ஏகம் சத்யம் விப்ர பஹுதா வதந்தி!
சத்தியம் ஒன்றுதான்; அதுவே கடவுளுமாம். ஃ கடவுள் ஒன்று.
நானே அனைத்திற்கும் சாட்சியுமாக இருக்கிறேன் - ஸ்ரீ கிருஷ்ணர்
சத்தியம் ஒன்றுதான்; அதுவே கடவுளுமாம். ஃ கடவுள் ஒன்று.
நானே அனைத்திற்கும் சாட்சியுமாக இருக்கிறேன் - ஸ்ரீ கிருஷ்ணர்
எதுவுமே மாறவில்லை. பெயர்கள் மாறுகிறது. எல்லைகள் சற்று மாறுகிறது. மொழிகள் மாறுகிறது. கலாசாரம் மாறுகிறது. ஆனால் நிலமும் நிலத்தை சேர்ந்த குடிகளும் (ஜீன்கள், மொழிகள் அல்ல) குடிகளின் குணங்களும் மாறவில்லை. அவர்களின் வாழிடம், தாழ்வுச் சிக்கல், தோல்வி போன்ற புறக் காரணிகளால் அவர்களின் அகம் அப்படி அமைகிறதா அல்லது அகத்தின் தன்மையால் அவர்களின் புறக் காரணிகள் அப்படி மாறுகிறதா என்பது கேள்விக் குறிதான். கொடி அசைந்ததும் காற்று வந்ததா; காற்று வந்ததும் கொடி அசைந்ததா!
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும். (நடுவு நிலைமை, திருக்குறள் - 114)
இராவணன் என்னும் இலங்கேசன்; சோழன்
இராவணேஸ்வரன்
என்று பெயர் வாங்கும் அளவுக்கு சிவனுடன் உறவு வைத்திருந்து (Aligned)
அனைத்து கலைகளும் கற்றுத் தேர்ந்திருந்தான், இராவணன்.
அதேபோல
பின்னாளிலும் பரமசிவனின் பாண்டவர் - பாண்டியர் அருகே சோழர் என்று அரசு
கொண்டிருந்தான் சிவ பக்தனான இராவணன்; சோழன். பின்னாளில் கூட சோழர்கள் சிவனை
குலதெய்வம் என்று சைவத்தை திணித்தார்கள். ஆனால் சோழர்கள் கூட அதன் வரலாறு
என்ன என்று அறிந்திருக்க மாட்டார்கள்.
மாட்டுக்கு நீதி கொடுத்து மனுநீதி கண்ட சோழர்கள்
உலகம் எங்கும் கடாரம் வென்ற சோழர்கள் வியாபாரத்தில் உலகம் எங்கும் கால் பதித்தார்கள். 5 ரூபாவுக்கு திரவியங்களைக் கொள்முதல் செய்து அதை பிறநாடுகளுக்குக் கொண்டு சென்று 10 ரூபாவுக்கு விற்க,
அதை 5 ரூபாவுக்கே வாங்குவதற்கு வந்தார்கள் மேற்கத்தேயர்கள். இவர்கள்
மாட்டுக்கு நீதி கொடுப்பார்கள். ஆனால் அதுவும் தமது மாடுகளுக்கு
மட்டும்தான். பரமசிவன் பாண்டவர் தர்மர் போல அல்ல. இவர்கள் வியாபாரத்திற்கு
சென்ற இடங்களிலும் ஏலத்தில் கட்டாயமாக பலவந்த வணிகம் செய்து இருப்பார்கள்; செல்வங்களை சேர்த்து இருப்பார்கள். அதனால்தான்,
நாவல்பழம் சாப்பிட்ட முதலை, அதனை தினமும் உண்ட குரங்கின் ஈரல் வேண்டும்
என்று கேட்டது போல, இவர்கள் சேர்த்த சொத்துக்கள் அனைத்தையும் ஒன்றாக திருடி
செல்ல படையெடுத்து வந்திருப்பார்கள்.
