Friday, December 13, 2024

சங்கரன் தெரு: சிவனுடன் போட்டியிட்ட இராமன்: பிஞ்சிலே பழுத்த முருகன்: நாகரீகர்கள் - இயற்கர்கள்

சித்தாந்தம் கடவுளர்க்கும் இராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாச பாத்திரங்களுக்கும் வேறு விளக்கங்கள் கூறுகின்றன. ஆனால் அவை எல்லாம் ஒரு சாராம்சப் பதிவுகள் தான். அதன் அமைப்பு அனைத்துக்கும் பொருந்தும். ஆன்மீக பாத்திரங்களை உலக மக்கள் பரம்பரைகளில் ஆராய்ந்து இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

தேவர் யார்? அசுரர் யாவர்?

தோலின் நிறம் மற்றும் நாகரீகம் அடைந்த அளவை வைத்து மனிதர்களை தேவர் அசுரர் என்று மறை பொருளாக புராணங்கள் எழுதி உள்ளார்கள். இயல்பாகவே நாகரீகம் அடைந்தவர்கள் கலாசாரம் மேம்பட்டும், தேர்ந்த உணவுகளை உண்டும் வெண்ணிறத் தோல் உடையவர்களாகவே இருப்பார்கள். ஆனால் ஆதியில் பொதுவாக வடமுனையை அண்மித்து வாழ்ந்த வெண் தோல் சமூகம் தேவர் என்றும் தென்முனையை அண்மித்து வாழ்ந்த கறுப்பு நிறத் தோல் சமூகம் அசுரர் என்றும் வகை குறிக்கப் படுகின்றனர்.

சிவலிங்கம் புவியில் குறிப்பது எதை?

பாரதத்தின் வரைபடம் சிவலிங்க உருவத்துடன் ஒத்துப் போவது பிரமிப்புக்கு உரியது. சிவலிங்கத்தில் மேல் பாகம் (விஷ்ணு பாகம்) தேவர் வாழ்ந்த தேசமாகவும் கீழ் பாகம் (பிரம்ம பாகம்) அசுரர் வாழ்ந்த தேசமாகவும் கருதலாம். அசுரர் வாழ்ந்த பகுதி, குமரன் வாழ்ந்த பகுதி, குமரிக் கண்டம், பிரளயத்த்தின் பின் பிரிந்து போனது. அது தேவர்கள் மற்றும் அசுரர்கள் சிவனுக்கு செய்த துரோகம் மற்றும் தந்த ஆற்றொணாத துன்பத்தின் காரண்மாக, சிவன் மனம் நொந்து கொடுத்த சாபம் என்று கருதப்படுகிறது.

சங்கரனார் என்னும் சிவன் யார்?

இவர்கள் இருவருக்கும் மத்தியில் மத்தியதரைக் கோட்டினை அண்மித்து சங்கரனார் சமூகம் தோன்றி, முன்பே நாகரீகம் அடைந்து, கடவுளாக பரிணமித்திருந்தார். #சிந்துவெளி நாகரீகம். அது மத்தியதரைக் கோட்டில் முன்பே சூரிய வெப்பத் தாக்கத்தால் நிகழ்ந்தது. அதனால் வானவரில் சூரியனே சிவன் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். பல்லாயிரம் வருடங்கள் வானவர்க்கு சில நொடிகள் என்று சொல்வது இதைத் தானோ! வானத்தில் இருந்து வரும் கதிர்கள் பூமியில் உயிர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன. சாஸ்திரத்தின் படி ஜோசியத்தின் படி குறுகிய காலத்திற்கு இல்லை எனினும் நெடுங்காலத்தில் அது சத்தியமே! அங்கிருந்து ஆட்டுகின்றவன் தினம் ஆடுகின்ற நாடகம் இது! அவன் அருளாலே அவன் தாழ் பணிந்து!

சங்கரனார் எல்லோரையும் தேவர், அசுரர் என்ற வேறுபாடு இன்றி அரவணைத்து, அருள் புரிந்து, போதித்து, உறவு பாராட்டினார். அங்கே தேவர் அசுரர் சங்கமத்தில் சிவனுக்கு சங்கரனார் என்ற பெயர் வந்தது. தேவர் வெண்தோல், வெண் சடைமுடி உடையவர். அசுரர் கறுப்பு தோல், கறுப்பு சடை முடி உடையவர். சங்கரனுக்கு கறுப்பு சடைமுடியும், வெண் தோலும் அங்க அடையாங்கள்.

