பொதுவாக மனிதன் உணர்ச்சிகளுக்குக் கட்டுப்பட்டவன் ஆகின்றான். ஆகையால், சூழலில் ஏற்படும் மாற்றங்களிற்கேற்ப தன்னை அடிக்கடி மாற்றிக் கொள்கின்றான். இதனால் சுயத்தை இழந்து பெரிதும் பாதிக்கப்படுகின்றான். பலவேளைகளில் தனக்கு ஏற்படும் கடினமான தருணங்களில் இருந்து எப்படி மீழ்வது என்று அறியாமல் பின்வாங்குகின்றான். தன்னுடைய மனதை எப்படிக் கட்டி ஆழ்வது என்று தெரியாதவனாக இருக்கின்றான். நீங்கள் நன்னெறி கண்டு வாழப் பழக வேண்டும். பிறகு எப்படிப்பட்ட சூழலிலும் உங்களை மாற்றிக் கொள்ளக் கூடாது. காலப்போக்கில் இந்த சூழல் உங்களிற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டுவிடும்.
ஒரு மனிதனை மகிழ்ச்சி, கவலை, கோபம், பயம், திகைப்பு மற்றும் மன அழுத்தம் போன்ற பல உணர்ச்சிகள் ஆட்கொள்கின்றன. அதன்போது அவன் நிலைகுலைந்து தனது சிந்தனைகளை பயன்படுத்த மறந்து போகின்றான். அவசரமான, தவறான முடிவுகளை எடுக்கின்றான். அந்த முடிவுகள் அவனை மேலும் நிலைகுலையச் செய்கின்றன. உணர்ச்சி வயப்படுதல் எப்போதும், அப்போதான சிந்தனை ஆற்றலைக் குறைக்கிறது. இது போன்ற சங்கடங்கள் நிறைந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், நாம் சற்று சிந்தித்து முடிவுகளை எடுத்தாலும் அது நமது வாழ்வை பலமடங்கு செழுமையாக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை.
#மனதை முறையாகக் கையாளத் தெரிந்தவன் அனைத்தையும் முறையாகக் கையாளத் தெரிந்தவன் ஆகின்றான். இதைப் பலர் அறிந்திருந்தாலும் பலருடைய சந்தேகம், தமது மனதை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது எவ்வாறு? என்பது தான். #மனம் ஒரு மாய மந்திரக் கட்டு. ஆழ்ந்து நோக்கினால் அதன் செயற்பாடுகள் யாவும் புதிராகவே இருக்கும். ஆனால் ஒன்றை நீங்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். ”விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முழைக்கும்” என்பர். அது மனதின் விடயத்தில் மிக மிக உண்மையானது. #”எது எடுத்துக் கொண்டாயோ அது இங்கேயே எடுத்துக் கொள்ளப்பட்டது” என்று கீதையில் கண்ணன் கூறியுள்ளான். நீங்கள் நல்லனவற்றை மட்டும் மனதிற்கு உள்வாங்கிக் கொண்டால் நல்லன மட்டுமே விளைவதாகின்றது.
மனதைச் செம்மைப்படுத்தி வாழ்க்கையைச் செம்மைப்படுத்த முயல்வது ஒன்று புதிய விடயமல்ல. அதற்காகப் பல முயற்சிகளை ஆதிகாலம் தொட்டு மனிதன் செய்துகொண்டே வந்துள்ளான். ஆன்மீகமும் அவற்றில் ஒன்று ஆகும்.
”பொழுதுகள் புலர்வது எனக்காக (உனக்காக)
சூரியன் உதிப்பது எனக்காக (உனக்காக)
பொழுதுகள் மறைவதும் எனக்காக (உனக்காக)
சந்திரன் வருவதும் எனக்காக (உனக்காக)
எல்லாம் இன்னமும் என் (உன்) கட்டுப்பாட்டிலேயே உண்டு
எதுவும் கை நழுவிப் போய்விடவில்லை.”
இது போன்ற போற்றல் பாடல்கள், இறை துதிகள் மனதைத் தளர்ந்து போக விடாது நமது பிடியிலேயே வைத்திருக்கப்பதற்காக எழுதப்படுபவை. அவை மனதை உளவியல் ரீதியாகத் திருப்திப் படுத்துகின்றன. இவ்வாறுதான் ஆதி காலத்தில் இறைவனின் தோற்றம் நிகழ்ந்தது. நமக்கு வாழ்க்கையில் பிடிப்பு எதுவும் இல்லாது போகும்போது நமது மனதைத் தொலைக்காமல் பாதுகாக்க அது உதவியாக அமைந்தது. கடவுள் என்பது சிலருடைய ஞானம்; பிறருடைய நன்மைக்காகப் பயன்பட்டது.