ஜல்லிக் கட்டு, தமிழர்களின் வீர விளையாட்டா சோழர்களின் வீர விளையாட்டா!
ஜல்லிக்
கட்டு சோழர்களின் வீர விளையாட்டாகவே இருக்க வேண்டும். வலுக் கட்டாயமாக
மாட்டை அடக்கி ஒப்பேற்றுதல். அதுபோல இவர்கள் மனிதர்களையும் நெருக்கி
சம்மதிக்க வைத்தார்கள். அதுவே சீதையை கடத்திய கதை. ஒப்புக் கொள்ளும்வரை
விடமாட்டேன் என்பது அவர்கள் பிடிவாதம். சுயம்பரம்தான்
தமிழர்களின் பரமசிவனின், பாண்டவரின், பாரதத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட
முறைமை. நளவெண்பா, மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் அவற்றுக்கு நல்ல எடுத்துக்
காட்டாக உள்ளன. திணித்து ஒரு பெண்ணை ஒப்புக் கொள்ளும்வரை சிறை வைப்பது
அல்ல.
முருகன் என்றால் தமிழர். ஆனால் தமிழர்
என்றால் முருகன் அல்ல. தமிழருக்கு பரமனின் பாண்டவ பாண்டிய பக்கம் உண்டு.
அதுபோல, சோழர் என்றால் தமிழர் ஆனால் தமிழர் என்றால் சோழர் அல்ல. தமிழருக்கு
சேரர் சோழர் பாண்டியர் என்று மூன்று முடிகள் இருந்தன.
முருகனின் முன்னோர்கள் யார் தெரியுமா?
சிவன் மற்றும் இராவணன் (பார்வதி).
கந்தன் எனப்படும் முருகன் கண்ணனைப் போல இடைச்சாதி.
சிவன்
என்னும் நாகர்களுக்கும் பார்வதி என்னும் குமரியில் இலங்கையைச் சேர்ந்த
இயக்கருக்கும் தோன்றிய குலமே முருகர் குலம் ஆகும். பார்வதி என்று
கூறப்படும் இயக்கர் குலத்தில் 10 இரத்தங்கள் கொண்ட சமூகங்கள் இருந்தன.
அவையே இராவணனாக இராமாயணத்தில் சித்தரிக்கப் படுகின்றன.
இலங்கை
இந்தியாவின் தென்னாட்டை ஒட்டி இருந்தமையால் முருக குலம் தமிழ் குடியாக
இருந்தது. அதனால்தான் முருகன் தமிழ் வளர்த்தவன் என்றும், தமிழர்களின்
முன்னவன் முருகன் என்றும் புராணங்கள் சொல்கின்றன. இறுதியில் இராவணனின் குணம் காரணமாக, பார்வதி இராமனுடன் சேர்ந்து இலங்க்கையில் இராவணனைக் கொன்றார்
ஆனால் முருகனின் முன்னவரில் ஒருவர் இராவணர் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?
இதனால்தான்
கந்தனின் சகோதரனான கண்ணன், முருக குடியான பாண்டவர்க்கு அஸ்தினாபுரத்தில்,
உரிமை உள்ள பங்கை வாங்கிக் கொடுத்தார். அதுவே இந்திரப்பிரஸ்தம் என்னும்
யாழ்ப்பாண இராச்சியம்!
