Wednesday, May 13, 2020

இன மத யாதிப் பாகுபாடுகள் ஏன்? உண்மை நிலை என்ன?

சிங்களவர், தமிழர், முஸ்லிம், இந்து, கிறிஸ்தவர், யாதிகள் எனப் பல பிரிவுகள் வைத்துத் தமது காரியங்களைச் சாதிப்பார்கள், சானக்கியர்கள். என்னைப் பொறுத்தவரையில் இந்த உலகில் மக்கள் இருவகைதான். அடிப்படையில்,
1. நல்லவர்
2. கெட்டவர்
நீங்களும் இதனை வெகுவிரைவில் உணர்வீர்கள்.

இனம் காண்பது கடினம்தான். நீங்கள் செய்யக் கூடியது ஒன்று மட்டும் தான். அது, எப்போதும் நீங்கள் உங்களைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளவதுதான்.

சாதி எனப் பாகுபடுத்துவர்; ஒத்தவரையே திருமணம் முடிப்பர்.  திருமணம் என்றதும் அழகு என்பது இன்றைய இளைஞர், யுவதிகள் அநேகர் வேண்டுவதே. அதற்கும் யாதிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஒரே சாதியினுள்ளேயே ஏழை, பணக்காரன், வெள்ளை, கறுப்பு, உயரம், குள்ளம் எனப்பல மாறுபாடுகள் உண்டு. இவை எல்லாம் மாறுபடாமல் இருப்பது ஒரே பரம்பரை/சந்ததியினுள் மட்டுமே.

பிறகு இந்தப் பாகுபாடுகள் ஏன்? சானக்கியர்கள் தமது காரியசித்திக்காக ஏற்படுத்திக் கொண்டவையே இவை. "அனைத்து யாதிக்காரர்களுடனும் நட்புப் பாராட்டுவர்; சேர்ந்து திரிவர்; அவர்தம் வீட்டிலும் கூடுவர்; ஒரே தட்டில் உண்பர்; தன் உயிர் நண்பர் என்பர். ஆனால் திருமணம் மட்டும் அந்த யாதிக்காரருடன் செய்ய மாட்டார்கள்." என்று என் அப்பா சொன்னார். இதில் என்ன நியாயம் இருக்கிறது என்று தெரியவில்லை.

இது பற்றி யாதி பேதம் பாராட்டாத ஒருவரிடம் கேட்டபோது அவர் பினவருமாறு சொன்னார். "தனக்கு அதில் உடன்பாடு இல்லைத்தான். ஆனால், தன் வீட்டாருக்காகத்தான் தன் யாதிக்காரரையே திருமணம் செய்து கொள்வாராம். தன் பிள்ளைகளை அதுபோல நிர்ப்பந்திக்க மாட்டாராம்." மறையப்போகும் அவரது முன்னைய சந்ததிக்காக, மலரவிருக்கும் மலர்களை வெறுக்கின்றார் அவர். ஆனால் இதுவும் உண்மை அதற்காக ஒருவரை வற்புறுத்தித் திருமணம் செய்து கொள்ளவும் கூடாது. அவருக்கு எடுத்துக் கூறிப் புரிய வைக்கலாம்.
"No means No"

ஆனால், இந்த சிங்கள, தமிழ் மொழிபேதங்களில் உண்மையில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருக்கினறன என்பதை மறுக்க முடியாது. அதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

1 comment:

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...