Friday, October 30, 2020

நாம் ஏன் எப்பொழுதும் அனைவருடனும் அன்பாகவும் பணிவாகவும் நடக்க வேண்டும்?

நன்றி: fccdunedin.blogspot.com

அனைவரும் அனைத்தும் அறிந்திருப்பதில்லை. அப்படியே அறிந்திருந்தாலும் வேண்டிய நேரத்தில் அவை நினைவிற்கு வருவது இல்லை. அத்துடன் ஒவ்வொருவரும் தான் போன வழிகளில் வந்த தடைகளுக்கான சிறந்த தீர்வுகளை அறிந்திருப்பர். அவை பரம்பரை பரம்பரையாகவும் சந்ததி சந்ததியாகவும் பேணப்படுவதும் உண்டு. அதோடு அவை நமக்குத் தெரியாத விடயங்களாகவும் இருக்கலாம்.

நமக்கு யாரும் இன்னல்கள் விளைவிக்கத் தேவையில்லை. அவை போன்ற விடயங்கள் தக்க நேரத்தில் நமக்குக் கிடைக்காமல் போனாலே நமக்குப் பெரும் துன்பங்களுக்கும் இழப்புகளும் ஏற்படும். ஆனால் அதனை அறிந்தவர்கள் காண்பவர்கள் அனைவருக்கும் அந்த ஞானத்தை அள்ளி வழங்குவதில்லை. அத்துடன் அப்படி வழங்குவது உசிதமானதும் அல்ல. அப்படி வழங்கின் அதனை யாரும் மதிப்பதும் கிடையாது. பசியில் உள்ளவர்களுக்கு மட்டுமே உணவின் அருமை தெரிந்திருக்கும். அத்துடன் அது அவர்களுக்குப் பெரும்பாலும் அவமானங்களையே தேடித்தரும். ஏனெனில் ஒருபோதும் கேட்காத உதவி செய்யக் கூடாது அல்லவா.

அது மட்டுமல்லாமல் அவை பணிவாகவும் மதிப்பளித்தும் நடப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. ஆனால் இந்நாளில் அவை வெறுமனே கொடுக்கும் மதிப்புகளிற்காக மட்டுமே வழங்கப்படுவது இல்லை. மதிப்பிற்கு இந்நாளில் ஏது மதிப்பு ... உற்றவர்க்கும் உதவி செய்கின்றவருக்கும் மட்டுமே கைமாறாக அந்த விடயங்கள் உரிய தருணத்தில் வழங்கப்படுகின்றன. நிறைய தான தர்மங்கள் செய்தவர்களுக்கு வேண்டியாவை வேண்டிய நேரத்தில் ஏதாவது ஒரு வழியில் யாராவது ஒருவரால் வந்து சேர்கிறது. அதனால்தான் கொடுத்தார்க்குக் குறைவு இல்லை என்பர்.

எனவே துன்பத்திலும் எல்லோருடனும் சிரித்து மகிழ்ச்சியாக வாழுதல் சாலச் சிறந்ததாகும். ஆனாலும் கிடைக்கப்பெறும் எல்லாத் தகவல்களும் உண்மைகளும் அல்ல; நன்மை விளைவிப்பவை என்றும் ஆகி விடாது. உதவி செய்வது போல நடித்து ஏமாற்றுபவர்களும் இந்தச் சமூகத்திலே அதிகம் உள்ளனர். இன்னும் சிலர் உதவி செய்ய இயலுமாக இருந்தும் இன்னுரைகள் கூடச் சொல்வது இல்லை. எனவே எது சரி பிழை என்பதை நாம் அறிந்து கொண்டு செயற்படுவதும் மிக அவசியமாகும்.
#Information is Wealth
#Arjun
#Hero

Monday, October 19, 2020

பாற்கடலை கடைதல் - பிராணாயாமம் - வாசிக்கலை

பாற்கடலைக் கடைதலின் பொருள் என்ன?
இது உணவுச் சமிபாடு, உடலின் வளர்ச்சி மற்றும் அதன் நிலைப்பு ற்றிய ரு குறியீட்டுக் கதையாகத்தான் இருக்க வேண்டும். வயிற்றினை மத்து என்றும், மூச்சினை வாசுகி என்றும், சுவாசப் பொறிமுறையை கடைதல் என்றும் குறித்துள்ளனர். இதே போல குறியீட்டு முறைமையே பிள்ளையாரின் தோற்றத்திற்கும் உரியது. சில பேரிற்கு இது இயல்பாகவே பிறவியில் வாய்த்துவிடுகிறது. அது அவர்கள் முன்னோர்கள் செய்த வினைப்பயன் ஆகும்.

