பக்கத்து ரூமில் பாட்டு கேட்கிறது.
"மண்ணானாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன் - ஒரு
மரமானாலும் பழமுதிர்சோலை மரம் ஆவேன் - கருங்
கல்லானாலும் தணிகை மலையில் கல் ஆவேன் - பசும்
புல்லானாலும் முருகன் அருளால் பூ ஆவேன்"
சின்ன வயசுல சொல்லும் கதைகள் ஞாபகம் வருகிறது...
நான் ஜனாதிபதியானால்...
நான் பேராசிரியர் ஆனால்...
நான் கதிரையானால்...
My Mind Voice: இருங்க. நான் ஒரு அணி சேராமல் எந்தக் கடவுளாகவும் மாறக் கூடாது.
"கொல்லப் போறம்டா!"
என்னடா கண்ணன் பாரதப் போரில் அணி சேர்வது போல என் நிலைமை! ஆக என்னை தேவர்கள் இனி ஏற்றுக் கொள்ளவே மாட்டீங்க. அம்மாவின் Side இல் எனக்கு இடமே இல்லை. கண்ணனாக என்னை பார்க்க மாட்டீங்க... அப்படித்தானே!
“முருகனாக இல்லை. வேணும் என்றால் அமரன் பட முகுந்தன் ஆக பார்க்கிறோம்”
அப்போ முடிவே பண்ணிட்டீங்க...
“அப்ப நீ போட்றா...”
கல்லானாலும்...
எப்படி நான் கடவுளாக மாறுவது. என்னை கடவுளாக உணர்வது.
அது ஒன்றும் இல்லை. “என்னை புகழ்ந்து பாட்டுப் பாடுறாங்க”. நான் அவர்களுக்கு நல்லது செய்ய வேணும்" என்று ஒரு புழகாங்கிதத்தில் இருக்க வேண்டியதுதான்.
அவ்வளவும்தான் “நான் கடவுள்”!
ஆனால், எந்தக் கடவுளாக எம்மை உணர்கிறோமோ அந்தக் கடவுளின் சித்தாந்தம் முக்கியம்! ஒருவரின் சித்தாந்தமே அவரின் வாழ்க்கையில் பலவற்றைத் தீர்மானிக்கும்.

No comments:
Post a Comment