முத்திரைகள் தொடுகைப் புலனைகளைப் பற்றியதே! எல்லாப் புலன்களும் மூளையில் தூண்டல்களை ஏற்படுத்தும். எனினும் ஏனைய புலன்களை விட இலகுவாக எவரையும் துன்புறுத்தாமல் அமைந்தது தொடுகைப் புலன் ஆகும். அது துணைக் கொண்டு வேண்டிய இடங்களைத் தூண்டி நோய்களின்றி ஆரோக்கியமாக வாழ இயலும். இந்து மதமும் பௌத்த மதமும் இதன்பால் ஒன்றுபடுகின்றன.
நகங்களில் நரம்புகள் ஒன்று கூடுகின்றன. உள் உறுப்புக்களின்
நரம்புகள் முறையே ஒவ்வொரு விரல்களிலும் முடிவதாக ஒரு கருத்து உள்ளது.
மேலதிக சுவாசமானது உள்ளே அதீத சக்தியைப் பிறப்பித்துப் பல சிக்கல்களை
உருவாக்க வல்லது. அப்படி சுவாசத்திலிருந்து தொடுப்பற்ற வளிநிரல்களை
பாதுகாப்பாக எரித்து முடிப்பதுவும் முத்திரைகளின் ஒரு நோக்கம் ஆகும்.
சின் முத்திரை
சின் முத்திரையின் நோக்கம் இதயத் துடிப்பின் சந்தத்தை நமது மூளையின் முக்கிய பகுதிக்குத் திருப்பி விட்டு அதனை உயிர்ப்புறச் செய்வதாகும். அதற்கு மின் சைககளும் பயன்படுத்த முடியும். அதன் மீடிறனை அதிகரிப்பதன் மூலம் உயிர்களைத் துன்புறுத்தவும் இயலும். தியானத்தின்போதும் யோகத்தின்போதும் இம்முத்திரை பிடிக்கப்படும்.
கைகளைக் கூப்பி வணங்குவது ஏன்?
ஒருவரைக் காணும்போது கைகளைக் கூப்பி ஏன் வணங்குகின்றோம்! கைகள் கூப்பிய நிலை உயர் சக்தி நிலை. கைகளைக் கூப்பியவாறு செய்யும் செயல் மனமார செய்ததாகிறது. அது போலியானதாக இருப்பது அரிது. விரும்பியோ விரும்பாமலோ அவை நிதர்சனமாகும். இது ஐம்புலன்களில் தொடுகையின் செய்கை ஆகும். இதன் அடிப்படையிலேயே சத்தியம் செய்தல் வழக்காகி இருக்கக்கூடும்.
கல்லைக் கரம் கூப்பி வணங்குவது ஏன்?
இது போல கரம் கூப்பி இறை உரு ஒன்றைத் தரிசிக்கும்போது அந்த உரு நம்முள் பிரதிபலிக்கிறது. இதனால் உடலினுள் பல நேயமான செயற்பாடுகள் நிகழ்கின்றன. இவை ஒரு குத்து மதிப்பான ஆய்வின் பெயரில் நமது முன்னோர்கள் வகுத்தவையே தவிர அவை முற்றிலும் சிறந்தவை என்று கூறிவிட முடியாது. நாம் அங்கேயே நின்று கொண்டிருந்தால் நமது சமூகம், தாழ்ந்து போவதையும் ஏனைய விஞ்ஞானத்தில் உயர்ந்த சமூகத்தினரில் இருந்து பின் தங்குவதோடு பலவாறு ஏமாற்றப்படும்.
உடலில் இருக்கும் தூங்கல்களில் கால்களும் கைகளுமே பெரியவை. அவற்றை கூப்பும் போது மிகப் பெரிய தூண்டல் மாற்றம் ஒன்றை மூளை உணர்கிறது. எனவே அதன்போது மனதுள் எண்ணுபவை நிலை பெறும். வலது கைகளால் அதிகமாக வேலை செய்பவர்கள் கை கால் கூப்பி வழிபடும்போது வலது புறத்தை அதிகமாக நிறைத்து வழிபட வேண்டும்.
திருஞானசம்பந்தர் இதனையே கை ”கால் கூப்பித் தொழீர்...” என்று பாடியுள்ளார். இவர் ஐம்புலன்களையும் அதிகம் மீட்டுமாறு வலியுறுத்துகின்றார். நமசிவாய என்ற 5 எழுத்தும் ஐம்புலன்களைக் குறிக்கக் கூடும். இடையில் உண்மைக்கும் மனிதர்களுக்கும் இடையில் ஏற்பட்ட இடைவெளி அனைத்தையும் மாற்றி அமைத்து விட்டது.
காயப்பட்டால் வலி ஏன் வருகிறது?
உணர்ச்சி இருந்தபடியால்தான் வலி வருகிறது.
சதை பிண்டத்தில் எப்படி வலி?
தொடர்ந்து கிடைத்த ஒன்று இல்லாமல் போகிறது அல்லது மிகையாகிவிட்டது.
இது போன்ற விளைவுகளை ஆராய்ந்தே முத்திரைகளும் யோகமும் வளர்ந்தன.
மண் சூடாகும் வரை உரம் போடுதல் வேண்டும். அது போல உடலில் சூடு இருந்தாலேயே அது உயிர்ப்புடன் இருப்பதாகப் பொருள். இள வயதில் இது சற்று அதிகமாகவே இருப்பதோடு அது அலை பாய்ந்து திரியும். எனினும் அதிக சூடு அல்லது மாறுபடுகின்ற சூடு நல்லதல்ல. கண நேரத்தில் மணி நேரப் பயணம் செய்பவன் யோகி ஆவான். அதாவது அதனை அப்படி அவன் உணர்ந்து கொள்ள அவனது உடலுக்கும் மனதுக்கும் வேகம் வேண்டும். அதனை முத்திரைகள் அவனுக்கு வழங்கும். அத்தோடு, ”இடையறாத ஓசையில் அமைதியையும் அமைதியில் இடையறாத வேலையும் கண்டு கொள்ளக் கூடியவனே சிறந்த யோகி” என விவேகானந்தர் சொகின்றார்.
உடலில் ஓரிடத்தில் வலி இருந்தால் ஏனைய இடங்கள் அதிகம் ஊழியம் செய்யப்படுவது இல்லை. ”ஆட்டி விட்டு விட்டால் ஏறும்”. அதாவது உடலின் எந்த உறுப்பையும் துலக்கி விட்டு ஓய்வாக்கினால் அந்த உறுப்பு இரத்ததால் நிறைக்கப்படும்.
தேடல் தொடரும்...
நன்றி!

No comments:
Post a Comment