பிராணன் உருவமில்லாதது. அது ஒக்சிசன் என்பதை எல்லோரும் அறிவார்கள். சுவாசம் முடிந்து வெளியேறும் போது அது காபனீரொக்சைட்டு ஆகும். இந்த உருவமில்லாத வாயு நீரில் கோள வடிவம் எடுப்பது அநேகருக்குத் தெரியும். அவ்வாறு நம் உடலிலுன் குருதியில் கலந்த வாயு உருண்டை வடிவம் தான். அது மூலத்திற்கும் மூளைக்கும் இடையில் இடம் மாறிக் கொண்டே இருக்கும்.
அந்த உருண்டையை நாம் விரும்பிய இடத்திற்குக் கொண்டு வந்து அந்த இடத்திற்கு தேவையான சக்தியை வழங்க முடியும். உடல் வளர்ச்சிக்கும் உடலின் இளமையைப் பேணவும் சக்தியைப் வழங்குவது இந்தப் பிராண வாயுவே! ஆனால், அளவுக்கு அதிகமாக சக்தி ஒரே இடத்தில் குறுகிய நேரத்தில் பிறப்பிக்கப்படக் கூடாது. அது கலங்களைச் சிதைத்துவிடும். சிக்கலை மேலும் கூட்டிவிடும்.
மனித உயிரிற்கு தேவையான சக்தியைப் பிறப்பிக்க உதவுவது ஒக்சிசன். ஆனால் அது மிகையானால் விசமாகிவிடுகிறது. புதிதான ஒக்சிசனை அதிகம் சுவாசித்தால் உடற் கலங்கள் சிதைவடைந்து மூப்பினை வரவைத்து விடுகிறது. இதனால் மூச்சினை உள்ளே இழுக்க்கும் அளவைக் குறக்க வேண்டும். இழுத்த மூச்சை முழுமையாக சுவாசிக்க வேண்டும்.
பிராணாயாமத்தின் பிரதான நோக்கம் உடல் உறுப்புக்களுக்குத் தேவையான சக்தியை வழங்கி அதைச் சுத்தி செய்து சிறப்பாக செயலுற வைப்பதுதான். அது எந்த பகுதியாகவும் இருக்கலாம். அதில் மூளையும் மேற்தோலும் உள்ளடக்கம்.
திருமூலர் பிராணாயாமம்
பிராணாயாமத்தில் பல வகைகள் உண்டு. அதில் முதன்மையானது திருமூலர் சொன்ன 284 என்ற பிராணாயாமம். திருமூலர் திருமந்திரத்தில் மூச்சை உள்ளே இழுப்பதற்கான, அதை உள்ளே வைத்திருப்பதற்கான மற்றும் வெளி விடுவதற்கான கால அளவுகள் முறையே 16:64:32 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும் என்றார். அதாவது 16 மாத்திரைகள் வளியை உள்ளே இழுக்க வேண்டும். 64 மாத்திரைகள் அதை உள்ளே வைத்திருக்க வேண்டும். 32 மாத்திரையாக அதை வெளியே விட வேண்டும். இப்படி செய்தால் நரை, திரை, மூப்பு நெருங்காது என்கிறார். ஆரம்பத்தில் அதே அளவு செய்யாவிடினும் அதே விகிதத்தில் செய்யலாம். அதனஅதனைச் சுருங்கக் கூறின் 2:8:4 என்று வரும். அதனையே 284 என்று கூறினேன்.
முறையான பயிற்சி அவசியம்
வெவ்வேறு நேரங்களில் உடலுக்குத் தேவையான சக்தியின் அளவு மாறுபடுகிறது. அதற்கேற்ப பிராணயாமம் மாறுபடும். உதாரணமாக உணவு உண்டவுடனான ஒட்சிசன் தேவை மாறுபட்டது. ஆகையால் காலை மாலை பிராணயாமம் செய்வதே ஏற்றது. பல பிராணாயாம முறைகளில் 284 முறை அநேகர் அறிந்தது. அனைத்து உறுப்புகளையும் பரிகரிப்பதாலும் இலகுவானது என்பதாலும் பிறருக்குக் கற்றுத் தரப்பட்டது. இருப்பினும் அதனை ஒரு குருவிடம் பயிற்சி பெற்ற பின்பே செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் அதைப் பொருட்படுத்தாது அநேகர் தாமாக செய்து பார்த்து சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர்.
அப்படி பிழையாக பிராணாயாமம் செய்து சுவாச ஒழுங்கு சிக்கலுக்கு உள்ளானவர்கள் மீழ வழி உண்டு. மிருகங்கள் சுவாசிக்கும் போது இப்படி எல்லாம் சிந்தித்து சுவாசிப்பது இல்லை. அவை இயல்பாக இயற்கையான் சுவாசம் உடையன. நாமும் பூர்வீர்த்தால் மிருக தேகம் படைத்தவர்கள் தான். எனவே நாமும் இயல்பாக சுவாசித்து முன்னைய சுவாசத்திற்கு திரும்ப இயலும்.
