Friday, September 20, 2024

கருத்தமிழ் முருகன், கதிர்வேலன் குகன், வில்லாளன் விஜயன், கர்ணன் இராமன்

வர்ணம் என்பது மனித சமுதாயத்தில் மிக முக்கியமான ஒன்று. அதற்கு சாதி என்றும் ஒரு பொருள் உண்டு. நிறத்தையே தேவ, அசுர அடையாளமாக கொண்டிருந்து இருக்கிறார்கள். வெள்ளை கருப்பு. இது உலகம் முழுவதும் செய்த அட்டகாசங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. அதற்காக யுத்தங்களில் பல இரத்த ஆறே ஓடி இருக்கிறது.

இலங்கையில் தேங்கிய அசுர பரம்பரைகளை (Gene) களைச் சுத்தம் செய்த #தேவ குடிகள் இருவர். முருகன் மற்றும் இராமன். முருகன் பாக்கு நீரிணை இனூடாகவும், இராமன் தனுஷ்கோடி தலைமன்னார் இனூடாகவும் வந்து, தமது ஞானத்தின் மூலம், அசுர குணங்களை தாமதமடைய வைத்தார்கள்.
இவர்களில் யார் முதல் வந்தார் என்பது போக, இது சில ஆயிரம் ஆண்டுகள் பழைய வரலாறு. முருகன் சிவனின் நேரடி மகன் என்றே குறிப்பு உண்டு; தேவன் என்று குறிப்பு இல்லை. இராமன் சூரிய குலம் என்பதால், சூரியன் மகன், அவரும் சிவனின் நேரடி மகன் என்றே கொள்ள முடியும்.

தமிழ் கருப்பானது எப்படி? முருகன் கருப்பானது எப்படி? ஆபிரிக்காவில் முருக வழிபாடு?
கருமை நிற வள்ளி குலத்தை ஏற்றுக் கொண்டது முருக குடி / பரம்பரை மட்டும்தான். ஆனால் முருகன் என்றால் தமிழ் என்று மட்டும் சொல்ல வேண்டியது இல்லை. மறைபொருளில் சொன்னால், “சிவனை எதிர்த்து வள்ளியை மணந்த முருகன்”. அதாலேயே அழிந்தும் போனான். சிவனை மூல வேராக கொண்ட பரம்பரைகள், இந்தியாவில் தென்னாடு எங்கும் உண்டு. பேசும் மொழிகள் வேறு வேறு. அதோடு தேவ அசுர வேறுபாடு இன்றி அருளுவதால் சிவனும் நடுனிலையானவன்.

கறுப்பு என்ற பெயரில் ஒரு வர்ணம் / ஒரு குலமே இருந்திருக்கிறது. அதுதான் இரா வ(ண்)ணன் குலம். ஆம், தச.ரதன் மகன் என்பதால் இராமனுக்கும் இராவணனுக்கு 10 தலைகள் போலவே கருதலாம். அங்கே நிறம் மட்டுமே வேறுபாடு ஆகும். இராமன் என்றாலே, இரா அற்றவன் - ஒளி பொருந்தியவன் என்றே பொருள்.

வால்மீகி இராமாயணத்தில், இராமனின் நிறம் கதிரவம் அல்லது தங்க நிறமாகக் கூறப்படுகிறது. தமிழ் கவி கம்பர் எழுதிய கம்பராமாயணத்தில், இராமனின் நிறம் நீல நிறமாகக் கூறப்படுகிறது. தமிழுக்கு வரும்போது இராமர் கருநீல நிறமாகி விடுகிறார். இந்தப் போலிகள் எல்லாம், அரக்கர் (கறுப்பு நிறத்த்தவர்) வாழும் தேசங்களையும், தமிழ் இராஜ்ஜியம் களை மக்கள் ஆதரவுடன் உடன் தாமே ஆழவே பரப்பட்டிருக்கின்றன.

சித்தாந்தம், ஜீவாத்மாக்களாகிய விஷ்ணு நீல நிறம் என்றும் சிவன் சிவப்பு நிறம் என்றும் சொல்கிறது. அவர்கள் பூமியில் அவதரித்தவர்கள் அல்ல. அவரகள் "பரம்பொருள்கள்" , மறை #பொருள்கள். அவ்வளவுதான். காரணம் விஷ்ணு ஆக்சிசன் - அது இயல்பாக நீல நிறம். சிவன் காபனீர் ஒட்சைட்டு - வெளிச் சுவாசத்தில் சூடாக இருப்பதால், அது சிவப்பு என்றும் சித்தாந்தம் சொல்கிறது.

