Saturday, March 9, 2024

ஆதியில் இந்து மதம்

ஆதியில் ஒரு தனிக் கண்டமாக இருந்தது எமது பூமியின் நிலப் பரப்பு. அப்போது ஐந்தறிவு மிருகங்களாக இருந்த நமக்கு, இறை அருளால அல்லது ஒரு இயற்கையின் மாற்றத்தால் ஆறாம் அறிவு அல்லது பகுத்தறியும் ஆற்றல் கிடைக்கிறது. அந்த மாற்றம் ஓசையால் நிகழ்ந்தது என்பது ஐதீகம்.

"ஓசை ஒலி எலாம் ஆனாய் நீயே, உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே!"

அப்போது யானை முகம், நந்தி முகம், குரங்கு முகம், பன்றி முகம் (வராகம்), கீரி முகம் (நகுலம்), பாம்பு முகம் எல்லாம் இருந்தன.

திடீரென்று அறிவு கிடைத்ததும், அவைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவை தாம் யார் என்றும், தம் பிறவியின் நோக்கம் யாதென்றும் தேட ஆரம்பித்தன. தம்மை வகைப்படுத்தின. அவை #ஒன்று #சேர்ந்து #சங்கம் #ஒன்றை அமைத்து தமது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டன. அவற்றுள் அழகானவையும், மெலிந்தவையும், பருமனானவையும், வெண்மை சாம்பல் கருமை என்று பல நிறங்களை உடையவையும், வெவ்வேறு முகங்கள் உடையவையும், ஞானம் மிகுந்தவையும், இன்னும் மிருக இயல்பு அதிகம் உடையவையும் என்று பல ரகங்கள் காணப்பட்டன. அளவற்ற ஞானம் #இயல்பாகவே #மிகுந்து #இருந்தவைகள் அதிகம் மதிக்கப்பட்டு தலைமை பதவிகள் அளிக்கப்பட்டன. இங்கே தான் ஆரம்பம் ஆகின்றன; புராண நாடகங்கள்.

இடம்: கைலாயம்
தலைவர்: சிவன்
காலம்: கலியுக வருடம் 1. இன்று கலியுக வருடம் 5124 - கிமு 3100. (திருவள்ளுவர், இயேசு வாழ்ந்தது ஒரே காலப்பகுதி. சுமார் 2000 க்கு முன்பு).

மாம்பழம் பறிபோன கதை.

யார் புத்திசாலி என்ற போட்டியும், அதை முடிவு செய்ய நடுவர்கள் குழுக்களும் இப்போது போல அப்போதும் இருந்தன. அவை அவ்வப்போது தமது இனம் தான் பெரியது என்று சொல்லி தீர்ப்பு வழங்கும் சம்பவங்களும் அடிக்கடி நடப்பது வழமை. நாரதர் கொண்டு வந்த மாம்பழம் யாருக்கு என்று கேள்வி எழுந்தது. சிவன் உலகை முதலில் சுற்றி வருபவர்க்கு என்று சொல்லி விட, முருகன் Hock Wick பறவையை எடுத்துக் கொண்டு உலகை சுற்றி வர சென்று விட்டார்.

முருகன் 2 ஆண்டுகள் கழித்து வந்தால், அந்தப் பழம் கணபதிப் பிள்ளைக்குக் கொடுக்கப்பட்டு விட்டது. தாய் தந்தையே உலகம் என்று அவர்களை வலம் வந்து வணங்க, முருகன் அழகில் ஏற்கனவே எரிச்சல் அடைந்திருந்த நடுவர் குழு அதை கணபதிப் பிள்ளைக்கே கொடுத்து விட்டனர். ஏற்கனவே அதை கணபதி பிள்ளை உண்டுவிட்டு எலியில் கிளம்பி விட்டார். கண்ணைக் கசக்கிய முருகனை தேற்றவும் வழியும் இல்லை. இந்தக் கதைக்குள் தமிழில் உவமைகள் ஒரு குழப்பம். தமிழர் சிவனை சூரியன் என்றும் உமையை பார்வதி என்றும் உவமித்து உள்ளனர்.

இப்போது முருகன் படலம்

"தனக்கென ஒரு நாடு, தனக்கென ஒரு தேசம் என தனியாக உருவாக்குவேன்" என்று போட்டிருந்த உடுப்பையும் களட்டி விட்டு, விட்டு மயிலில் புறப்பட்டு தென்னாடு வந்து விட்டான். அன்று தொட்டு இன்று வரை அவனுக்கு தனி நாடு என்று ஒன்று கிடைக்கவே இல்லை.

