வேலும் மயிலும் ஞானத்தின் அடையாளங்கள் ஆகும்.
மூலாதாரத்தில் கணபதியும் சிரசினில் முருகனும் இருத்தி வழிபடுவது வழக்கமாகும். மூலாதாரம் எனப்படுவது முள்ளந்தண்டின் அடிப்பகுதியில், குரங்குகளிற்கு வால் காணப்படும் இடம் ஆகும். அதாவது குண்டலினி எனப்படும் வளித் திரளையை (குண்டலினி) மூலாதாரத்தில் பேணுவதே வழமையாகும். முதல் வணக்கத்துக்குரியவர் கணபதி ஆவார். ஆனால் சிந்திக்கும்போது உடனே அது மேலே முனைப்படைந்து தலையை அடைய வேண்டும்.
சிந்திக்கும் போது அதற்குத் தேவையான சக்தி, புஜம் கொண்டு கொடும் வேலை செய்யும் போது தேவையான சக்திக்கு இணையானது. அதன் பிறப்பாக்கத்திற்கு மூச்சு அதிகம் தேவைப்படுவதோடு மூளைக்கு அருகிலேயே அது நடைபெற வேண்டும். அதற்கு குண்டலினி எழுகை என்று சித்தர்கள் சொல்வது நிகழ வேண்டும். ஆனால், செயற்பாடு எதுவும் இல்லாதபோது மூச்சு குறைந்து, குண்டலினி மீண்டும் குளிர்ச்சியடைந்து மூலாதாரத்தை அடைய வேண்டியது கட்டாயம் ஆகும். அல்லாத பட்சத்தில் உடல் அளவிலும் மனதளவிலும் பல சீர்கேடுகள் நிகழும் என்பது கட்டாயம் கவனிக்கப்பட வேண்டியது.
ஞானத்தின் நிறம் கருநீலம் என ஞானி ஒருவர் குறிப்பிடுகின்றார். அதாவது மனம் தெளிவடைந்து ஞானம் உச்சம் பெறும்போது கண்களை மூடினால் மயில் நீல நிறத்தில் ஆங்கே ஒளி தோன்றும். அப்போது மூளையானது உடல் கடந்து உச்ச மீடிறனில் செயற்படத் தொடங்குகிறது என்று பொருள். ஆகவே நான் நினைக்கும்போது முருகன் வேல் கொண்டு நீல மயில் ஏறி வர வேண்டும் என்பதே வேல் மயில் வழிபாட்டின் நோக்கம் ஆகும். ”வேலும் மயிலும்” என்று பெயரிட்டுக் கொள்ளும் வழக்கமும் இருந்தது.

No comments:
Post a Comment