நாகரீக Civilization கல்வி என்ன சொல்கிறது? சிந்து நதிக்கரையில்தான் நாகரீகம் தொடங்கியதாக சொல்கிறது.

விஞ்ஞானம் என்ன சொல்கிறது? முதலில் புவி முழுவதும் பனியால் உறைந்தது. பிறகு முதலில் எங்கே வெப்பமும், விவசாயம் செய்ய தகுந்த காலநிலையும், நதிகள் ஆறுகள் போன்ற நீர் ஊற்றுக்களும் தோன்றி இருக்கும்! அதனால் முதலில் பரிமாணம் அடைந்த கூட்டம் சிவன் கூட்டம், முதலில் குரங்குகள் ஆனது. சிவன் மத்திய கோட்டுக்கு அருகில்  வாழ்ந்த, முன்பே பரிணமித்து, குரங்காக மாறி, வேளாண்மை செய்து வாழ்ந்த கூட்டம். சடையப்ப வள்ளல், திருவள்ளுவர், ஒட்டக் கூத்தர் இவர்கட்கு சிறந்த உதாரணம்.
#”குரங்கு அப்பம் பகிர்ந்த கதை”

”அடைய நெடுங் கதவும் அஞ்சேல் என்ற சொல்லும் உடையான் சடையப்பன் ஊர்.”

கதையே சங்கரனார் பற்றியது தானே!

இப்போது இந்தியா உட்பட அதன் அண்டை நாடுகளான நேபாள், பங்களாதேஷ் போன்ற நாடுகள் முழுவதும் சங்கரனாரின் விழுதுகள் தான். வடக்கில் கண்ணனும், தெற்கில் கந்தனும். சங்கரனுக்கு இரண்டு முகங்கள். அதில் தமிழ் முகம் முருகன். சிவனுக்கும் பார்வதி என்னும் மலையாள சமூகத்துக்கும் சற்று பின்பு வளர்ந்த பார்வதி சமூகத்துக்கும் பிறந்தவன் முருகன். இதிலிருந்து பார்வதி பேசிய மொழி தமிழ் அல்லது மலையாளம் என்பது ஊர்ஜிதம்.

”இரண்டு பக்கமும் பாடினார், சங்கரனார்.”

அவர் பக்கப் பாட்டு பாடவும் இல்லை; கூடவும் இல்லை. நீங்கள் தான் வந்து கூடினீர்கள்; அணைத்துக் கொண்டார். பிறகு எல்லாம் கற்றுத் தேர்ந்த பின் வேண்டாம் என்று சென்று விட்டீர்கள். தேவர்கள் திரும்பி சென்று தங்கள் ஊரில் இருந்து  இராமனை அனுப்பி வைத்தார்கள், சிவனை விட பெரியவர் நாங்கள் என்று. இப்போது உலகத்தின் நிலை சொல்லும், இராமாயணத்தால் விளைந்தது இன்பமா! துன்பமா! என்று. அந்த அளவு ஆழமான ஆத்மீக ஞானம் கொண்ட சிவனை வெல்ல நினைத்தால் இதுதான் நிலை. சேற்றில் புதைந்த யானையை காகமும் அதட்டும்.
அன்று சிவன். இன்று இராமன்.