இங்கே விஷ்ணு நீல நிறம் என்பதைக் கொண்டு அவரது அவதாரமாகிய, பரமாத்மாக்கள் (குலம் காக்கும் பரம்பரை ஆத்மாக்கள்), கண்ணன் கறுப்பு நிறம், இராமன் நீல நிறம் என்று, இடைக்காலத்தில் பொய்யை சேர்த்து இருக்கிறார்கள். அது  அவர்களின் ஆதரவுடன் ஆட்சி செய்யவே ஆகும்.

ஆனால் தேவர்கள் கறுப்பை, அரக்கர் என்று கூறி, வஞ்சித்து ஒதுக்கியதை, இப்போது தெளிவாக அறிய முடியும். அவர்கள் தாம் தேவ்.இந்திரன், கண்ணன், இராமன் என்று தான் கருதியுள்ளனர். இந்திரன் மகள் தெய்வனையை மணந்தாலும் தேவரை மதிக்காமல் வள்ளியை திருமணம் செய்து கொண்டவன் முருகன். இங்கே புராணத்தில் வரும் பாத்திரங்கள் எல்லாம் உருவக பாத்திரங்கள் ஆகும்.

முருகன் ஈட்டி - வேல் ஏந்திய தமிழ் குலம், பரமாத்மா.
குகன் ஈட்டி ஏந்திய வேடுவ குலம், பரமாத்மா.
இராமன் வில் ஏந்திய தேவ குலம், பரமாத்மா.

ஜீவத்மாவாகிய சிவன், விஷ்ணு
சிவன் - உயிர் - பசு - நந்.தீ
விஷ்ணு - பிராணன் - வாயு மண்டலம்
ஹரியும் ஹரனும் ஒன்று!

முருகன் வள்ளி என்னும் இரண்டாவது ஒருத்தியை மணம் முடித்ததாக சொல்லி, இராமன் ஏகபத்தினி விரதன் என்று குணத்தால் மேலோங்கினான். இராமனை ஒரு நபர் என்று நினைப்பது இந்த குழப்பத்தின் காரணம் ஆகும். அது ஒரு கூட்டம், அம்பு வில் கையாளும் விஜயன் பரம்பரை என்பதை அறியும்போது உண்மை விளங்கும். ஏகபத்தினி விரதன் என்று சொல்லி ஏமாற்றி விட்டார்கள். அவன் வெள்ளை நிறத்தை மட்டுமே ஏற்றுக் கொண்டான். தேவர் மட்டுமே அவன் பரம்பரையில் அனுமதிக்கப் பட்டனர். அதிலும் 10 பரம்பரைகள் உள்ளடக்கம்.

தச.ரத்தன்
ஏக.பத்து.நி'வி.ரத்தன்
நிற வித்தியாசம் ஒன்றே பொருள் ஆகும். #நிவின் போலி

மகாபாரதத்தில் சில இடங்களில் இராமனின் கதை குறிப்பு அளவில் வருகிறது. *தர்மருக்கும் இராமனுக்கும் ஒப்பீடு*: பாண்டவரின் மூத்தவர் தர்மரின் அரசாட்சியையும், அவரது நீதித்தன்மையையும் சில இடங்களில் இராமனின் நல்லாட்சிக்குச் சமமாகக் காட்டுகின்றனர். நால்லாட்சியா! ஆனால் இப்போது இராமர் குணம் மாறி விட்டதே! இராவணனுடன் சேர்ந்து மாறிவிட்டதோ! முழு நாடும் தன்னுடையது என்று எல்லோ சொல்கிறார். எத்தனை மேடைகளில் முழங்குகிறார்கள்.

மகாபாரத கதாபாத்திரங்களும் உருவகங்களே, அவை ஒரு பரம்பரையின் வேர்களை, அவற்றின் பரமாத்மாக்களை குறித்து நிற்கின்றன.
சந்திர வம்சம்
சந்தனு சத்தியவதி கங்கை
விசித்திர வீரியன்
திருத இராட்சசன் > துரியோதனன், துச்சலை (100 பேர்)
பாண்டு > பாண்டவர்

கற்ற பண்டிதர், நாகரீகம் அடைந்த குலங்களை பாண்டு என்றும், கல்லாத முரட்டு அசுர குணம் உடையவர்களை திருத ராட்சதன் என்றும் பாத்திரம் தந்திருக்கலாம். இவற்றை தந்தது தேவ பாசையான சமஸ்கிருதமே ஆகும்.

