இந்த உலகில் நமக்கு உகந்தது, உகாதது இரண்டும் உண்டு. சோறு இருக்கும் போது அதை அறியாமல் பலர் சேற்றை நாடுவர். அது அறியாமை; சிலர் போதும் என்று ஒதுங்கிக் கொள்வர்; நல்லது போட்டி குறைந்தது. ஆனால், அநேகருக்கு எது மேலானது என்று தெரிந்த பின், தர்மத்தை துறந்து போர் நிகழ்கிறது. இதிலே கடவுள் என்ன செய்ய...
எந்தக் கடவுளை, எப்படி சரணடைந்தாலும் அங்கே பங்கிட மனிதனே மாறு வேடத்தில் வருவான்.
Resources Limited
Fight Confirmed
படைத்து அதை பக்தனுக்கு கொடுக்கும் கடவுள் இங்கு இல்லை. #பிரம்மா
ஒருவன் தன்னுடையதை விட்டுக் கொடுத்தால் அவன் கடவுள் ஆகிறான்.
அந்தக் காலத்தில் தன்னிறைவு அரசர் ஆட்சியின்போது ஏன், அடுத்த இராச்சியங்கள் மீது போர் வந்தது! சற்று சிந்தித்துப் பாருங்கள். தன்னுடைய இராச்சிய மக்களை வளப்படுத்த பிற நாட்டை, நாட்டு #மக்களை சூறையாடவே போர் செய்யப்பட்டது.
(அதிக) தயிரைக் கடைந்து தான் (சிறிது) வெண்ணெய் பெறப்படுகிறது.
"சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை"
எத்தனை சாமி வந்தாலும் எல்லோரையும் ரட்சிக்க முடியாது. அதனால்தான் எல்லோரையும் ரட்சிக்கும் ஆளாளப் பட்ட சிவபெருமானே, அனைத்தையும் கொடுத்து விட்டு விடை பெற்றுக் கொண்டார்! அதை சரியாக விளங்கிக் கொண்டால், இங்கே தர்மம் நிலைக்காது என்பது புலப்படும்.
வலியவன் வாழ்வான்!
இதெல்லாம் அரசர் காலத்து ஞானம்.
No comments:
Post a Comment