Wednesday, July 9, 2025

பருவத்தால் அன்றிப் பழா;
சாவிலும் வாழ்வு;
வலிகள் இல்லா நீடுவாழ்வு

பருவத்தால் அன்றிப் பழா

பொருள்: ஒன்றின் முதிர்ச்சி வயதினால் அல்ல, தகுந்த காலத்தினாலேயே தீர்மானிக்கப்படும்.

நான் நல் ஞானம் பொருந்திய என்னுடைய தமிழ் ஆசிரியர் ஒருவரை அண்மையில் சந்தித்தேன். அவர் சொன்னார்;

நன்மை என்றும் தீமை என்றும் எதுவும் இல்லை. எல்லாம் பார்ப்பவர் கண்களில் தான் உள்ளது. அவருடைய எதிர்பார்ப்பு பூர்த்தி அடைந்து அவர் திருப்தி என்னும் பூரண நிலையை அடைகிறாரா என்பதைப் பொறுத்து உள்ளது. அதனால் அவரவர் மனநிலையைப் பொறுத்துதான் திருப்தி நிம்மதி கிட்டுகிறது. அவரவர் மனதின் பக்குவம் இதனை தீர்மானிக்கிறது என்றார்.

நாம் இந்த ஞானத்தை, இந்த பக்குவ நிலையை நாம் ஏன் எல்லோருக்கும் தந்து, எல்லோருடைய வாழ்க்கையையும் ஒளியூட்ட முடியாது, எனக் கேட்டேன்.

அவர், பருவத்தால் அன்றிப் பழா என்றார். படிப்படியாக படித்துப் பட்டம் பெறுகிறார்கள். உயர்தரத்தை முதலாம் தரத்தில் கற்பவரால் விளங்கிக் கொள்ள முடியாது. அதற்கான பக்குவம அவரிடம் இருக்காது, என்றார்.

நமது முன்னோர் விதைத்தையே நாம் அறுவடை செய்கிறோம்
- University Lecturer -

இருப்பினும் அதற்கிடையில் பல நன்மை தீமை நடந்து விடுகிறதே, என்றேன். அதோடு இந்த சமூகம், ஒரே குடும்பத்தில் அண்ணா தம்பியைப் பிரித்து இரண்டு தரப்பாக மாற்றி தமது பழி தீர்க்கிறதே அது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ,என்று கேட்டேன்.

அதற்கு அவர், நாம் அனுபவிப்பவை எல்லாம் நமது முன் வினைப் பயன். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு செயல்கள் நல்லவையாக தோன்றும். இன்று எமக்கு நல்லனவாகத் தோன்றுவது நாளை நமக்கு தீயனவாக தோன்றும். அது மாறியும் தோன்றலாம். நடப்பவை யாவும் நாடகங்கள் என்று நாம் ரசித்து வாழ வேண்டும், என்றார்.

அவர் முற்பிறவி என்றபோது, என்னுடைய சிந்தனையில் போரில் மக்களுக்காக உயிர் துறக்கும் வீரர்களின் ஞாபகம் வந்தது. அங்குதான் இந்த உலகின் இயக்கம்; சமநிலை இருக்கிறது என்று என் உள் மனம் சொல்லியது.

சாவிலும் வாழ்வு

எனக்கு விவேக் சொன்ன காமெடி ஒன்று ஞாபகம் வருகிறது.
“யார் பெத்த பிள்ளையோ! அவன் செத்து என்னை வாழ வைக்கிறான்.”

சிலரின் மரணங்கள் எமக்கு கவசமாகவும் எதிர்காலத்தில் நாம் பெறும் சிறப்பான வாழ்க்கையாகவும் அமைந்து விடுகிறது.

நாம் நமது முன்னோர் விதைத்தவற்றையே அறுவடை செய்கிறோம். அது புண்ணியம் ஆயினும் சரி; பாவம் ஆயினும் சரி.

இன்று நாம் புத்தி கெட்டு, வழி மாறி சென்றால், அதற்கான கர்மாவை நமது எதிர்கால சந்ததி அனுபவிக்கும். ஆனாலும், நாம் உலக அரசியலைக் கண்டு கொள்ளாமல் போனால், அதனால் உலகில் உள்ள பிற புத்திசாலிகள் நன்மை அடைவார்கள். அவர்கள் சந்ததி நல் வாழ்வு பெறும்.

மேடைகளில் அரசியல்வாதிகள் முழங்குவார்கள்; என்னை வாழ வைக்கும் தெய்வங்களே! அப்போது புரியவில்லை; இப்போது புரிகிறது.