குலத்தின் உயர்வு தாழ்வை தீர்மானித்த தோலின் நிறம்
கண்ணனும் கந்தனும் அண்ணன் தம்பி போல இடைச்சாதி. ஆனால் நிறமும் நிறத்தால் ஏற்பட்ட குணமும்தான், கண்ணனை உயர்வாகவும் கந்தனை தாழ்வாகவும் வைத்தது. பார்வதி இராவணனை வெறுக்க அதுவும் காரணமாக இருந்துதிருக்கலாம். கறுப்பு என்றால் தாழ்ச்சி குலம்; அசுரர்கள் தாழ்ச்சி குலம் என்பது தேவர் வியாக்கியானம். ஆனால், இந்த பாகுபாடு காட்டாதவன், எல்லோரையும் ஓம்பும் பரமசிவன்.கர்ணன் சூரிய புத்திரன் ஒளி பொருந்திய நிறம். ஆனால் அவனே துரியோதனன் என்னும் அசுரனுடன் சேர்ந்தவுடன் அவன் நிறம் அற்றுப் போகிறது. பன்றியோடு சேர்ந்த கன்றும் பகரவி பவ்வி நன்னும். தேவர்கள் அந்தணர் வேடம் பூண்டு அந்த ஒளி பொருந்திய கவசகுண்டலத்தைப் பறித்தனர். இதனால்தான் சோழர் வழித் தமிழர்கள் பிராமணர்களை "பார்ப்பனர்கள் வஞ்சகம் செய்தார்கள்" என்று ஏசுகிறார்கள்.
நிறத்தின் காரணத்தினால் தான் தமிழர் சூத்திரர், தாழ்ந்த குலம் என்று வட நாட்டவர் கூறுகிறார்கள். ஆனால், வெள்ளையன் வந்துவிட்டால், தமிழர் உட்பட திராவிடர் எல்லோரும் கறுப்பு என்று சொல்லி விடுவான். அதனால் தான் கண்ணனும் கறுப்பு என்று ஆனான். சிவனும் கறுப்பு என்று ஆனான்.
தேவர் அசுரர் வெள்ளை கறுப்பு உயர்வு தாழ்வு என்று அதே பிரச்சினை, வேறு வேறு காலங்களில் வேறு வேறு பெயர்களில் இருந்து கொண்டே உள்ளது. அதோடு வரலாற்று அனுபவம் தவறுகளை திருத்த வழி சமைக்கவில்லை. மாறாக அதை எப்படி வெளியில் தெரியாமல் (complete cover up) செய்வதற்கே அது கற்றுக் கொடுத்துள்ளது.
இராமனை ஏன் தமிழர்களும் கொண்டாடுகிறார்கள்.
இராவணன்
தமிழரின் முன்னோர் என்றால், இராவணனை எரிக்கும் தீபாவளியை, தசராவை
தமிழர்கள் வெறுக்கிறார்கள் என்றால், இராமனைக் கொண்டாடும் தமிழர்கள் எப்படி
இருக்க முடியும்? ஏன் தமிழர்கள் இரண்டாக பிரிந்தார்கள்? கம்பர் இராமாயணத்தை தமிழில் ஏன் மொழி
பெயர்த்தார்? கம்பரை கடவுளாக கும்பிடும் தமிழர் மரபு எங்கிருந்து வந்தது?
இராமனுக்கு தமிழில் சிறப்பு எப்படி வந்தது? என்ற கேள்விகளுக்கு எனக்கு இன்று
விடை கிடைத்தது. ஆனால் மேலைநாட்டவர்
வருகையின் பின்னர், தமிழர் என்று ஒன்றிணைந்து வரலாற்றை மூடி மறைத்து
விட்டீர்கள்.தேவை இல்லாமல் எதுவும் இல்லை. எது நடந்ததோ அது
நன்றாகவே நடந்தது. இராவணனின் திணிப்புகளை, ஜல்லிக்கட்டில் காளைகளை
அடக்குவதை விரும்பாத பார்வதி, இராமனுடன் சேர்ந்து கொண்டு இலங்கையில்
இராவணனை அழிக்க, இராவணன் சோழர் என்று இந்தியாவில் பரமனிடம் தஞ்சம்
புகுந்தான். வழக்கம் போல பரமன் என்னும் பாண்டவர் அணைத்துக் கொண்டார். ஆனால்
பார்வதியுடன் பாண்டியர்க்கு இன்னமும் நல்ல உறவு பரம்பரை பரம்பரையாக (அதே
ஜீன் என்பதால்) தொடர்வதாகவே தெரிகிறது. தமிழர்களில்
பார்வதி குலம் மற்றும் இராவணனின் தொல்லைகளில் இருந்து விடுபட்டவர்கள்
இராமனை கொண்டாடுகிறார்கள்.
