Tuesday, April 14, 2026

அசுரர்கள் அறிய வேண்டிய ஞான வார்த்தைகள்.
சொற்களினால் ஒரு வேள்வி. Power of Words.
பணிவு, பழி ஏற்றல், கடமை, நேர்மை, விசுவாசம்.
Kindness, Responsibilty, Duty, Integrity, Loyalty.
These are not just words but a path defined for success.

உண்மையில் இவற்றுக்கும் பாவ புண்ணியம் மற்றும் தர்ம அதர்மம் ஆகியவற்றுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது பகுத்தறிவு நீதிகள் ஆகும். அதனாலேயே அறிவில் தேர்ந்தவர்கள் இவற்றை கைவிடுவது இல்லை.

பணிவு (Kindness)

ஞானத்தில் முதன்மை வகிப்பது பணிவு ஆகும். எப்படியான சங்கடமான சூழ்நிலை வந்தபோதும் அதனை பணிவாகவே எவருடனும் கையாள வேண்டும். இதன் உச்சநிலை காந்தியின் அகிம்சை ஆகும்.

நான் கூட பலமுறை நினைத்ததுண்டு,

"மேல்மட்டத்தில் உள்ள புத்திஜீவிகள் (தேவர்கள்) தமது புத்திசாலித்தனத்தால் ஏமாற்றுகிறார்கள்; அதனால் தான் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் (அசுரர்கள்) எப்போதும் சச்சரவு செய்கிறார்கள்; அசுரர்கள் கொடியவர்கள் என பெயர் வாங்குகிறார்கள்"

என்று. அது மிகவும் குறைந்த அளவே ஆகும்.

அசுரர்கள் புத்தியில் குறைந்தவர்கள்; தாமச குணம் கொண்டவர்கள். அதனால் உலகத்தின் இழுபறி நிலைகளில் போட்டிகளில் தோற்றுப் போகிறார்கள். அப்போது ஏற்படும் இக்கட்டான சூழலையும் அதனால் ஏற்படும் வலியையும் கையாள முடியாமல், அவ்வாறு மூர்க்கமாக நடந்து கொள்கிறார்கள். அந்த அடிப்படையில் இது அசுரர்களின் தாமச நிலையுடன் தொடர்பு பட்டதே ஆகும்.

"வலியவன் வாழ்வான்!"

இதே போட்டிகள், பிரச்சினைகள் எல்லாம் தேவர்கள் மத்தியிலும் உண்டு. ஆனால் பணிவு என்னும் கருவி கொண்டு அதனால் வரும் தீய விளைவுகளை அவர்கள் குறைத்துக் கொள்கிறார்கள்.

அந்த வகையில் அசுரர்களுக்கான முதலாவது பாடம் பணிவு ஆகும். எப்படியான இக்கட்டான சூழ்நிலை ஏற்படினும் எந்த சந்தர்ப்பத்திலும் எவருடனும் பணிவாக பழக வேண்டும். எதையும் பணிவாக கையாழ வேண்டும். பகை என்னும் உணர்வு ஏற்படும்போதே அது நட்டத்தையும் அழிவையுமே குறிக்கிறது. பகையானது கடன் மற்றும் செலவையே ஏற்படுத்தும்.

பொறுப்பு (Responsibilty)

எவர் தவறு செய்திருந்தாலும் பிரச்சினை எம்முடையதாயின், பழியை நாமே ஏற்றுக்கொள்ள வேண்டும். பொறுப்பு என்பது நம் இழப்பின் பழிகளையும் நாமே ஏற்றுக் கொள்ளுதல் ஆகும்.

"ஆடத் தெரியாதவன் மேடை சரியில்லை" என்று சொல்லுதல் கூடாது.

