குமரி கண்டமும் குமரனின் பரிணாமமும்
வெப்ப வலயக் காடுகளில் மட்டும் அதிகம் வாழ்ந்தது குரங்குகள். அவை குமரனாக பரிணமித்தன. அவர்கள் தாம் வாழ்ந்த தேசத்தை குமரி என்று பெயரிட்டனர். அவர்களே அந்த தேசத்தையும் ஆண்டு வந்தனர். ஆண்டவரை இராவணன் அல்லது துரியன் என்று பாத்திரம் கொடுத்து இராமாயண மகாபாரத கதைகள் சொல்கின்றன. அந்த அரக்கரில் 10 சமூகம் இருந்தமையால் இராவணன் 10 தலை உடையவனாக காட்டப்படுகிறான். தேவரிலும் தசரதன் என்னும் (பத்து ரத்தம்) 10 சமூகங்கள் உண்டு.
பிள்ளையார் சமூகம் இலங்கைப் பழம் பெற்ற கதை
இருப்பினும் அங்கே, #அப்போது குறைந்த அளவு (Minority) தெற்கில் எலிகளில் இருந்து பரிணமித்த பிள்ளையார் சமூகமும் (குகன் குலம்) வாழ்ந்து வந்துள்ளது. காலம் மாறிப் போனது. கலியுகம் தொடங்கியது. இந்த உலகில் சிவனின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. சிவன் மனம் நொந்து நெடுங்கால தவத்தில் அமர்ந்து கொண்டாதாக அதை திருமூலர் சொல்கிறார். (அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்... அசுரர்கள் சிவனுக்கு செய்த துரோகத்தால், சிவன் அவர்களையும் அந்த நிலத்தை சபித்து மறைந்துவிட்டார். சிவலிங்கத்தின் பாதப் பகுதி - குமரிக் கண்டம் சித்தாந்தம் அதற்கு வேறு விளக்கம் கொடுக்கிறது. இரண்டும் சரியாகப் பொருந்துகிறது)
இயக்கர் மற்றும் நாகர் சமூகங்களின் மோதல்கள்
இதன்போது அங்கே வந்த சீன ஆராய்ச்சியாளர், அங்கே இயக்கரும் நாகரும் இருந்ததாக சொல்கிறார். அங்கே இருந்த இயக்கர் பிள்ளையார் சமூகம். நாகர் குமரன் சமூகம். அவர்களுக்கு இடையில் அடிக்கடி சொத்து மற்றும் ஆட்சிப் பிரச்சினை இருந்து கொண்டே வந்துள்ளது. அப்போது புத்தர் கூட அடிக்கடி இயக்கர் நாகர் பிரச்சினையை தீர்க்க வந்தவர் என்று வரலாறு சொல்கிறது. ஆனால், முருகன் அதற்கு முன்பிருந்தே பார்வதி (பிள்ளையார் பார்வதி குலம் - சிவனின் மனைவி பார்வதி அது நெடுங்கால பந்தம்) குலத்தில் இருந்து பெண் எடுப்பதும் பெண் கொடுப்பதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது. அதனால்தான் பிள்ளையார் என்பவரும் வள்ளியும் ஒன்றோ என்ற குழப்பம் இருப்பதாக முன்பு பதிவுகளில் சொல்லி இருந்தேன். சித்தாந்தம் உடலில் கூட இதயம் என்பது வள்ளி என்றும் முருகனின் இரு மனைவிகளில் ஒன்று என்றும் சொல்கிறது. அதே இதயம் பிள்ளையாரின் யானை முகத் தோற்றத்தைக் குறிக்கிறது. இவ்வாறே, இலங்கை என்பதே எஞ்சியுள்ள உலக உயிர்களின் உயிர் நாடி என்றும் அதுவே சாம்பலா Sambha.La.nka என்றும் என்றும் சொல்லி இருந்தேன். இராவணனால் ஆளப்பட்ட சிவனின் தேசம் தென்னாடு, அதில் மிஞ்சிய உயிர்நாடி. இலங்கை. அதையும் பிள்ளையாருக்கு கொடுத்து விட்டார் சிவன். இராவணன் ஈஸ்வரன் பங்குக்குரியவன். அங்கே குமரனுக்கு தேசத்தில் உரிமையும், நெடுங்கால கொடுக்கல் வாங்கல் உரித்து உறவும் இருந்தது. அது சேவலும் மயிலும் என இருந்தது.
