![]() |
| Thanks: lianedavey.com |
- அச் செயல்பாடுகளை பிறருக்கு வழமையாகச் செய்வோர்.
- அச் செயல்பாடுகளால் வழமையாகத் துன்புறுபவர்கள்.
ஒருவர் உங்களை எரிச்சலூட்டும் வகையில் ஏதாவது செய்யின் அதனைச் சகித்துக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும். உங்களது கடமைகளை செய்வதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உண்மையில் அந்த நோக்கத்தில் அவர் செய்திருந்தால் உங்களிடம் இருந்து எரிச்சலூட்டும் செயல்பாடு ஒன்றை அவர் எதிர்பார்ப்பார். நீங்கள் அமைதிகொள்வதால் ஒவ்வொரு முறையும் எதிர்பார்த்து களைத்துப் போய்விடுவார். ஒருநிலையில் அவர், மனநிலை பாதிக்கப்பட்டு நீங்கள் செய்யும் சாதாரண செயல்பாடுகளை தனக்கு எரிச்சலூட்டச் செய்யும் பதில் செயற்பாடுகளாக அவர் எடுத்துக் கொள்வார். இதனால் ஒவ்வொரு முறை அவர் உங்களுக்கு எரிச்சலுட்டும்போதும் உங்களது ஒவ்வொரு வழமையான செயல்பாடுகளைப் பார்த்துக் குழம்புவார்; துன்பமடைவார்; மனநிலை மேலும் பாதிக்கப்படுவார். நீங்கள் எந்த எதிர்வினையும் ஆற்றாமலேயே, பாவம் எதுவும் ஈட்டாமலேயே உங்கள் கணக்கு முடிந்தது.
பலவீனமானவர்கள்தான் இது போன்ற காரியங்கள் செய்து தங்களை பலவான்கள்போல காட்டிக் கொள்ள முயல்வர். எப்படியாயினும் நீங்கள் உங்கள் நிலையிலிருந்து தளர்ந்து, அவர்களின் கீழ்மை நிலைக்குச் சென்றுவிடக் கூடாது. ஆனால், ஒருமுறை நீங்கள் அவ்வாறு செய்பவருக்கு அதன் தன்மையை எடுத்துரைக்க வேண்டியது உங்கள் கடமை ஆகும். அதற்கு மேலே அவர் அல்லலுறட்டும். தன் கர்மாவால் தானே மாழட்டும். நமக்கென்ன!
உங்கள் கடமையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வெறுமனே கைகளால் வேலை செய்யாமல் முழுமனதாக வேலை செய்ய வேண்டும். அப்போதுதான் செய்யும் கருமங்கள் செவ்வணே அமையும். நீங்கள் உங்கள் கடமைகளைச் செய்யும்போது அவற்றை, பிறர் தவறாக நினைப்பார்கள் என்று பலவாறு குழம்பி நிற்கக் கூடாது. அவ்வாறு குழப்பம் கொள்ளின் உங்கள் கடமையைக் கூட உங்களால் சரிவரச் செய்ய முடியாமல் போய்விடும். எந்த சூழ்நிலையிலும் உங்களது வேலைகளை தயக்கமேதுமின்றி செய்து பழக வேண்டும். இயன்றவரை அவை பிறரைப் பாதிக்காது என்று உறுதி செய்வது நல்லது. அவை பிறருக்கு இடையூறாக இருப்பின் அதனை உங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது அவர்தம் கடமையாகும். எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக இருக்க முயல வேண்டும்.
“நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது உன் நம்பிக்கையும் சக்தியும் கூடுகிறது; எதிரியின் சக்தி குறைவடைகிறது. நீ குழப்பமாக கவலையாக இருக்கும்போது உன் சக்தியும் நம்பிக்கையும் குறைகிறது; எதிரியின் சக்தி அதிகரிக்கிறது.”
ஒவ்வொருவரும் இவ்வாறு செயற்பட்டால் சமூகத்தில் குழப்பங்களின் ஊடுருவல் குறைந்து அமைதியும் மகிழ்ச்சியும் பெருகும். குழப்பமே நோக்கமாகி அதன் மூலம் நன்மை அடைய நினைக்கும் நாரதர்கள் சிலர் இருக்கும்வரையில் அது நடைமுறைச் சாத்தியம் குன்றியதுதான்.
”ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம் உயிரிலும் ஓம்பப்படும்.”

No comments:
Post a Comment