கண்ணனும் கந்தனும்

கண்ணன் கந்தன் சங்கரனாரின் இரு கண்கள். இரண்டு சொற்களுக்கும் வேறுபாடு "த"-தமிழர் என்ற எழுத்து மட்டுமே! ஆனால் விஷ்ணு தேவர்களுடன் ஒன்றிய ஆள். பின்னாளில், சிவனை பொய் என்று சொல்லி, விஷ்ணுவை சார்ந்தவர்கள் சிவனுக்கு மேலே சித்தாந்தம் வளர்த்தமையால், தேவர்கள் துரோகம் செய்தார்கள். அவர்களைத் தொடர்ந்து தேவர்களின் புத்திசாலித் தனத்தால், தேவர்களின் ஜூனியர் இராமனுக்கு சோரம் போனார்கள் அசுரர்கள். இருவரும் சங்கரனார்க்கு துரோகம் செய்தவர்கள் ஆயினர். கண்ணனின் சகோதரன் கந்தன். ஆனால், இருவரும் விஷ்ணுவின் மருமக்கள் என்பதே சாலப் பொருந்தும். விஷ்ணுவின் அவதாரம் என்று கண்ணனுக்கு அவர்கள் கொடுத்த பெயர் அனைத்தையும் மாற்றியது. அவர்கள் சொல்வதுபோல என்றால், பார்வதியின் குலதெய்வமான இராவணனின் அவதாரம்தான் முருகன் / கந்தன் என்றும் சொல்லலாம் அல்லவா! ஆனால் இடையில் இராமன் வந்து புகுந்துகொண்டதால், இராவணன் அழிந்தான். இராமனுக்கு பார்வதி துணை நின்றாள். வேடிக்கையான கதை; பார்வதி கறுப்பை வெறுத்த கதை!

கண்ணன், சிவனின் வம்சம் இல்லை என்று மறுக்கலாம். தான் விஷ்ணுவின் அவதாரம். விஷ்ணுதான் பெரிய கடவுள் என்று கூறலாம். ஆனால், அனைத்தும் ஜீனிலே இருக்கத்தான் போகிறது. அதை மாற்ற முடியாது. நாகரீகம் அடைந்த சிவனை சரணடைந்து, சங்கரனார் ஆக்கி வளர்ந்த, தேவர் அசுரர் கூட்டம் மத்தியில், வாசுதேவன் என்ற முக்கண்ணனுக்கும் தேவகிக்கும், உதித்த இடைச்சாதியர் தான் கண்ணன் குலம். அவர்கள் ஆடு மேய்த்திருக்கலாம். ஆனால் இடையர் என்ற தமிழ்ச் சொல் கருதுவது இதைத்தான். யாதவ குலம் என்பது என்ன குழப்பம் என்று புரியவில்லை.

எங்கிருந்தோ வந்தான்! இடைச்சாதி நான் என்றான்!

முக்கிய குறிப்பு: இது சிவன் விஷ்ணு என்று ஜீவத்மாக்கள் அல்லது பரம் பொருள்கள் அல்ல. அது உலக படைப்பின் முழுச் சாரம் (whole extract).

தாய்க்குலமும் தந்தைக் குலமும்

முன்பு தோன்றி காயாகி, எலியில் இருந்து குரங்காக பரிணமித்து, முன்பே முத்திக் கனிந்த, பித்தன், சித்தன் சிவன் சமூகம். முதலில் காய்த்து பழுத்தது மத்திய கோட்டில் தோன்றிய சிவன். சிவன் மற்றும் அவன் வம்சமாகிய கண்ணன் (வாசுதேவர் + தேவகி) மற்றும் கந்தன் (சிவன் + பார்வதி) ஆகியவர்கள் தந்தைக் குலம் என்று கருதப்பட்டனர். அவர்கள் தவிர்ந்து சூரியன் வெப்பம் உக்கிரம் அடைய புவியின் மேலும் கீழும் தோன்றிய மக்கள் (பரிணாமம் பிந்தங்கியமையால் எலியின் இயல்பு அதிகம்) தாய்க்குலம் என்று கருதப்பட்டனர். பிந்திப் பூத்த பூ நிலைத்து வாசம் வீசி, தன் மணம் விரைவாக் பரப்ப, முன்பு பூத்த பூ முத்தி விரைவில் உதிர்கிறது. #பித்தா

தேவர்களில், தாய்க்குலத்தில் பின்னாளில் வந்த இள இரத்தம், இராமன். முதியோரின் ஆட்சியை இளையோர் எதிர்ப்பது போல, சிவனின் வம்சமாகிய கண்ணனைக் கண்டு, சிவனின் ஆட்சியில் குறையும் கண்டு, அதை விட ஒரு படி முன்னே தான் நிற்பேன் என்றான் இராமன். இராமனின் இள இரத்தம் வேகம் சுறுசுறுப்பு கொண்டிருந்தது.