பழியை நாமே ஏற்றுக் கொள்ளும்போது நம்முடைய பலம் அதிகரிக்கிறது. வீண் பழியை அல்லது உண்மையான பழியையேனும் அடுத்தவர் மீது போடும்போது நாம் பலவீனம் அடைகிறோம். அதோடு அந்த பழிக்குரிய தவறும் திருத்தப்படாமலே போய்விடும். இது நம்மை சுற்றி பகையை உருவாக்குவது மட்டுமன்றி பல திருத்தப்படாதவைகளின் மத்தியில் வாழ நேரிடும்.

அதோடு பொறுப்புக்களை நிறைவேற்றும்போது பேதங்கள் பார்த்தல் கூடாது. இது கடமைக்குள் அதிகம் உள்ளடங்குகிறது.

கடமை (Duty)

எவர் எமக்கு ஊறு விளைவித்த போதிலும், அது நமது நண்பர் அல்லது பகைவரே ஆகிய போதிலும், அவர்கள் நமது Clients/Customer அல்லது பங்குதாரர் ஆயின், நாம் ஏற்றுக் கொண்ட கடமைகளை எந்த பிழையும் இன்றி அதற்கான வரவிலக்கணத்தின் அடிப்படையிலேயே செய்து கொடுத்தல்.

"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்; கடமை"

தன் கடமையையே செய்து மாண்டான் கர்ணன். ஆனால் அவனை பார்த்து, அவனை நம்பி அதையே பின் தொடரும், தன் கடமையை செய்யாது போகும் மனிதரே இங்கு அனேகர் உள்ளனர். அதற்கு

1. அது குறித்து அறியாமை
2. பின்விளைவு குறித்து அச்சம் கொள்ளுதல் அல்லது
3. அதில் தானும் நன்மை அடைதல்

ஆகியன காரணமாக அமையலாம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவர் தன்னுடைய கடமையையும் அறியாது போகின்றமையும் காரணமாகலாம்.

கடமை நமது கூட்டத்தின் அல்லது சந்ததியின் நெடுங்கால பெறுதி அல்லது பலாபலனுக்கு வித்திடும் மிக முக்கியமான ஒரு அம்சமாகும். நமது வாழ்க்கையின் வெற்றி மற்றும் திருப்தியையும் இதுவே தீர்மானிக்கிறது.

ஆனால், கடமை சந்தர்ப்பத்திற்கு ஏற்ப மாறுபடும். ஏனெனில் அது ஒருவரின் பதவிக்கு வகுக்கப்பட்ட கோட்பாடுகளுக்கு உட்பட்டது. அந்த பதவியில் உள்ளவரின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டது அல்ல.

நேர்மை / நாணயம் (Integrity)

நேர்மைக்கும் தர்மத்துக்கும் சம்பந்தம் இல்லை. தர்மம் அதர்மம், பாவ புண்ணியம் ஆகியவற்றை புறக்கணிக்கும் உலகம் ஒன்றும் உண்டு. அங்கேயும் நேர்மை அவசியமான ஒன்றாகும். அதாவது சத்தியம் / உடன்படிக்கைகளை தவறாது நிறைவேற்றுதல் ஆகும். சிறந்தது எது என்பதை ஒப்பீட்டு அடிப்படையிலேயே தீர்மானிக்கும் இவ்வுலகில், ஒருவரின் / ஒரு கூட்டத்தின் நம்பகத்தன்மை மற்றும் சிறப்பை குறிப்பது இதுவேயாகும்.

விசுவாசம் (Loyalty)

இந்த உலகிற்கு நாம் தனியாக வந்தோம். வந்தபின் நமக்கு எல்லோரும் சகாயம் செய்ய முன் வருபவர் அல்லர். அப்படி முன் வந்து சகாயம் செய்தவரை நாம் மதிக்க வேண்டியது, அவர்களுக்கு அதற்கான விசுவாசத்தைக் காட்ட வேண்டியது அவசியம் ஆகும். அவ்வாறு செய்யாது போகின், நமக்கு இனிமேல் சகாயம் செய்வதற்கு பலரும் முன் வர மாட்டார்.

Bonus: 3 Mantra words in English

• Thank you
• Sorry
• Please

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...