பாண்டவர் திருமணம் செய்தது பாஞ்சாலி. துருபதன் மகள். தென்னாடு துருவம் என்றால் துருபதன் சிவனின் இரத்தம் அல்லது பரம்பரை என்று கொள்ளலாம். சிவன் நெற்றிப் பொட்டில் இருக்கும் பசு என்னும் நன்.தீ என்னும் ஜீவாத்மா. சிவனின் பரம்பரையில் அனைவருக்கும் தொடர்பு உண்டு என்பதற்கு பாஞ்சாலி ஐவரின் மனைவியாக இருப்பது உதாரணம். ஐந்து தலை கொண்ட சிவனும் பஞ்சாட்சரமும் துருபதன் வைத்திருந்த பஞ்சரத்தினமும் சிவனின் குறியீடுகளாக கொள்ளலாம்.

தர்மர்
தலைப் பிள்ளை - ஆதிக்குடி
தமிழர்
ஈட்டி - வேல்
முருகன்
யுதிஷ்டர் - யுத்த நாட்டம்
தேவ சேனாதிபதி
கண்டம் கழுத்து
விசுக்தினி சக்கரம்
எமதர்மர் - சிவன் - பிள்ளை
தர்மன் பாண்டுவின் மூத்த மகன் என்று பாரதம் சொல்கின்றது. ஈட்டி ஆயுதம் - வேலை அப்படி குறிக்கிறார்கள். இவருக்கு யுத்திஷ்டர் என்ற பெயர், யுத்தத்தில் இஷ்டம் இருப்பதால் வந்திருக்கலாம். இவர் தேவர்களின் சேனாதிபதி என அறியப்படும் முருகக் கடவுள் ஆக இருக்கக்கூடும். நீதிக்கு சிறந்தவர் ஆதலால் தர்மர் என்று பெயர் உண்டு. எமன் சிவனின் அம்சம் ஆகையால், சிவனின் மகன் என்றும், சிவனின் இரத்தம் என்றும் கொள்ளலாம்.

கர்ணன் - ஊரறியாத தலைப்பிள்ளை
அர்ஜுனன் - இரண்டாம் பிள்ளை
தேவ குடி
Sankrit மருவி Hindi
அம்பு வில் - இராம வில்
அர்ஜுனன் - ஆரிய வம்சம்
தோள்கள்
அனாகத சக்கரம்
தேவ் இந்திரன் அம்சம் - தேவ பாசை

அர்ஜுனன் காத்தல் காத்து கடவுளாகிய விஷ்ணுவின் அம்சமான கண்ணனின் தங்கையான உத்தரையை  மணந்தான். நெஞ்சில் இருப்பவன் கண்ணன், அவள் தங்கையும் அங்கே தானே இருக்க வேண்டும். அதனால் அங்கே தேவ் இந்திரனின் மகனான அவனது பரம்பரைக்குள் கண்ணனின் இரத்தம் பாய்திருகிறது.

இங்கே கறுப்பு என்பதற்கு இடமே இல்லை. திராவிடத்தில் வைணவம் தலை எடுத்த போது, சில பொய்களைச் சொல்லியும் அவர்களின் அமிர்த இரகசியங்களை சொல்லியும், கறுப்பு நிறத்தவரையும் சேர்த்து இருக்கிறார்கள். எதை வளர்கிறோமோ அது தான் வளர்கிறது.
ஆனால் நியாயம் பேசும் தர்மர் அல்லது முருகர் குலத்தின் போக்கு வேறாக இருந்து இருக்கிறது. யாரையும் வஞ்சிப்பதை விரும்பாத, அவர்கள் சிவனை பகைத்து வள்ளியை ஏற்றுக் கொண்டார்கள். அதோடு சூரனையும் மாற்றி சேவலும் மயிலும் ஆக ஏற்றுக் கொண்டார்கள். அது அப்படி செய்யவில்லை. அப்படியே ஆகி விட்டது.

இராமாயணத்திலும் இதே விடயம் தான் குறிப்பிடப்பட்டு உள்ளது. வில்லாளன் விஜயன் - இராமர், தேவரை மட்டும் ஏற்றுக் கொண்டார். ஏகபத்து.நிவி.ரத்தன் ஆனார். சூர்ப்பனகை என்னும் கறுப்பு நிற அரக்க குல மூக்குடைத்தார்! #நிவின்.போலி #நிற வித்தியாசம்.
ஆனால் முருகனுக்கு இலங்கையில் இரு முகங்கள் இருந்துள்ளன. முருகன் வள்ளி என்னும் பொண்ணை தொட்டான்; கெட்டான்.

