Wednesday, October 9, 2024

தமிழர்களின் அரசியல் வரலாற்று: கர்மா, நீதி, மற்றும் ஆட்சியின் சுழற்சிகள்: கந்தனும் கண்ணனும்

முருகப் பெருமாளும், வேங்கடப் பெருமாளும்

தமிழர்களின் அரசியல், நாகரீகம், வரலாறு, தொன்மை ஆகியவை மீது நம்பிக்கை உள்ள உங்களுக்கு...

காலத்தால் விளையும் விமோசனமற்ற சாபங்கள், சிவன் விரும்பி கொடுக்கும் வரங்கள் மீது நம்பிக்கை இல்லையா!

தக்கெனப் பிளைத்தல் "Survival of the fittest" மீது நம்பிக்கை இல்லையா!

தர்மர் யுதிஷ்டன் வருதிகள்; பொய் சூது வாது களவு இவை இல்லாதவர் கலியுகத்தில் பிழைத்துக் கொள்ள முடியாது. பிறர் துன்பத்தை கூட காண விரும்பாத, அனைத்து உயிர் மீதும் அன்பு வைக்கும் (சிவன்), சமமாக நீதி வழங்குபவன், பொய் சூது வாது களவு போன்ற அநியாயங்களுக்கு ஒப்புக்கொள்ள மாட்டான்.

ஆதலால் எதிரிகளால் அழியாது போகினும் வளம் குன்றி அழிந்து போவான்! சனத்தொகை பெருகி வருமிடத்து, வாழ்க்கை குறுகியது என்று சுயநலமாக வாழும் மனிதர் கூட்டம் மத்தியில் அவன் கதைகள் எடுபடாது. நானே இதற்கு சிறந்த உதாரணம். பொய் என்று உங்களால் மறுக்க முடியுமா!

வாழ்க்கையை வாழ்ந்து வாழ்ந்து சலிக்கிறது என்னு எல்லோரும் வாழ்ந்துவிட்டு செத்துப் போய்விடுகிறார்கள். நான் மட்டும் எல்லோரும் நீடூழி வாழ அமைதியான சூழலை அமைப்பது குறித்து ஆலோசித்து கொண்டு உள்ளேன்! அதிய மானுக்கு கிடைத்த நெல்லிக்கனியை இவர்கள் அனைவருக்கும் கொடுத்து, இவர்கள் முற்பகல் செய்தது பிற்பகல் எப்படி விளைகிறது என்று காட்ட வேண்டும்.

#முருகாயணம்
#இராமாயணம்
சந்தனு மஹாராஜா - மூலமற்ற முன்னோர் பெயர் அறியாத சிவனுக்கு அவர்கள் கொடுத்த பெயர்.

சத்தியவதி - மீனாட்சி
கங்கை - கங்கை

பிறையை விரும்பும் அவர்கள் பிறை சூடியவனை, சூரியனை சந்திர குலம் என்று சித்தரித்தனர். தர்மத்தின் அடையாளம் முருகனின் தன்மையை மட்டும் மட்டும் யுதிஷ்டன் என்று அப்படியே கூறினர். தர்மம் குறித்து அவர்கள் அக்கறை கொண்டு இருந்தனர். நீங்கள் மட்டும் பொய்யன் என்றீர்கள்.

சூரரைப் போற்ற வேண்டும். சூரர்கள் தமக்கு மரியாதை கிடைக்காதபோது ஒதுங்கிக் கொள்ள வேண்டும். இங்கு இந்நாளில் நீதிக்கு மரியாதை இல்லை. இப்போது தற்காலிகமாக யுதிஷ்டன் / முருகன் விலகிக் கொள்கிறான். அவன் சென்றால் இலங்கையில் எஞ்சியது இராவணன் இரத்தம் மட்டுமே! அதனால் இராவணனைக் கேளுங்கள். இப்படிக்கு ஆண்டியாய் நின்ற முருகன்.