இந்த முறையில் அவர்கள் முதன்மையாக ஊட்டம் அளிக்க முயல்வது தலைமை உறுப்பான மூளைக்கு ஆகும். ஆனால் அளவாக ஊட்டம் அளிக்க விளைந்தனர். இன்று அதனைப் பின்பற்றுபவர்கள் தவறாக அதனைப் பின்பற்றுவதால் அதிக சக்தி உருவாகி மூளையின் செயல்பாட்டை மேலும் மழுங்கடித்து விடுகிறது.
பிள்ளையார் வழிபாடு
பிரணவத்தின் படியான பிராணாயாமத்தினையே பிள்ளையார் வழிபாடு குறித்து நிற்கிறது. அதனை ஒரு காணொலியாக பதிவிட்டு இருக்கிறேன். அதன்படி அந்த உருண்டையானது பிராணாயாமத்தின்போது எப்போதும் தொந்தியிலேயே (வயிற்றிலேயே) வைத்திருக்கப்பட வேண்டும். இல்லையேல் அதன்போது பிறப்பிக்கப்படும் அதிகமான சக்தி சிக்கலை உண்டு பண்ணிவிடும். இதனை நன்கு உணர்ந்து அதன் இடத்தை சரியாக மாற்றுவதில் தேர்ச்சி பெற்றவர்கள் அதனை விரும்பிய இடத்தில் வைத்து அந்த இடங்களில் உள்ள நோய்களைக் குணப்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் பிள்ளையாரின் வலது தந்தம் உடைந்து உள்ளது. இது இடது பக்கத்திலேயே இதயம் உண்டு என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதையோ அல்லது சில பிராணாயாமம் கூறுவதுபோல் வலது மூக்கினால் உள் இழுத்து இடது பக்கத்தினால் வெளிவிட வேண்டும் என்பதையோ குறிக்கிறது.
சிவ வழிபாடு
நாசியில் வெளி மூச்சு வீச்சாக அடித்து வெளியேற வேண்டும். அதற்கு நாசித் துவாரத்தை சிறிதாக்கி வயிற்றில் தம் கட்டி மூச்சை, முழுமையாக வெளியேறுமாறு உடலை, முக்கியமாக வயிற்றை ஒடுக்க வேண்டும். இதன்போது "ம்" என்ற ஓசை அடி நாவில் (கழுத்தில்) ஒலிக்கும். இது பற்றிய முழுமையான பதிவு, ”சிவாய நம” எனும் பஞ்சாச்சரத்தின் பொருள்.
இதனையே சிவ வழிபாட்டில் # நாவிற் குடிலை எனக் கூறப்படுகிறது. இந்து வழிபாட்டு முறைகளில் இந்த யோகத்தை முதலில் கண்டறிந்தது sஇவன் என்றே கூறப்படுகிறது. அந்த வகையில் ஆதியோகி சிவன் ஆவான். சிவனின் மூச்சில் வேதம் தோன்றியதாக சில பாடல்கள் அழகாகக் கூறுகின்றன.
விஷ்ணு வழிபாடு
இதை விஷ்ணு வழிபாடு வேறு வகையில் சொல்கிறது. மஹாபாரதத்தில் ஒழித்த வைக்கப்பட்ட இரகசியம் பற்றி முழுமையான ஒரு பதிவு செய்திருக்கிறேன். மஹாபாரதம் உண்மைக் கதையா? புனை கதையா? மஹாபாரதமும் 7 சக்கரங்களிலான சித்து மருத்துவமும். அதன்படி அந்த மூலம் முதல் கழுத்து வரை உருளும் உருண்டையினை, 6 மையச் சக்கரங்களில் நிறுத்த வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் உடலின் அந்தப் பகுதிகளை ஆரோக்கியமாக வைத்திருப்பது குறித்து மஹாபாரதக் கதை முழுவதுமே கூறப்பட்டுள்ளது.
முருகன் வழிபாடு
உடலில் அழகும் இளமையும் விளங்க பிராணாயாமம் செய்ய வேண்டும். இதனை முருகக் கடவுள் வழிபாடு வேறு முறையில் குறித்து நிற்கிறது. "முருகு" என்றால் அழகு. முருகன் என்றால் அழகன். நாம் அழகாக இளமையாக மாறுவதற்கான ஞானத்தினை முருகன் கொண்டிருந்தான். நாம் அழகாக வேண்டும் எனில் வள்ளியையும் தெய்யானையையும் மணக்க வேண்டும். நான் தான் முருகன். என்ன இவன் அலம்புகின்றான் என்று யோசிக்காதீர்கள்.
தெய்வானை என்றால் தெய்வ ஆணை. எமது உடலில் தெய்வ ஆணை மூச்சு ஆகும். அதனை பிராணயாமம் கொண்டு சரிப்படுத்த வேண்டும். அதிக மூச்சினை கொள்வது உடலுக்கு ஆகாது என்பதால் எமது நுரையீரலாகக் கருதப்படும் தெய்வானையை எப்போதும் வெறுமையாக வைத்திருக்க வேண்டும். அதன் அளவைப் பெரிதாக்கும்போது உடலில் ஒட்சிசன் வாயுவின் அளவு அதிகரிக்கும்.
