Tuesday, August 11, 2020

நீ நல்லவனா இல்லை கெட்டவனா?

எவரும் இங்கு பிறக்கும்போது முழுமையாக நல்லவராகவோ கெட்டவராகவோ பிறப்பது கிடையாது. அவரவர்களுக்கு ஏற்படும் சூழ்நிலைகள் அப்படி அவர்களை ஆக்கிவிடுகிறது. அதற்கு போதிய வழிகாட்டி இன்மை, வளரும் சூழல், போட்டி பொறாமைகள், சில மன உளைச்சல்கள், வறுமை போன்றன காரணமாக அமைகின்றன. இதைத் தவிர்க்க சில வழிகள் உள்ளன. எப்போதும் பொறுமையே நமக்கும் நம்மைச் சார்ந்தோருக்கும் அனைவருக்கும் நன்மை பயப்பது.

”தவளையும் தன் வாயால் கெடும்”
அவசரப்பட்டு வார்த்தைகளை வெளிவிடுதல் மிகவும் தீங்கானது.
கூறிய வார்த்தைகள் மற்றும் செய்த சபதங்களுக்காக வஞ்சனைகள் செய்வதுவும் ஒருவர் தீயவராக மாறுவதற்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. இது பல வேளைகளில் நண்பர்களையும் எதிரியாக்கிவிடுகிறது. இதனால் நண்பர்கள் தீய வழியில் செல்வதோடு அவர்களால் நமக்கி கிட்டவிருந்து உதவிகள் பலவும் தூரம் செல்கின்றன. அதனால்தான், எப்போதும் அமைதியாக இருத்தல் பல பிரச்சினைகளைத் தவிர்த்துவிடுகிறது. நாம் அன்பாக நடந்து கொள்ளாமல் அதை மற்றவரிடம் எதிர்பார்த்தல் சற்றும் முறையல்ல. ஒருவர் வறுமையில் இருக்கும்போது கை கொடுக்காமல் இருத்தல் அவரைத் தீய வழிப்படுத்தலாம்.

நாம் நமது வாயினால் தான் அநேக விடயங்களைக் கெடுத்து வைக்கிறோம். தீயவற்றை எல்லாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், நல்லனவற்றை மட்டும் வெளியே சொல்லுங்கள். அது உங்களுக்கும் நல்லது கேட்பவருக்கும் நல்லது. ஏனெனில் நீங்கள் சொல்வது நல்லன மட்டுமாயிற்றே! தீயவை உங்களுடன் முடங்கிக் கிடக்கும்; உங்களுடன் முடிவடையும். நல்லவை பெருகும்.

அநேகர் நல்லவர்களாக இருந்தாலும் ஏன் சிக்கல்கள் ஏற்படுகிறது?
1. ஏமாற்று வேலைகள் செய்யும் சில பேராசை பிடித்தவர்கள் தவறு செய்துவிட்டு பிறர் மீது சுமத்துதல்

2. இதனால் தவறு செய்யாத நிரபராதிகள் தண்டிக்கப்படுதல்.
தவறேதும் செய்யாது தண்டனை அனுபவிக்கும் வலி மிகவும் கொடியது. பொறுத்துக் கொள் தோழா! அதனால் கிடைக்கும் ஞானமும் அளப்பரியது. அதன் பின்னே உன்னை வெல்ல இங்கே யாரும் கிடையாது. சிரித்துக் கொண்டே இரு. அதுவும் பழகிடும்.

3. அனைவரையும் ஒரே மாதிரி எடைபோடுதல்.
ஒருவர் தவறு செய்யும்போது எல்லோரையும் கெட்டவர்கள் என நினைத்து விலகிச் செல்லுதல். அனைவரையும் சந்தேகித்து அவசரத்தில் எதிர்வினை ஆற்றுதல்.  பிறகு உண்மையை உணரும் போது யாவும் கடந்து போய்விடுகிறது. நெருப்பு தூய்மையானது. ஆனால் தொட்டால் எரித்துவிடும்.

4. பொறுப்புகள் என்றவுடன் ஓடி ஒழிவது; உரிமைகள் என்றவுடன் தூக்கிக் கொண்டு வருவதல்.
எல்லோரும் தமக்கு நிகழ்வதே அதிகூடிய துன்பம் / வலி என்று நினைத்துக் கொள்கின்றனர். ஒவ்வொருவரும் தானே அதிகமான பங்கு கடமைகளை நிறைவேற்றி விட்டதாக நினைத்துக் கொள்கின்றனர். அதனால் தமக்குத்தான் அங்கிகாரம் அளிக்க வேண்டும்; பதவி வழங்க வேண்டும் என்று கோருகின்றனர். எல்லோரும் அவ்வாறே வாதிட்டால் உண்மை என்ன? வலியின் எந்த எல்லை வரை நீங்கள் சென்று கடமை புரிந்தாலும் அதுவே உச்சம் போல தோன்றும். ஆனால் அது மாயை. “கடமையைச் செய். பலனை எதிர் பாராதே என்பர்”. இக்காலத்தில் முட்டாளாக வாழ அதுவே சிறந்த வழி. ஆனால் சமூகம் சுமூகமாக இருக்கும்.

போன்றனவே சமூகத்தில் பல குழப்பங்களை ஏற்படுத்துகின்றன.

கோபம் இயலாமையின் வெளிப்பாடு ஆகும். ”ஆத்திரக்காரனுக்குப் புத்தி மத்திமம்” என்பதால் கோபத்தில் நாம் எடுக்கும் முடிவுகள் யாவும் யாவர்க்கும் மீட்க முடியாத நட்டத்தினையே பெற்றுத் தரும்.

இறைவன் இருக்க ஏன் நன்மை தீமை இரண்டும் இருக்கின்றன? அநியாயங்கள் நிகழ்கின்றன?
இதற்கான பதிலை கீதையிலே கிருஷ்ணர் சொல்கிறார். நன்மை, தீமை யாவும் மனித அறத்துடன் தொடர்புடையவை. உண்மையில் அப்படி எதுவும் இல. மனித அறத்தில் நான் தலையிடுவதில்லை. நான் அனைத்திற்கும் சாட்சி பூதமாகவே இருக்கின்றேன். நான் சாட்சியாக இருப்பதை உணர்ந்து கொண்டவர்கள் தவறுகளையோ தீவினைகளையோ ஆற்ற மாட்டார்கள்.
இதுவும் உண்மை, இருள் என்று ஒன்று உள்ளபடியால்தான் ஒளியின் தேவை இருக்கிறது.

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...