Saturday, July 31, 2021

ஒரு குட்டி Story... அடங்குமா இந்த அடங்காத சாதி வெறி!

எனக்கு முக்குலத்தில ஒரு அம்மா, வெள்ளாள குலத்தில ஒரு அப்பா. எனக்கு, எல்லாரையும் போலத்தான், first rank ஐத்தான் பிடிக்கும். அதால அம்மாவைத்தான் அதிகம் பிடிக்கும். ஏனென்றா மாதா பிதா குரு தெய்வம் என்று தானே சொல்லுவாங்க. அதுக்காக நான் அப்பாவிற்குரிய கடமைகளைச் செய்யத் தவறுபவன் அல்ல. ஆனால், அம்மாவைத்தாம் பிடிக்கும். அதோடு அப்பா தன் சம்பாத்தியத்தை முழுவதும் எங்களுக்குச் செலவு செய்து தியாகம் செய்தாரே தவிர, அம்மா தன்னையே வருத்தி பல தியாகங்கள் செய்திருக்கிறார், செய்து கொண்டு இருக்கிறார். தனக்கென்று எதையும் செய்வது இல்லை என்பது தான் இன்னும் துன்பமான விடயம். ஆனால் என்ன சொன்னாலும் செலவு செய்யப் பணம் இருந்தால் என் அம்மாவைப் போன்ற ஒரு தாயால், தந்தையின் தயவு இல்லாமல் ஒழுக்கமாக வளர்த்து எடுக்க முடியும் என்று நான் எங்கு வேண்டுமென்றாலும் அடித்து சொல்லுவேன். அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

அம்மாவும் அப்பாவும் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். ஒரு வகையில் காதல் திருமணம் என்றும் சொல்லலாம். மணப் பொருத்தத்தை விட மனப் பொருத்தம் அவசியமானது என நம்புபவன் நான். ஆனால் சில திருமணங்கள் குடும்பச் சுமைகள் நெருக்கங்கள் காரணமாக சகிப்புத் திருமணமான அமைந்துவிடுகிறது. இவ்வாறு அம்மாவும் அப்பாவும் திருமணம் செய்து கொண்டவுடன் அப்பாவின் குடும்பம் உறவினர்கள் உட்பட வெள்ளாள யாதியினர் எங்களை ஒதுக்கி வைத்தனர். தந்தையின் பக்கம் இருந்து நமக்கு உறவினர் யாரும் இன்றுவரை இல்லை. அப்பப்பா மட்டும் சில காலம் கழித்து எங்களை வந்து கண்டு செல்வார். அவர் இயலாது போன பின், அதுவும் கடந்து போனது.

அந்தத் திருமணத்தின் பின் ஏற்றுக் கொண்டது எனது அம்மாவின் உறவினர்கள் குடும்பத்தவர்கள்தான். அதாவது முக்குலத்தவர்கள். எங்களை பிறந்த காலம் தொட்டே ஆதரித்து பராமரித்து வந்தது தாய்வழி சொந்தங்கள்தான். அம்மம்மா, மாமாமார், சித்திமார் என அம்மா வழி சொந்தங்கள் மட்டுமே எமக்குத் தஞ்சம். சிறு வயது முதலே எமக்கு செய்ய வேண்டிய கடமைகளுக்கு மேலாக, வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு ஆடை, ஆடம்பர பொருட்கள், என அத்தனையும் செய்து கொடுத்தது அம்மம்மாவின் குடும்பத்தினர்தான். அதிலும் குறிப்பாக மாமாமார்தான்.

தந்தைவழி சொந்தங்களில் அநேகரை நான் பார்த்தது கூட இல்லை. முகங்கள் கூடத் தெரியாது.

அவர்கள் நம்மைச் சேர்த்துக் கொள்ளாததற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அப்பாவுக்கு 5 சகோதரங்கள். அந்த ஐவரும் தங்கைகள். அப்படி இருக்க அப்பா இடையில் திருமணம் செய்து கொண்டது கவலைக்குரியதுதான். தமது குலத்தவர் அவர்களைத் திருமணம் செய்யச் சம்மதிக்க மாட்டார்கள். அவர்களைக் கலியாணம் செய்து கரை சேர்க்க வேண்டியே அப்படி அவர்கள் செய்ததாகக் கேள்வி. இப்போது அவர்கள் யாவரும் கல்யாணம் செய்து நன்றாகத்தான் உள்ளனர். அந்த வகையில் கடமைகளைச் சவரச் செய்தது அப்பப்பா மட்டும் என்றே சொல்ல வேண்டும்.