தமிழ் கடவுள் முருகன்.
வஞ்சிக்கப்பட்ட தமிழ்.

#தமிழிற்கு #கிளை #மொழிகள் பல உண்டு. மயில் வாகனன் முருகன்; ஆனால் சிவனின் பிள்ளை முருகன் என்பதால், அகரம் சிகரம் ஆனதா, சிகரம் அகரம் ஆனதா என்பது இன்னும் சிறு குழப்பம்தான். தமிழுக்கும் முதல் ஒரு மொழி இருந்திருக்குமா! [தமிழன் செருக்கு ஒழிந்தது]. ஆனால் இன்னும் #தமிழ் #பேசும் #தமிழ்க் #குடிகளால் கூட பொருள் அறியப்படாத அரிய பல பொக்கிஷங்கள் கொண்ட மொழி தமிழ்.

இங்கு புராணத்தில் முருகன் என்பது தமிழ் குடியைத் தான். முருகனை கும்பிட்டால், நீங்கள் தமிழர் ஆயினும், மலையாளி ஆயினும், தெலுங்கர் ஆயினும், சிங்களவர் ஆயினும் உங்கள் முன்னோர்களான முன்னைய தமிழரை வழிபடுகிறீர்கள் என்பது தான் உட்கிடைப் பொருள். அருள் ஏதாவது கிடைத்தாலும் அது அங்கிருந்து தான். நடுவில் ஒரு பக்கமும் காணாமல் போகவில்லை. புராணம் எல்லாம் கூறுகிறது.

ஆண்டியாய் வந்து, நாவல் மரத்தில் அமர்ந்திருக்க, ஒளவை பழம் கேட்க, சுட்ட பழமா சுடாத பழமா என்று கேட்ட சிறுவன் முருகன். எனக்கு (தமிழர்க்கு) பலவேளைகளில் குழப்பம், எப்படி வெள்ளை ஜீன்ஸ் தமிழரில் வந்தது. தமிழர் கறுப்பு என்பது தானே மூட நம்பிக்கை. லுமோரியஸ் என்ற மிருகம் எப்படி அங்கு வந்தது என்று. லண்டனில் இருப்பவர் ஜீன்ஸ் எப்படி இலங்கையில் இருப்பவர்களுடன் ஒத்துப் போகிறது. எல்லாம் ஒரு இடத்தில் இருந்து பிரிந்தவை தானே. ஆனால் இப்போது தமிழர் என்றால் வேலுப்பிள்ளை மட்டும் அல்ல. கணபதிப் பிள்ளை, வேறு சில பரம்பரைகள் மற்றும் கலப்புகள் பல உள்ளன. குழந்தை மன்முள்ள எவருக்கும் இலகுவில் பிடித்துவிடும் இனிய மொழி தமிழ்.இது அன்று தொடங்கி இன்று வரைக்கும் மாறாத இருட்டு. காசி நாதன் என்பது சிவனின் பெயர். காசி அப்பன் என்று எல்லாம் இலங்கையில் அரசர்களின் பெயர்கள் இருந்துள்ளன.

ஒரு ஆறு கங்கையில் இருந்து பிரிந்து தனியாக கந்தன் என்னும் பெயரால் ஓடியது. நாளடைவில் அறிவு வளர வளர, பதவி மோகம் மற்றும் செருக்கு ஆகிய காரணங்களால் அவை மேலும் சிறு ஆறுகளாக பிரிந்தன. இவை யாவும் தென்னாட்டின் கதைகள் மட்டும் தான். வடநாடு மேலை நாடுகளுக்கு வெவ்வேறு ஆன்மிக கதைகள் உண்டு. எல்லாம் தொடங்கும் இடம் #கைலாயம் தான்.

இந்துவுக்கு சமத்துவம் வழங்க, தனி மொழி கொடுத்த சிவன்.