அந்த அடிப்படையில் நிறம் வெள்ளை கறுப்பு என்று
அந்நாளிலும் இந்நாளிலும் வெளியில் தெரியாமல் இரு கூட்டங்கள் உள்ளன. அவற்றை
குறிப்பாக உணர்த்தவே இராமாயணம் உதவும். ஆனால், அதைக் கூட புரிந்து கொள்ள
எனக்கு முடியவில்லை. இப்போது தமிழர் என்று ஒன்றாக சேர்ந்து கொண்டு, இராவணன்
என்று மேலோங்கிக் கொண்டு, சலுகைகளை, தமது தரப்புக்கு முன்னுரிமையிள்
அளிக்கிறான் இராவணன். தன்னுடைய நிறத்தின் தீண்டாமையை செய்பவர்களை தள்ளியே
வைக்கிறான். அந்த அதிகாரத்தில் தமிழர்களுக்குள் அவன் உள்ளான். பரமன் புகழ்
பாட, உரிமை மீட்க ஆள் இல்லை.
பரமனைக் கொண்டாட யாரும் இல்லை
சோழர்கள்
புகழை தமிழர்கள் பறைசாற்றுகின்றனர். இராவணன் புகழை கொண்டாடுகின்றனர். ஒரு
நிலையில் தமிழர் என்றால் கறுப்பு, கறுப்பு தான் தமிழர்களின் அடையாளம்
என்கின்றனர். ஆனால் தமிழர்களில் ஏனையோர் அமைதியாக வேடிக்கை பார்க்கின்றனர்.
தமிழர்களுக்கு சேரர் பாண்டியர் (பரமன்) என்னும் பக்கமும் உண்டு. பரமனின்
சிறப்பு கொஞ்சம் நஞ்சம் அல்ல. எல்லோருக்குமாக எல்லாம் கொடுத்து தன்னை
இழந்து பிச்சை எடுத்தவன்; பின்னாளில் பித்தன் என்று பெயரும் எடுத்த
புண்ணியன் பரமன். பட்டினத்தார் என்றும், திருவள்ளுவர் என்றும், பாண்டவர்
என்றும் தர்மத்துக்கு பெயர் எடுத்த, நடுநிலையான, அரக்கர் தேவர் என்று
வேறுபாடு இன்றி வா வா என்று வரவேற்று அள்ளிக் கொடுத்தவர்கள் பரமசிவன்
குலத்தவர். வடக்கே தேவகி என்னும் கங்கையும் தெற்கே அசுரர் என்னும்
பார்வதியும், சிவனின் எலி என்னும் இளைய, முற்றாக ஜீன் குலத்து தாரமாம்.
"அடையா நெடுங்கதவும் அஞ்சேல் என்ற சொல்லும் உடையான் சடையப்பன் ஊர்"
'சாதிய அடக்குமுறையும் குலத்தாழ்வு பேதமும் செய்தனர்' என்று சிவனின் அரசை தூற்றுவோருக்கு...
"சங்கறுப்பது உங்கள் குலம். சங்கரானர்க்கு ஏது குலம்"
தயவுசெய்து குதிரைக்கு கடிவாளம் இடுவதை விலங்கு என்று கொள்ள வேண்டாம்.
பாண்டியர் < பாண்டவர் < (பன்)அவர் < பரமசிவன் அவர்கள்
சோழர்கள் < முருகன் < இராவணன்
பன்றிக்குப் பால் கொடுத்த பரமசிவன்
சிவன்
என்னும் சங்கரனின் விழுதுகள் தான் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கின்றன.
ஜீவ காருண்யம் மிகுந்த தாயுமான சுவாமி, மூத்த சிவன். அதனால்தான் சிவன்
என்னும் சீவன் என்ற ஆன்மாவின் பெயரை சிவனுக்கு சித்தாந்தம் கொடுத்துள்ளது.