அவர்களின் ஆராய்ச்சி அத்துடன் முடிந்து விடவில்லை. கொடியில் விளைந்த கிழங்கு வள்ளி என்று இதயத்தை அவர்கள் அழைக்கிறார்கள். ஆதி காலத்தில் இதயத்திற்கு வள்ளி என்ற பெயர் இருந்துள்ளதா என ஆராய வேண்டும். அதன்படி, முருகன் ஆசைக்கு வைத்துக் கொண்டவள் வள்ளி. வள்ளி நமது உடலில் இதயம் (இருதயம்) ஆவாள். இரத்தத்தை உடலின் பகுதிகளுக்கு கிள்ளி கிள்ளி வழங்குபவள். வாரிக் கொடுப்பவன் வள்ளல் என்றால் அதன் பெண்பால் வள்ளி என்று அமைத்தனர் சித்தர்கள். இதற்கு இன்னொரு கதையும் படித்தேன்.
நாம் கொண்ட ஞானமானது பல காலமாக பல உடல்களில் வேட்டையாடி வேடையாடிக் கிடைத்தது. தான் விளைய வைத்த தினையை கவண் கல் கொண்டு, குறி பார்த்து, தொலைவுக்கு, எறிந்து எறிந்து காவல் காப்பவள் வேடுவச்சி வள்ளி. அவளை காதலித்து திருமணம் செய்கின்றான் முருகன். அதன்படி இரத்தத்தை வயிற்றில், மூளையில் அல்லது வேறு இடத்தில் தேங்கி துன்பம் செய்ய விடாது அதனை உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் பாய்ச்ச வேண்டும். அதற்கு இதயத் துடிப்பின் ஓசையைக் கேட்டுக் கொண்டு உடலின் பாகங்களை தியானித்தால் (நினைத்தால்) போதும்.
"உயிர்களே இன்பத்தைத் தேடி தேடி தேகத்தில் வந்ததே" என்று ஒரு பாடல் வரி உண்டு. ஆனால் அது உண்மை அல்ல. சுயத்தின் பயனாக சுகம் ஏற்படவில்லை. சுகத்தின் பயனாகவே சுயம் ஏற்பட்டது. இந்த உயிர் சுயமின்றி இன்ப துன்பம் அறியாமல் இருந்தது. இந்த உடலில் வந்து சிக்கிக் கொண்டது. அது போல மூளைக்காக உடல் இல்லை. உடலுக்காகவே மூளை உண்டு. உடலை நன்கு துலக்குவதே கிரியா சக்தி ஆகும். நாம கெத்தா உலாத்தணும்!
அவ்வாறு நளும் உடற்பயிற்சி செய்பவர் பிராணாயாமம் செய்யத் தேவை இல்லை. அதனால்தான் மேலை நாட்டவர்களுக்கு பிராணாயாமம் அதிகம் தேவைப்பட்டிருக்கவில்லை. ஆனால், உடற்பயிற்சியை விரும்பாத ஞானிகள் ஞானம் மூலம் உடல் அக உறுப்புகளைத் துலக்க சில வழிகளை வகுத்தனர்; பிராணாயாமம் தோன்றியது.
பிராணாயாமத்தின் நன்மைகள்
இதன்போது பின்வரும் நன்மைகள் கிட்டும்.
- நாசியின் சூடு குறைக்கப்படும். அதனால் மூளைச் சூடு குறையும்.
- உடலின் அநேக பாகங்களுக்கு இரத்தம் பாய்ச்சப்படும்.
- உடற் பாகங்கள் மசாஜ் செய்யப்படுகின்றன.
- உடற்கலங்கள் புதுப்பிக்கப்படுகிறது.
மூச்சை முழுமையாக வெளிவிட்டு மீழ உள்ளே இழுக்கும் சுழிப்பில் கலப்பிரிகை நிகழ்கிறது.
பிராணாயாமத்தில் பிரதானமாகக் கவனிக்க வேண்டியவை (பிரணவ முறை)மூச்சை உள்ளே இழுத்தல்
- #இழுக்கும்போது வயிற்றுப் பகுதிக்குள் நிறைக்க வேண்டும்.
- தேவையான வேகத்தில் அளவாக இழுக்க வேண்டும்.
- #ஒரு முறை இழுத்த மூச்சை அதிக நேரம் உள்ளே வைத்திருக்க வேண்டும்.
- அந்த சக்தி உருண்டையை சக்தி தேவைப்படும் இடத்தில் நிலைப்படுத்த வேண்டும்.
- புதிய வளியானது உடற்கலங்களைக் சிதைக்கும் கூறுகளைக் கொண்டுள்ளது.
- உடலை அதிகம் வருத்தக் கூடாது.
- #அதனை வெளிவிடும்போது கரியமில வாயுவை முழுமையாக வெளியேற்ற வேண்டும்.

No comments:
Post a Comment