Tuesday, June 2, 2020

வாசிப்பு எப்படி மனிதனைப் பூரணப்படுத்தும்?

”ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஒரு சிறைச்சாலை  மூடப்படும்” என்று வீவேகானந்தர் கூறுகின்றார். ஞானம் (அறிவு) ஒன்றே மெய்ப்பொருளாகும். ஒரு மனிதனை அளித்து விட முடியும். அவனுக்காக வைத்த சிலைகளையும் உடைத்து விட முடியும். ஆனால், அவனது சிந்தனையையும் சித்தாந்தத்தையும் யாராலும் எதுவும் செய்துவிட முடியாது. அந்த ஞானத்தைப் பெருக்கும் வழிகளில் வாசிப்பு மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. அத்தோடு, வாசிக்கும்போது மூளைக்குத் தொடர்ச்சியாக வெல்லம் வழங்கப்படுகிறது. இதனால் கிரகிக்கும் ஆற்றம் மேம்படுவதால் கற்றல் செயற்பாடு எளிதாகின்றது.

வாசிப்பதால் கிட்டும் நன்மைகள்,
1. அறிவு
2. மனதை ஒருமுகப்படுத்தும் திறன்
3. பொறுமை
4. சாந்தம்
5. ஞாபகசக்தி
6. கிரகிக்கும் ஆற்றல்
7. மொழித்திறன்
8. சொல்வன்மை
9. ஆளுமை
10. சாதூர்யம்
கற்றலுக்குப் பொறுமை, சாந்தம், ஞாபகசக்தி, கிரகிக்கும் ஆற்றல் ஆகியன மிக அவசியம் ஆகும். அத்தோடு நமது திறமைகளைப் வெளிப்படுத்திப் பயனுறச் செய்ய மொழித்திறன், சொல்வன்மை,  ஆளுமை, சாதூர்யம் ஆகியனவும் அவசியம் ஆகின்றன. இவை யாவற்றையும் வாசித்தல் நமக்குக் கற்றுத் தருகிறது. அனுபவ அறிவை எதுவும் வெல்ல முடியாது என்பது மறுக்க முடியாத ஒன்றாகும். ஆனால் வயதில் முதியவர்களுக்கு அனுபவம் அதிகம் என்பதே அநேகர் எண்ணமாகும். வாசிப்பு அதனையும் பொய்யாக்கிக் காட்டக் வல்லது. அனுபவம் என்பது என்ன? ஒரு குறித்த தருணத்தில் சரியான முடிவை எடுக்க உதவும் எமது முன்னறிவு ஆகும். நான் இதைக் கதை ஒன்றின் மூலம் விளக்கலாம்.

ஒரு சிறுவன் வெளியே சென்று வீடு திரும்புகின்றான். அவனது வீட்டில் உள்ள அனைவரையும் கயவர்கள் சூழ்ந்திருக்கின்றனர். அவன் அவர்களை நன்கு அறிந்திருந்தான். அவர்கள் அனைவரையும் கொன்று தீயூட்டுகின்றனர். இப்போது அவன் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து நிற்கின்றான். அவன் மனதில் சிந்தனைகள் சிதறுகின்றன. ”நான் அங்கே ஓடிச் சென்றால் அவர்கள் என்னையும் கொன்று விடுவர். தவிர்த்து உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாக விலகிச் சென்றால், நான் தப்பித்துக் கொள்ளலாம். அதோடு, என்னால் அவர்களைப் பழிவாங்கவும் முடியும். நான் மடிந்து விட்டால் யார் திருப்பிக் கொடுப்பது.”
”அவன் தன் கண்ணீரைப் புதைத்துக் கொண்டு பதுங்கிக் கொள்கின்றான்.”

பின்னாளில் தன் வாழ்க்கையினைச் திடப்படுத்திக் கொண்டு சிறிது சிறிதாக அக்கயவர்களை இனம் கண்டு பழி வாங்குகின்றான். இது ஒரு சிறந்த படிப்பினை ஆகும். இனிக் குழந்தைகள், பாசத்தில் கட்டுண்டு வீழ்ந்துபோகும் சாதாரண மனிதர் போல அல்லாது, கடமை மட்டும் கருத்தென இருக்கும் சத்திரியர் போல வளர்க்கப்பட வேண்டும். நாமும் அவ்வாறே வாழப் பழக வேண்டும். யாரும் பாதிக்கப் பட்டவனாக வாழக் கூடாது. சாகவும் கூடாது. அத்தனையும் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும். "அதர்மத்தைக் கையில் எடுத்தவன் அதை அனுபவித்தே ஆக வேண்டும்." இதில் உறவு எதிரி என்று வேறுபாடு கிடையாது. உன் பழியை நீயே தீர்த்துக் கொள்.

