Sunday, January 10, 2021

”சிவாய நம” எனும் பஞ்சாச்சரத்தின் பொருள்

இற்றைப்படுத்தியது (2): 22 தை 2021
இற்றைப்படுத்தியது (3): 08 ஆவ 2021

சிவன் என்பதன் பொருள் யாது?
அது ஒரு இடுகுறிப் பெயர் ஆகும். எல்லாவற்றிற்கும் மேலான ஒரு பொருளை சிவம் எனப் பெயரிட்டது சைவ சமயம். ஸ்வ என்பது மூச்சுவிடும் போதான காற்றின் ஓசை ஆகும்.  சுவாசமே உயிரின் ஆதாரம் ஆகும். அதனால் ”ஸ்வ” (சிவ) என்றால் உயிரின் ஆதாரம் என்று பொருள். வடமொழியில் “நம” என்றால் தமிழில் போற்றி என்று பொருள். அந்த உயிரின் ஆதாரமான மூச்சை வணங்குகிறேன் என்று பொருள் வரும். அதோடு சிவனுக்கு என்று சில விசேட இயல்புகள் உண்டு.

சிவ நாம ஜெபம் என்றால் என்ன?
முதலில் அவனை அறிதல். அறிந்த பின் அவனுள் உறைதல். அதாவது அவனாகவே வீற்றிருத்தல். அப்போது சிவ குணங்கள் எம்மிலும் நிறையும்.

இதன் பயன் யாது? சிவனருட் பயன் என்ன?
இதனால் அருள் என்று ஒன்றும் கிட்டுவது இல்லை. நமக்குள்ளே ஒரு மாற்றம், நம் உள்ளத்தில் ஒரு மேன்மை ஏற்படுகிறது. உள்ளத்தில் மேன்மை ஏற்பட வாழ்க்கையிலும் மேன்மை ஏற்படும். அதனால் அருளை நீங்களே உங்களுக்கு வழங்க வேண்டும். ஏனெனில் சிவன் பெயரை ஜெபித்தலின் பொருள் சிவமாக வீற்றிருத்தல் ஆயிற்றே! இப்போது நீங்கள் சிவன்! இதன் உச்சத்தில் சிவனடியார்கள் எங்கும் சிவத்தினைக் காண்பர். அனைவரும் சிவனின் குணங்களுடன் காட்சியளிப்பர்.
மந்திர ஜெபத்தின் இதர நன்மைகள் பற்றி அறிய மனதை நெறிப்படுத்தும் மந்திர ஜெபமாலை என்னும் பதிவைப் படிக்குக.

சிவனது உயர் குணங்களில் அன்பு மிக முக்கியமானது.
" அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே "
திருமூலர் திருமந்திரம் - 270/3047.

ஒருவன் தர்மத்தை ஒழுக்க நெறிகளை அறிந்திருந்தாலும் அதைக் கடைப்பிடிப்பது சுலபமான காரியம் அல்ல. அதற்கு மனமும் உடலும் ஒத்துழைக்க வேண்டும். அதற்கு அவனைப் போற்றி, அவனை உணர்ந்து, அவன் அருள் பெற வேண்டும். இதனையே "அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி..." என்று சிவ புராணத்தில் சொல்லப்படுகிறது.

ஔவையாரின் விளக்கம்
வடமொழியில் உள்ள சிவாய நம என்னும் பஞ்சாட்சரத்திற்கு தமிழ்ப் புலவர் ஔவையாரின் விளக்கமும் ஒன்று நல்வழியில் உண்டு. அதனை அப்படியே மறுப்பு ஏதும் இன்றி ஏற்றுக் கொள்வோருக்கு நன்மை உண்டாகிறது; வாழ்வில் சந்தேகம் ஒழிகிறது.

”சிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்கு
அபாயம் ஒரு நாளும் இல்லை - உபாயம்
இதுவே; மதியாகும்; அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்.”
நல்வழி - 15

பொருள்: சிவாய நம என்னும் சிந்தனையில் ஆழ்ந்திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை. மகிழ்வாக வாழ்வதற்கு உரிய தந்திர மந்திரம் இதுதான். இதுவே நமது அறிவு கண்ட மதியாக இருக்கவேண்டும். அல்லாத அறிவின் மதிப்பீடு எல்லாம் விதியால் நமக்குக் கிடைத்தவை.
சிவாய நம, சிவ்+ஆயம்+நம, சிவன் துணவர் நம்முடையவர், சிவன் தோழராக நாம் இருப்போம், நிகழ்வுகள் எல்லாமே சிவ் என்னும் உணர்வு. (diamondtamil.com)

