிதிசார் தொழில் புரிபவர்கள் இந்த உண்மை நன்கு தெரியும். அவர்கள் முதலீடுகள் மூலம் வரி செலுத்தாத பணம் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் பண ஓட்டத்தை நன்கு அறிந்து, ஏனையோரை அறியாமையில் வைத்து சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள்.

ஆக இதற்கு என்ன வழி, என்னதான் செய்ய என்று கேட்டால் என்னுடைய ஆலோசனை இதுவாகத்தான் இருக்கும். கோடிக்கணக்கில் இலங்கையில் முதலீடு செய்யும் தொழிலதிபர்கள் விழித்துக் கொள்ள வேண்டும். இனியும் இங்கு எதுவும் செல்லாது. அந்தக் காசுகளைக் கொண்டு வளர்ச்சியடைந்த நாடுகளிற்குப் புலம் பெயர்ந்து செல்க. முடிந்தால் அங்கு முதலீடு செய்க. உங்கள் உறவுகள், நண்பர்களையும் அங்கே வரவளைத்துக் கொள்க. இக்காலங்களில் இங்கே ஒரு வீடு கட்ட குறைந்தது 30 லட்சங்கள் தேவைப் படுகின்றன. இந்த நாட்டிற்கு உள்ளேதான் உங்கள் காணிகளுக்கு மதிப்பு, விலை எல்லாம். தொலை நோக்கில் பார்த்தால் இது ஒரு சபிக்கப்பட்ட கடன் பூமி. அதில் நீங்கள் கொண்டுள்ள ஒவ்வொரு நிலத்துண்டுகளும் ஒவ்வொரு சொத்துக்களும் உங்கள் மேலே கடன் சுமைகளையும் வெளிநாட்டவர் சொகுசு காரணமான சுமைகளையும் உங்கள் மீது திணிக்கும். முடிந்தால் அவற்றை விற்று விட்டு வரும் பணத்தைக் கொண்டு வளர்ச்சியடைந்த நாடுகளிற்குத் தப்பித்துச் செல்க.

Wednesday, July 8, 2020

பக்திப் பாட்டுக் கேட்பதால் பலன் என்ன? பதிகங்கள் பாடுவதால் பயன் என்ன?


கயவர்களின் கலியாட்டத்தில் தர்மம் எல்லாம் தோற்றுப் போகிறது. இதனால் பலர் ஆத்திகர்களாகவும் தெய்வ நம்பிக்கை அற்றவர்களாகவும் மாறுகின்றனர். சிலர் தாமும் தீய மார்க்கத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். நானே கூடப் பல பதிவுகளில் ”இறைவன் என்று ஒரு தனிப்பொருள் இல்லை. அவர் நம்முள்ளே, நமது சிந்தையினிலேதான் இருக்கின்றார்” எனக் கூறி இருந்தேன். இதற்கிடையிலும் ஆன்மீக வழிபாடுகளிலுள்ள உண்மை மற்றும் பலன்கள் குறித்துப் பல பதிவுகள் இட்டிருந்தேன். அவற்றில் இதுவும் ஒன்றாகிறது.

பக்திப் பாட்டுக் கேட்பதால் பலன் உண்டா?
ஆம், பக்தி வளரும். சிலருக்கு தல அஜித்தின் பாட்டுக் கேட்டால் பக்தி வளரும். சிலருக்கு தளபதி, விஜையின் பாட்டுக் கேட்டால் பக்தி வளரும். சிலருக்கு தலைவர், ரஜினிகாந்தின் பாட்டுக் கேட்டால் பக்தி வளரும்.

பக்தி என்றால் என்ன?

உங்கள் மெய் நீங்கள் உணர்வது பக்தி.
உங்கள் உடல் மீதான ஆதிக்கத்தை நீங்கள் பெறுவது பக்தி.
அதற்கு மேலான ஆற்றலை நீங்கள் பெறுவதும் பக்தி.
உயிரையும் உடலையும் இணைப்பது பக்தி.
ஆணவம் ஒழிப்பது பக்தி.
ஞான தீபம் ஏற்றுவது பக்தி.
அன்பை பெருக்குவது பக்தி.
மகிழ்ச்சியான நிறைந்த மனம் பக்தி.
ஒளிமயமான வாழ்வளிக்கும் பக்தி.
"போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து."

வாழ்வில் வெற்றிகொள்ள ஆத்திகனுக்கும் இந்த பக்தி அவசியமானதுதான். ஆனால் அவன் அதை தெய்வீக மார்க்கம் அன்றி வேறு வழியில் அடைகின்றான்.