Where there is no need, leave the place.
Why blood same blood.
Ask Ravana. Your blood; you deal with it.

யுகத்திற்கு யுகம் மக்கள் விரும்பும் தர்மங்கள் மாறும். அதனால் சமுதாயங்கள் ஒன்றை ஒன்று விழுங்கி நலிவு படுத்தும். முருகாயணம், இராமாயணம் இவற்றில் எது முதலில் நடந்தது என்பதை அறிய ஆதாரமே தேவை இல்லை. எது கடைசியில் வெற்றி பெறுகிறதோ, அதுதான் கடைசியாக நிலைகொண்டிருக்கும்.

திருப்பதியில் முருகப் பெருமாள், வேங்கடப் பெருமாள் ஆகியது. இப்போதும் வேங்கடப் பெருமாள்தான். இலங்கையின் ஆட்சி இராமர், பிள்ளையார் கூட்டணியிடம் சென்றது. பழக்கதையும் முருகன் தோற்று பழனியில், வடக்கு இலங்கையில் நின்றதை இன்றும் கூறுகிறது. ஆனால் மகாபாரதம், அப்போது முருகன் (யுதிஷ்டர்) முதல் முறையாக இலங்கை வந்ததாக சொல்வதாக தெரிகிறது. உலகை சுற்றி வந்த தமிழன். இப்போதும் உலகை சுற்றி வரவே மறு சுற்றுக்கு கிளம்பி உள்ளனர்.

அது ஒரு காலச் சக்கரம். இங்கு எது முதல் நடந்தது என்று சொல்ல முடியாது. எது கடைசியாக நடந்ததாக இருக்கிறதோ, அதை கூற முடியும்; கண்ணாலேயே காண முடியும். ஆனால் இந்தக் கதைக்கும் சிவன் போல அடி முடி என்பதே கிடையாது.

அதோடு, எந்த ஒரு வரலாற்றை குறிக்கும் நூலும், பெரும்பான்மை மற்றும் ஆட்சியானது எதிரணியிடம் இருந்தாலும் அனைத்து சமூகங்களின் ஒப்புதல் (Senate approval) இல்லாமல் வெளியிடப்படுவது இல்லை. நாம் விளங்கிக் கொண்ட விதம் பிழையாக இருக்கலாம். பாத்திரங்களின் பெயர்கள் மாறி இருக்கலாம் ஆனால், கருப்பொருளில் ஒரு பகுதியை மறைத்து எழுதினும், அதை சிதைத்து / மாற்றி எழுத இயலாது.

கத்தி எவன் கயில இருக்கோ, அவன் தான் ராஜா என்றேன். அந்தக் கத்தி எல்லோருக்குமாக இருந்தால் அவன் ராஜா. அதுவே தனக்கானதாக இருந்தால் அவன் திருடன். இராஜ இரத்தத்திற்கு #இயல்பாகவே புத்தி (Intelligence) அதிகம். அதற்கு பல காரணம் உண்டு. அவர்கள் விதைத்தது முழுவதும் ராஜ இரத்தமாக உள்ளது.

நெல் முத்துக்களை விதைத்தால் அதன் கதிரில் விளைந்தவையும் முத்துக்களே! இவ்வாறு எல்லாம் முத்துக்களாக இருக்கும். பயிரிடும்போது நல்ல தரமான விதை நெல்லை மட்டுமே தேர்ந்து பயிரிடுவார்கள். சப்பைகளை சமைத்து உண்டு விடுவார்கள் அல்லது வீசி விடுவார்கள்.