”அரசனை நம்பி புருஷனை கை விட்ட பார்வதி”

இராமன் நாகரீகம் அடைய ஆரம்பித்த தேவர் குலத்தின் இளைய தலைமுறை (young generation). இராமனை, கர்ணன், விஜயன் வருகை என்று இராமாயணம், மஹாபாரதம் மற்றும் தமிழர் வரலாற்றில் மாறுபட்ட பெயர்களில் காணலாம். இராமன் எப்போதும் ஏனையோர் அனைவரையும் விட ஒரு படி முன் நிற்பேன் என்ற வேகம் கொண்டவன். மாற்றத்தினை விரும்பி எல்லோரிடமும் தனது கொள்கையைத் திணிப்பவன். அவன் சிவனிடம் இருந்து அனைத்தையும் பிரதி செய்து கொண்டான். ஆனால் முழுமையாக பிரதி செய்திருக்கவில்லை. (He copied from his senior Shivan but did not copy completely - copy cat Raman).

அவனுடைய வசீகரமான மாற்றங்களின் அறிவிப்பு அனைவரையும் கவர்ந்தது. ஒட்டுமொத்த இளைய தலைமுறையையும் (பார்வதி மற்றும் தேவகி / கங்கை) அவன் பக்கம் இழுத்தது. இன்றும் அரசியலில் பார்வதிக்கு என்ன செய்தார்கள். இப்போதும் அவன் குணம் அப்படியே இருப்பதால், இன்னமும் பாடம் கற்காத பார்வதி, நடந்தவற்றை மறந்து மீண்டும் மீண்டும் அவனுடன் கூட்டு சேர்கிறாள். இலங்கையிலும் கண்டியை சேர்ந்த பார்வதி என்னும் தாய்க்குலம் சிவனுக்கு செய்த துரோகம் இதுதான். இலங்கையில் இருந்த கறுப்பு நிற, இராவ(ண்)ண, சிவக் குலத்தை வெறுத்தாள். இன்றும் தமிழர் என்றால், சிங்களவருக்கு ஆறாத பகை.

பார்வதி சிவனைப் பிரிந்து சென்றார். இதனால் கண்டி இராச்சியத்தின் மலையாளம், சிங்களமானது. இலங்கையில் பெரும்பான்மை மாறிப் போனது. தமிழ் பெரும்பான்மை இல்லாமல் போனது. இலங்கையில் பார்வதி (மலையாளிகள்) வாழ்ந்த கண்டி இராச்சியம்தான் மிகப் பெரிய இராச்சியம். அவர்கள் சேரும் கூட்டம் தான் பெரும்பான்மையாக மாறும் என்பது வெளிப்படை.

இராவணன் மடிந்தான்

இந்திரன் கெட்டதும் பெண்ணாலே

சந்திரன் கெட்டதும் பெண்ணாலே

இராவணன் கெட்டதும் பெண்ணாலே

இராவணன் சீதையைக் கவர்ந்து வந்ததால் தான், இராவணன் தாய் பார்வதி இராமனுடன் சேர்ந்து கொண்டார்; இராவணனைக் கொன்றார்!

சிவன் பார்வதியை இழக்க...

முருகன் இலங்கைப் பழத்தை இழக்க...

தமிழன் கண்டி இராச்சியத்தை இழக்க...

காரணம் சிவக் கொழுந்து (சிவனின் வம்சம் அல்லது முருகனின் முத்தோன்) இராவணன், சீதையைக் கவர்ந்து வந்ததே காரணமாம்!

கறுப்பு வெள்ளை தோல் பிரச்சினையும் வெள்ளை மீது பார்வதியும் இராவணனும் கொண்ட மோகமே, இலங்கை அரசியலில் பெரும் திருப்பம் வரவும், தமிழன் முருகன் இலங்கையை இழக்கவும் காரணமாகும்.