ஆளவந்தான்களின் வரலாற்று தொடக்கம்
இங்கே தான் ஆளவந்தான்களின் கதை தொடங்குகிறது. அடிக்கடி தன்னுடைய மேம்பட்ட யுத்த நெறிகள் மூலம் குமரன் செய்த போர்கள் ஏராளம். இந்த பிரச்சினை தாங்க முடியாமல் பிள்ளையார் இராமனுடன் சேர்ந்து கொண்டார். இதை குகன் இராமனுடன் சேர்ந்து இராவணனை அழித்தது போல இராமாயணமும், துரியன் கர்ணனுடன் சேர்ந்து தர்மருடன் யுத்தம் செய்தது என்று மகாபாரதமும் சொல்கிறது. கர்ணன் விஜயன் என்றும் 600 DC இல் ஒழுக்கம் இன்மையால் இந்தியாவை விட்டு விரட்டப் பட்டவன் என்றும் தமிழர் வரலாறு சொல்கிறது. இராமனின் மொழி தேவ மொழி. அவர்கள் தமது மொழியைக் கலந்தார்களா, அல்லது அதையே வலியுறுத்தினார்களா அல்லது முன்பு இருந்ததும் இடைக்கால தமிழ் அல்லது வேறு வேடுவ மொழியா என்பது கேள்விக் குறி. இதனால் மொழி (தமிழ்) அடையாளம் எப்போதோ தொலைந்து போன விடயம். ஆனால் விஜயன் எனப்படும் இராமன் குஹனி ஐ திருமணம் செய்து ஆட்சியை பிடித்து ஏமாற்றி விட்டதாகவே இதை அன்று தொட்டு குறித்துக் கொண்டு இருக்கும் தமிழர் வரலாறு சொல்கிறது. இவை எல்லாம் நான் இராமாயணம், மகாபாரதம், கந்த புராணம் போன்ற இதிகாச ஆதாரங்களுடன் சொல்லிக் கொண்டே வருகிறேன். இயக்கர்களை ஆள வந்த நாகர்கள்; நாகர்கள் குமரியைத் தேடி மீண்டும் ஆட்சி செய்ய வந்தனர், யட்சர்களைக் கண்டனர்.
வடக்கே 2 பெரும் இராஜ்ஜங்களாக இருந்தது. அதில் மேலோங்கிய ஆட்சி முருகனிடம் இருந்தது. அதை சேவலும் மயிலும் என்று குறித்து விளக்கப் பட்டுள்ளது. சிகிரியாவில் இருக்கும் மத்திய கோட்டை, அங்கே வாயிலில் இருக்கும் கால்கள், மயிலின் கால்கள். ஏனெனில் இலங்கை மயில் காடு ஆகும். அதுவே 6 தலை கொண்ட (இராவணனின் 10 தலைகளில் 4 போக எஞ்சிய 6 சமூகம்) முருகனின், வாகனமாகக் காட்டப்பட்டுள்ளது. விஜயன் வரும்வரை பிள்ளையார் வள்ளியாக இருந்தார் என்று வைத்துக் கொள்வோமே! விஜயன் வந்து வாக்களித்து, நாட்டைப் பிடித்து, குவேனிக்கு துரோகம் செய்த பிறகு மூன்று இராஜ்ஜங்கள் ஆயின. கடைசியாக மேலை நாட்டவர் படையெடுத்து, ஆக்கிரமிக்க முன்பு, அங்கே இருந்த மூன்று இராஜ்ஜங்கள் அவைதாம்.