இதன் அடிப்படையில் பன்றிக்கு கொடுத்த பால் என்ன என்பது சற்று, சிந்திக்க
வேண்டிய விடயம்தான். அறிவு வந்த பிறகு எல்லோரும் தந்தையை மதிக்காமல்
போகலாம். ஆனால் தந்தை என்று ஏற்காமல் போகலாமா! நாம் எல்லோரும் இறைவனின்
குழந்தைகள்.
உங்களுக்கு 1 தலை, 2 கைகள், 2
கால்கள் சேர்ந்தே ஆறறிவு என்னும் பகுத்தறிவு இருக்கிறது என்றால் அது
பரமசிவனின் இனால் ஏற்பட்டதுதான். அந்த நன்றிக் கடனை மனதில் கொள்வாயாக. நீ
ஏற்றுக் கொள்ளாமல் போகலாம், சிவனுக்கு எதிராக சதிகள் செய்யலாம். ஆனால்
சிவனுக்கு எதிராக நீ செய்யும் ஒவ்வொரு செயலும் நீயே உனக்கு எதிராக
செய்வதாகும். முதல் முதலில் முதிர்ச்சி அடைந்த ஜீன், குரங்கு ஆகிய ஜீன்,
ஞானம் பெற்ற ஜீன், ஜோகம் மற்றும் தியானம் பயின்ற ஜீன், வேதங்கள் படைத்த
ஜீன் பரமசிவனின் ஜீன். சிவனுக்கு பித்தன் என்றும் பெயர் உண்டு
பிட்டுக்கு மண் சுமந்த சிவன்
கூலியாளாக வந்த சிவனின் மீது விழுந்த அடி எல்லோர் முதுகிலும் பட்டது.கொரோனா என்னும் நோய் சிவனை தாக்கியபோது அது மொத்த உலகையும் பாதித்தது.
இராவணன்
பூக்களை ஓய்வெடுக்க சொன்னான். "ஐ" என்று சொல்லி அழகு கொடுப்பதாக வைரஸ்
காட்டி மிரட்டினான். சிவனுக்கும் கறுப்பு பார்வதிக்கும் தோன்றிய, சிவனின்
பரம்பரை, சிவபக்தன் இராவணன் சிவனையும் எதிர்த்தான். சிவனுக்கே எதிராக
கொரோனா என்னும் சிவனின் அஸ்திரத்தை ஏவினான். அது எல்லோரையும் தாக்கியது.
ஜல்லிக்கட்டு
போல திணிப்பவன் ஒரு போதும் மாட்டுக்கு நீதி வழங்கியிருக்க மாட்டான்.
தமிழின், தமிழரின் வேர் வேறெங்கோ இருக்க இராவணன் தான் தமிழர் என்றும்,
தமிழர் முழுவதும் இராவணன் என்றும் பாடிக் கொண்டான். என்ன செய்ய அந்தப்
பார்வதியின் கறுப்பு நிறம் தமிழர் அனைவருக்கும் ஒட்டிக் கொண்டதற்கு,
முருகன் என்று ஒன்று சேர்ந்தது தான் காரணம். கடைசியில் என்ன நன்றிக் கடன்
செலுத்துகிறார்கள் தெரியுமா! பட்டவன் சொல்ல மாட்டான். சொன்னாலும் மற்றவன்
நம்ப மாட்டான்.
இடபம் என்னும் காளை ஏறி வரும்
பரமன். இடது காலை மடக்கி வைத்திருக்கும் ஆசனம் சிவனுக்கு மிகவும் பிடித்த
ஆசனம். கையிலையிலும் சிவன் இடது காலை மடக்கி அமர்ந்து இருப்பதாகவே படம்
வரைந்து இருப்பார்கள் (பாரதத்தின் தெற்கினை உலக வரைபடத்தில் பார்த்தால்
தலைகீழான மலையாக தெரியும். அதுதான் கயிலை). ஆனால் பின்னாளில் அந்த
இடப்பக்கம் என்பதை இடப.ம் என்றும், நந்தி என்றும் மாற்றி விட்டார்கள். அது
குழப்பமும் தான். ஆன்மிகத்தில் காளையின்/ பசுவின் பங்கு முக்கியமானது.