பதிகங்கள் பாடுவதால் பயன் உண்டா?
ஆம், ஆனால் பொருள் விளங்காமல் அவற்றை ஓதிப் பயன் ஏதும் இல்லை. பதிகங்கள் உளவியல் ரீதியாக, நமது மனதைத் திடப்படுத்தும் உந்துகோல்களை ஏற்படுத்துகின்றன. சில பதிகங்கள் நாம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய கடப்பாடுகள் பற்றியும் கூறுகின்றன. அதோடு, தன்னம்பிக்கை அதிகரிக்கும்போது நமது உடலில் நோயெதிர்ப்பு சக்திகள் அதிகரிக்கின்றன என்பது விஞ்ஞானமே கண்ட உண்மை ஆகும். அக்கோட்பாட்டின் அடிப்படையில் எழுதப்பட்ட நோய் தீர்க்கும் பதிகங்கள் உண்டு. அவற்றிலே சம்பந்தர் பாடிய கோளறு பதிகமும் ஒன்று.

உதாரணமாக,
    வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்   
      மிகநல்ல வீணை தடவி   
    மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்   
      உளமே புகுந்த அதனால்   
    ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி   
      சனிபாம்பி ரண்டு முடனே   
    ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல   
      அடியா ரவர்க்கு மிகவே.


  இப்பதிகத்திலே சம்பந்தர் நாவுக்கரசருக்கு நம்பிக்கை அளிக்கிறார். நாளும் கோளும் நமக்குச் சாதகமாகவே உள்ளது. இவை எல்லாம் தாண்டி இந்த அண்ட சராசரம் ஆளும் அந்த இறைவனின் துணையும், என்றும் நன்மை புரியும் நமக்கே என்று கொள்க. இவ்வாறு அனைத்தும் நமக்குச் சார்பாக இருக்க, நான் நம்பிக்கை கொள்கிறேன்; எனையொரு பிணியும் அணுகாது என்கிறார். இவை அத்தனையும் நிலைகுலைந்திருக்கும் மனிதர்தம் மனதில் நம்பிக்கையை விதைக்கும் உளவியல் ரீதியான வார்த்தைகள் ஆகும். ஆனால், பொருள் விளங்காமல் எந்தப் பதிகமோ பாமாலையோ படித்துப் பயன் இல்லை. ஆனால், பொருள் விளங்காமல் உச்சரிக்கும் சில மந்திர வார்த்தைகள் அவற்றின் நாத ஓசை காரணமாக எதிரிகளை திணற வைக்கும் ஆற்றல் படைத்தவை. அவை குறித்துப் பிறிதொரு பதிவில் பார்ப்போம்.

வாழ்வாங்கு வாழ எத்தனை வழிகள் வகுக்கப்பட்டு இருப்பினும் அவற்றை நாம் கடைப்பிடிப்பது கடினம். அதற்கு நமக்கு வேண்டியவற்றை நாம் நமது #வாழ்க்கைமுறையோடு சேர்க்க வேண்டும். அதற்கு நடனம், பாடல், ஓவியம் ஆகிய கலைகள் பயன்படுத்தப்பட்டது; பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் ஓவியமே அதிக பழமையானது. தொல்லியல் ஆராய்ச்சிகளில் கிரேக்கர்களின் குகைகளில் பல வகையான ஓவியங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. அவை நாம் இன்று பார்ப்பதற்காக விளையாட்டாக வரையப்பட்டவை அல்ல. அவர்களின் வாழ்க்கை முறையில் சிலவற்றை அவர்தம் சந்ததியினர் மறந்து / வழக்கற்றுப் போகாமல் தொடர்ந்து கடைப்பிடிக்கவே அவற்றை அவர்கள் அவ்வாறு ஓவியங்களாக வரைந்தனர். இங்கே பதிகங்களும் பல மறை பொருட்களைக் காவி வரும் கருவியாக அமைந்திருகின்றன.

எவ்வாறாயினும் அனைத்தும் நமது சிந்தையில் இருந்தே விரிகிறது.  நாம் பல தெய்வங்களை வழிபடுகிறோம்; அத் தெய்வங்களையும் படைத்ததும் மனிதனது சிந்தனைகள்தான். உங்களுக்குள்ளேயே அனைத்து சக்திகளும் இருக்கிறது. அதை மிருகமாக வெளிக்கொணர்வதா இல்லை தெய்வீகமாக வெளிக்கொணர்வதா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். சக்தி என்றால் அமானுஷ்ய சக்திகள் அல்ல. அனைத்தும் மெய்ஞானத்திற்கு உட்பட்ட சித்துகளே.

“மெய்ப்பொருள் காண்பதறிவு”

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...