Friday, October 30, 2020

நாம் ஏன் எப்பொழுதும் அனைவருடனும் அன்பாகவும் பணிவாகவும் நடக்க வேண்டும்?

நன்றி: fccdunedin.blogspot.com

அனைவரும் அனைத்தும் அறிந்திருப்பதில்லை. அப்படியே அறிந்திருந்தாலும் வேண்டிய நேரத்தில் அவை நினைவிற்கு வருவது இல்லை. அத்துடன் ஒவ்வொருவரும் தான் போன வழிகளில் வந்த தடைகளுக்கான சிறந்த தீர்வுகளை அறிந்திருப்பர். அவை பரம்பரை பரம்பரையாகவும் சந்ததி சந்ததியாகவும் பேணப்படுவதும் உண்டு. அதோடு அவை நமக்குத் தெரியாத விடயங்களாகவும் இருக்கலாம்.

நமக்கு யாரும் இன்னல்கள் விளைவிக்கத் தேவையில்லை. அவை போன்ற விடயங்கள் தக்க நேரத்தில் நமக்குக் கிடைக்காமல் போனாலே நமக்குப் பெரும் துன்பங்களுக்கும் இழப்புகளும் ஏற்படும். ஆனால் அதனை அறிந்தவர்கள் காண்பவர்கள் அனைவருக்கும் அந்த ஞானத்தை அள்ளி வழங்குவதில்லை. அத்துடன் அப்படி வழங்குவது உசிதமானதும் அல்ல. அப்படி வழங்கின் அதனை யாரும் மதிப்பதும் கிடையாது. பசியில் உள்ளவர்களுக்கு மட்டுமே உணவின் அருமை தெரிந்திருக்கும். அத்துடன் அது அவர்களுக்குப் பெரும்பாலும் அவமானங்களையே தேடித்தரும். ஏனெனில் ஒருபோதும் கேட்காத உதவி செய்யக் கூடாது அல்லவா.

அது மட்டுமல்லாமல் அவை பணிவாகவும் மதிப்பளித்தும் நடப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. ஆனால் இந்நாளில் அவை வெறுமனே கொடுக்கும் மதிப்புகளிற்காக மட்டுமே வழங்கப்படுவது இல்லை. மதிப்பிற்கு இந்நாளில் ஏது மதிப்பு ... உற்றவர்க்கும் உதவி செய்கின்றவருக்கும் மட்டுமே கைமாறாக அந்த விடயங்கள் உரிய தருணத்தில் வழங்கப்படுகின்றன. நிறைய தான தர்மங்கள் செய்தவர்களுக்கு வேண்டியாவை வேண்டிய நேரத்தில் ஏதாவது ஒரு வழியில் யாராவது ஒருவரால் வந்து சேர்கிறது. அதனால்தான் கொடுத்தார்க்குக் குறைவு இல்லை என்பர்.

எனவே துன்பத்திலும் எல்லோருடனும் சிரித்து மகிழ்ச்சியாக வாழுதல் சாலச் சிறந்ததாகும். ஆனாலும் கிடைக்கப்பெறும் எல்லாத் தகவல்களும் உண்மைகளும் அல்ல; நன்மை விளைவிப்பவை என்றும் ஆகி விடாது. உதவி செய்வது போல நடித்து ஏமாற்றுபவர்களும் இந்தச் சமூகத்திலே அதிகம் உள்ளனர். இன்னும் சிலர் உதவி செய்ய இயலுமாக இருந்தும் இன்னுரைகள் கூடச் சொல்வது இல்லை. எனவே எது சரி பிழை என்பதை நாம் அறிந்து கொண்டு செயற்படுவதும் மிக அவசியமாகும்.
#Information is Wealth
#Arjun
#Hero

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...