நாளுக்கு இரண்டு, வாரத்துக்கு இரண்டு, மாசத்துக்கு இரண்டு, வருடத்திற்கு இரண்டு என்று ஆயுள்வேதத்தில் சுருக்கமாகக் கூறப்படுவது என்ன?
நாளுக்கு இரண்டு என்பது ஒருநாளைக்கு இருமுறை மலம் கழிக்கவேண்டும்.வாரத்திற்கு இரண்டு என்பது வாரத்தில் இரண்டு முறை எண்ணை தேய்த்து குளிக்க வேண்டும். இதனையே ஔயாரும் ”சனி நீராடு” என்றார். சனிக்கிழமைகளில் நல்லெண்ணெயை உடல் முழுக்க தேய்த்து நீராட வேண்டும்.
மாதத்திற்கு இரண்டு என்பது மாதத்தில் இரண்டு முறைதான் மனைவியுடன் உடலுறவு கொள்ளவேண்டும் என்பதாகும். இதனை அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் நூலில் கண்ணதாசன், ”வரவு 15 நாள் செலவு 1 நாள்” என்றும் கூறியுள்ளார்.
வருடத்திற்கு இரண்டு என்பது வருடத்தில் இரண்டு முறை பேதிக்கு சாப்பிட்டு வயிற்றை சுத்தப்படுத்த வேண்டும்.

No comments:
Post a Comment