"சுந்தரம் தான் வேண்டும் என்று சென்றாள் பார்வதி 🤷"

வரலாற்றில் மூடி மறைக்கப்பட்ட பல உண்மைகளின் மூல இரகசியமும் (root secret), இந்த கறுப்பு வெள்ளை என்னும் தேவ அசுர பிரச்சினை தான் என்றால் நம்ப முடிகிறதா! அதனை தோண்டினால் எல்லாம் புலப்படும். ஏற்கனவே கறுப்பு நிறத்தால் (தாழ்வுச் சிக்கலில்) பாதிக்கப்பட்டவர்கள் இந்த உண்மை எல்லாம் அறிந்து தான் இருப்பார்கள். ஆனாலும் மெளனம் காக்கிறார்கள்.

சீனியர் சிவன் ஜூனியர் இராமன்

நெடுகாலம் ஆண்ட சீனியர், சிவனும் அதில் குற்றம் கண்டு வெறுத்த யூனியர், இராமன். தர்மம் எனும் நெருப்பு நெடுங்காலம் பார்வதி குலத்தை வாட்டியது. இளைய சமூகம் மட்டும் இராமனால் ஈர்க்கப்படவில்லை. சிவனே நன்கு அறிவான். தான் போகும் பாதை கடினமானது. எப்போதும் தர்மத்தின் படியே நடப்பது கடினம். இளமையானவர்கள், அதிகம் அனுபவம் இல்லாதவர்கள், முழுமையான ஞானம் இல்லாதவர்கள், உலக மாயையில் துன்பத்தின் காரணம் அறியாதவர்கள், இந்த குறுகிய வாழ்க்கையை தாம் மட்டுமேனும் சுகமாக வாழ நினைக்கும் சுயனலவாதிகள் இராமனின் பக்கமே நிற்பார்கள். அந்த பாதை இந்தப் பிறவிக்கு மோட்சம் அளிப்பது போல தோன்றும் சொர்க்கம் போன்ற பாதை.

”இனிய உளவாக இன்னாத கூறல் கனி இருக்கக் காய் கவர்ந்தற்கு.”

சிவனுடன் போட்டியிட்ட இராமன்

இராமன் பாரம்பரியங்களை உடைத்து அதை விட இந்த உலகம் காண அனேகம் உண்டு என்று எடுத்துரைத்தான். விளையாட்டுப் பிள்ளை நிலவைக் கையில் ஏந்த நினைப்பது போல அன்றும் இன்றும் அவன் குணம் இதுதான். ஆனால் அது தவறு என்று அல்ல. ஆனால் எதிர்கால விபரீதத்தை அறியாதவர்கள் அவனுக்கு கை கொடுக்கவும் செய்கிறார்கள். அவன் சிவனை முந்த நினைத்தான். ஒரு நிலையில் சிவனை வணங்கினான்; பிறகு சிவனையே வீழ்த்தினான். சுக்ரீவனுக்கும் அவன் இதைதான் செய்தான். அவன் சிவனின் சித்தாந்தங்கள் மற்றும் கொள்கைகளை தானும் பின்பற்றினான். அவற்றுள் பிரபல்யமானது ”ஒருமித்து இருத்தல் (unity / being united)”. ஆனால் சிவன் என்பது ஒரு தனி அடையாளம் அல்ல. அது பல கலாசார, மொழி, மற்றும் சமூகம் இணைந்த சேர்க்கை. சிவன் எல்லோரையும் வரவேற்று உபசரித்தான்; இராமனையும் தான்.  எல்லோரையும் சேர்த்து நட்பாக வைத்துக் கொள்ள விரும்பினான். அதை இராமன் அரைகுறையாக பிரதி செய்தான்.

சிவன் கொள்கை, சுதந்திரம் (freedom), இந்து மதத்தை பார்த்தாலே அது புரியும். அங்கு அனேக கட்டுப் பாடுகள் கிடையாது. நீங்கள் உங்கள் வாழ்க்கையை பிடித்தது போல வாழ்ந்து கொள்ளுங்கள், உங்கள் மக்களை, உங்கள் தேசத்தை நீங்கள் ஆண்டு கொள்ளுங்கள், உங்களுக்கு வேண்டியவை நான் தருகிறேன் என்பது சிவன் போக்கு. சிவன் தன்னையும் தியாகம் செய்ய தயாராக இருந்தான்; தேவர்களுக்காக அதையே செய்தான். ஆனால் சிவன் பார்வதியின் மகன் முருகனில் பார்வதியின் குணமும் சற்று இருகும். அவன் எதிர்பான், தனக்கு கிடைக்க வேண்டிய நியாயத்துக்காக, பங்குக்காக எதிர்த்து நிற்பான். அதனால் தான் இலங்கையில் நடந்த போர் இலங்கையின் ஜீன், இராவணர்களின் சித்தாந்தத்துக்கு இடையிலானது தான். வஞ்சம் தீர்க்கும் தேவர்கள் என்றேன்.

