இன்னைக்கு Body Count என்று ஒரு word கேள்வி பட்டேன். அப்படின்னா, ஒரு ஆண் அல்லது பெண் எத்தனை பெண்களுடன் அல்லது எத்தனை ஆண்களுடன் உறவு வைத்துக் கொண்டார் என்பதற்கான எண்ணிக்கை.
Accidentally உறவு வைத்துக் கொண்டது வேறு.
அல்லது உண்மையான உறவின் (Relationship) போது உறவு வைத்துக் கொண்டு அந்த உறவு தவிர்க்க முடியாத காரணத்தால் அந்த உறவு முறிந்து போனது வேறு.
சும்மா காப்பித் தண்ணி குடிச்ச மாதிரி அல்லது கக்கா போறது மாதிரி கண்ட இடத்தில், பார்த்ததும் ஆசைப் பட்டவருடன் எல்லாம், அந்த நேர சுகத்துக்காக உறவு வைத்துக் கொண்டால், என்னவென்று சொல்வது. அதன் பிறகு உண்மைக் காதல் அல்லது காதலுக்காகவே உறவு வைத்துக் கொள்கிறோம் என்றால்... என்ன ** காதல்.
😂 எல்லாருக்கும் 500 ரூபா. உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. அதால 250 ரூபா தான். போலாமா! 😂
பிறகு நீங்கள் இறுதியாக திருமணம் செய்பவருடன் ஆவது உண்மைக் காதலா அல்லது வேற வழியில்லாமல் வாழ்க்கையை ஓட்ட ஒருவரை கல்யாணம் பண்ணுறீங்களா?
அதான் Aussie (Australian) ஆண்கள் கல்யாணம் செய்யவே விரும்ப மாட்டார்கள் என்று யாரோ சொன்னார்கள். ஆண்கள் Settle ஆவது கஷ்டம். ஆனால் பெண்கள் Settle ஆவது Easy போலயே!
Why! Didn't you do that before? Super.
ஒருத்தனுக்கு ஒருத்தி என்பது தமிழ் மரபு. ஒருவேளை தமது இச்சைக்கு ஒத்து வராதவரைத் தான் அப்பா அண்ணா தம்பி தங்கை சித்தி சித்தப்பா ஆகியவர்களுடன் சேர்த்து கதை பரப்புகிறார்களோ!
பெண்களுடைய காதல் உண்மையானதா என்று எனக்கு தெரியாது.
ஆனால் நான் கொண்ட காதல் எல்லாம் உண்மையானது தான்.
எங்கு அவர்களைக் கண்டாலும் கட்டியணைத்து என் காதல் சொல்வேன்.
என்னைப் பொறுத்தவரை அந்த உறவு வைத்துக் கொள்வதும் ஒன்று தான். திருமணம் செய்து கொள்வதும் ஒன்றுதான்.
😂 "பொம்பிளை பிள்ளையாடி பெத்து வைச்சிருக்கன். ஆம்பிளைப் பிள்ளையை பெத்து வைச்சிருக்கன். வயித்தில நெருப்பை கட்டிட்டு இருக்கன். ஏதாவது ஒன்னு ஆச்சு என்னு கண்ணைக் கசக்கிட்டு வந்து நின்னான்னா!" 😂
என்ன என்னுடைய வரவு மற்றும் பொருளாதாரம் இப்ப கொஞ்சம் மந்தமாக இருக்கிறது. சொத்துக்காக பதவிக்காக காதலித்ததாக சொல்வார்கள். நாளாக நாளாக எனக்கு அதிகம் மனதையும் உடலையும் வருத்தி அதிகம் உழைத்து, Busy ஆன வாழ்க்கை வாழ்வதில் விருப்பம் இல்லாமல் போகிறது. அளவாக சம்பாதித்து Relax ஆன வாழ்க்கை வாழ்வதையே மனம் விரும்புகிறது. இனி அதற்கு ஏத்த மாதிரி பொண்ணை தேடணும். ஆனால் இப்படியான என்னைப் போய் இப்படி ஏமாற்றுகிறார்கள் என்பது தான் வருத்தத்துக்குரியது.
என்னுடைய நிலைப்பாடு இருக்க, திருமணத்தின் பின்னும் அவர்கள் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தால் திருமணம் செய்யவே விருப்பம் இல்லை.
இதுக்க இத்தனை வயது வந்த பிறகு யரால ஆச்சும் ஏதும் பண்ணாமல் இருக்க முடியுமா! நீ எல்லாம் ஒரு மனுசனா என்னு கேட்கிறார்கள். அவர்கள் ஏற்கனவே Living Together இல் இருக்கிறார்களாம்! வாழ்க்கையே வெறுக்குது!
அவள நான் எந்த இடத்தில, எப்படி பார்த்தாலும்,
என்கூட வந்திடு மகா!
என்கூட வந்திடு காவ்யா!
என்னு என் காதல் கொட்டிக் கிடக்கு.
ஆனால் அவள் என்னடான்னா, தான் Reject பண்ணுற தகுதியை வளர்க்கட்டாம்! Accept பண்ண நிறைய தகுதி தேவைப்படும். Reject பண்ண என்னடி தகுதி வேணும்.
போடி போ! இதெல்லாத்தையும் சகஜமா எடுத்துக்கிற எவனாவது ஒருத்தன் இருப்பான். அவனைக் கட்டிக்கிட்டு சந்தோசமா இரு.
ஆனால் என்னைக்கும் நான் இராமன் தான். அதுக்காக யாரும் எனக்கு Certificate கொடுக்கத் தேவையில்ல.
"மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல.
அதையும் தாண்டி புனிதமானது."

No comments:
Post a Comment