Saturday, May 2, 2020

குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான். எனில் இன்னமும் குரங்குகள் எப்படி எஞ்சியிருக்கின்றன?

குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான். ஆனால் இன்னமும் குரங்குகள் இருக்கின்றன. இது நமக்கு புலப்படுவது என்ன? முயற்சியுள்ளன மட்டுமே மேன்மை அடையும். நீர் தாண்uல்டித் துள்ளிய மீன் தான் தரையை அடைந்திருக்கும். அது போலவே, தேடல் உள்ளவரை ஏற்றம் இருந்துகொண்டே இருக்கும்.

”நீ எது நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுகிறாய்” என்று விவேகானந்தர் கூறினார்.  இதையே முன்னோர் இதனையே "எண்ணம்போல வாழ்க்கை" என்பர்.  நீ எண்ணங்களின் பிரதிபலிப்பே. இந்த விளைவின் உக்கிரம் அவ் எண்ணத்தில் நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் தீவிரத்திலேயே தங்கியுள்ளது. இதனை ஊக்குவிக்கவே ஆன்மீகம், கடவுள், பக்தி, வழிபாடு எல்லாம் வளர்ந்தன; வளர்க்கப்பட்டன.

எண்ணங்கள் நித்திரையில்தான் ஆழ் மனதுடன் சங்கமிக்கும். அதனால்தான் விஞ்ஞானி அப்துகலாம் ”இளைஞர்களே கனவு காணுங்கள் என்றார்”. அவர் ஆழமான சிந்தனையை அவ்வாறு கூறியிருக்க வேண்டும். ஒரு இலட்சியத்தை வைத்து, அது குறித்தே சதாகாலம் சிந்தித்திருப்பதைத்தான் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். நீங்கள் என்பது நீங்கள் அல்ல; உங்கள் எண்ணங்கள், நீங்கள் பிறந்ததிலிருந்து நீங்கள் கண்டவற்றின் சாரம். இது உள்ளே ஆழ்மனதில் பதிவாகியிருக்கும். அதன்படியே உங்கள் சிந்தனைகளும் முடிவுகளும் அமைகின்றன. ஆனால் நீங்களோ அந்த முடிவுகளை நீங்களே எடுப்பதாகக் கருதுகிறீர்கள். ஆனால் உண்மையில் முடிவுகள் எடுக்கப்பட்ட பின்னர்தான் அவை உங்கள் சிந்தனைக்கே அது வரும்.

என்னைப் பொறுத்தவரையில் இந்த உடலிலுள்ள ஒவ்வாமை தவிர்ந்த ஏனைய நோய்களை நாமே பிடித்து வைத்திருக்கிறோம். அதாவது சுயநினைவோடு அல்ல. ஆழ் மனதினால் பிடித்து வைத்திருக்கிறோம். நம் நிறம், அறிவு, அழகு முதல் கொண்டு பழக்க வழக்கம் யாவற்றையும் நம்மால் மாற்ற முடியும். இன்னொருவருக்கும் மாற்ற முடியும். பரம்பரை இயல்பு என்பவை இவை தான். ஏனையவை போலியானவை. நான் பரம்பரை எடுத்து வருபவை என்று கருதுவது இவற்றைத் தான். அந்த ஆழ்மனம் கொண்டுள்ள பழக்கவழக்கங்களும் நமது இரத்தமும். இல்லையெனில் குரங்கிலிருந்து மனிதன் எப்படி வந்தான். எண்ணம் போல் வாழ்க்கை.

மெஞ்ஞானத் தேடல் இருந்த போது மெஞ்ஞானம் வளர்ந்தது. விஞ்ஞானத் தேடல் இருந்த போது விஞ்ஞானம் வளர்ந்தது. இனி என்ன ஞானம் வளர இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. இவை அனைத்தும் தாண்டி எல்லாம் பொய். காயமே இது பொய்யடா! காற்றடைத்த பையடா!

”Imagination can takes you anywhere” - Sir. Albert Einstein

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...