ஆனால் அந்தக் காரணம் வலிதானது அல்ல. அம்மாவிற்கும் 9 சகோதரங்கள். அப்போது யாரும் திருமணம் செய்திருக்கவில்லை. அவர்கள் எதையும் யோசிக்காமல் சேர்த்துக் கொள்ளவில்லையா! அது தான் பாசம். அவர்கள் என்ன தக்காளித் தொக்கா! அவர்கள் குலத்தவர்கள் மட்டும் வரன் கொடுப்பார்களா! இது எண்ணத்தை எடுத்துக் காட்டுகிறது என்பது உங்களுக்கு இப்போதே விளங்கி இருக்கும்.

இருந்தாலும் அம்மா அப்பாவை விட்டுக் கொடுப்பதில்லை. அப்பாவின் ஊர்தான் பிள்ளைகளுக்கும் ஊர் என்பது போலவும், எமது கல்விக்காகவும் தந்தையின் ஊரான சாவகச்சேரியில் தான் யுத்தத்துக்கு முன் சில காலமும் பின் 8 வருடடங்களும் #வாடகைக்கு #வீடுகள் எடுத்து தங்கி இருந்தோம். பிறகு அம்மாவின் சேமிப்பு கொண்டு ஒரு காணி வாங்கி பிறகும் சாவகச்சேரியிலேயே குடியேறினோம். இந்த சேமிப்பில் ஒரு பங்கு அப்பாவின் உழைப்பினுடையது என்றாலும் பெரும்பங்கு அம்மாவின் சம்பாத்தியம், மாமாமார் அனுப்பிய பணத்தையே சாரும். இதில் சம்பாத்தியம் என்பதற்குள் அம்மாவின் சிக்கனம், உழைப்பு போன்றனவும் உள்ளடக்கம்.

மொத்தமாக 8 வாடகை வீடுகள் கழுவிக் குடி புகுந்திருப்போம் இந்தச் சாவகச்சேரியில்… அதற்கும் கூலிக்கு ஆட்கள் வைத்துக் கொள்வது இல்லை. அப்போதெல்லாம் ஒரு நாய் திரும்பிப் பார்க்கவில்லை. இடையில் அக்காவுக்கு சாமத்திய வீடு செந்திருந்தோம். அப்போதும் அங்கே அதற்கான செலவு உட்படப் பல பண நகை சதுர உதவிகள் செய்தது மாமாக்களும் அம்மம்மாவின் உறவினர்களும்தான். அங்கே அப்பாவின் உறவினர்களும் வந்திருந்தனர். அப்பப்பாவும் வந்திருந்தார். அவர்களை நான் வரவேற்கிறேன். அத்துடன் குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்னவெனில் எனது ஏனைய இரண்டு சகோதரிகளுக்கும் சொந்த வீடு மற்றும் போதிய வசதிகள் ஆதரவுகள் இல்லாமையால் சாமத்திய வீடு செய்யப்படவில்லை.

அப்போது எல்லாம் ஒட்டாத சொந்தம். அப்போது எல்லாம் ஒட்டாத யாதி இடையில் வந்து குருவிச்சை மாதிரி ஒட்டிக் கொண்டது. அதுவும் சுரண்டலுக்குத்தான். கொடுப்பதற்கு அல்ல. ஒட்டு இல்லாத போதே இடையில் பலமுறை ஏமாற்றி, தான் வாயை வயிற்றைக் கட்டி சேமித்த பணத்தையும் சீதனமாகக் கொடுத்த பணத்தையும் பறித்ததாக, அம்மா அடிக்கடி வருத்தம் கொள்வார். எல்லோரும் பெற்றுக் கொள்வதற்கென்றால் வருவார்கள். நானும் கொடுப்பதை வரவேற்பவன்தான். ஆனால் ஏமாற்றிப் பிடுங்குவதை அடியோடு வெறுக்கிறேன்.

குடும்பத்தின் இடையில் விழுந்த  சிறு விரிசலைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட அவர்கள் அதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். முதலில் பணம்.. ஒட்டு மொத்த ஊருடன் ஆசிரியரும் சேர்ந்து ஒரு தொகை பணத்தினை ஒரு பிள்ளை வெளிநாடு சென்று படிப்பதற்காக எனச் சொல்லி பினாமி ஒருவருக்குக் கட்ட வைத்தனர்.

