Celebreties Life
என்னுடைய அனுபவம் எத்தகைய பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது என்றால், இராமாயணக் காலத்தில் இருந்தே குற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. மனிதன் வரலாற்று அனுபவங்களால் அவற்றை தவிர்த்துக் கொள்ளவில்லை. மாறாக அதை முழுவதுமாக வெளியில் தெரியாமல் செய்வதற்கு அவன் கற்றுக் கொண்டுள்ளான்.
The Mango Story, Senior - Junior
இது குறித்து அறிந்தவர்கள் அந்த வலையில் சிக்கிக் கொள்ள மாட்டார்கள். சிக்கிக் கொண்டவர்கள் வெளியில் சொல்ல மாட்டார்கள். புதிதாக உள்ளே வைந்தவன் அது குறித்து வெளிப்படுத்தினால் அது ஏற்கனவே அங்கே உள்ளவர்களைப் பாதிக்கும். அதற்காக கொண்டு வரப்பட்டதே Senior Junior முறைமை. அது சிவன் பிள்ளையாருக்கு பழம் கொடுத்த கதையின் காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ளது.
இப்படி இருக்க, "முன்பு Celebrities வாழ்க்கை கடினமானது, துஷ்பிரயோகம் நிறைந்தது. ஆனால் இப்போது அப்படி எதுவும் இல்லை" என்று சொன்னால் அது உண்மை என்று ஆகிவிடாது. அதோடு, மேடையில் தனக்கு நேர்ந்த கொடூர அனுபவங்களை மேடையில் பகிரும் #Junior களையும் பார்த்திருக்கிறேன். "அப்படி உனக்கு யார் செய்தது!" என்று கோபத்தோடு கேட்கும் #Senior களையும் பார்த்திருக்கிறேன். ஆனால் எனக்கு எல்லாம் தெளிவாகத் தெரியும். ஏனெனில் நான் எல்லாவற்றையும் நான் பாதிக்கப்படுபவர் நிலையில் இருந்தே அனுபவித்து இருக்கிறேன்.
கத்தி எடுத்தான் அதை கைவிட முடியாது என்பது போல, பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் சில விடயங்கள் பழகிப் போன ஒன்றாகிவிடும்.
ஊர்வசி ஊர்வசி Take it easy ஊர்வசி என்று எடுத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.
ஆனால் வேடிக்கை என்னவெனில் இவற்றை எல்லாம் ஒழுங்குபடுத்தி நடத்துவது யார்? தலைவர் யார்? என்றால் எல்லாம் நாமாகத்தான் இருப்போம். முதலில் பாதிக்கப்படுவோம். பின்பு வெளியில் வர முடியாமல் பழக்கப் படுவோம். பிறகு நாமே தலைவரும் ஆவோம்.
அதனால் தான் தன்னைத் திருத்திக் கொண்டால், சமூகம் தானாகத் திருந்தும் என்பார்கள். ஆனால் என்ன செய்ய வலையில் விழுந்த மீன் விருந்தில் பெயர் எடுப்பதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை.
அந்தக் காலம் தொட்டே Cats உம் Rats என்னும் ஓட்டம் தான். ஆனால் சுகபோகம் என்னும் வலையில் விழுந்து Cats, Rats ஆகவும்; மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி Rats, Cats ஆகவும் மாறிய சம்பவங்கள் நிறையவே உண்டு.
Failure of Justices, Dharmar - Dhamilar
ஆனால், பரிதாபமாக இந்த Race இலே அதிகம் பின்தங்கிப் போனது தமிழர் கூட்டம்தான். ஏனெனில் பரமசிவன், முருகன், பாண்டவர், தர்மர், திருவள்ளுவர், பாண்டியர், சோழர் காலம் தொட்டே ஒழுக்கம் குறித்து வள்ளுவர் உட்பட பலரும் பாடம் நடத்திய சமூகம் அது. இதை வெளிப்படையாக சொன்னால் ஏற்றுக் கொள்ளுமா! தெரியாமல் மாட்டினால் தான் உண்டு. இன்னமும் நேர்மையான முறையில் நீதி கிடைக்கும் என்று அநேகம் ஆலோசிப்பவர்களே அதிகம். அடுத்தவன் கேட்காதவரை சுயநலமாக, கணமூடித்தனமாக, வளங்களை எடுத்துக் கொள்வது, நடந்து கொள்வது ஏனையோர் குணம். இந்தக் காலத்தில் Fair Deal என்று ஏதாவது இருக்கா..!
Rude Intelligence Fails Regardless Fairness
ஆகமொத்தம் காலில் விழுந்தால்தான் பழம் என்பது உலக சமூக நிலவரம். ஆனால், காட்டு காட்டியே தீருவேன் என்பது இராவணன் பரம்பரை மீசையின் வீர முறுக்கம்.
பிறகு என்ன தீதொழிய நன்மை செயல் தான். இதைப் புரிஞ்சு கொள்கிறவன் பிஸ்தா!
தமிழர்கள் மன்னனின் முறைமையில் வாழ்ந்த தற்பாதுகாப்பு குறித்து அறியாத மக்கள், ஜனநாயகத்தில் வழிகாட்டல் இல்லாமல் தனித்துப் போயினர். ஆனால் மன்னர் அடக்குமுறை சாதியம் செய்தார் என்று சாடுபவர்களும் உண்டு. என்ன சொல்ல, "கடிவாளத்தின் தேவை அறியாத குதிரைகள்".
Who is the Hero?
"ஆண்டவன் நல்லவங்களை சோதிப்பான். ஆனால் கைவிட மாட்டான்."
நீங்கள் எல்லாம் ஆண்டவன் சோதனையை நினைத்துப் பயந்து வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
நான் அந்த சோதனைகளைக் கொடுக்கும் ஆண்டவனாகவே வாழ்வதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
ஃ ஆண்டவனை குறித்து நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.
😎












No comments:
Post a Comment