சமஸ்கிருதம் என்ற மொழி, தமிழர்க்கு வட நாட்டவர்க்கும் இடையில் இருக்கும் மாறுபாட்டை சமப்படுத்த சிவனால் உருவாக்கப்ப மொழியாகும். ஒரு இணைப்பு மொழி. அதுவும் தமிழி பிராமி மொழியின் அமைப்பை உடையது. ஆனால் இது யாருடைய தாய் மொழியும் அல்ல. ஆதலால், அவசியம் இன்மையாலும் பேச்சு வழக்கு இன்மையாலும் எளிதில் அது வழக்கற்று போனது. அது வேதம் ஓதுபவர் தவிர்ந்து எங்கும் வழக்கில் இல்லை. "இந்துக்களுக்கு ஒரு மொழி" என்று சிவன் படைத்த மொழி, சமஸ்கிருதம். அதனால் தான் இந்துக் கோயில்களில் மந்திரங்கள் இன்னும் சம்ஸ்கிருதத்தில் ஓதப்படுகின்றன. ஆனால், அதன் பிறகு மொழிகள் பலவாறு திரிபு அடைந்தமையால், அந்த மந்திரங்கள் ஓதினும் எவர்க்கும் பயனற்றுப் போயின. அவை மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும்.

ஆனால் "தான் மாற மாட்டேன், தனக்கென தனிச் சிறப்பு உண்டு" என்று அன்றும் இன்றும் செருக்குடன் இருந்த தமிழனின் தமிழ் மாறமையால், தமிழ் மந்திரங்கள் இன்னும் ஏற்புடையதாக இருப்பதாக நான் உணர்கிறேன். ஆனால் அவற்றை ஓத மாட்டார்கள். இந்துக்களுக்கு பொதுவனாதாக அது அமையாது. பிறகு தனி மதம் ஒன்று தோற்றுவிக்க வேண்டி வரும். சமஸ்கிருத மந்திரங்கள் இருக்கையில், தமிழ் மந்திரம் இயற்ற வேண்டிய தேவை இருந்து இருக்காது. அவை அதற்கு முன்பே இயற்றப்பட்டவை ஆகவே இருக்க வேண்டும். நான் முன்பே சொன்னேன், இந்து மதத்தினுள் காதல் கொண்டு, தன்னை தானே தொலைத்தது தமிழ்.

எது எப்படி ஆயினும், எது முதல் வந்தது என்பதை விட, முக்கியமானது எது இன்னாளுக்கு அதிகம் பயன் அளிக்கிறது. ஆதியாயினும் நடுவும் ஆயினும் Useless என்று ஆகிவிட்டால் அது குப்பையில் போடப்பட வேண்டியதே தவிர, கற்பித்தால், ஓதினால் எந்த மேன்மையும் ஏற்படாது. வீண் காலம் கழிப்பு மட்டுமே நிகழும். வியாபாரம் எனினும், ஆன்மிகம் எனினும் கொடுப்பவர்க்கும் கொள்பவர்க்கும் இலாபம் வேண்டும். இல்லையேல் அர்த்தமற்ற இந்து மதம் என்று ஆகிவிடும்.

இன்னொரு குழப்பமும் இருக்கிறது. வேலவர் கூட்டத்தில் பிறப்பவர்க்கு வேலன் என்று பெயர் வைக்கிரார்களா! அல்லது உன் கைக்கு வேல் வந்ததும் உன்னை பார்த்து வேலன் என்று அழைக்கிறார்களா! முருகன் குலத்தில் பிறந்ததால் உனக்கு முருகன் என்று பெயர் வைக்கிறார்களா! அல்லது முறுகி மெலிதாகப் பிறந்ததால் முருகன் என பெயர் வைக்கிறார்களா! கொடி அசைந்ததும் காற்று வந்ததா! காற்று வந்ததும் கொடி அசைந்ததா!

“கோல் எடுத்த பிள்ளை குருட்டுப் பிள்ளை.” என்று ஒரு சொல்லும் வழக்கு உண்டு. சிவனுடன் கோபித்துக் கொண்டு வந்தவன்; முருகன், மூர்க்கன். சிவனுக்கு அந்தகன் என்று இன்னொரு பிள்ளை இருந்ததாக புராணம் சொல்கிறது.

இவை யாவும் கடவுளின் ஆட்சி செய்யும் காலத்தில் நடந்தவை. பிறகு இராமர் காலம், அரசர் காலம், இறுதியாக இப்போது கலி காலம்.

யார் இந்த சிவன்?

ஆதியாய் நடுவும் அளவிலா அளவும் ஆகிச் சோதியாய் நிற்கும் தில்லை பொது நடம் போற்றி போற்றி!

நம பார்வதி
நம சிவாய

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...