குறிப்பு: இப்பாடல் நானே எழுதியது.
(Psychologically satisfies your mind. This is how the god evolves. God was the wisdom of someone for some others needs.)
நாம் நமது மன வலிமையை இழக்கும்போது அடுத்தவர்கள் சிந்தனைக்குக் கீழ்ப்பட்டவர்கள் ஆகின்றோம். #விதியையும் மதியால் வெல்லலாம் என்பர். நமது மனம் நம்மை சூழ உள்ள சமூகம் உட்பட வெகு தொலைவில் கிரகங்கள், உடுக்களிற்கும் கட்டுப்பட்டதாகவே இருக்கின்றது. இது பற்றி முன்னதொரு பதிவில் பார்த்திருந்தோம். #நாம் சுயமாக எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும்தான் இயற்கையையும் நமக்குச் சார்பாக மாற்றிப் போட வல்லது. நமது விதியையும் மாற்ற வல்லது. அது இந்த சூழலில் நமக்குச் சார்பான ஒரு விதையை விதைக்கின்றது. ஒரு நண்பன் ஒரு ஆராய்ச்சி குறித்துக் கூறிய கதை இங்கே கூறுவதற்குரியது.
ஒரு காட்டில் இரண்டு பிரிப்புக்கள் இருந்தன. இரண்டும் வேலிகளால் பிரிக்கப்பட்டது போல எந்தத் தொடர்புமே கிடையாது. இரண்டிலும் தாராளமாகக் குரங்குகள் வாழ்ந்து வந்தன. அதிலே ஒரு காட்டிலே இருக்கும் குரங்குகளுக்குச் சில பழக்கவழக்கங்கள் சொல்லித் தரப்பட்டன. சிறிது காலத்தின் பின்பு அயல் காட்டிலுள்ள குரங்குகளும் அந்தப் பழக்கவழக்கங்களைக் கொண்டனவாக இருந்தனவாம். இது எண்ண அலைகள் எந்தத் தொடர்பும் இல்லை என்றாலும் கூடப் பரவும் என்பதைக் காட்டுகிறது. நீங்கள் உங்கள் எண்ணங்களில் உறுதியாக இல்லாவிடில் இரண்டாம் குரங்குளைப் போல ஏனையோரின் சிந்தனைகளினால் பாதிக்கபட்டு அதன்படியே நடத்தல் ஆவீர்கள்.
மனம் என்பது நாம் மட்டும் சம்பத்தப்பட்ட விடயமல்ல. அது சூழலினாலும் தாக்கத்திற்கு உள்ளாகின்றது. அதிலிருந்து மீண்டு உங்களை, உங்கள் மனதை நிலையாக வைத்திருப்பது எவ்வாறு? #உங்களது தற்போதைய மூச்சு உங்களது அடுத்தபோதினது மனநிலையைத் தீர்மானிக்கிறது. எனவே நீங்கள் கடினமான போதுகளைச் சந்திக்கும் போதெல்லாம் உங்கள் மூச்சின் மீது கவனம் செலுத்தி அதனை நிலையாக வைத்திருக்க முயலுங்கள். ஓரிரு நொடிகளில் உங்கள் மூச்சு சீராகும்; மனமும் சாந்தம் அடைதுவிடும். பிறகு உங்கள் மனம் சிந்தித்து செயலாற்ற ஆரம்பித்துவிடும்.
#Your current breath decides your next state of mind.
Subscribe to:
Post Comments (Atom)
Latest Updates
-
Highlight: ஆதாமும் ஏவாளும் தாவும் தமிழ் குரங்கும், எலி வாலுமா? Kannan Man Theory தமிழை Reference ஆக்கிய ஆ.தாமோ, பிரித்து அழிக்கும் ஏ.வால் ...
-
The civil war between the Sinhalese and Tamils in Sri Lanka is deeply rooted in religious and cultural divides, where Ravana/Muruga—symbols ...
-
The epics of Mahabharata and Ramayana offer a nuanced history of the lineages, roles, and movements of communities across Bhar...

Spv
ReplyDelete