ஆரோக்கியமான உணவு சமைத்தலுக்கு சில மசாலாப் பொருட்கள் சேர்க்கப்பட வேண்டியது அவசியம். அவற்றுள் மிளகும் ஒன்று. ஆனால் இன்று உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகள் எதிலும் மிளகு சேர்க்கப்படுவது இல்லை. மிளகானது ரசம், சாம்பார், புளிக்குழம்பு போன்ற உணவுகளில் சேர்க்கப்படுகிறது. மாசாலாப் பொருட்களின் பயன்பாட்டில் மிளகு 50% பங்கு வகிக்கிறது. பண்டைய காலத்தில் மிளகின் பெறுமதி காரணமாக அது பணத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டிருகிறது.
இதில் சாதாரண மிளகு, வால் மிளகு என இரு வகைகள் உண்டு. சாதாரண மிளகுதான் அதிகம் பயன்பாட்டில் உள்ளது. பதப்படுத்தப்பட்ட தன்மையின் அடிப்படையில் கரு மிளகு, வெண் மிளகு, சிவப்பு மிளகு, பச்சை மிளகு என மேலும் வகை பிரிப்பர். விசங்களை முறிப்பதற்கு மிளகு பயன்படும். தேள், திருநீலகண்டம், சில வகையான பாம்புகளின் விசத்தைக்கூட மிளகு முறிக்கும் தன்மை கொண்டது.
”பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.” என்பது பழமொழி. உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை நீக்கி உடலுக்குக் குளிர்மை அளிப்பதில் மிளகுக்கு நிகர் எதுவுமில்லை. மிளகு உணவிற்குக் காரம் சேர்க்கும் வாசனைப் பொருளாகச் சேர்க்கப்படுகிறது. ஆனால் அதன் நோக்கம் அது மட்டுமல்ல. மிளகைச் சாப்பிடும் போது அது நாக்கில் உறைக்கவில்லை எனில் உங்கள் உடலில் நச்சுத்தன்மை உண்டு என்றே பொருள். நச்சுத்தன்மையை மட்டுமல்ல உடலிலுள்ள கிருமிகளையும் அழிப்பதோடு தொற்றுநோய்கள் ஏற்படுவதையும் தடுக்கும்.
உட்கொள்ளும் முறை: குறைந்தது கிழமைக்குப் 10 மிளகு மென்று தண்ணீர் குடித்தாலே, கீழே கூறப்பட்ட நோய்களிலிருந்து விடுபட்டு அரோகியமாக வாழலாம். இல்லையெனில் அன்றாடம் சமையலில் சேர்த்தும் கொள்ளலாம். உணவகங்களில் கிடைக்கும் கிழங்கு ரொட்டிகளிலும் காரத்திற்காக இது சேர்க்கபட்டிருப்பதை அவதானிக்க முடியும்.
அவதானம்: அதிக வெப்பமான காலத்தில் இதைப் பாவிப்பதைத் தவிர்க்க வேண்டும். சிறுகுழந்தைகள், வயிற்றுப்புண் உள்ளவர்களும் இதைப் பாவிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
1. வாய்வுக் கோளாறு
இன்று கடையுணவுகள் எதிலும் மிளகு சேர்க்கப்படாமையால் வாய்வுக் கோளாறு என்பது நகரப்புறத்தில் மலிந்து காணப்படுகிறது. இது காலப்போக்கில் குடற்புண், மூட்டு வலி, நெஞ்செரிவு போன்ற மேலும் பல நோய்களைத் துணைக்கு வரவளைக்கிறது. மிளகை அடிக்கடி உண்டு வருபவர்களுக்கு வாயு கோளாறுகள் நீங்கும்.
2. சளி இருமல்
சாதாரண நெஞ்சுச்சளி ஜலதோஷம், நுரையீரல் உட்பட ஆஸ்துமாவைக் கூடக் குணப்படுத்தும் ஆற்றல் மிளகிற்கு உண்டு. அதோடு செரிமானக் கோளாறுகளை மிளகு சரி செய்வதால் அது போன்ற நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது.
மிளகைத் தூளாக்கி, தேன்/ பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டைக்கட்டு, குரல் அடைப்பு மற்றும் இருமல் நிற்கும். 10 துளசி இலைகள், 5 மிளகை 200 ml தண்ணீரில் கொதிக்க வைத்துக் குடித்து வந்தால் நெஞ்சுச் சளி நீங்கும்.
3. புற்று நோய்
இன்றைய அவசர உலகில் உடலுக்கு ஆரோக்கியமில்லாத உடன் உணவுகளைச் சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படும் நிகழ்தகவு அதிகரிக்கிறது. மிளகிற்கு புற்றுநோய் ஏற்படுவதைத் தடுத்து அதைக் குணப்படுத்தும் ஆற்றல் உண்டு.
4. இரத்த அழுத்தம்
இப்போதெல்லாம் குறித்த வயதைக் கடந்தவுடனேயே அநேகருக்கு இரத்த அழுத்தம் வந்து தொற்றிக் கொள்கிறது. மிளகு ரத்த அழுத்தத்தை சீராகப் பேண உதவுகிறது.
5. பல் நோய்கள்
பற்களை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் பேணுவதற்கு மிளகு பயன்படும். மிளகு பற்களில் ஏற்படும் கிருமித் தொற்றுக்களை நீக்கி ஈறுகளின் ஏற்படும் பல்சொத்தையைப் போக்குகிறது.
பல்வலி, சொத்தைப்பல், ஈறுகளில் ரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் மிளகுத்தூளும் உப்புத்தூளும் சேர்த்துப் பல் துலக்கி வந்தால் அனைத்தும் குணமாகும்.
6. மலட்டுத்தன்மை
மிளகு உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை நீக்கி உடலினைக் குளிர்மையாகப் பேணுவதால் விதைப்பையில் அதிக விந்தணுக்கள் தக்க வைக்க உதவுகிறது. இவ்வாறு அது மலட்டுத் தன்மையை நீக்க வல்லது.
7. தோல் நோய்கள்
இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் ஆற்றல் மிளகிற்கு உண்டு. எனவே இது தோலில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி இளமையைத் தர வல்லது. தோலில் ஏற்படும் நிறமாற்றங்களையும் குணப்படுத்த மிளகு பயன்படும்.
8. பொடுகு
பொடுகு என்பதும் தோல் நோய்களுள் ஒன்றே. உடல் சூட்டினாலும் கிருமித் தொற்றினாலுமே பொடுகு ஏற்படுகிறது. மிளகின் நற்குணங்கள் இதனையும் குணப்படுத்த உதவும்.
9. போதை பழக்கம்


No comments:
Post a Comment