Saturday, June 20, 2020

இறைவன் படைப்பில் ஏற்றத்தாழ்வுகள். நீ கொண்டு வந்ததென்ன? நீ கொண்டு போவதென்ன?

ஏழை, பணக்காரன், உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி, இனம், மதம் என நாம் வகுத்த பிரிவுகளுக்கு மேலே இறைவன் வகுத்த பிரிவுகள் மிகவும் விநோதமானவை; நியாயமற்றவை. மிருகங்கள், பறவைகள், ஊர்வன, ஈரூடகவாழிகள், கடல்வாழிகள், நுண்ணங்கிகள் எனப் பல வகையான படைப்புகள் இறைவனுடையவை. அவற்றில் மனிதன் மட்டும் சற்று அறிவுள்ள மிருகமாகக் கூர்ப்பு அடைந்துவிட்டதாக சாள்ஸ் டார்வின் சொல்கிறார். ஆனால், அவற்றிலும் இறைவன் வைத்த வேறுபாடுகள் கொஞ்சமல்ல. கறுப்பு, வெள்ளை, உயரம், குட்டை, பருமன், மெலிவு, அறிவு, முட்டாள் என இன்னும் பல. இவற்றில் குறைகளைத் தாங்கிப் பிறப்பவர்கள் எந்தத் தவறும் செய்யாமல் அதற்காகச் சபிக்கப்பட்டவர்கள் ஆகிறார்கள். இறைவன் கொடுத்த குறைகள் எல்லாம் குறைகள் அல்ல. மனிதர் மனமே குறைகள் உடையது.

அந்நாளிலும் கடவுள், தேவர், அசுரர் என்று பிரிப்புக்கள் இருந்ததாகப் புராணங்கள் சொல்கின்றன. அப்போது தேவர்கள் புத்திசாலிகளாகவும் அதேவேளை நல்லவர்களாகவும் இருந்தார்கள். அவர்களிற்கு அனைத்தும் கிட்டியதனால் அவர்கள் நல்லவர்களாக இருந்திருக்கக் கூடும். அவர்கள் தமது புத்தி கூர்மை கொண்டு பல சாதனைகளும் சக்திகளும் படைத்திருந்தார்களாம். ஆனால், அசுரர்களோ முரட்டுப் பலம் பொருந்திய முட்டாள்களாக இருந்தனராம். அதோடு கெட்டவர்களாக இருந்தார்கள். அது அவர்களுக்கு எதுவும் கிடைக்கப் பெறாமையின் விளைவாக இருக்கலாம். ஆனால், அவர்களிலும் சிலர் முத்துக்கள் போல அறிவாளிகளாக இருந்து வந்துள்ளனர். ஆனாலும், அவர்களிலும் அனேகர் சேர்க்கை சரியின்மையினால் கெட்டவர்களாகவே இருந்தனர். அவர்கள் தமது அறிவு கொண்டு பல சாதனை புரிந்து, நெடுந்தவம் புரிந்து சக்தி பல படைத்து மக்களையும் தேவர்களையும் துன்புறுத்தினார்களாம். அது அவர்களின் இந்தப் பாகுபாடுடைய கடவுள் மீதான வெறுப்பின் நிமித்தமாக இருக்கலாம். அத்தனையும் அருமையான ஒப்புமை. அன்றும் மாறவில்லை. இன்றும் மாறவில்லை. தேவர்கள் அழகும் தேஜஸும் நிறைந்தவர்கள். அசுரர்கள் அழகற்ற அருவருப்பான இருள்சூழத் தோற்றமளிப்பவர்கள். இவை வெறும் தோற்றங்கள்தான் உண்மை நிலை முற்றிலும் மாறாக இருந்ததாகப் பல புராணக் கதைகள் உண்டு.

நாம் வெறுமனே சற்றுப் பருமனான பெண்ணை, குண்டம்மா என்று வெகுவில் சொல்லிவிட்டுப் போகிறோம். நிச்சயமாக நான் அல்ல மக்களே. ஊர் சொல்ல நான் பலமுறை கேட்டிருக்கிறேன். குள்ளமானவரைக் கட்டையன் என்கிறோம். என்னையே பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். கறுப்பானவர்களை கரியன் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். உண்மையில் அவர்கள் எந்தப் பாவமும் செய்யவில்லை. ஆனால், இறைவன் அளித்த தண்டனைகள் இவை. இவை எப்படித் தர்மமாக இருக்கும். இன்னும் சில வேளைகளின் கறுப்பான பிள்ளை பிறந்தால் கரிகரன், கண்ணன் என்று பெற்றோர் பெயரும் சூட்டிவிடுகின்றனர். தன் முக்கத்தைக் கண்ணாடியில் பார்க்கும்போது மட்டும் இதனை உணரும் அப்பிள்ளை இப்போது ஒவ்வொரு அழைபிலும் இதனை உணரும். இவை மட்டுமல்ல இன்னும் உண்டு. பிறப்பிலேயே புத்திகூர்மை சற்று தங்கியுண்டு என்பது விஞ்ஞானிகளே ஒப்புக் கொண்ட விடயம்.