அத்தோடு அவர்கள் கொட்டம் அடங்கவில்லை. நான் காபொத உத படிக்கும்போது அதைக் குழப்ப பல சதிகள் செய்தனர். நான் முதல் முறை பரீட்சையில் நான் எதிர்பார்த்த மட்டத்தை அடைய முடியவில்லை. இரண்டாம் முறை படித்தேன். இப்போது அவர்களின் இரண்டாவது சூதாட்டம் தொடங்கியது. எப்படி எனறு தெரியவில்லை. அநேகமாக களத்தினை உருவாக்காது, வாய்ப்புக்களைச் சரியாகப் பயன்படுத்தி இருக்க வேண்டும். மாமாவில் ஒருவர் கதிர்காமம் அழைத்துச் சென்ற போது அங்கே ஒரு கூத்தை அரங்கேற்றினர். இப்படியாகப் பல ஆதாரங்களைத் திரட்டிக் கொண்டனர். இப்போது இரண்டாவது முறை நான் பரீட்சையில் படித்து நன்றாக எழுதி இருந்தேன். அதையும் குறைத்துப் பெறுபேறு போடச் செய்தனர். அவர்களின் சாட்சிகளைப் பாருங்கள்… அம்மாவின் செல்லப் பிள்ளை நானாம்.

ஆனால் உண்மையில் அப்படி ஒன்றுமில்லை. எல்லாப் பிள்ளைகளும் அம்மாக்கு ஒன்றுதான். அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்து கொடுக்கும் ஒரு தன்னலமற்ற தாய். இங்கே ஆண் பிள்ளை என்று கூடச் சிறப்பாக எதுவும் செய்தது கிடையாது. எலோருக்கும் ஒன்றுதான். இதனால் சகோதரிகளுக்குச் சீதனம் தரமாட்டேன் எனப் பலமுறை சண்டை செய்துள்ளேன். அதனால் அந்தப் பணம் கட்டப்பட்டது எனது பெறுபேறுகளை உயர்த்த எனச் சாட்சி சொல்லப்பட்டது. ஊரும் இந்த ஊர்ப் பள்ளிக் கூடமும் சேர்ந்து என் பெறுபேற்றைப் போலியான ஆதாரங்கள் காட்டிக் கூறு போட்டு விற்றன. அதுதான் இந்த ஊர்ப் பள்ளிக் கூடம் ஆயுற்றே… இனி ஏனைய சாதிகள் வேறு இடம் செல்ல வேண்டியது தான். எப்படி எமது பணம் ஏமாற்றி பறிக்கப்பட்டது. அது எனது ஊழலுக்காகக் கட்டப்பட்டதாக ஆதாரம் காட்டப்பட்டது. இறுதியில் நான் கடினப்பட்டுப் படித்துப் பெற்ற பெறுபேறுகளும் பறிபோனது. இது கொஞ்சம்தான் எனக்கு நடந்ததில் நான் கூறிய கொஞ்சம்… இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.

எனக்கு நடந்தது எல்லாம் நீங்கள் அறிவீர்கள் என நான் சுருக்கமாகச் சொல்லி முடித்திருக்க முடியும். ஆனால் இவர்கள் பரப்பி வைத்துள்ள வதந்திகள் யாரிடம் எந்த இடத்தில் எப்படி உள்ளது என்பதை நான் அறியேன். சிங்களவர்கள் கூடப் பலவாறு குழப்பப் பட்டனர். அவர்களுக்குக் கூட இன்னும் முழுமையான உண்மை தெரியாது. மாமா, கிறிஸ்தவர், முருகன் கதிர்காமம் சன்னதி, இயக்கம், ஆமி, பிள்ளையார், அப்துல்கலாம், முஸ்லிம், தண்ணி அடிக்காதது, கிளாஸ் லெவலுக்கு படிகிறது, சாதி, மதம், லவ்வர மாத்தின, லவ் லொட்டு லொசுக்கு இன்னும் எத்தனையோ காரணங்கள் சொல்லப்பட்டது… இனாப் இனாப்.

