Wednesday, January 13, 2021

சூரியன் திருநாள்

thanks: oneindia.com
சூரியன் இல்லாவிடில் விடியாது, இருளாது, காற்றடிக்காது, கடலலை இருக்காது, உண்ண உணவிருக்காது, இவ்வுலகில் உயிர்களே இருக்காது.

சூரியன் தன்னை வணங்குபவர்களையும் வெறுப்பவர்களையும் சமமாக ரட்சிக்கிறான்.

இவ்வுலகில் படைத்தல், காத்தல், அழித்தல் அனைத்திற்கும் காரண கர்த்தா அவர்தான்.

சூரியன் நிலை குலைந்து போனால் அனைத்தும் ஸ்தம்பித்து விடுகிறது.
ஈரேழு உலகங்களுக்கும் அவர்தான் கடவுள்.

திருமூலர் திருமந்திரத்தில் சிவனைச் சூரியன் எனக் குறிப்பிடுகின்றார்.

ஒரு கடவுளுக்கான இலட்சணங்களில் எதுவும் குறைந்தில்லை.

thanks: oneindia.com

மனதில் ஒரு தீர்க்கமான நோக்கத்துடன் காலையில் சூரியனை தரிசித்தால் ஒரு மாயம் நிகழும்.

#அடி முடி தேடிய கதை
உயிரின் இலக்கணம் சூரியன் ஆகும். உடலின் இலக்கணம் பூமி ஆகும்.

உயிரிக்குப் புதுமை அளிப்பது சூரியன் ஆகும்.
உயிருக்குப் பழமை புகட்டுவது பூமி ஆகும்.

புவி வாழ் உயிர்களிற்கு ஆதி பூமி ஆகவும் அந்தம் சூரியன் ஆகவும் இருக்கிறது.

எமது உயிர் சூரியனுக்கு ஒப்பானதும் உடல் புவிக்கு ஒப்பானதும் ஆகும்.
உயிர் நிலைக்க சுவாசம் அவசியம் ஆகும். உடல் நிலைக்க இதயத் துடிப்பு அவசியம் ஆகும்.
"அண்டத்தில் இருப்பதைப் பிண்டத்தில் காண்பாய்" என்பது முன்னோர் வாக்கு.

#சத்துவ குணம்
சூரியன் போல நீங்கள் ஒளி வீசிக் கொண்டு இருந்தால்,
சூரியனைத் தனது கையால் மறைப்பவர் ஒளியை இழந்து இருளில் தவிப்பதுபோல,
உங்களை ஏமாற்றுபவர்கள் தாமே நஷ்டம் அடைவர்.
நல்லவர்களை ஏமாற்றுவதால் அவர்கள் அடையும் நஷ்டத்தை விட அதிக நஷ்டத்தை இந்தப் புவி சந்திக்க நேரிடும்.

நெருப்பு சுடும் என நெருப்பினை நீங்கின் விரைவில் பனியும் சுடத் துவங்கும்.
உயிர்கள் பூமியை நீங்கினாலும் சூரியன் தீண்ட மறுத்தாலும் அதை விடுத்து ஒரு பெருவாழ்வு ஒருபோதும் கிட்டாது.

சூரியன் போல நீ சுடர் விட்டுக் கொண்டு இருந்தால் நட்சத்திரங்கள் அடங்கித்தான் போக வேண்டும்.

#தாமத குணம்
ஆனால் தாமத குணம் படைத்தவர்களோ தாமும் துன்புற்று அது நிமித்தம் பிறரையும் துன்புறுத்துவர்.

உடலிற்கு ஆதாரம் உயிர் என்பதுபோல
இதயத் துடிப்பிற்கு ஆதாரம் சுவாசம் என்பதுபோல
புவிக்கு ஆதாரமும் உலகின் முதலாவது அதிசயமும் சூரியன் ஆகும்.
எல்லா உயிர்களுக்கும் ஆதரமாக விளங்கும் சூரியனைப் போற்றி
இனிய தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

thanks: vegrecipesofindia.com

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...