Saturday, May 2, 2020

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? ஒரு சிந்தனையற்ற கடவுள்

இற்றைப்படுத்தியது: 31 ஆவணி 2020
இற்றைப்படுத்தியது: 16 கார்த்திகை 2020

இறைவன் சக்தி வடிமானவர். அந்த எண்குணங்களுடையவர். அதன்படி அவர் உருவமற்றவர்; அவருக்கென்று சொந்தமாக சிந்தனைகள் கிடையாது அதாவது மூளையில்லை. நமது சிந்தனையிலேயே அவர் உருப்பெற்று வாழ்கிறார். அவருக்கான உருவத்தை வழிபாட்டுக்காக நாமே உருவாக்குகின்றோம். அவர் எமது உள்ளங்களிலேயே வாழ்கிறார். நம் மனங்களில் உள்ள நம்பிக்கையே இறை வடிவம் பெறுகின்றது.

ஒருவன் தன்னுடைய காரியங்களைத் தானே செய்து முடிக்க முடியாமல் போனால், பிறரின் உதவியை நாடுகிறான். கடவுளை நோக்கிய தேடலும் அது போலத்தான். ஒருவனால் தன்னை தானே பத்திரமாகப் பார்த்துக் கொள்ள முடிந்தால், ஒருவன் தனக்கு வேண்டியவை அனைத்தையும் அவனே படைத்திருந்தால், கடவுள் அருள் அவனக்கு அப்போதே  உண்டு என்றே பொருள். அவன் நாத்திகனாக இருந்தாலும் அதனால் எதுவும் ஆகிவிடாது. அவன் ஏற்கனவே தன்னிறைவையும் பூரணத்துவத்தையும் அடைந்து விட்டான்.

கடவுளை எப்போதோ விஞ்ஞானம் கண்டு விட்டது. ஆனால் அறிந்து கொள்ள வில்லை. அது சக்தியே. ஆற்றுவது சக்தியின் இயல்பு. நீ உன் கடமைகளை ஆற்றுகிறாய். நான் என் கடமைகளை ஆற்றுகிறேன். ஆற்றும் இயல்பு உன்னிடமும் இருக்கிறது. என்னிடமும் இருக்கிறது. அது தான் கடவுள்.  கடவுளை மெஞ்ஞானிகள் அறிந்திருந்தார்கள் ஆனால் சில காரணங்களுக்காக அவற்றை வழிபாட்டு முறைகளாக வகுத்து மறைத்து விட்டனர்.

இன்று பக்தர்கள் இறைவன் வரவில்லை; அருள் புரியவில்லை என்கிறார்கள். எப்படி வருவான். உனக்குள் இருக்கும் இறைவனை நீ வெளியே உன் உறவுகள் போல வந்து உதவுவான் எனத் தேடுகிறாய். அது ஒரு போதும் நடக்காது. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி என்கெங்கோ அலைகின்றாய். உன் கடமைகளை சரியாகச் செய்ய வேண்டும். கோயிலுக்குச் சென்று வகுக்கப்பட்ட  வழிபாட்டு முறைகளில் வழிபடல் நன்று. அதற்காக நினைத்ததைக் தெய்வம் நிறைவேற்றவில்லை என்றால் அது உன் தவறு தான். கல்லின் தவறு அல்ல. நீ உன் வழிபாட்டில் திடமாக இருந்திருக்கவில்லை. ஆற்றும் சக்தி உன்னிடமே இருக்கிறது. கடவுள் உன்னிலேயே இருக்கிறான்.

மகாபாரதத்தில் கண்ணன் கூறியிருக்கிறான். நான் நானாக ஒரு போதும் இருந்ததில்லை. யாதுமாகி இருக்கிறேன். உலகிலே அநியாயங்கள் தலை தூக்கும் போது மாயை என்னும் உடல் கொண்டு அவதரிக்கிறேன். மாயை என்றால் என்ன? சக்தியே உடலாக எய்தி அவதரிப்பது. இன்னும் எளிதாகச் சொல்லப் போனால் தீ ஒரு வகை சக்தி. அத்தீயிலேயே உடல் கொண்டு ஒருவன் பிறந்து விட்டால், அது தான் அது.