யாழ்ப்பாணம் இராஜ்ஜியம், கண்டி இராஜ்ஜியம், கோட்டை இராஜ்ஜியம். கோட்டை இராஜ்ஜியம் விஜயன் / கூட்டத்தின் பிடியில் இருந்த இராஜ்ஜியம். அதுவே கொழும்பு இராஜ்ஜியம். இப்போது இராமர் எந்தப் பக்கத்தால் ஆள வந்தார் என்பது புரிந்திருக்கும். மன்னார் மணல் திட்டுக்களினூடு பாலம் அமைத்து வந்ததாக இராமாயணமே சொல்கிறது. எனின் சிங்களவரும் இலங்கையின் பூர்வ குடிகள் தான். ஆனால் ஆள வந்தான் செய்த வினைதான் இவை. மொழியும் மாறிப் போனதோ தெரியவில்லை. இது நெடும் பழங்காலக் கதை. ஆனால் ஒளவையார் என்னும் தமிழ்ப் புலவர் பிள்ளையார் பின்னணியில் இருப்பது குறிப்பிடத் தக்கது. அவர் அவ்வப்போது முருகனை வம்புக்கு இழுப்பதும் வழக்கம் என தமிழ்க் கதைகள் பலவும் உள்ளன.
அதிலும் யாழ்ப்பாண இராச்சியம் இராமன் வந்த பின்பு பறிக்கப்பட்டு, பிறகு கிருஷ்ணர் வழிகாட்டலில், யுதிஷ்டர் (ஈட்டி) தலைமையில் பாண்டவர் (முருகனின் 5 தலைகள் - ஆறாவது தலை வள்ளியாக இருக்குமோ?) தர்ம யுத்தம் நடத்தி, அவர்களுக்கு அந்த உரிமை உள்ள பங்கை, யாழ்ப்பாண இராச்சியத்தை வாங்கிக் கொடுத்தாக மகாபாரதம் சொல்கிறது. இடைக்காலத்தில் அங்கே ஆட்சி இல்லாது போய் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது, பாண்டவ ஆட்சியாளர்கள் கொண்டிருந்த பெயர் ஆரியச் சக்கரவர்த்திகள். நன்றாக கவனியுங்கள் யுத்தம் செய்தது பாண்டவர். வழி காட்டியது கிருஷ்ணர். எனின் இராமர் விஷ்ணுவின் அவதாரம் எனின் ஏன் அவர் உரிமை உள்ள பங்கைப் பறித்தார். இராமன் - கர்ணன் சூரியனின் அம்சம் என்றே சொல்லப்படுகிறது. அப்போது அவர்கள் கொண்டிருந்த தேவ அம்சமான பொன் நிறத் தோல் எனும் கவசம், குண்டலத்தைப் பறிக்க, தேவர்கள் (இந்திரன்) அந்தணர் - பிராமணர்கள் வேசம் இட்டு வந்ததாக மகாபாரதம் சொல்கிறது. அதனாலேயே முன்பு சிவனின் தேசமாக இருந்த தென்னாட்டின் மிகுதி இலங்கை, சிவனைக் கொண்டாடிய இலங்கை, பிறகு சைவத்தை, இந்து மதத்தை வெறுத்து பெளத்த மத்ததை தழுவிக் கொண்டிருக்கலாம்.
இதன்படி இலங்கையை ஆள வந்தவர்கள் நாகர்கள். இலங்கையின் பூர்வ குடிகள், காட்டில் வாழ்ந்த இயக்கர்கள். சீனர்கள் வரலாறு இயக்கர் மற்றும் நாகர் என்று இருந்தாலும், இதுவரை இலங்கை முழுவதும் (வட பாகத்திலும் - சேவல், தென் பாகத்திலும் - மயில்) நாகரின் ஆட்சியாகவே இருந்தது. இலங்கை ஒரு நாக நாடாகவே இருந்தது. இடையிடையே இயக்கரின் ஆட்சியும் தெற்கில் கை கூடியது. மேதகு மைத்திரி பால சிறிசேன மற்றும் தற்போது ஆட்சியில் இருக்கும் மேதகு அனுர குமார திசநாயக்க அவர்கள் இயக்கர் ஆவார்கள். கண்டி இராஜ்ஜியம் இறுதி வரை கூட இயக்கரின் தேசமகவே இருந்தது. ஆனால் அவர்கள் சிங்களம் என்ற மொழியால் ஒன்றிணைந்த பிறகு நிலைமை என்ன என்பது அவர்கள் மட்டுமே அறிவார்கள்! ஆனால், முருகன் பிள்ளையார் நெடுங்கால உறவு, முருகன் வள்ளியை திருமணம் செய்வதாக இருந்ததற்கு வரலாற்று ஆதாரமாக இன்னமும், கதிர்காமம், இலங்கையின் தெற்கில் இயக்கர் அதிகம் வாழும் பகுதியில் உள்ளது.