இது எல்லாம் போக அம்மா மற்றும் நாங்கள் சாமியைக் கும்பிடுவதால் சாமிதான் எமக்கு உயர்ந்த பெறுபேறுகளைப் போட்டுத் தருவதாகவும் சொல்லப்பட்டது. இதுபோல ஆயிரக்கணக்கில் வதந்திகள் பரப்பபட்டன. இதில் வருத்தத்துக்கு உரிய விடயம் என்னவெனில் இதில் பிள்ளையார் கொண்ட அமைப்பு ஒன்றும் இதில் தொடர்புடையது. பௌத்தத்தில் பிள்ளையார் இருப்பதால் இது அவர்களின் கூட்டுச் சதியோ என நான் எண்ணுகிறேன். பௌத்தம் என்றால் எல்லாவற்றையும் ஒருமித்து நோக்க வேண்டாம். ஏதோ ஒரு பணத் தேவை ஏற்பட்ட அமைப்பு. தர்மத்தை பேணும் அமைப்புகள் இன்னும் உள்ளன. இந்த மோசடியால் பல அப்பாவிகளின் உயிர்கள் பறிபோனது என்பது மட்டும் திண்ணம்.

அத்துடன் இவர்களின் ஆட்டம் அடங்கவில்லை. இந்த மோசடி சிறிது சிறிதாகக் கசிய வெளிக்கிட்டதும் அதற்குக் காரணம் நாம் தான் என நினைத்து நமது குடும்பத்தை பழிவாங்கியது. ஏற்கனவே இவர்கள் கிளப்பிய வதந்திகள் ஒரு பக்கம் என்னையும் என் குடும்பத்தையும் கடுமையாக தாக்குகிறது. அது போக குடும்பத்துக்குள் இறங்கிக் கும்மியடித்தது அந்த யாதி வெறி. இன்கே உள்ள உயர்வு தாழ்வைப் பயன்படுத்திக் குரோதத்தை ஏற்படுத்தி ஒட்டு மொத்த நிம்மதியையும் கெடுத்து வைத்தது.

இப்போது சொல்லுங்கள் நாம் செய்த குற்றம் என்ன? அனைத்தையும் இழந்தது யார்? துன்பத்தை அனுபவிப்பது யார்? இதனால் பலன் அடைந்தது யார்? இதிலே எனக்கு செய்யப்பட்ட hardcore psychotronic physical mental treatments பற்றி நான் குறிப்பிடவில்லை. அதை எல்லாம் சொல்ல ஒரு நாள் போதாது. அப்படி நீண்டு கொண்டே போகும்.

இப்போது பாசம் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. எமது குடும்பத்தில் உள்ள படிக்காமல் உள்ள வெளிநாடு சென்று படிக்கக் காசு கட்டப்பட்ட என் அண்ணனில் அவர்கள் அக்கறை கொள்கிறார்களாம். அந்தக் காசைத் திருடி கொண்ட களவாணிகள், 7 வருடங்கள் ஆகிறது அவருக்கும் ஒன்றும் செய்து கொடுக்க துப்பு இல்லை. அங்கே நன்றிக் கடனைச் செலுத்துவதாகச் சொல்லி என்னைப் படிக்க விடாமல் துன்புறுத்துவது குடும்ப நின்மதியைக் கெடுப்பது… இது போல இன்னும் பல களவுகள் செய்ய அத்திவாரம் போடுகிறார்கள் புரிகிறதா!

மனிதன் சந்தர்ப்பவாதி என்று நான் அறிவேன். இந்த சாதி போல எந்த சாதியும் நாறல் சாதியாக இருக்க முடியாது. என் அனுபவத்தில் சொல்கிறேன்.

நான் துன்பங்களுக்கு ஆளாகும்போதெல்லாம் நான் செய்த தவறு என்ன எனப் பல முறை யோசித்து வருந்தி இருக்கிறேன். விடை கூறப்பட்டது இவையான். கனவு கண்டது, முட்டையத் தொட்டது, கொட்டையைத் தொட்டது, கையில போட்டது லூசுக் கூட்டம்…

நான் என் துன்பத்தை மறந்தாலும் என் அம்மா படும் துன்பம்… என் அம்மா அடிக்கடி சொல்வார்கள், தான் 2 ரூபா பலோடா தின்னாமல் நடந்து சென்று அதைச் சேமித்ததாக… விரதம் பிடிக்காத கடவுள் கிடையாது. அதில் அந்த நயவஞ்சகன் பிள்ளையாரும் உள்ளடக்கம். வீட்டில் வருடத்திற்கு 5, 6 நாள்தான் அசைவம். எல்லாம் கோயில்களிலும் கொடியேறும். எங்களுக்கு கம்ப போக முதல் அம்மா தான் முடி வெட்டி விடுவார். அம்மா காலை உணவு சாப்பிட்டு 9 வருடங்கள் ஆகிறது. வீட்டை விட்டு வெளியில் பயணம் சென்றால் ஒரு சிற்றுண்டி குளிர்பானம் அருந்துவது கிடையாது. காய்ந்து போய் வீடு வந்துதான் சோறு தண்ணி எதுவென்றாலும். மிக்சர் முறுக்கு கச்சான் கூட கடையில் சாப்பிட்டால் கட்டுபடியாகாது என்று வீட்டில் இருந்து செய்து எடுத்துப் போய் கோயிலில் சாப்பிட்ட பல சந்தர்ப்பங்கள் உண்டு.