வெறுமனே மந்திர உட்சாடனங்களோ உதடுகள் உதிர்த்த வார்த்தைகளோ அவரை வருவிக்குமா இல்லை கட்டிப் போடுமா?
நாம் தமிழ் பேசுகிறோம். இன்னொருவர் சிங்களம் பேசுகிறார். இன்னொருவர் இன்னொன்று... இவ்வாறு இருக்க புரியாத மொழியில் சொல்லும் ஏதோ சில வார்த்தைகள் எப்படி இறைவனைக் கட்ட வல்லது. அந்த மந்திர உட்சாடனங்களிற்குக் காரணமான சக்தியே அவராக இருக்க எப்படி தனியா வரவோ அதற்குக் கட்டுப்படவோ முடியும். ஒருபோதும் கடவுளைக் கட்டிப் போட முடியாது. கடவுள் என்றால் கடவுள் தான். அவரை மீறி எந்த சக்திகளும் இல்லை என்பதே பொருள்.

நமது பிரச்சினைகளுக்கு எப்போதும் என்ன காரணம் ஆகிறது. மனித மனங்களில் உள்ள வஞ்சக எண்ணங்களே அவற்றுக்குக் காரணம் ஆகின்றன. எனில் கடவுள் யார்? அவர் எங்கே இருக்கிறார். அதே மக்கள் மனங்களில் நல்ல எண்ணங்கள் பெருகி செயலுருப் பெறும் போது கடவுள் அங்கே இருக்கிறார். அங்கே காணும் அந்த நல்ல எண்ணங்களே கடவுள் ஆவார்.

இறைவன் வாழும் கோயில் நமது உள்ளம் தான்.
'உள்ளம் பெருங்கோயில் ஊணுடம்பு ஆலயம்' என்றார் திருமூலர்.
எப்படி நம் மனம் நினைத்ததும் அதைச் செய்யத் தேவையான சக்தியை உடல் எய்துகிறது! நமது எண்ணங்களே நம்மை வழிநடத்துகின்றன. அவற்றைத் திடமாக வைத்திருப்பதற்காகவே இந்த மந்திரங்கள். நாம் தொடர்ந்து ஒரு விடயத்தை வேண்டி  மந்திர உட்சாடனங்கள் செய்யும் போது, அந்த விடயத்தில் நமது மனம் ஊறிவிடுகிறது. அவ் எண்ணங்கள் வலிமை கொள்கிறது . பிறகு அது நமக்குத் துணை நிற்கிறது. மகாபாரதத்தில் கிறிஸ்ணர்,
விவேகானந்தர் இதையே 'நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுகிறாய்' என்கிறார்.

பிறகு இறை வழிபாடு, ஆலயம் செல்லுதல் வீணானவையா?
இல்லை. நாம் நம்மை வழிப்படுத்தவும் வலுவூட்டவும் வகுத்துக் கொண்டவையே மதங்களும் சமயங்களும் ஆகும். நாம் விரதங்கள் இருக்கிறோம். இறை நாமம் சொல்கிறோம். கோயிலுக்குச் செல்கிறோம். இவற்றில் நன்மை நிச்சயம் உண்டு. மனம் ஒரு குரங்கு. அதை யாராலும் கட்டிப் போட்டு விட முடியாது. நாம் நினைப்பதையே பேசுகிறோம். அதையே செய்கிறோம். ஆனால் மனதை ஒரு முகப் படுத்தாமல் வெற்றியடைவது கடினம். அதற்கான வழிகள் தான் அவை. ஆனால் இவை வெறும் நமது மனம் மட்டும் சம்மந்தப்பட்டது அல்ல. அது ஒரு மேம்பாடு. நாம் ஒரு விடயத்தை நினைத்து இறைவனை நோக்கி வழிபடுகிறோம். இப்படி ஒவ்வொருவரும் இறைவனை நம்பி ஆலயம் வரும்போது. அனைவர் எண்ணங்களும் சேர்ந்து ஒரு முகப் படுகிறது. அங்கே ஒரு சக்தி தோற்றுவிக்கப்படுகிறது. இது ஆலயம் செல்வதால் கிடைக்கும் நன்மை.

இதை விடுத்து இறைவனை தொழுதாலும் நன்மை உண்டு. இயல்பாகவே நேரான சிந்தனைகள் நன்மைகளையும் மறையான சிந்தனைகள் தீமைகளையும் பயப்பன. காரணம் மனித சிந்தனைகளே உலகில் மாற்றங்களைச் செய்கிறது. ஆனால் அந்த சிந்தனைகளின் வலிமையே எந்த அளவுக்கு அவை மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதைத் தீர்மானிக்கின்றன. நாம் ஒரு விடயத்தைச் செய்து முடிக்க வேண்டும் எனிலும் நாம் அதே போல அந்த விடயத்தில் மிகவும் தீர்க்கமாக இருக்க வேண்டும். அந்த தீர்க்க நிலையை எல்லோராலும் இலகுவில் விரைவில் அடைந்து விட முடியாது. அதற்கு அனுபவ அறிவு வேண்டும். ஆனால் அதனை நாம் விரதம் போன்ற கொள்கை சேர்ந்த உடல் சார்ந்த செய்கைகள் முலம் அடையலாம்.