சிங்களர்களின் அறியாமை மற்றும் வரலாற்றின் உண்மை
இந்த ஒட்டுமொத்த வரலாற்றை அறிந்திராத, சிங்களவரின் புதிய தலைமுறைகள், அரசியல்வாதிகளின் இனவாத பொய் வதந்திகளை அரைகுறையாக நம்பிக் கொண்டு, மொத்த நாடும் தம்முடையதாக இருந்தது. தமிழர் மேற்கத்தேயர் வருகைக்கு சில நூற்றாண்டுகளுக்கு தமிழர்கள் குடி புகுந்திருக்க வேண்டும் என்கிறார்கள். இராமரின் நீண்ட கால அடக்குமுறை ஆட்சிக்குப் பிறகு உங்கள் பூர்வீக மொழி என்ன என்பதையே நீங்கள் மறந்து விட்டீர்கள். வடக்கில் என்ன நிலவரம் இருந்தது என்பதை அறிய அன்று கணினியும் இணையமுமா இருந்தது. அதைக் குறித்து வைக்கக் கூட நம்மிடம் வரலாற்று ஆர்வலர்கள் இருந்திருக்கவில்லை. அவர்கள் அதனை அறிந்து கொள்ள ஆதார நூல்களும் அவர்கள் தரப்பில் அல்லது அவர்கள் மொழியில் இருந்திருக்கவில்லை. நான் தமிழர்களுக்காக வாதாடவில்லை. சத்தியத்தை உரைக்க வந்தேன். நீங்கள் அந்த தேசத்தை கொடுங்கள் அல்லது கொடுக்காமல் போங்கள். ஆனால் இதுதான் சத்தியம் என்பதை உணருங்கள். இதனை ஏற்றுக் கொள்ளுங்கள். எனக்கு அதுவே போதும். எனக்கு அதுவே மிகப்பெரிய மகிழ்ச்சி. உங்கள் அறியாமை அழிந்தது என்பதே மகிழ்ச்சி அளிக்கும்.
பூமியின் ஆன்மீக பாரம்பரியம் மற்றும் தொன்மை வரலாறு
அப்பன், சிவனைப் போல மகன், முருகனுக்கும் இரண்டு மனைவிகள் என்று நக்கல் செய்பவர்கள் இதனை சற்று பாருங்கள்.
பிரளத்துக்கு முதல்...
இராமாயண காலத்துக்கு முதல்...
இந்துப் புராண வரலாற்றில் சொல்லப்பட்டதன்படி...
வடமொழியிலேயே மகாபாரத இதிகாசத்தில் பாத்திரங்கள் மூலம் கூறப்பட்ட #பாரதத்தின் வரலாற்றின்படி...
யார் இந்த முருகன் என்றால், தமிழர் தான்.
தமிழர்களின் பரமாத்மா - பரம்பரை ஆத்மா - spiritual பாத்திரம், முருகன்.
பாரதப் போரில், கண்ணன் தலைமையில் யுதிஷ்தர் - பாண்டவர் வென்ற இடம்;
இந்திரப் பிரஸ்தம் - தேவ இந்திர பிரதேசம் அஸ்தமிக்கும் எல்லை - யாழ்ப்பாண இராஜ்ஜியம். இது பிரளயத்திற்கு (Deluge) பிந்திய கதை!
இப்போது, தெலு(ங்)கு எங்கே இருந்து வந்தது என்பதை நாமறியலாம். அவர்கள் பிரளயத்திலிருந்து தப்பித்து வடக்கிற்கு குடிபெயர்ந்து இருக்கலாம். இதே நேரத்தில் மற்றொரு குழு, சோமாலியா பிளேட்டுடன் ஆபிரிக்காவிற்கு நகர்ந்திருக்கலாம்.
To read in English:
https://mrkeethan.blogspot.com/2024/12/the-evolution-of-communities-in-kumari.html












No comments:
Post a Comment