இங்கே சிறுவன் எடுக்கும் கோடிட்ட வசனத்திற்கு மேலுள்ள வசனங்களும் அதன் பின்னரான வசனங்களும் ஒரு சந்தர்ப்பத்தை வரையறுத்து நிற்கின்றன. அப்போது அச்சந்தர்ப்பத்திற்கு ஏற்ப அவன் எடுக்கும் முடிவு சரியாக அமைகிறது. இது ஒரு அனுபவம் ஆகும். இது போல வாசிப்புப் பகுதியில் ஒவ்வொரு வசனத்தையும் எடுத்து நோக்கின், அதன் மேலும் கீழும் உள்ள யாவும் சந்தர்ப்பங்களைம் அவ்வசனம் அதற்கான தீர்வையும் குறித்து நிற்கும். நீங்கள் ஒரு புத்தகத்தை வாசித்து  முடிக்கும்போது விளையுளாக இது போன்ற எண்ணிலடங்காத சிக்கல்களையும் தீர்வுகளையும் நீங்கள் பயிற்சி செய்து இருப்பீர்கள். அவ்வாறே வாசித்தல் உங்கள் தொடர்ச்சியான அறிவோட்டத்தையும் பிரச்சினைகளைத் கையாளும் திறனையும் மேம்படுத்துகிறது. உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களிற்கு உங்களால் நொடிப் பொழுதுகளில் தீர்வு காண முடியும். ஏனெனில் நீங்கள் ஏற்கனவே அவை போன்ற சிக்கல்களைப் பயிற்சி செய்து விட்டீர்கள்.

இவ்வாறு வாழ்க்கையில் நீங்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை நீங்கள் முறியடித்து முன்னேறும்போது உங்கள் வாழ்க்கையும் முன்னேற்றம் அடைகிறது. உலக பணர்க்காரர்கள் வரிசையில் முதலிடம் வகிக்கும் பில் கேட்ஸ் அடிக்கடி வாசிப்பு பற்றி வலியுறுத்துகின்றார். வாசிக்க மனம் இல்லாமல் இருக்கும்போது என்ன செய்வது. அதற்கு ஒரு ஊக்கமாக இதனைக் கொள்ளலாம். பிறர் அறியாத விடயங்களை அறிந்தவராக நீங்கள்  ஒரு இருக்கும்போது உங்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியை நீங்கள் அனுபவித்ததுண்டா? நீங்கள் தொடர்ச்சியாக வாசிப்பதன் மூலம் அதனைத் தொடர்ந்து அனுபவிக்க முடியும். இல்லையெனில் வாசிப்பு போன்று தொடர்ச்சியாக நமக்கு அறிவுசார் விடயங்களைக் கற்றுத் தரும் திரைப்படங்களும் மேலே கூறிய நன்மை பயக்கும்.

புத்தகம் சிறந்த ஆசிரியர் என்பர். அதனால்தான் வெள்ளையர்கள் அவற்றை அதிகம் விரும்பினார்கள். வள்ளுவர், தத்துவங்களை இரு வரியில் சொல்லியிருக்கலாம். ஆனால், அதனை வெறுமனே வாசித்து முடிக்கும் கணத்தில் அனைவராலும் விளங்கிக் கொண்டுவிட முடியாது. அதற்கு உள்ளார்ந்த ஞானம், பொறுமை வேண்டும். அவற்றை நிஜத்திலோ, கற்பனையிலோ அனுபவ ஞானத்தினால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும். அது அத்தனை சாரமாக உள்ளது. ஆனால் ஏனைய புத்தகங்கள் அப்படி அல்ல. ஆனால், வெள்ளையரின் புத்தகங்கள் மொழி காரணமாக, அவற்றை வேறு ஒருவர் கற்றுத் தர வேண்டியுள்ளது. அதோடு அது விரைவில் குறித்த பாடங்களையே வெறுக்கச் செய்துவிடுகிறது.

வாசிப்பினால் கிடைக்கும் நன்மை பற்றி இத்தனை சான்றுகள் கூறுவதன் நோக்கம், அவற்றை நீங்கள் ஞாபகம் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அல்ல. அதன் மதிப்பை உணர்ந்து நீங்கள் பின்பற்ற வேண்டும் என்பதே ஆகும்.

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...