சிவனுக்கும் உளவு தொழில் மற்றும் வேளாண்மை காரணமாக காளையைப் பிடிக்கும்.
அசரிரி - அப்படி எனில் சிவன் தமிழன்தானே!
ஆம்!
நான் சிவன் தமிழுக்கு மட்டும் சொந்தம் அல்ல. அது இந்தியா முழுவதும்
இருக்கும் ஜீன் என்றேன். சிவன் மொழி தமிழ்தான். ஆனால், அந்த உறவு மொழி
அடிப்படையிலானது அல்ல. அதை எப்படி சொல்வது. சிவனின் ஜீனின் சக்தி (super
power), மற்றும் தேர்ச்சி, ஞானம் காரணமாக அனைவரும் சிவக்குலத்தை சேர்ந்து
மேன்மை அடைந்தார்கள். அதனை கலப்பதால் மட்டுமே பெற முடியும் என்று அவ்வாறு
செய்தார்கள். அதான் பன்றிக்கு பால் கொடுத்த சிவனின் கதை சொன்னேனே!
தேவர்கள்
கலந்து #கண்ணன் என்று ஒரு இடையர் குலம் உருவானது. அசுரர்கள் கலந்து
#கந்தன் என்று ஒரு இடையர் குலம் உருவானது. அந்தவகையில் கண்ணன் மற்றும்
கந்தன் சகோதரர்கள். இராவணன் கூட சிவனின் பக்கம் நிற்பவன்தான். ஒரே வகுப்பு
(batch) என்று சொல்லலாம். இப்போது சொன்னால் ஏற்க மாட்டார்கள். கொச்சையாக
நினைப்பார்கள். ஆனால், தந்தையை இல்லை என்று மறுப்பவர் உண்டா! அதனால்தான்
சிவனை பாதிப்பது உலகையே பாதிக்கிறது.
ஏன்
சோழருக்கு முன்னுரிமை என்றால், பாண்டவருக்கு எல்லாம் இருக்கிறது என்று
சொல்கிறார்கள். அந்த பரமசிவன் என்னும் சங்கரனின் ஜீனுக்கு சிறப்பே அதுதானே.
பாண்டவர்களின் தேர்ந்தெடுத்த 5 ஜீன்களும் இருக்கும். தசரதனின் 10 வெள்ளை
இரத்தமும், இராவணனின் 10 கருப்பு இரத்தமும் கூட இருக்கும். சிவனின் இருந்து
பிரிந்து தோன்றியவைதான் எல்லாம். மரபு வழியாக சிவனின் பரம்பரை, பரம்சிவன்
என்னும் பாண்டவர் பாண்டியர் பரம்பரை. பரமன் பன்றிக்கு தராமான கதையை,
தாயுமான சுவாமிகள் என்று கதையை மாத்தி விட்டார்கள். கொஞ்சம் கொச்சை தான்
ஆனால், அந்தக் காலத்தில் எதுவெல்லாம் உண்மை, மனித இனம் எப்படி பெருக்கம்
அடைந்தது என்று யாருக்கு தெரியும். எல்லோரையும் சேர்த்துக் கொண்டவன்
ஆயிற்றே!
சடையப்ப வள்ளல்
எல்லோருக்கும் அடையாத நெடுங்கதவு உடைய
சிவன், கொடையால் மட்டுமே சேர்த்துக் கொண்ட புண்ணியங்கள் ஏராளம். சோழர் போல
ஜல்லிக்கட்டில் சீதையை அடக்கி சேர்த்து அல்ல. பரமசிவனுக்கு ஒரு காலத்தில்
பூசை செய்த பக்தன், இராவணன்!
