எல்லோருக்கும் தனது வருங்கால கணவன் அல்லது மனைவி பற்றி அதிக கனவுகள் இல்லை என்றாலும், அவர் இப்படித்தான் நடக்க வேண்டும், இப்படி எல்லாம் நடக்கக் கூடாது என்று ஒரு சில தவிர்க்க முடியாத நிபந்தனைகள் இருக்கும். இவை ஒத்துப் போகாவிடில் வாழ்க்கை கசக்கும். சிலருக்கு எதுவும் சரி என்ற மனநிலையும் இருக்கலாம். ஆனால், ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தனது எதிர்பார்ப்புகளை தனது நடத்தைகளில் வெளிக்காட்டும்போது அதை மெச்சும் பெண்ணோ அல்லது ஆணோ, நெருங்கிச் சென்றால் மட்டுமே காதல் சாத்தியமாகும்.
இதனால்தான் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமாக (arrange marriage) இருந்தாலும் கூட, திருமணத்துக்கு முன்னர் சில தினங்கள் பழகிப் (dating) பார்ப்பதை நான் பரிதுரைப்பேன். ஆனால் பழகுதல் (dating) என்றால் நீங்கள் நினைப்பது போன்றது அல்ல. கருத்து, நடத்தை ஒருமைப்பாடு அறிய ஒன்றாக வெளியே செல்வதையும் அவ்வாறு குறிப்பிடுவார்கள். அதோடு ஆண்கள் எல்லோரும் பெண்களை ஏமாற்றுவதற்காக அலைபவர்கள் என்று ஒட்டுமொத்தமாக ஒரேமாதியாக எடைபோடுதல் (stereotyping) சரியானதல்ல; அது தவறு. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அனைத்தையும் ஒரேமாதியாக எடைபோடுதல் (stereotyping) தவறான முடிவுக்கே இட்டுச் செல்லும்.

உங்கள் பழகுதல் category குளீ என்ன என்ன வரும்....
ReplyDeleteஎவ்வாறாயினும் சமூக கட்டுப்பாடுகள் தாண்டக் கூடாது. அவ்வளவுதான் நண்பா!
Delete