தன்னுடைய பரந்த மனத்தால் சிவன் இராஜ்ஜியத்தை இழந்தான். இராமன் வழக்கம் போல தனது கலாசாரம், மொழி, சித்தாந்தம் மற்றும் அடையாளம் ஆகியவற்றைத் திணித்தான். சிவனின் கூட்டம் சிவனுக்கு பூரண ஆதரவு வழங்கியதால் சிவனின் ஆன்மீக மற்றும் படை பலம் மிக அதிகம். சிவனுக்கு தேவர் மற்றும் அசுரர் இரண்டு தரப்பில் இருந்தும் ஆதரவு உண்டு. சிவனின் இரத்தத்திலேயே இரண்டு ஜீன்களும் உண்டு. அதனால் சிவனை நேரில் எதிர்க்கும் எவரும் வெல்ல இயலாது. ஆனால் அவனின் சக்தி, அபரிமிதமான ஆயுதங்களை பிரதி செய்யவும் களவாடவும் நினைத்தான் இராமன். இன்று வரை, இந்த யுகம் வரை, அதன் பின்னால் உள்ள இரகசியத்தை கண்டு பிடிக்க முடியாமல் இராமர் கூட்டம் விழிக்கிறது.

சிவன், யூதர்கள், மாயன்கள்

மத்திய தரைக் கோட்டிலே, பாரத தேசத்தில், சங்கரனார் என்னும் சிவன் போல, அதே வட்டத்தில் வேறு பகுதிகளில் வேறு சமூகங்கள் தோன்றின. அவற்றின் தன்மை அந்த வெப்ப வலயத்தினாலும் #நிலத்தின் தன்மையாலும் ஒத்துப் போயின.
யூதர்கள் - இயேசு - அல்லா
மாயன்கள் அதி உச்ச நாகரீகம் அடைந்த முதலில் பழுத்த பழங்கள்! முதலில் பூத்த பூ, அதன் அதீத ஞானத்தின் தன்மையால், முதிலில் உதிர்ந்தும் போகிறது.

தர்மம் - கர்மா - நவீன சட்டங்கள்

கர்மா என்பது சனாதன தர்மம், ஒரு தலைப் பட்சமானது. ஆனால் தர்மம் சர்வேஸ்வரனின், சர்வ இரட்சகனின் அனைவரையும் கருத்தில் கொள்ளும் தர்மம். அதனால் கர்மா தர்மத்தை விட கீழானாது.  ஆனாலும் இன்று நடைமுறையில் உள்ள போலியான நவீன நடைமுறை சட்டங்களை விட கர்மா, என்னும் சனாதன தர்மம் உயந்தது. ஆனால் இன்று இதை அறியாமல், பொய்கள் சொல்லி, கர்மாவை மாற்றி வைத்த சமூகமே, “Karma is a pitch" என்று சொல்கிறார்கள்.

பார்வதி

அரக்க குலத்து இளைய, இயக்கர் சமூகம் (இயற்கை) பார்வதி குலம் ஆகும். தென் குலத்தாள் பார்வதி. சிவனுடன் சேர்ந்து இடையில் கந்தன் தோன்றினான். பார்வதியின் நேரடி பிள்ளை, பிள்ளையார். அவர் இலங்கைப் பழத்தைப் பெற்றார். கந்தன், இலங்கைப் பழத்தில் உரிமை உண்டு என்று கண்ணன் தலைமையில் போராடி, இந்திரப் பிரஸ்தம் பெற்றான்.

• இலங்கையில் இயக்கர் - நாகர்
• இயற்கை இயக்கர் மலையாளம் கண்டி பார்வதி குஹன் குஹேனி .
• நாகரீகம் நாகர் சிவன் மத்திய கோடு சங்கரனார்.