சிவ நாமம் ஜெபிப்பவர் எவ்வாறு இறைவனின் குணங்களைப் பெறுகின்றார்?
ஒரு அழகிய வாசமுடைய பூவின் வாசத்தினை நாம் நுகர்கின்றோம்; நமக்கு சுகம் உண்டாகிறது. அதன் அழகினை ரசிக்கின்றோம்; நமக்கு மகிழ்ச்சி உண்டாகிறது. அதனை வருடுகிறோம்; நமக்கு நல்ல உணர்ச்சி உண்டாகிறது. ஆனால் அந்தப் பூவானது நம்முடைய அங்கம் அல்ல. ஆனால் அந்த சுகம், மகிழ்ச்சி, உணர்ச்சி நமக்குள் உண்டானவை. அந்தப் பூவினை அறிந்து கொண்ட பிறகு, அதனை நினைக்கும் போதெல்லாம், அவை மீண்டும் எம்முள் உண்டாகின்றன. அவற்றை நாம் நினைக்கும் ஆழத்தைப் பொறுத்து அவை மேலும் எம்முள் வலுப்பெறுகின்றன.

இறை வழிபாடும் அதே மாயத்தையே நிகழ்த்துகிறது. முதலில் நாம் இறவனின் குணங்களை அறிகின்றோம். அவர் உண்மையில் இருக்கலாம்; இல்லது இருக்கலாம்; கவலையில்லை. சிவனின் குணங்களை அறிந்து கொண்ட பிறகு, சிவனை நினைக்கும் பொழுதெல்லாம் ”சிவாய நம” உச்சரிக்கும் போதெல்லாம், சிவ குணங்கள் எம்முள் வலுப்பெறுகின்றன. அவன் வழி நடக்கின்றோம்; அவனையே வெளியிலே காண்கின்றோம். அவனது குணங்களை பாமரரும் அறிய இலகுவான வழி கதைகள் ஆகும். அதனால்தான் வேலின் சிறப்பு என்ற பதிவில் இறைவனின் கதைகள் வாழும்வரைதான் இறைவன் வாழுவான் என்று குறிப்பிட்டிருந்தேன்.

சிவனின் குணங்கள் யாவை?
சைவ சமயம் சிவனுக்கென்று தனியாக குணங்களை அதிகம் வகுக்கவில்லை. மாறாக பொதுவான இறைவனின் குணங்கள் கூறப்படுகின்றன. இறைவன் குணங்களை எட்டாகச் சுருக்குகின்றது சைவசமயம். பரிமேலழகர் வரையறுத்த இறைவனின் எண்குணங்கள் ஆவன,

1. தன்வயத்தினர் ஆதல்
2. தூய உடம்பினர் ஆதல்
3. இயற்கை உணர்வினர் ஆதல்
4. முற்றும் உணர்தல்
5. இயல்பாகவே பாசங்களின் நீங்குதல்
6. பேரருள் உடைமை
7. முடிவு இல் ஆற்றல் உடைமை
8. வரம்பு இல் இன்பம் உடைமை

இவற்றை ஒரு கசடு அற அறிந்து கொண்ட பின்னர் இறை வழிபாடு செய்வதே ஒருவருக்கு முழுப் பயனையும் அழிக்கும். இல்லையெனில் அவன் சிந்தையில் வைப்பவன் பொருள் ஓதுவோரிலும் மேலோங்கும். அதன் பின் செய்யப்படும் சிவ நாம ஜெபம் ஒருவருக்கு சிறப்பான நன்மைகளை நல்கும்.

”காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்நெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.

பிற் குறிப்பு: சைவசமயம் பஞ்சாட்சரத்தை தூல பஞ்சாட்சரம், சூட்சும பஞ்சாட்சரம், மற்றும் அதிசூட்சும பஞ்சாட்சரம் என 3 வகைப்படுத்துகிறது.
அதில் தூல பஞ்சாட்சரம் எனப்படும் “ந” இல் தொடங்கும் நகர பஞ்சாட்சரம் - நமசிவாய. இது இனிய உலகியல் வாழ்வை நல்குவது. வலிய தீவினைகள் எல்லாம் அடங்கிவிடும்.
சூட்சும பஞ்சாட்சரம் எனப்படும் ”சி” இல் தொடங்கும் சிகர பஞ்சாட்சரம் - சிவாய நம. இது வீடு பேறு அல்லது முக்தியை நல்குவது. சதாசிவம் முதல்வகை இருந்து கருணைபுரிந்து அருள் செய்வன்.
இவற்றின் விளக்கம் தெரியவில்லை.

குறிப்பு: இது இந்து மதத்தையோ சைவ சமயத்தையோ வளர்ப்பதற்காக செய்யப்பட்ட பதிவு அல்ல. சிறந்த தெளிவைப் பெற முதற்படி.

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...