இராமன் உன்னை இலங்கையில் #அழித்து
துரத்திய போதும் இந்தியாவில் தனக்கு பக்கத்தில் இடம் கொடுத்த, பாண்டியர்
சிவன். பிறகு முருகன் என்று ஒன்றாகி உருவாகிவிட்டு இப்போது சிவனின்
பரம்பரைக்கே வஞ்சகம் செய்கிறீர்கள். முருகன் சிவனை செய்தான் என்று வரலாறு
மாறும். #GOAT
உங்கள் குணத்தை மாற்றவில்லை என்றால் எதுவும் மாறாது
தமிழர்
உட்பட எல்லோரும் புலம்புகிறார்கள் தங்களை ஏமாற்றி விட்டார்கள் நிலத்தைக்
அபகரித்து விட்டார்கள். இப்போது சிங்களர் சிறிது சிறிதாக தமிழ் நிலங்களில்
குடி புகுதினாலும், நிலத்தை சேர்ந்த குடிகள் அப்படியே அடித்து
விரட்டப்படுவது, நடக்கவில்லை. ஆனால் இராவணனுக்கு அது நடந்தது எனலாம்.
அதைத்தான் இராவணனை அழித்தாக சொல்கிறார்கள். மற்றபடி அந்தந்த நிலத்து
ஜீன்கள் தமது மனத்தை, அகத்தை சரியாக, நிலையாக, நடுநிலையாக வைத்திருக்கும்
வரை அங்கேயேதான் நிலைகொண்டு உள்ளன. மொழிகள் திணிக்கப்பட்டு உள்ளன.
விஜயன்
என்று இராமன் கர்ணன் ஆட்சிக்கு வந்த பிறகு "உங்களுக்கு உங்கள் சொத்துக்கள்
வேண்டும் என்றால் மொழி கலாசாரம் மாற வேண்டும்" என்று திணிக்கும்போது
உடனடியாக பாமர மக்கள், எதுவும் செய்ய முடியாமல் அதை ஏற்றுக்கொள்வார்கள்.
அப்படியாக மொழிகள், கலாசாரம் மதங்கள் மாறி, நாளடைவில் சந்ததிகளுடன் மறந்து
போனாலும், அந்தந்த நிலங்களை அந்தந்த குடிகளே ஆழ்கின்றன.
ஆனால் தமிழர் மட்டும் உரிமை இல்லாமல் நிற்கின்றனர். அதற்கு அவர்களின் முருகனின் இராவணனின் குணமே காரணம் ஆகும். காலில் விழுந்தால் அனைத்தும் பெற்றுக் கொடுக்கும் பரமன் அதையும் பெற்றுக் கொடுத்து இருப்பான். ஆனால் கேட்க மாட்டேன் என்று அன்றே கிளப்பியவன் முருகன். எவரையும் சாராமல், எவரையும் மதிக்காமல், சொந்தமாக நடப்பேன் ஜெயிப்பேன் என்று புறப்பட்டவன். ஆனால் இன்று...
"ஏறு மயில் ஏறு. ஈசனிடம் நாடு" என்றால் உடனே
இந்தியாவிடம் பிச்சை எடு என்று சொல்வேன் என்று நினைப்பார்கள். எங்கும்
நிறைந்தவன் ஈசன். எப்படி, "இதயத்தின் மொழிகள் புரிந்து விடு" இதயத்தின்
விருப்பங்கள் அறிந்து நடப்பவன் நடுநிலை கொண்ட எல்லோருக்கும் அருள்புரியும்
சர்வேஸ்வரன் சிவன்.
அவனே தொடக்கம்.
அவனே முடிவு.
இத்தனையும் படித்த பிறகு, இப்போது இந்த வரிகளின் பொருள் உங்களுக்கு வேறாக விளங்க வேண்டும்.
உயிர்களின் தொடக்கமும் முடிவும் அவனே!
பரமசிவன்
என்று பெயர் கொண்டதால் அவன் இயல்புகள் அவ்வாறு அமைந்ததா! அல்லது அவனது
இயல்புகள் காரணமாக அவனுக்கு அந்தப் பெயரா! என்பதை நீங்களே தேர்ந்து
சொல்லுங்கள்.
சாரம்சம்; எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.



























.jpeg)

No comments:
Post a Comment