அப்படிக் கை தேர்ந்த முத்துக்களோடு, அரசியலில் போட்டி போட்டு சாமான்யர் வெல்வது அசாதாரண காரியம்; முடியாது என்று அல்ல. ஆனால் இப்போது இலங்கை ஆட்சியில் அது நடந்திருக்கிறது. அதில் ஏதோ அர்த்தம் இருக்கிறது. அதிகாரத்திடம் இருந்து சுதந்திரம் பெறலாம். ஆனால், புத்தியிடம் (Intelligence) இடம் இருந்து சுதந்திரம் பெறுவது அவ்வளவு எளிதல்ல. தற்போது உள்ள ஜனநாயக நடைமுறையால் மக்களின் சக்தி அவர்களின் கைகளைக் கட்டிப் போட்டுள்ளது. ஆனால் கண்டிப்பாக எதிர்காலம் ஒரு புதிரை ஒழித்து வைத்திருக்கும்.

ஆனாலும் யுதிஷ்ரன் வருதி, சங்கிலியன், யாழ்பாண இராஜ்ஜிய இறுதி மன்னன் கொடி சிங்கம் ஆகும். இலங்கையின் தேசியக் கொடியில் இருப்பதும் இராமர் கொண்டு வந்த சிங்கம் தான். இராவணன் புராதன சின்னமான மயில் அல்லவே! #ஆழவந்தான் அளப்பரைகள். #வந்தேறு குடிகள்!

உலகை சுற்றி மேன்மை அடைந்து வெற்றி வாகை சூடி வந்த, ஸ்கந்த முருகனும் (கண்டம், சந்தனம்)
#நல்லூர் கந்த சுவாமி

இலங்கையில் இராமனின் ஆட்சியில் சிறை பட்டு இருந்த இராவண முருகனும்.
#செல்வச்சன்னதி கதிர்காம குகன் மற்றும் குமரன்

இராமர் என்பதன் பொருள் இருளை மறுப்பவர், இருளின் மற்றவன்.
இராமன் - ஆரிய சூரிய குல கர்ணன். அவன் எப்படி நீல நிறம் என்று பொய் சொல்லப்பட்டான். தமிழர் கறுப்பு என்பதற்காக, அவர்கள் தேவர்கள் இல்லை என்று, அவர்களே யுதிஷ்டர் என்பதை மறைத்து, மகாபாரதம் நிகழ்ந்த இடங்கள் மற்றும் பழனி எல்லைகளை வடக்கை ஒட்டி மாற்றி அமைத்து கதைகளை மாற்றியவர்கள்; ஆரியர்கள். வெள்ளை நிறமே தேவர்களின் அடையாளம் எனக் கொண்ட அவர்கள் பல பொய்கள் உரைத்தது சதிகள் செய்து ஏமாற்றியும் வந்துள்ளனர். மிக முக்கியமாக அந்த தேவர் பருகும் அமிர்தம் குறித்த குறிப்புகள் பலவற்றை யுதிஷ்டன், கந்தன் உலகப் பயணத்தில் அறிந்து வந்தான் என்று, இவர்கள் இலங்கையில் செய்த கலகங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல.

பரசு கொண்ட பரசுராமரும், இராமர் குலமாகவே இருந்திருக்க வேண்டும். அவரிடம் கர்ணன் / இராமர் பொய் கூறித்தான் வித்தைகளைக் கற்றுள்ளான். ஆனால், இவர்களோ கந்தன் ஏற்றத் தாழ்வு காட்டினான். யுதிஷ்டன் தம்மை அடிமைத்தனம் செய்தான் பொய் சொல்கின்றனர்.

அசுரர் தேவருக்கு நடுவில் வாழ்ந்தவன் யார்?
ஒருபாதி தேவராக மறுபாதி அசுரராக வாழ்ந்தவன் யார்?
எங்கிருந்தோ வந்தான்; இடச்சாதி நான் என்றான்!
#நல்ல #தீய யாதிகளுக்கு மாதங்களுக்கு இடைப்பட்டவன். தேவ அசுரர்களுக்கு மத்தியில் பிறந்த இடையன் கண்ணன். அவன் கருப்பாக / நடுப்பட்ட நிறமாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி எனில் அவன் வட இந்தியாவில் எப்படி பிறந்து இருக்க முடியும். அவன் நடுவில் எங்கோ பிறந்து இருப்பான்.