இராமன் வந்து ஏமாற்றம் தந்த பிறகு, சங்கரன் புத்தனாக வந்தார்; பார்வதி பௌத்தத்தை தழுவிக் கொண்டார். #சங்கமித்தை

முற்றாத தமிழில் க கி கு கே என்று பேசுவதும்
ஆறுவது சினம் என்று ”சி(வன்)நா(ம)ம்” ஐ சொல்வதும்
தக்கன் என்றும் தாட்சாயினி என்றும் பெயர்கள் வைத்திருப்பதும் முற்றாத தமிழ் (proto tamil). அதை வளர்த்து எடுத்தவன் முருகன்.
முற்றாத தமிழ் >> மலையாளம் >> ஔவையாரின் பழந்தமிழ் >> வள்ளுவனின் தெள்ளு தமிழ்

இவை தென் பக்கம் சிவன் கொண்ட உறவுகள்.
சிவன் என்பது தனி ஒருவன் அல்ல. அது ஒரு பெருவாரியான சங்கரன் சமூகம்.
எப்படி அவை spritual விடயங்களுடன் சரியாக பொருந்துகிறது என்று சிந்தித்தால், அதற்கேற்ப பாத்திரங்களுக்கு பெயரிட்டு இருக்கிறார்கள். அவர்கள் உண்மையான தனி நபர்கள் இல்லையே! அதுபோல் வடபுறம் தேவகி கங்கை என்று சிவனுக்கு தேவருடன் உறவு இருந்துள்ளது.

இது சங்கரன் கதை; முற்றிய குரங்கு இளைய எலியை மணந்த கதை

இயக்கர் நாகர் யாவர்?

முன்பே கலைகள் பல கண்டு, சமூக கட்டமைப்புக்களை உருவாக்கி, அறிவும் ஆற்றலும் வளர்த்து, #நாகரீகம் அடைந்தவர்கள் நாகரீகர்கள். நாகர்கள் என்று அழைக்கப் பட்டார்கள். சற்று தாமதமாக இந்த நாகர்களை சார்ந்து, அவர்களுடன் கூடி நாகரீகம் அடைந்கவர்கள். அதற்கு முன்பு #இயற்கையுடன் பின்னிப் பிணைந்து இருந்தவர்கள் இயக்கர்கள் என்று அழைக்கப் பட்டார்கள்.

ஞானப் பழம் என்று முருகனுக்கு பெயர் வரக் காரணம்?

முதலில் முற்றி நாகரீகம் அடைத்து மோட்சம் அடைந்த சிவனின் பிள்ளை முருகனும் சிவனின் அம்சம் ஆவான். அதனால், சிறு வயதிலேயே இயல்பாக அறிவும் ஆற்றலும் உடையவனாக விளங்கியமையால் ஞானப் பழம் என்று பெயர் வந்தது.

முருகன் - பழம் நீயப்பா! இப்போ முத்தி விட்டது. முதலில் பூத்த பூ முதலில் வாடிவிடும்

முருகனை ஏன் நான் பிஞ்சிலேயே பழுத்தது என்கிறேன். மூத்த சிவனுக்கு இளமையுள்ள பார்வதிக்கும் பிறந்தமையால் இளமையிலேயே அறிவும் ஆற்றலும் உடையவனாக இருந்தமையால் அவனை பிஞ்சிலேயே பழுத்தவன் என்கிறேன்.

நடுநிலை அடைதல்

இடம் கொடுத்தால் மடம் கட்டுவார்கள். சங்கரனிடம், முன்பே நாகரீகம் அடைந்த சிவனிடம் தஞ்சம் அடைந்து, கலைகள் அனைத்தும் தேவர்கள் (தேவகி) மற்றும் அசுரர்கள் (பார்வதி). ஆனால் கற்றுத் தேர்ந்தபின் இருவரும் இருந்த இடமில்லாமல், தனக்கென பெயர் வளர்த்துக் கொண்டு சென்று விட்டார்கள். தண்ணி மேட்டில் இருந்து பள்ளத்துக்கு ஓடி நிலை கொள்வது போல, மின் கூடிய இடத்தில் இருந்து குறைந்த இடத்திற்கு பாய்ந்து நடுநிலை கொள்வது போல, மத்திய தரைக் கோட்டில் சேர்ந்த சிவன் வளர்த்த ஞானமும் அவ்வாறே பரவலாகியது என்று கொள்ளலாம். நாடகம் முடிந்த பின் இறுதியில் எல்லாம் கலைந்து போவது தானே! நான் தான் மூத்தவன் என்று சிவன் கோர முடியாது. அது சிவனுக்குத் தேவையும் இல்லை. ஆனால், சிவனின் அரக்க குல வாரிசு கந்தன் மட்டும் ஆண்டியாக, அன்றும் இன்றும்.