இறைவன் புகழ் பாடுவதால் என்ன நன்மை. இயல்பாக மறை எண்ணங்கள் தோன்றக் காரணம் ஆணவம் ஆகும். நாம் இறைவன் புகழ் பாடும் போது அது அழிந்து போகிறது. மனிதனுக்கு முதல் எதிரி பயம் ஆகும். அது நம்முள்ளேயே இருந்து நம்மையே அழிக்கிறது. இது போன்ற வழிபாடுகள் இறைவன் எப்போதும் எம்முடன் உள்ளான் என்ற நம்பிக்கையை கொடுக்கிறது. நாம் எவ்வளவு ஒரு விடயத்தில் தீர்க்கமாக உள்ளோம் என்பது நம் செயல்களில் மட்டும் பிரதிபலிப்பது இல்லை. நம்மைச் சூழ உள்ளவர்களிலும் பிரதிபலிக்கிறது.

கற்சிலையில் கடவுளா? இது மூடத்தனம் அல்லவா?

இறைவன் என்றால் நாம் காணும் வெறும் கற்சிலைகளல்ல. அது ஒரு உணர்ச்சிப் பிரவாகம். அங்கே நாம் காண்பது எமது விம்பத்தைத்தான். அங்கே அபிஷேகம் செய்து, பூப்போட்டு, தீபம் ஏற்றி வழிபடும் போது நம்மைத் தான் நாமே பூஜிக்கிறோம். நமக்குள்ளேயே தான் அப் பிரவாகம் உருவெடுக்கிறது. கால்களிலே தொடங்கி, இடையிலே பன்மடங்காகி, வயிற்றிலே முடுக்கப்பட்டு, மார்பினூடும் சிரசினூடும் வெளிப்படுகிறது. ஒரு மாய மந்திரமும் இல்லை. ஒரு உந்து சக்தி அவ்வளவு தான்.

இறைவன் வீற்றிருப்பதாக ஆன்றோர் காட்டும் கொன்னிலைகள் யாவும் அதீத அர்த்தமுள்ளவை. பண்டைய மெய்ஞ் ஞானிககளால் கண்டறியப்பட்டவை. அவை ஒவ்வொன்றும் பல சித்துக்கள் நிறைந்தவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சக்திகளைத் தூண்டுவதாகக் கண்டறியப்பட்டவை. நடராசர், பள்ளி கொள்ளும் விஷ்ணு, குழலூதும் கண்ணன், அர்த்தநாரீஸ்வரர்.. இன்னமும் பல. ஆனால் அவற்றை நேரடியாக மனிதர்களிற்கு அறிவித்தால் விளைவு விபரீதம் ஆகிவிடுமோ என மெஞ்ஞானிகள் பயந்தார்கள். ஆனால் மக்கள் மீது அக்கறையும் கொண்டிருந்தார்கள். எனவே இதனை மக்களுக்கு நன்மை பயக்குமாறு செய்ய ஒரு சூட்சுமத்தை வகுத்தார்கள்.

அவை தான் நாம் காணும் கற்சிலைகள். நாம் கோயில்களுக்குச் சென்று இறை தரிசனம் பெறுகிறோம். அதாவது சிலை தரிசனம். 'சிலை என்ன செய்யும்; கல்தானே. அக்கல்லில் பொதிந்துள்ள சக்தியை ஒரு பௌதீகவியலாளன் கண்டு வியப்பான்.' அது நமது ஆழ் மனதுக்குச் சென்று பதிந்து கொள்கிறது. பின்னாளில், ஒரு சங்கடம் உருவாகிறது. சிந்திக்க முடியாத நிலை. இப்போது என்னாகும். ஏதோ ஒரு  கொன்னிலை ஏற்று அவன் உடைந்து போகிறான். உள்ளே இருப்பது தானே வெளியில் வரும். இயல்பாகவே அந்த நிலைகள் அவன் பார்த்த அந்த இறைவன் வடிவுக்கு ஒப்பாகிறது. சக்து தூண்டப்படுகிறது. சக்தி அவனுக்குச் சாதகம் புரிகிறது; துன்பம் நீங்குகிறது.