பாற்கடலைக் கடைவது எவ்வாறு?
உணவு உண்ட பின்னரே கடைதல் நிகழ்த்த முடியும் என்று நினைக்கிறேன். முதலில் வேகமாக ஒரு நீண்ட மூச்சை வெளியில் விட வேண்டும். உடலில் அதனால் ஏற்படும் அமுக்கக் குறைவு காரணமாக தானே வேகமாக உடல் மூச்சை உள்ளே இழுத்துக் கொள்ளும். இதனை இவ்வாறே தொடர வேண்டும். பிறகு ஒரு நேரத்தில் நாம் கடினப்பட்டு மூச்சை இழுத்து விடத் தேவை இல்லை. அது தானாகவே ஒரு பரிவு நிலையை அடைந்துவிடும்.

நச்சு வாயுக்கள் பாரம் கூடியவை. மூச்சை வேகமாக வெளியே விடும்போது நச்சு வாயுக்கள் விலகி ஒரு குழல் போன்ற அமைப்பை அங்கே அது உருவாக்குகிறது. பூவில் தேன் குடிக்கும் சிட்டுக்குருவி போல அதனுள்ளே உள்ள தூய வளியை அது கலைவதற்கு முன் உள்ளே இழுத்து விட வேண்டும். இழுக்கும்போது வயிறினையே நினைக்க வேண்டும். ஏனெனில் அங்குதான் ஒட்சிசனின் செறிவு அதிகம் தேவைப்படுகிறது (”தொப்பை அப்பனைத் தொழ வினை அறுமே! - நமக்கு தொப்பை இருப்பது போன்ற விம்பத்தை விநாயகர் தரிசனம் நமது மனதில் ஏற்படுத்திவிடுகிறது”). இதனையே வாசிக்கலை என்பர்.

இதனை இன்னும் விரிவாக திருமூலர் பின்வருமாறு பூரகம், கும்பகம், ரேசகம் என்று படிமுறைகளில் கூறுகின்றார்.

1. இடது பக்க மூக்கு வழியாக பதினாறு மாத்திரை அளவு  மூச்சை உள்ளே இழுப்பது பூரகம் ஆகும்.
2. இழுத்த மூச்சுக் காற்றை அறுபத்தி நான்கு மாத்திரை அளவு உள்ளே நிறுத்தி வைப்பது கும்பகம் ஆகும்.
3. வலது பக்க மூக்கு வழியாக முப்பத்தியிரண்டு மாத்திரை அளவில் மூச்சை வெளியே விடுவது ரேசகம் ஆகும்.
4. **அடுத்த முறை வலப்பக்கம் மூச்சை இழுத்து, உள்ளே நிறுத்தி இடப்பக்கம் மூச்சை வெளியே விடுவது தந்திரமாகும்.

மாத்திரைகள் முறையே 1:4:2 என்ற விகிதத்தில் அமையும். இவ்வாறு முடிந்த வரை மாறி மாறி பயிற்சி செய்து வர வேண்டும். இந்த பிராணாயாமப் பயிற்சியை ஒரு ஆசிரியர் மூலம் முறையாக கற்றுக் கொள்வது அவசியம்.
நன்றி: https://blog.scribblers.in/2012/12/15/திருமந்திரத்தில்-பிராணா/

இவ்வாறு சிறுது நேரம் சுவாசித்து இருக்க வளி மற்றும் ஊட்டம் நிறைந்த ஒரு கலவை வயிற்றில் உருவாகிறது. அது உடல் வளர்ச்சிக்குப் பெரிதும் நேயம் செய்கிறது. அதனை நாம் அமிர்தம் என்று உருவகப்படுத்திக் கொள்கின்றனர். கடையப்பட்ட அமிர்தத்தைப் பரவச் செய்ய, மூச்சை இழுக்கும் போது வேண்டிய அங்கங்களை நினைத்துக் கொண்டு சற்று #நீளமாகவும் ஆத்மார்த்தமாகவும் இழுக்க வேண்டும். அதனை உடலில் விரும்பிய பகுதிக்கு வழங்கி அதனை வளர்ச்சியுறச் செய்ய முடியும். இல்லை எனில் மனதை எங்கும் நிறைந்ததாக வைத்திருப்பதன் மூலம் அதனை உடல் எங்கும் சிராகப் பரவச் செய்ய இயலும். அதன்போது எவ்வளவு நீளமாக இழுக்கின்றோமோ அவ்வளவு நீளமான தேகம் கிடைக்கிறது.

