Friday, May 15, 2020

இறைவா இருந்தால் எழுந்தருள்க. இரவு ரயில் பயணம். நள்ளிரவு 12.00 மணி.

இரவு ரயில் பயணம். நள்ளிரவு 12.00 மணி.
ஒரு புகையிரத நிலையத்தில் வண்டி நிற்கிறது. சில பிக்குமார் ஏறுகின்றனர். நிமிர்ந்து பார்த்தேன் என்னுடைய இருக்கை மதகுருமாருக்குரியது. என் பெட்டிக்கு வராவிடில் நல்லது என நினைத்துக்கொண்டு இருந்தேன். அவர்கள் வேறு பெட்டிகளுக்கே சென்றனர். சிறிது நேரம் கழித்து ஒரு பிக்கு மட்டும் அங்கே வந்தார். தான் பல பெட்டிக்குச் சென்று வருவதாகவும் தமக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளை பௌத்தர்களே தர மறுப்பதாகவும் கூச்சலிட்டார். எனக்கு சிங்களம் ஓரளவு தெரியும் என்பதால் அவர் கூறியதில் சரிக்குப் பாதி விளங்கியது. நான் எழும்பத் தயாரானேன். எழுந்திரு என்றார். நான் உடனடியாக எழுந்து அங்காலே சென்று விட்டேன். எனக்கு மதங்கள், மத போதகர்கள் என்றால் பயம். இன்று முழுதும் நின்றபடி பயணிக்க வேண்டுமா என நினைத்தேன். ஆனால், எனக்கு இறை சித்தத்தால் அருகிலேயே இருக்கை காத்திருந்தது. அதிலே போய் உட்கார்ந்து கொண்டேன்.

அவர் தொடர்ந்தார். "சற்றும் உணர்ச்சி இல்லாதவர்கள். நான் கேட்டும் தர மறுகிறார்கள். சட்டத்தை மதிப்பதில்லையா. அனைவருக்கும் புத்தி பேதலித்து விட்டதா?" இப்படிப் பல. பிறகு அமைதியாக ஒரு பஜனைப் புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்து விட்டார். எனக்கு கடவுள் மீது நம்பிக்கை உண்டு. ஆனால், கடவுள் எமது பஜனை, வேண்டுதல்களை ஏற்று அருள் புரிகிறாரா என்று நீண்ட நாளாகச் சந்தேகம். எந்த மதமாயினும் சரி. எல்லா மதங்களிலும் இது போன்ற வேண்டுதல்கள் உண்டு. பௌத்தத்தில் பிரித்தோதுகிறார்கள், இஸ்லாமில் குரான் ஓதுகிறார்கள். கிறித்தவத்தில் பைபிள் வாசிக்கிறார்கள். இந்துக்கள் பஜனைகள், பஞ்சபுராணம் படுகிறார்கள். நீங்கள் இந்துவாயின் இறுதியில் கருதியதாகக் கோபிக்க வேண்டாம். நீங்கள் என்னைப் புரிந்து கொள்வீர்கள். அதனால்தான்.

நான் கடவுளை நம்பியே இத்தனை காலம் வாழ்ந்தவன். ஆனால் இப்போதெல்லாம் மனிதர்களின் மீதும் மனிதம் மீதும் தான் அதிகம் நம்பிக்கை கொள்கிறேன். இத்தனை வழிபாடுகள், பூஜைகள் நடப்பினும் இறுதியில் மக்களோ துன்புறுகிறார்கள், துன்புறுத்துகிறார்கள். இப்படி ஏன் நடக்கிறது? அவற்றின் நோக்கம் நிறைவேறவிலையே! இதுபோலப் பல கோடி பேர் இறைவனை நம்பி, அவன் புகழ் பாடி, அவன் அடி பணிந்து, விரதங்கள் இருந்து, பல கடுமையான நேர்த்திகள் செய்து ஏமாந்து போயிருக்கிறார்கள். சிலர் ஆனால் வெற்றிகள் பலவும் குவித்திருக்கிறார்கள். இங்கே மதங்களை விட்டு விடுங்கள். ஒரு பக்தன் (என் அன்னை உட்பட) வாழ்நாளில் கூடிய காலத்தை கடவுளுக்கு அர்ப்பணித்து பல நாள் உண்ணாமல் விரதங்கள் எல்லாம் இருந்து, துன்பங்களை மட்டுமே அனுபவித்து மடிவானாயின் இதில் என்ன நியாயம் இருக்கிறது.

நீங்களே கூறுங்கள்?

இறைவா! நீ இருந்தால் எழுந்தருள்க.

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...