Wednesday, September 22, 2021

அரியும் அரனும் - 1 - யார் இந்த விஷ்ணு? பாற்கடலை கடைதல் என்பதன் பொருள் என்ன?

அரியும் அரனும்
பாகம் - 1
• யார் இந்த விஷ்ணு?
• விஷ்ணு வழிபாட்டின் தார்ப்பரியம் என்ன?
• பாற்கடலை கடைதல் என்பதன் பொருள் யாது?

காத்தல் கடவுள் விஷ்ணு. அவர் பாற்கடலில் பள்ளி கொள்வதாக வேதங்களிலும் புராணங்களிலும் சொல்லப்படுகிறது. உண்மையில் விஷ்ணு என்பது கடவுள் அல்ல;ஒரு வழிபாடு. வைணவர்கள் விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடுகிறார்கள். விஷ்ணு ஏன் கடவுளானார்? இவை எல்லாம் இடையில் பார்ப்பனர் செய்த வேலை என்று ஒரு தொகுதியினர் சொல்வர். அவை குறித்து எனக்குத் தெரியாது. விஷ்ணு வழிபாடு பற்றி நாம் இந்தப் பதிவில் பார்ப்போம்.

சிவ வழிபாடு இந்த சீவனை வளர்ப்பதற்குரியது. அதாவது யோகம், நிஷ்டை பற்றியது. ஆனால் விஷ்ணு வழிபாடோ இந்த உடலை பாதுகாப்பது, வளர்ப்பது பற்றியது. அதாவது நரம்புகள், உணர்ச்சிகள் பற்றியது. அதற்கேற்ப வைணவர்களும் தள தள வென்று வெள்ளை நிறமாக இருப்பார்கள்.

அடுத்து ஆதி சிவனும் அந்தராத்மனும். ஆதி சிவன் என்பது சிவனது மறுபெயரும் அந்தராத்மன் என்பது விஷ்ணுவின் மறுபெயரும் ஆகும். ஆதி சிவன் தலையும் - அந்தராத்மன் உடலும் ஆகின்றனர்.

அந்த விஷ்ணு பள்ளி கொள்ளும் பாற்கடல் என்பது இந்த வாயு மண்டலம்தான். இந்தப் பூதவுடலைப் உயிர்ப்பாகப் பேணுவதில் முக்கிய பங்கு இந்தக் காற்று மண்டலத்திற்கு உண்டு. சிவலிங்கத்தில் மேற்பாகம் சிவபாகம், நடுப்பாகம் விஷ்ணு பாகம், அடிப்பகுதி பிரம்ம பாகம் என்று பாத்திருந்தோம். சிவன் என்கிற இந்த சீவனானது இந்தப் பூதவுடல் உள்ளவரை மட்டுமே வாழும். அதனைப் பாதுகாப்பது நமது கடமை என புத்தர் கூடச் சொல்லி இருக்கின்றார். அப்படியான இந்த உடலைக் காப்பதற்காக விஷ்ணு பாற்கடலாகிய இந்த வாயு மண்டலத்திலே பள்ளி கொள்கின்றார். அதற்கான சடங்குகளும் கடப்பாடுகளுமே விஷ்ணு வழிபாடாகத் தோற்றம் பெற்றன.

விஷ்ணுவின் தொப்பிளில் இருந்து முளைத்த தாமரையில் பிரம்மா இருப்பதாக படங்களில் வரையப்பட்டு உள்ளது. மனிதனின் உயிர் அதாவது ஜீவன் தொப்பிள் கொடியினூடுதான் முதல் முதல் இந்தப் பூத உடலில் பிரவேசிக்கிறது. பிரம்மா படைத்தல் தொழில் செய்வது நாம் அனைவரும் அறிந்த விடயம்தான். இந்த உலகில் அந்த உயிர் தோன்றுவதற்குக் காரணகர்த்தா பிரம்ம தேவர்தான் என்பதுவே அதன் பொருளாகும். அதுபோல சிவலிங்கத்தில் அடிப்பகுதியே பிரம்மபாகம் என்று பார்த்தோம். அதாவது படைத்தலுக்குக் காரணமான ஆண் பெண் குறிகள் மனிதனுக்கு அடிப்பகுதியிலேயே உள்ளது. இந்த அறிவு கூட அப்போது அனைவருக்கும் இருந்திருக்கவில்லை.