இங்கே தேவர், யார் அசுரர் யார், மோகினி யார்?

உடலில் சிறப்புடைய, தாழ்ச்சியுடைய இரு வஸ்துகளும் உள்ளன. அவையே முறையே தேவரும் அசுரரும் ஆவார்கள். தேவர்கள் உட்கொண்டால் அவர்களின் வளர்ச்சி மற்றும் பெருக்கம் காரணமாக உடல் மேன்மையுறும். அசுரர் அதனை உட்கொண்டால் நமது உடல் பொலிவை இழக்கும். இதனைக் கையாளவே மோகினி என்ற பொருள் உள்ளே வருகிறது. உடல் காதலுற்று உள்ளபோது மனம் விரும்பிய கூறுகள் மட்டுமே உயிர்ப்பாகவும் முனைப்பாகவும் இருக்கும். எனவே அந்தக் காதல் உணர்வை, மோகினியை சிந்தையில் வைக்கும்போது அந்த அமிர்தம் நல் வஸ்துக்களையே அடைவதால் உடல் செம்மையாக வளர்ச்சியுறும். இவ்வாறு செம்மையாக உடலை வளர்ச்சியுறச் செய்யின் ஆயுள்காலமும் நீடிக்கும். இதனையே திருமூலர் "உடல் வளர்க்கும் உபாயம் அறிந்து உடல் வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே!" என்றார்.

இங்கே லக்‌ஷ்மியின் சேவை என்ன?

ஸ்ரீ விஷ்ணுவின் மார்பினில் உறைபவள் லக்‌ஷ்மி ஆவாள். மனிதனில் மார்பினில்தான் நுரையீரலும் உள்ளது. பாற்கடலைக் கடைவதற்குத் தேவையான செல்வமாகிய ஒக்சிசனை அள்ளி வழங்குபவளாக அவள் இங்கே வர்ணிக்கப்படுகிறாள். இதற்காக அவளைப் ஆராதிப்பதற்காக இரு மார்புகளையும் உயர்த்திய நிலையில் பேணுவது நலம் புரியும்.

ஆமையின் பொருள் என்ன?

ஆமையானது ஐம்புலன்களையும் குறித்து நிற்கிறது. ஆமையானது தனது எதிரிகளைக் கண்டதும் தனது #தலையையும் #4 கால்களையும் உள்ளே எடுத்து மணிக்கணக்கில் உள்ளே அடக்கி வைத்துக்கொள்ளும். அதுபோல நாமும் இந்தப் பயிற்சியினை மேற்கொள்ளும்போது ஐம்புலன்களையும் அடக்கி நமது முழுக் கவனத்தையும் நமது புந்தியில் (வயிற்றில்) வைக்க வேண்டும். இதுவே இங்கு மத்து ஆகிய வயிற்றின் அடியில் கருதப்படும் ஆமையின் விளக்கம் ஆகும். இங்கே விஷ்ணுவே கூர்ம அவதாரம் (ஆமை) எடுத்து இதனை செய்வதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
“புந்தியில் வைத்தடி போற்றுகின்றோமே!”

எனில் இந்த விடம் யாது? அதை கண்டத்தில் வைத்த சிவன் யார்?
சுவாசத்தின் போதான காபனீரொக்சைட்டு வாயு மென்னமிலம் ஆகும்; உடலுக்குத் தீங்கானது. எனினும் அதனைத் கழுத்தினில் உணவுக் குழாயில் தேக்கி வைப்பின் அது நன்மையே புரியும். அடிக்கடி அதில் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பதோடு கழுத்தில் மென்னனில சேர்தல் உடலுக்கு நன்மை பயக்கும்.

அதனை கண்டத்தில் சிவன் வைத்த கதை என்ன?
மூச்சினை வெளியே விடும்போது அது உணவுக் குழாயைத் தழுவியதாகவும் மூக்கினூடாகவும் விட வேண்டும். அது அதிலுள்ள ஈரத்தில் படிந்து அங்கு நின்று தீயவை வயிற்றினைத் அண்டாமல் பாதுகாக்கிறது.
"கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடரினில் அடக்கிய #வேதியனே!"

காண்பவை அனைத்தையும் அந்தப் பரம்பொருள் என்று நினைத்து ஆராதியுங்கள். வேண்டியவை கிடைக்கும்.

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...