என் பாடசாலைப் பருவத்தில் நொருக்குத் தீனிக்கென்று பத்து ரூபா என் பையில் கிடையாது. இப்படி எல்லாம் சேர்த்த பணம். அதை கொள்ளை அடித்து, என் வயித்தில அடித்து, அவ்வளவு ஒழுக்கமாக இருக்கிற, நான் தான் பரீட்சை மோசடி செய்தாக வதந்தி பரப்புது இந்த தமிழ் இனம். இடையில் இது எல்லாம் அறிந்த போது உருத்திராட்சம், திருநீறு, சாமி என எல்லாரையும் தூக்கி எறிந்தேன் நான். ஏமாத்துக்காரக் கடவுள்.

பிறந்ததில் இருந்து தனக்கென எதுவும் அனுபவித்திராத அடிச்சுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார் என் அம்மா. அவர் ஒரு பிள்ளையை இப்படித் துன்பப்பட விட்டு, இன்னொரு பிள்ளையை டியூன் பண்ணி அந்த அம்மாவை வாழ்நாள் முழுவதும் நிம்மதி இல்லாமல் பண்ணுறியள். அப்பவும் ஒன்றும் அனுபவிக்கவில்லை. இப்பவும் ஒன்றும் அனுபவிக்கவிக்கவில்லை. இடையில இருந்து யாருக்காகவோ கஸ்டப்படுது அந்த ஜீவன். அந்தப் பிள்ளை சும்மா கிடந்து கொண்டு வாய்க்கு வந்த தூசனம் எல்லாம் சொல்லி அம்மாவை பேசுது. இதுக்கெல்லாம் பின்னணி அந்த நாரல் சாதியும் இந்த நாறல் ஊரும் தான். இங்க வந்து எத்தனயோ தரம் அம்மாவின் மேல ஏறி மிதிக்கிற மாதிரி, அம்மா காலுக்க கிடந்து மிதிபடுற மாதிரி, அம்மா அடி வாங்கிற மாதிரிப் பல சந்தர்ப்பங்களை நான் பார்த்திருக்கிறே.

அம்மா செய்த பாவம் என்ன? அம்மா ஒரு பச்சைக் குழந்தை போல எந்த சூதுவாது தெரியாதவர். தனக்கெனவும் வாழாமல் யாருக்காக வாழுறாங்க என்றும் தெரியாத ஒரு வாழ்க்கை. 59 வயது, அம்மம்மாவை விட வயது கூட போல உள்ளார். முதுகு கூடக் கூனி உள்ளது. முதுகு கூன கூட இவர்கள் பரப்பிய வதந்தியின் விளைவு ஏதோ ஒன்றுதான் கழுத்திலே விசத்தை ஏற்றியுள்ளது. இப்படியாக எங்கள் குடும்பத்தைக் காரணம் இல்லாமல் துன்பத்துக்கு மேலே துன்பத்துக்கு ஆளாகிற. அங்கே கம்பஸ் இல் உள்ள போது, நான் குழம்பி விடுவேன் என்று, எனக்கு இது குறித்து ஒன்றும் சொல்ல மாட்டார். அந்த அப்பழுக்கற்ற தாய் பட்ட துன்பம் நீங்கத்தான் இறைவன் செயலால் அடிக்கடி நான் கம்பஸ் லீவு கிடைத்து இங்கே வந்து இருந்திருக்கிறேன்.