பீமன்
வயிறு
மணிபூரக சக்கரம்.
பீமனுக்கு இடும்பி இராட்சத என்று ஒரு மனைவியும் உண்டு.

நகுலன் சகாதேவன் குந்திக்கு பிறக்கவில்லை. மாத்திரையின் பிள்ளைகள், மாத்திரை அளவுடைய தலையில் இருக்கும் சக்கரங்கள்.
நெற்றியில் நகுலன்.
சகஸ்ரத்தில் சகாதேவன்

இப்படியே 5 பிள்லைகளும் 5 சூட்சும சக்கரங்கள் ஆகின்றன. இடையிலே கர்ணன் யார் இந்தக் கர்ணன். அவன் இடுப்பில் மூலாதாரமாக இருந்திருப்பான். இப்படியாக உலகிலும் உடலிலும் ஒரே pattern தொடர்கிறது. அதே தன்மையை கொண்டதாக அமைகிறது. எப்படி அவை (patterns) குலத்தில், தேகத்தில், புவியில், பிரபஞ்சத்தில் சரியாகப் பொருந்துகிறது என்பது விந்தை தான். “அண்டத்தில் இருப்பதைப் பிண்டத்தில் காண்பாய்!”

கர்ணன் - வில்லாளன் - விஜயன் குலம், அவனது துரியன் என்னும் அசுர குல சேர்க்கையால், 700 தோழர்கழுடன் நாடு கடத்தப்பட்டு இருக்கலாம். இந்த வரலாற்று சம்பவம் இலங்கையில், விஜயன் வருகை என்று தமிழ் முருக குடிகளாலும் (Jaffna Kingdom), இராமன் என்று வேடுவ குகன் குடிகளாலும் (Kandy Kingdom) அறியப்பட்டு இருக்கலாம். அதோடு  இராமன் சூரிய வம்சம் என்பதுவும், ”கர்ணன் சூரியனின் அம்சம்” என்ற கூற்றுடன் ஒத்துப் போகிறது. வேடுவர்கள் ஈட்டி மற்றும் அம்பை பயன்படுத்தும் வழக்கம் இருந்திருக்கிறது.
Kuhan, Kuhani
இங்கே குவேனியை ஏமாற்றி விஜயன் இலங்கை அரசைக் கைப்பற்றியதும் சரியாகப் பொருந்துகிறது.

அதனால் கண்டி வேடுவ குகன் குல அரசைக் கவிழ்த்து இராமர் கூட்டம் / விஜயன் கூட்டம் தமது ஆட்சியை நிறுவி இருகிறது. குகன் தனது ஓடம் கொண்டு, இராமன் நதியைக் கடக்க உதவியதாக சொல்வதால், அது தனுஷ்கோடி முதல் தலை மன்னார் வரை உள்ள சிறு கடலாக இருக்கலாம். ஒருவேளை இலங்கையில் இருந்த கொடிய அசுரர்களை அழிக்க குகன் குலம் உதவியும் செய்து இருக்கலாம். ஆனால் இராமன் கடவுள் அல்ல. கடவுளின் அவதாரமாக கருதப்பட்டார். அவர் அவரது பரம்பரையின் பரமாத்மா ஆவார்.

எனில் இராமர் வருகை அதை அடுத்து நடந்ததா? ஆனால் இராமாயணம் முதல் எழுதப்பட்ட சரித்திரம் ஆயிற்றே! இராமாயணம் மகாபாரதத்திற்கு முன்பே எழுதப்பட்டுள்ளது. மகாபாரதத்தில் இராமாயண பற்றிய சேர்க்கைகள் உண்டு.
ஆனால் இரண்டுமே இலங்கை இந்தியா இணைந்த பாரதத்தின்  மேலோட்டமான வரலாறுகள் ஆகும் (overall histories of Bharat). நேரடி வரலாற்றுக் குறிப்புக்கள் அல்ல. குறிப்பீட்டு முறை உருவகக் குறிப்புகள். அவற்றில் நேரம் காலம் குறிபிடப்பட்டு இருக்கவில்லை (No timeline). ஆனால், மனித குலங்களின் இடம்பெயர்வு, ஆக்கிரமிப்பு செயல்பாடுகள் அவற்றில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

இதன் அடிப்படையில் யாழ்ப்பாண இராச்சியம் (Jaffna Kingdom) இராமாயண காலம் தொட்டே இருந்திருக்க வேண்டும் என்பது தெரிய வருகிறது.
யாழ்ப்பாண இராச்சியம் (Jaffna Kingdom) - முருகன் குலம்
கண்டி இராச்சியம் (Kandy Kingdom) - குகன் குலம்
கோட்டை இராச்சியம் (Kotte Kingdom) - இராமன் இராவணன் குலம்

இப்போது,
யார் இந்தக் குவேனி (Kuhani)?
யார் இந்த வில்லாளன் விஜயன் மற்றும் 700 தோழர்கள்?
என்று புரிந்ததா?
உண்மை சாகாது நண்பா, பார்த்து...