எங்கிருந்து வந்ததிந்த சக்தி?
ஆலயங்களில் உள்ள கல் விக்கிரகங்கள் எப்படி சக்தி பெறுகின்றன? நாம் எல்லோரும் 'இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடங்களில் தேடி அலைகிறோம்'. உள்ளே வைத்துக் கொண்டு வெளியே தேடுகிறோம். இறைவன் எங்கும் நிறைந்து நிற்கிறான். நம்முள்ளுள்தான் அறிதல் நிலையில் உயிராக இருக்கிறான். ஆனால் எப்போதும் வெளிப் படுவதில்லை. அன்பு, கருணை, ஜீவகாருண்யம் கொண்டோரிலும் ஞானிகளிலும் மிளிர்கிறான். இறையருள் நம்முள் இருந்துதான் வருகிறது என்பதை உணராமல் வெளிப்பொருள் ஒன்றில் இருந்தே  வருகிறது என்பது மடைமை. எனினும் அவன் அருளாலே அவன் தாள் வணங்கவே, இந்த வழிபாடுகள், தானங்கள், தவங்கள், விரதங்கள் எல்லாமே துணை நிற்கின்றன!

அந்தணர்களினதும் துறவிகளினதும் முதற் கடமை யாது?
அந்தணர்களினதும் துறவிகளினதும் முதற் கடமை தவம் உஞற்றுதல் ஆகும். இந்த உலகும் உலக வாழ் மக்களும் நன்மை பெற தவம் உஞற்றுதல் ஆகும். முற்காலத்தில் முனிவர்களும் சித்தர்களும் பலர் வாழ்ந்துள்ளனர். ஆலயங்கள் பல தோற்றம் பெற அவர்களே காரணமாயினர். அவர்கள் உணவினை செல்லுமிடங்களில் உள்ள மக்களிடம் இரந்து உண்பர். துறவி உணவு கேட்டால் கொடுக்க வேண்டியது அனைத்து மக்களினதும் கடமையாக இருந்தது. இல்லையெனில் பாவங்கள் வந்து பீடித்துக் கொள்ளும். ஏனெனில் தவசிகளும் முனிவர்களும் அந்த மக்களுக்காகவே தவம் உஞற்றுகின்றனர். அப்படி இருக்கையில் அது நியாயம் தானே!

இதிலே பக்தர்களின் பங்களிப்பு யாது?
இதிலே பக்தர்களின் பங்களிப்பும் ஒன்று உண்டு.விரதங்கள் மேற்கொள்ளும் பக்தர்களின் ஆன்மா பெருகி அவர் வாழும் சூழலிற்கே அது நன்மை பயக்கிறது. கல்லாக இருக்கும் இறைவனுக்கும் அது சக்தி கொடுக்கிறது. இவ்வகையிலே இறைவனிற்கு சக்தி அளிப்பவனும் பக்தனே ஆகின்றான். இறைவன் என்று அந்த உருவச் சிலையைத்தான் கூறுகிறேன். எங்கும் நிறை பரப்பிரம்மத்திற்கு சக்தி அளிப்பவன் மனிதன் என்று அது பொருள்படாது

கடவுள் எனத் தனியாக இருந்து சிந்திப்பவர் இல்லை என்பதே எனது இது வரையான வாதமாக இருந்தது. ஆனால் நிறைய மனிதர்கள் காலாகாலமாக ஒரு தெய்வத்தை மனதில் நினைந்து வழிபட்டு வரும்போது. அந்த எண்ணங்கள் அவருக்கு ஒரு உருவம் அளித்து அவர்கள் ஆத்மா அவர்களுக்கு உரமாகி கடவுள் தோன்றுவாரோ என்ற சந்தேகமும் நம்பிக்கையும் எனக்கும் இன்னும் இருந்து கொண்டே உள்ளது. அப்படி நிகழின் எனக்கும் மகிழ்ச்சிதான். அது தவிர சக்தி ஒன்றே கடவுள் என்பதே என் கருத்து. சக்திக்கு ஆற்றும் இயல்பும் ஆக்கும் இயல்பும் அழியும் இயல்பும் உள்ளது. நீயும் செயல் ஆற்றுகிறாய். நானும் செயல் ஆற்றுகிறேன். நம் சிந்தைகள் அதற்கு உரமாகிறது. ஆக கடவுள் உன்னிலும் இருக்கிறார். என்னிலும் இருக்கிறார். உள்ளே வைத்துக் கொண்டு வெளியே தேடுவது வீண் என்பதே என் வாதம்.

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...