வலிகள் இல்லா நீடுவாழ்வு

ஓஹோ என்று ஒரு சிலர் வாழ்வதற்குப் பதில்,
ஆஹா என்று எல்லோரும் வாழலாம்
என்பதுதான் என்னுடைய எண்ணம்

இப்படியாக யுத்தங்கள் செய்து, உரிமைகளைப் பெற்று, அஃதே பிற புத்திசாலிகளின் அசுரரை அழிக்கும் தந்திரங்களின் படி (Intelligence) சனத்தொகையையும் குறைப்பதற்காக, நாம் ஏன் புத்திசாலித்தனமாக செயற்பட முடியாது. சனத்தொகையை வளர்ந்தபின் குறைப்பதற்கு பதில் அதைக் கட்டுக்குள்ளேயே வைத்துக் கொண்டு, அவர்கள் யுத்தத்தின் பின் கொள்ளையிட்டதை பங்கிடுவதை, நாம் யுத்தம் நடக்காமலே, நமது புத்தி ஜீவிகளுக்கு நாம் நல்ல அந்தஸ்தை, ஓரளவு சிறப்பான வாழ்க்கையை அளித்தால் என்ன..!

வாழ்வையும் ஈந்து வதைக்கவும் செய்தார்.

காகித ஓடம் கடலலை மீது போவதுபோலே மூவரும் போவோம். இவ்வாறு யுத்தங்கள் செய்து செல்வங்களை ஈட்டும் உலக மட்ட புத்தி ஜீவிகள். சமூகத்தின் விருப்பத்துடனேயே, அனுமதியுடனேயே, அதனை அவர்கள் விரும்புபவர்க்கு கொடுத்து வாழ வைக்க செய்கிறது.

ஆனால், செல்வத்தை மட்டும் பெற்றுக் கொண்டு தப்பித்து செல்ல இந்த சமூகம், அதன் வலிகள், குரோதம் விடுவதில்லை. அதன் பின்னணியில் உள்ள  பாவத்திலும் பங்கு உண்டு. கர்ணன் செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது போல அந்த பாவத்திலும் பங்கு கொள்ள வேண்டும்.

So, everything is on the war. The community wealth supply chain is on the war.
இருப்பினும் ஒரு யுத்தத்தில் நாம் வீணாக்கும் மனித மற்றும் புவி வளங்கள் மற்றும் நிம்மதி கொஞ்சம் நஞ்சம் அல்ல.

ஆனால் என்ன செய்ய எல்லோருக்கும் வேலைகள் வேண்டுமே!
சந்தானத்தின்,
“அதுக்கு அந்த பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே?”
”என்னப்பா செய்ய, சம்பளம் கொடுக்கிறேன், வேலை கொடுக்கணுமே!”
என்னும் காமெடிதான் ஞாபகம் வருகிறது.

அடுத்து வேலை இல்லாமல், பிரமிட் ஒன்று கட்டும் திட்டம்தான் அறிவிக்க வேண்டி உள்ளது. 🤷‍♂️🙆‍♂️

Kagetha Oo dam(o) kadalalai meethu poa.vathu pole moovarum poavom

நான் கண்ட / பார்த்த ஞானம் என்ன?

தர்மம் முக்கியமா? சித்தாந்தம் முக்கியமா?

வாழ்க்கையில் ஒருவனுக்கு எது முக்கியம் என்றால், ஒரு நிலையான சித்தாந்தமே ஆகும். அனைவருக்கும் ஒரே சித்தாந்தம் இருந்துவிட்டால் சிக்கல்கள் ஏற்படுவதில்லை. அதோடு, யுத்தங்கள் வந்து அந்த சிக்கல்களை தீர்க்கவும் தேவை இல்லை. இதுவே நான் கண்டு கொண்ட ஞானம் ஆகும்.

கர்ணன், உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது

கர்ணன் ஏன் கொடைகள் செய்வான் தெரியுமா! அவனுக்கு தர்மம் குறித்து நன்கு தெரியும். ஆனால் அவன் சேர்ந்த செஞ்சோற்றுக் கடனுக்காகப் பாவங்கள் செய்வான். பிறகு அதனை உணரும்போது ஏற்படும் ஆறாத துயரினால் பல தான தர்மங்கள் செய்வான்.

இராவணன்.10 | ச.ராவணன்.6 | கத.ராவணன்.4 / கர்ணன் / கதிர்காமம்
முக்கண்ணன் | கண்பதி | கண்தன் | கண்ணன் | கர்ணன் | கும்ப கர்ணன்

Read: A rubber seed fan is a traditional Sri Lankan handheld fan made from rubber tree seeds and parts of the coconut tree.

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...