இவற்றின் அடிப்படையின் என் கருத்துப்படி, யாழ்ப்பாண இராச்சியத்தின் (Jaffna Kingdom) இறுதி மன்னன், சங்கிலியன், கல்கி 1 எனக் கொள்ளலாம். ஆனால் விஷ்ணுதானே அதர்மம் தலைதூக்கும்போது, அகிலத்தை காக்க கல்கி அவதாரம் எடுத்து ரட்சிப்பேன் என்றார்! பிற மதங்களும் கூட இது போன்ற நம்பிக்கைகளைக் கொண்டுள்ளன. தவிர அனைத்து பரமாத்மாக்கள் அனைவரும் தனது பரம்பரை அழிய நேர்ந்தால் அதைக் காக்க கல்கி அவதாரம் எடுப்பார்களோ...?

இறவாமற் பிறவாமல் எனையாள் சற்குருவாகி
பிறவாகித் திறமான பெருவாழ்வைத் தருவாயே
குறமாதைப் புணர்வோனே! குகனே! சொற் குமரசா!
கறையானைக் கிளையோனே! கதிர்காமப் பெருமாளே!

>> கதிர் காம கடவுளை அருணகிரினாதர், குகன் என்றே அழைக்கிறார்.

முருகனுக்கு தெய்வானை, வள்ளிக்கு சித்தாந்தம் பிறிதொரு விளக்கம் சொல்கிறது. இந்த முரண்பாட்டின் காரணம், தர்மர் குலத்தை குறிக்க பயன்பட்ட பாத்திரம். ஆனால், முருகன் அக்குலத்தால் வணங்கப்பட்ட பரமாத்மா. பரமாத்மா என்பது, ஒரு பரம்பரையின் அடையாளமாக, வரலாறாக, அப்பரம்பரைக்கு வழிகாட்டும் குறியீட்டுச் சின்னமாக வடிவமைக்கப்படுவது ஆகும். அது குறித்து மற்றொரு பதிவில் பார்ப்போம்.
குகன் குலம், பிள்ளையார் குலமாக இருந்த, இதற்கும் முந்தைய புராண வரலாற்றையும் (மாம்பழக் கதை) மற்றொரு பதிவில் பார்ப்போம்.

முருகன்: ராமா! நீ என் நண்பனாக இருக்கலாம். ஆனால், நீயும் நானும் ஒன்றல்ல.
ஒருத்தியை ஏற்றுக் கொண்டு 9 பேர் மூக்கறுத்தவன் நீ!
வள்ளியையும் ஏற்றுக் கொண்டவன் நான்!
இராமனுக்கு ஓடம் கொடுத்து ஓட்டிய வேடன், அவன் நண்பன், குகன்!
பாலம் இருந்தால் ஓடம் ஏன்..?

அவனை விடப்பா! அவன்,
Jaffna Murukan க்கும்
Kandy Kuhani க்கும்
பிறந்ததனால...
அவனுக்கு, தான்,
Murukan ஆ?
Kuhan ஆ?
என்று தெரியாமல் போச்சு!

"Raman ஆண்டாலும் Ravanan ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை."
ஆனால், Raman and Ravanan சேர்ந்து ஆண்டால் அது Kotte யா?

தமிழர்கள்: "தமிழ்நாட்டின் எல்லையை மறைத்த வடுகனும் வடக்கனும்."
உண்மை எதுவாக இருப்பினும், அது குறித்து இப்படி, இழிவுரை மற்றும் பரப்புரை செய்வது வீண் பகை வளர்க்கும். நம்மை பலவீனப்படுத்தும்.
தமிழனை தீவழிப் படுத்தும் கயவர்.
>> என்னைக் கெட்டவன் ஆக்கப் பார்க்கிறாய். குரோத பாதையில் என் திசையை திருப்புகிறாய்.

Dont touch emotion.
Use your brain.
உண்மை எதுவாக இருந்தாலும் அதை மனமார ஏற்பான் இந்த தர்மன்.

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...