இப்படியான அநியாயம் தாங்க முடியாமல் தான் இப்போது கொரோனாவும் வந்து அனைவரையும் அழிக்கிறது. நான் வயிரெரிஞ்சு சொல்லுறண்டா! ஒரு கொரோனா இல்ல 100 கொரோனா வந்து கூட இந்த இனம் எல்லாம் அழிஞ்சு போகும். அப்போதாவது இந்த பூமி சுத்தமடையும். அதுக்குப் பிறகு ஒரு தாய் இப்படியான இடர்களை எல்லாம் சந்திக்க வேண்டி இருக்காது. அப்பாவிகள் துன்பப்பட வேண்டி இருக்காது. எல்லாம் அழிஞ்சு போவியள். நாசமாப் போவியள். ஒன்ம் மிஞ்சாது. மிஞ்சினாலும் நான் அழிப்பன். நாசமாப் போக…

இந்த நாகரீகத்தில நல்லவனா இருக்கிற நான் ஒரு பொருட்டு இல்லை என்றால்… கேடு கெட்ட வேலை செய்யுற இந்த இனம் எனக்கு ஒரு பொருட்டு இல்லை; ஒரு மயிர். அத்தனையும் அழித்தொழிப்பன். அழிஞ்சு போகும் எண்டு எப்போதோ எழுதியாச்சு. பார்த்திருந்து அழிஞ்சு போ!

இப்போது இரண்டு சாதிகள் பற்றிய சிறந்த கருத்துக் கணிப்பு உங்களுக்கு வந்திருக்கும் எனறு நினைக்கிறேன்.

இப்போது இதனை உங்களி சிலர் இதனை கடுமையாக ஆட்சேபிக்கலாம். யாரோ ஒருவரோ ஒரு ஊரோ ஒரு பள்ளிக்கூடமோ செய்த குற்றத்துக்காக ஒட்டுமொத்த யாதியையும் எடை போடுவது தவறு என்று. எடை என்றதும் ஞாபகம் வருகிறது. என் வளர்ச்சியைத் தடைப்படுத்த 6 வருடங்களுக்கு முன் என் உணவில் கசக் கிருமிகளைக் கலந்து காண நோயை ஏற்படுத்திய கயவர்கள் இவர்கள். இப்போதும் எனக்கு அது எக்ஸ்ரீம் நிலையில் உள்ளது. அதனால் கழுத்தில் நிழநீர்க்கட்டிகளில் #பெருங்காயம் ஏற்பட்டு சீழ் வடிகிறது. கனவு காண்பதும் குற்றமாம்.

இனி இதற்கும் சேர்த்து கதை அடித்துவிடும் அந்த கூட்டம். என்னை வாயை மூடிக்கொண்டு இருக்குமாறு பலமுறை வலியுறுத்தப்பட்டிருக்கிறது. குற்றம் செய்தவன் மட்டும்தான் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். நான் எட்டுத் திக்கும் கேட்க முழங்குவேன். மாட்டுக்கும் நீதியைத் தந்தானாம் தமிழன். எனக்கு இவர்கள் தந்த நீதி என்ன. என்னைப் பற்றிய வதந்திகள் பல மாற்று உருவத்தில் படங்களில் வருவதைக் காண முடிகிறது. இதில் விஜய், அஜித், ரஜினி உட்படப் பல சிறு நடிகர்களும் உள்ளடக்கம். நூற்றுக் கணக்கில் படங்கள். ஆயிரக்கணக்கில் திரைப் பாடல்கள். இதை எல்லாம் சொன்னால் என்னை விசர் என்றுதான் சொல்வார்கள். இது இப்போது யாதியைத் தாண்டித் தமிழனின் சதியாகிறதே!

அப்படி எனில் ஒன்று, அவர்கள் யாவர் என்று கண்டுபிடித்து அவர்களை ஊரறிய விலக்கி வையுங்கள். அல்லது நீங்கள் அந்த சாதி இல்லை என்று விலகிச் செல்லுங்கள். இப்போது நான் தமிழன் இல்லை என்று விலகிப் போகவில்லையா! அதுபோல... ஆனால், அதன் நிழலில் குளிர் காய்ந்தவர்களுக்கு அது கொஞ்சம் கஸ்டமான விடயம்தான். கூட்டுச் சேர்ந்து கெடுத்து வாழ்வதை விட அப்படி ஒரு கூட்டே தேவை இல்லை என்பது என் கருத்து. இல்லை எனில் மூடிட்டு நின்று சொல்லுறதக் கேள்டா கூமுட்டை. நீ ஒரு இப்படிப்பட்ட கேவலமான சாதியைச் சேர்ந்தவன். இரண்டில் ஒன்றைச் செய்! மூடிட்டு கேள்!

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்

இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்

பட்டாங்கில் உள்ள படி!

என்னை வாழ வைத்த நல்ல உள்ளங்கள் அனைத்திற்கும் கோடான கோடி நன்றி!

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...