எனில் பிருந்தாவனம், துவாரகை இவை எல்லாம் தமிழ் நாட்டை ஒட்டியதாகவே இருந்திருக்க வேண்டும். அவர்களுக்கு இதைக் கேட்க கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்திருக்கும். எங்களுடைய favourite god அடா அவன். அவன் எப்படி நீச்ச குலத்தில், ஒரு நடுக் குலத்தில் பிறந்து இருப்பான்.

#அதனால் தான் அவன் இடையன். ஒருவேளை, யாதவர் குலமாகவும் இருக்கலாம். அல்லது இடையன் என்பது, யாதவர் குலமாக மாறி இருக்கலாம்.
#கடவுளுக்கு ஏது எல்லைகள்; ஏது குலம்

யுத்தம் மூளும் சூழ்நிலை தென்படுகிறது.
இராவணன் வழுதிகள் (வருதிகள்) - எதிரிகளை வீழ்த்துவோம்.
யுதிஷ்டன் வழுதிகள் - போரடிக்குது. வா மச்சான் இன்னொரு world tour ஒன்று போட்டு வரலாம்.

பழைய வரலாறு எதுவுமே வேண்டாம்!
நீங்கள் அபகரித்தது எதுவுமே வேண்டாம்!
நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும்.
ஆனால் புதிய காலத்திற்கு, ஜனநாயகத்துக்கு ஏற்றாற்போல், கொஞ்சம் விட்டுக் கொடுத்து நடந்திருக்கலாம். இல்லை என்று பேராசை பிடித்தது போல, மிருகத் தனமாக நடந்து கொண்டால் என்ன செய்வது..?
அது எங்கள் பிழையா?
"நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!"

நீ சண்டைக் காரனாக இரு;
சாத்வீகனாக இரு;
நீதி சொல்பவனாக இரு.
ஆனால் உன் எல்லைக்குள் இரு.
Be on your limit.
- நக்கீரன்

"மாற்றம் ஒன்று தான் மாறாதது"
மாற்றம் கூட மாறும்.
யுதிஷ்டனின் டயரியில் மாற்றங்கள் அதிகம் இல்லை.
>> சத்தியம் ஒன்றே மாறாதது <<
[ஏகம் சத் விப்ர பஹூதா வதந்தி - ரிக் வேதம் 1.164.46]
சத்தியமே யுதிஷ்டனின் கடவுள்.
எம #தர்மன் - காலன் - அவன் தந்தை.
அவன் காக்கும் சத்தியம் அவன் செங்கோலாகிய ஈட்டியைப் போல, வளையாதது; மாறாதது.
"மாறு. மாறுவதெல்லாம் உயிரோடு
மாறாததெல்லாம் மண்ணோடு."
அது சத்தியம் தான். அதுவே யுதிஷ்டினின் டயரியில் கடைசி பக்கம்!
சிவன் > எமன் > காலன்
இராவணன் - மயில் ஏறும் மன்னவன்
#Sigiriya

யுதிஷ்டன் > கந்தன் > பழனி

[கந்தன், குகன், குமரன்]

கர்ணன் > விஜயன் > இராமன்

கந்தன் + குமரன் VS இராமன் + குகன்

இதுதான் நடக்கும் என்று எழுதி இருக்கும். அதைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், நடக்கிறத மாற்ற முடியாது.

இவர்களைத் சொல்லித் திருத்த முடியாது. அவர்களுக்கு அதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு மனதில் தெளிவு இருக்காது. எல்லோருக்கும் ஒரே போன்ற மனநிலையும் கிடையாது. அப்படியே இருந்தாலும் நடப்பதை சற்றுப் பிற்போட முடியுமே தவிர அதை முற்றாகத் தடுக்க முடியாது.

நடப்பதைப் காண வேண்டியதுதான்.

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...