முருகவழிபாட்டினை முதன்முதலில் தொடங்கியவர் ஆதிசங்கரர் ஆவார். பார்வதி சூரனை அழிக்க தன்னுடைய சக்தி முழுவதையும் வேலாக மாற்றி முருகனுக்கு அளித்து ஆசிர்வதம் செய்து அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது. குன்று இருக்குமிடமெங்கும் குமரன் இருப்பது போல வேல் இன்றி முருகனை வழிபடுவது மிக மிக அரிது. வேல் ஞானத்தின் அடையாளம் ஆகும். ஞானம் எனும் ஆயுதம் கொண்டு மாயை எனும் இருளை நீக்க முடியும்.
ஆன்மீகம்
வேலினை அதன் பாதத்திருந்து தலைக்கு தரிசித்தால் அல்லது மனதில் கற்பனை செய்தால் உடலும் உள்ளமும் எழுச்சி பெறும். அதன்போது குண்டலினி மேலெழுகின்றது. உடலில் சேர்த்து வைக்கப்பட்ட சக்தியும் எண்ணங்களும் பிரபஞ்சத்தில் கலக்கும். சக்தி சிவத்தினைச் சேர்கிறது. சக்தி பிறப்பிக்கும் அளவு அதிகரித்து உடலின் அதிர்வு உச்சம் அடைகின்றது. கோபுர #தரிசனமும் இதன் அடிப்படையிலானதே!
வேலினை அதன் தலையிலிருந்து பாதத்திற்கு தரிசித்தால் உடலும் உள்ளமும் சாந்தமுறும். அதன்போது குண்டலினி சாந்தம் கொள்கிறது. உடலில் பிரபஞ்ச சக்தியின் சேர்க்கை நிகழ்கிறது. சிவம் சக்தியில் சேர்கிறது. சக்தி பிறப்பிக்கும் அளவு குறைவடைந்து உடலின் அதிர்வு தாழ்ச்சி அடைகின்றது.
கூரான இடத்தில் ஏற்றங்கள் செறியும் என்பது விஞ்ஞானத்திலும் சொல்லப்படுகின்ற உண்மை ஆகும். இதனால் கூரான பொருளில் முனைவாக்கம் ஏற்படும். இது போன்றதொரு முனைவாக்கம் அல்லது உருக்குலைவுதான் இந்தப் பிரபஞ்சமே தோன்றக் காரணமாக இருந்திருக்கும் என்றும் விஞ்ஞானம் நம்புகிறது. நாம் அப்பொருட்களை காணும்போது அதே முனைவுத் தன்மை நமது மனதிலும் எழுகிறது. காரணம் அப்பொருளின் விம்பம் நமது விழித்திரையிலும் விழுகிறது. திக்கற்று இருப்பவருக்கு ஒரு திசை கிடைப்பது போல, நோக்கங்கள் இல்லாது இருப்பவருக்கு ஒரு முனைவு ஏற்படுகிறது. அதிலே ஒரு நம்பிக்கையும் நிலைத்த தன்மையும் ஏற்படுகிறது. அவருடைய வாழ்வில் முன்னேற்றம் கிட்டுகிறது. இது ஒரு ஞானம் கிடைப்பதையே குறிக்கிறது. இது உண்மையில் ஞானத்தின் சின்னமாகிறது.
வேல் உள்ள இடங்களில் உள்ள ஏற்பட்டுள்ள சலனமான ஏற்றங்கள் யாவும் வேலினால் உறிஞ்சப்பட்டு அந்த இடம் சாந்தம் அடைவதோடு வேலின் சக்தியும் பெருகுகிறது. இதனால் அதனை #பிரார்த்தனை செய்பவர்க்கு வேண்டியவை கிட்ட வழி பிறக்கிறது. ஆனால் எல்லா இடங்களிலும் அதனை வைத்து பூஜிக்கக் கூடாது. அதனால் தீய சக்திகளும் எண்ணங்களும் வளர வாய்ப்புகள் உள்ளது. ஏன் இது போன்ற சக்திவாய்ந்த மூலகங்களைக் கோயில் என்று புனிதமாக ஒன்றை அமைத்து அங்கே வைத்தார்கள்? அங்கே நல்லவர்கள் மட்டும்தான் வருவார்கள். அவர்கள் எண்ணங்கள் மட்டும் நிறைவேறும். நன்மை விளையும். தீயவர்கள் எண்ணங்கள் இதன்பாற்பட்டால் அனைத்தும் பாழாகிவிடும்.
சித்தாந்தம்
வேலானது நுனியில் மிகக் கூர்மையாகவும், இடையில் அகலமாகவும், முடிவில் ஆழமாகவும் இருக்கும். நுனியில் கூரானது போல அறிவானது கூர்மையாகவும் தெளிவாகவும் இருத்தல் வேண்டும். இடையில் அகலமானது போல எண்ணங்கள் மிகவும் அகன்று இருக்க வேண்டும். அனைத்திலும் பரந்த அறிவு சிறிதளவு இருக்க வேண்டும். அனைத்தையும் விரிவான பார்வையில் நோக்க வேண்டும். அடியில் ஆழமாக இருப்பது போல எதிலும் ஆழ்ந்த அறிவு கொண்டிருக்க வேண்டும். எதைக் கற்றாலும் ஆழமாகக் கற்க வேண்டும். இவ்வாறு ஞானத்தின் தன்மையை வேல் விளக்குவதாக ஒரு பொருள் உண்டு.
புராணம்
முருகன் தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படுக்கின்றார். தமிழ்க்குலம் காக்க வேல் கொண்டு அவர் போரிட்டு பல போர்களின் வென்றதன் நினைவாக வேலினை வைத்து வழிபடுவதாகவும் ஒரு கதை உண்டு. ஆதிகாலத்தில் ஈட்டியே சக்தி வாய்ந்த ஆயுதமாகக் கருதப்பட்டது. வேலும் ஈட்டியின் வடிவமுடையதே!
முருகனின்
கதைகள் மக்கள் மனதில் இருக்கும் வரைக்கும் தான் முருகனுக்கு சக்தி
இருக்கும். முருகனுக்கு மட்டுமில்ல அவன் அப்பன் சிவனுக்கும் இது தான் நிலை.
#ஆன்மீக_சூட்சுமம்_1
#மெய்ப்பொருள்_காண்பதறிவு


No comments:
Post a Comment