தாயின் வயிற்றில் உள்ள போது தொப்புளினூடே புகுந்த அந்த சீவன் என்னும் நெருப்பு மூலத்தில் இருந்து வானம் வரை வளர்கிறது. இதனுடைய அடி முடியைத் தேடித்தான் பிரம்மனும் விஷ்ணுவும் தோல்வியடைந்ததாக ஒரு கதை உண்டு. ஆனால் நாம் பாற்கடலில் இருப்பதால்தான் அந்த நெருப்பு அணையாமால் இருக்கிறது. விஷ்ணு பாகமாகிய இந்த உடலும் காக்கப்படுகிறது. இந்த ஜீவன் நிலை கொள்ள இந்தப் பூதவுடல் அவசியம் என்று பார்த்திருந்தோம். விஷ்ணு பாற்கடலிலே ஆதிசேசன் என்னும் பாம்பிலே பள்ளி கொண்டிருப்பார். அது என்ன இந்தப் பாம்பு. உணவு இல்லாமல் இந்த உடலைக் காக்க முடியாது. உடலில் குடல்தான் உணவைச் செரிக்க உதவுகிறது. அதுவே ஆதிசேசன் என்னும் பாம்பு ஆகும். பாம்புகளுக்கெல்லாம் தலைவன் ஆதிசேசன், அது போல எமது ஆஸ்தியாகிய அல்லது உடமையாகிய இந்த உடலிற்கு ஊட்டம் அளிப்பதில் முக்கிய பங்கு வசிப்பது குடல் என்பதே அதன் பொருளாகும். சேடம் என்றால் எச்சம் அந்த வகையில் அந்தப் பாம்பு எமது முன்னாண் ஆகவும் இருத்தல் கூடும்.

அதோடு கண்ணன் நெய்யை விரும்பி உண்பது அனைவரும் அறிந்தது. சிவன் என்பது சீவன் என்றால் அதனைக் காப்பது நரம்பினாலும் சதையினாலும் ஆன இந்த உடலாகும். அதனை வளர்க்க நெய்யே சிறந்த ஊட்டம் ஆகும். அதனாலேயே வைணவர்கள் தள தளவென தசை உடையவர்களாகவும் வெண்தோல் உடையவர்களாகவும் உள்ளனர். அதனால் தான் பசுவை கோமாதா என்று வழிபடுவர்.

பாற்கடலைக் கடைவதில் பெரிய பங்கு விஷ்ணுவுக்கு உண்டு. மோகினியாக, கூர்மமாக அவர் அங்கே இரண்டு பாத்திரங்களை ஆற்றுகின்றார். பாற்கடலைக் கடைவது என்பது காற்றாகிய இந்த மாயக் கடலைக் கடைந்து அமுது என்னும் ஊட்டத்தினைப் பெற்று  உடலினை வளர்த்தலாகும். இங்கே மூச்சு என்னும் வடம்தான் வாசுகியாக இருக்கும். மூச்சினை முழம் கொண்டு அழப்பது பண்டைக் காலத்தில் இருந்தே சித்தர்களின் வழக்கம் ஆகும். அப்படியாக பாற்கடலைக் கடையும் பொழுது, விஷ்ணுதான் ஆமையாக / கூர்மமாக அவதாரமும் எடுக்கிறார்.

பின்பு கிடைத்த அமுதைப் பகிரும்போது அதனை அரக்கர்களிற்குக் கிடைக்க விடாமல் தேவர்களுக்கு மட்டும் கிடைக்க மோகினி அவதாரம் எடுக்கிறார். அதாவது இந்த உடலில் உள்ள கெட்ட பகுதிக்கு அமுது கிடைகாமல் நல்ல பகுதிக்கு மட்டும் அமுது கிடைக்க செய்வதே இதன் நோக்கம் ஆகும். மோகினி அவதாரம் என்பது பெண்மையை குறிக்கிறது. அதாவது பெண்மையாக நடந்து கொள்ளும்போது உடலில் தோன்றும் கார்மோன்கள் அவற்றை மேன்மையான பாகத்திற்கு மட்டுமே அந்த அமுது கிடைக்க உதவுகிறது. கீழ்மையான பாகங்கள் பட்டினி போடப்படுகின்றன. தேவர்கள் வாழ்வது மேலோகத்தில் என்பதால் அமுது மேலோகத்திற்கே கிடைக்க வேண்டும். அது போல அசுரர்கள் மாமிசம் எலும்பு உண்பவர்கள். அந்த வகையில் எலும்பு மற்றும் சதைகளுக்கு இந்த அமுது கிடைக்கக் கூடாது.

எனது அம்மாவும் ஏதாவது பொருளை வீணாக்கி விட்டால், நாலுநாளைக்குப் பட்டினி போட்டால்தான் திருந்துவீர்கள் என்று சொல்லுவார்கள். இது தான் அந்த மோகினி அமுதைப் பகிர்ந்த கதை. எது எமக்குத் துன்பம் தருகிறதோ அவற்றைப் பட்டினி போட வேண்டும். எது எமக்கு மகிழ்ச்சி அளிக்கிறதோ அதற்கு ஊட்டமளிக்க வேண்டும். மகிழ்ச்சியாக உள்ளபோது மகிழ்ச்சிக்குரிய கலங்கள் விருத்தியாகின்றன. துன்பமாக உணரும்போது துன்பத்திற்கான கலங்கள் விருத்தியாகின்றன. அதாவது எங்களுக்குப் பிடித்தமானவற்றில் ஈடுபடுவது அதிகரிக்க அதிகரிக்க வாழ்க்கை நிம்மதி நிறைந்ததாகின்றது. அதனால்தான் வாழ்க்கையில் உங்களுக்கு பிடித்ததையே செய்யுங்கள் என்று அறிவுரை சொல்வார்கள்.

அரியும் அரனும் தொரரும் ...

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...