என்னுடைய நண்பன் ஒருவன் தான் ஒரு கூர்ப்பு சம்பந்தமான நூலில் கற்றதைக் கூறினான். நாம் இப்போது மனிதர்களாகப் பார்க்கும் மனிதர்களை "கோமோ சப்பியன் சப்பியன்" என்பர். ஆனால், இப்போதும் முழுமையாகக் குரங்கிலிருந்து முழுமையாகப் பரிணாம வளர்ச்சியடையாத மனிதர்கள் சாதரண மனிதர்களோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனராம். இதை நான் என் அம்மாவிடம் கூறியபோது, அம்மா சொன்னார். "இப்போது எல்லோரும் குரங்குப் புத்தியுடன் தானே இருக்கிறார்கள்; பிறகு என்ன." இது அது அல்ல மக்களே! இது நுண்ணறிவு இயற்கையில் குறைந்த தன்மை ஆகும். அவர்களின் சிந்தனை மட்டுப்படுத்தப்பட்டது.

இதனை அவர்கள் வேண்டும் என்றே கூறவில்லை. நான் என் அன்னையை நன்கு அறிவேன். அவர் தனக்கென எதுவும் கொள்ளாது எந்த வஞ்சமும் இன்றி தனது பிள்ளைகளுக்காகப் பாடுபடுபவர். அவர் யாருடய மனதும் புண்பட வேண்டும் என்ற நோக்கத்தில் நடந்து கொள்பவரல்ல. அவர்களின் ஞானத்திற்கு அது எட்டவில்லை, அவ்வளவுதான். சில விடயங்களை எல்லோருக்கும் கூறிப் புரிய வைத்துவிட முடியாது. அதற்கு அவர்கள் அதற்கான ஞானம் படைத்திருக்க வேண்டும். ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தால் அங்கே அவர்களுக்கு அதற்கான ஞானம் போதாமல் இருப்பதை அறிந்து கொள்ளலாம். எனக்கு அறியாமல் பிழை செய்பவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும். அவர்களுக்கு அந்த ஞானத்தை எப்படியாவது புகட்டிவிட வேண்டும் போல இருக்கும். பலமுறை முயற்சி செய்து தோல்வியுற்றிருக்கிறேன். ஆனால், அதற்கான ஞானம் படைத்திருந்தும் அத்தனை உண்மையும் தெரிந்திருந்தும் தவறு செய்பவர்களை என்ன செய்வது? அவர்களை மன்னிக்கவே முடியாது.

ஏன் இது பற்றி வெளிப்படையாகப் பேசப்படுவது இல்லை? சிலர், அது பிறர் மனதைப் புண்படுத்தும் எனக் கருதுகின்றனர். இன்னும் ஒரு காரணமும் உண்டு. பாதிக்கப்பட்டவர்கள், இவை வெளிப்படையாகப் பேசப்படுதல் தமது மதிப்பைக் குறைத்துவிடும் என நினைக்கின்றார்கள். பாதிக்கப்படாதவர்கள், வெளிப்படையாகப் பேசப்பட்டால் தம்மிடம் நஷ்ட ஈடு ஏதாவது கேட்டு விடுவார்களோ என்று அஞ்சி நசுக்கிடாமல் இருந்துவிடுகின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல. பிரச்சினைகளை ஒப்புக் கொள்ளாமல் ஒருபோதும் தீர்வுகளை எட்டிவிட முடியாது.

சிலரின் கருத்து, அதிகமாக உண்டு கழிப்புற்றவரே உடற்படுமன் அடைவர், அது அவர்கள் பிழை என்பதாகும்.  எதிலும் விதிவிலக்குகள் இருப்பது தவிர்க்க முடியாத ஒன்று. உடலின் வடிவம், வளர்ச்சி நமது உடலில் ஏற்படும் ஹார்மோன் ஓட்டங்களிலேயே தங்கி உண்டு. இவற்றை இயற்கையாக நமது ஜீன்கள் (பரம்பரை அலகுகள்)  தான் தீர்மானிக்கிறது. ஆனால், அவற்றை மாற்ற மனிதனில் மதியினால் முடியுமாயிருந்த பல சரித்திரங்கள் உண்டு. அவற்றில் சில மெஞ்ஞான சக்கரம் சார் யோகங்கள் மற்றும் வர்மக்கலைகள் ஆகும். இவை ஜீன்கள் மூலம் கடத்தப்பட்டாலும் இவற்றில் சிலவற்றை நமது சந்ததிக்கு தொடராமல் மாற்றிக்கொள்ள முடியும். உதாரணமாக, உடற்பருமன், புத்திகூர்மை, உயரமின்மை போன்றவற்றை மாற்ற யோகம் மற்றும் சில மன, உடற்பயிற்சிகள் பயன்படும். இது பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளேன். ”குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான். எனில் இன்னமும் குரங்குகள் எப்படி எஞ்சியிருக்கின்றன?” இதனையும் வாசித்துத் தெரிந்து கொள்க.

இறைவன் அனைவருக்கும் சரிசமமாகக் கொடுக்கவில்லை. இதை அனைவரும் புரிந்துகொண்டு அவர்கள் மனம் நோகாமல் நடந்துகொள்ள வேண்டும். இது போன்ற இன்னொரு சுவாரசியமான கதையோடு இன்னொரு பதிவில் சந்திப்போம்.

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...