மூன்றெழுத்து கொண்டவன் சிவன் - வாசுதேவன்.
அந்த#ண#ன்.
பிராம#ண#ர்.
ஆங்கிலத்தில் n என்ற ஓசை உண்டு. "ண்" என்ற ஓசை இல்லை. #பிராமின்
ஆயுத எழுத்து (ஃ) சிவன் மகன் கந்தன் வளர்த்த, தமிழில் மட்டுமே உள்ள சிறப்பு எழுத்து ஆகும். அதுவே ஓம் என்னும் பிரணவ எழுத்தும் ஆகும்.

காட்டிக் கொடுத்தார் சங்கரனார் (கண்ணன், கந்தன்)

தேவர்களின் இந்த சதிச் செயலை இப்படியான புராணக் கதைகள் மூலம் காட்டிக் கொடுத்தார், சங்கரனார். கண்ணனின் ஒரு பகுதி தேவர்களுடன் சாய்ந்து கொண்டது. இந்நாளில் பார்ப்பனர் என்று தமிழர்களால் அளவுக்கு அதிகமாக வசை பாடபடுபவர்கள். அவர்கள் இந்தக் காதா பாத்திரங்களைக் கடவுள் ஆக்கினர். வரலாறு காலத்துடன் காணாமல் மாயமாகிப் போனது. காட்டிக் கொடுக்கப்பட்ட தகவல்கள் வெறும் கட்டுக் கதைகள் என்று ஆயின. அதை வேண்டும் என்று செய்யவில்லை. ஏனெனில் எல்லோரும் சொந்த பந்தங்கள். (விஜய் - ஏன்னா எல்லோரும் என் மாமன் மச்சான்கள் - ஜில்லா).

இடபமும் நந்தியும்

நந்தி என்று அவர்கள் சொல்வதை தமிழில் இடபம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இடது காலை மடித்து வலது காலை நீட்டி அமர்வது, கற்றுத் தேர்ந்த தமிழ் ஆன்றோரின் மரபு. அந்த தோற்றம் பார்வைக்கு, தமிழில் உள்ள "த" என்ற எழுத்தைப் போல இருக்கும். அது இடபம் என்று குறிக்கப் பட்டுள்ளது. அதோடு சிவனுக்கு ஈசன் என்றும் ஒரு பெயர் உண்டு. உடலில் ஈசான மூலையில் இதயத்தில் இருப்பார் சிவன். அதுவே நந்தியும் ஆகும். ஆகவே அவர்கள் கதை எழுதினார்களா, அல்லது சாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அதன் முதலை  மறந்து போனார்களா தெரியவில்லை. ஆனால் சங்கரன் சிவனுக்கு இரண்டு முகம் என்பதை வசை பாடும் தமிழர்கள் கண்டிப்பாக அறிய வேண்டும். சிவன் காலத்தின் பிறகு நிகழ்ந்த மாற்றங்கள், அசுரர்களுக்கும் அவர்களுடன் ஒட்டிய கந்தனுக்கும் சாதகம் இல்லாமல் போனது உண்மை தான்! ஆனாலும் சிவன் என்றாலே தமிழர் என்று சொல்ல முடியாது.

உன்னை நான் விடப் போவதில்லை; என் இதயத்தில் இருந்து விடப் போவதில்லை. என் அன்புக்குரியவர்களுக்கு நான், இந்த சிவன் அளிக்கும் மிகப் பெரிய பரிசு என்ன தெரியுமா!
Freedom - சுதந்திரம்.

*சுபம்*

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...